Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
05 OCT, 2024 | 12:29 PM
image

டி.பி.எஸ். ஜெயராஜ்

லங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கை ஒன்றும் புதியது அல்ல. அந்த ஆட்சிமுறை என்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்றிலிருந்தே அதை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப் போவதாக தேர்தல்களில் வாக்குறுதி  அளித்து மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு வந்தவர்கள் எவருமே அதை ஒழிக்கவில்லை என்பது அண்மைக்கால வரலாறு.

இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் பிரதான வேட்பாளர்களில் அநுரகுமார திசாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள். அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் அதைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்த ஆட்சிமுறையை ஒருபோதுமே ஆதரிக்காத  ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர்  திசாநாயக்க நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார். அந்த பதவிக்கு வந்தவர்களில் எவருமே அதை ஒழிப்பதில் அக்கறை காட்டவில்லை. சிலர் ஏற்கெனவே ஜனாதிபதி பதவிக்கு இருந்த அதிகாரங்களை மேலும் அதிகரிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவந்தார்கள் என்பது எம்மெல்லோருக்கும் தெரியும்.

ஜனாதிபதி திசாநாயக்கவும் அவர்களைப் போன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்று முன்கூட்டியே கூறுவது பொருத்தமில்லை என்றாலும் கூட அவரால் அதைச் செய்யக்கூடியதாக இருக்குமா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. 

திசாநாயக்க பதவியேற்று ஒரு சில தினங்களில் தேசிய மக்கள சக்தியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுனில் ஹந்துனெத்தி இலங்கை மக்கள் இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள் என்று கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. 

இத்தகைய பின்புலத்தில் இலங்கையில்  ஜனாதிபதி ஆட்சிமுறையின் வரலாற்றை இந்த கட்டுரை திரும்பிப் பார்க்கிறது.

ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக கடந்த பல வருடங்களாக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றபோதிலும், ஜனாதிபதிகளை தெரிவுசெய்வதற்கு மக்கள் தேர்தல்களில் பெருமளவு உற்சாகம் காண்பிப்பது ஒரு முரண் நகையாகும். ஜனாதிபதி ஆட்சிமுறை ஒரு புறத்தில் கடுமைான கண்டனங்களுக்கு உள்ளாகி வருகின்ற அதேவேளை, மறுபுறத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் மக்கள் பெருமளவு ஆர்வத்துடன் வாக்களிக்கிறார்கள்.

பெரிதும் பழிகூறப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் 1978ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற ஆட்சி முறையை இல்லாமல் செய்து ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவந்த அந்த அரசாங்கத்தில்  அண்மையில் ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கியிருந்த ரணில் விக்கிரமசிங்கவும் அங்கம் வகித்தார்.

நீண்ட வரலாறு

ஜே.ஆர். ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சிமுறை  நீண்ட வரலாற்றை கொண்டது. பிரதமர் டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் (1965 - 1970)  இராஜாங்க அமைச்சராக (தற்போதைய இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து வேறுபட்டது) பதவிவகித்த ஜெயவர்தன 1966 டிசம்பர் 14ஆம் திகதி கொழும்பில் விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு நிகழ்த்திய உரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றிய தனது சிந்தனையை முன்வைத்து  அமெரிக்க மற்றும் பிரெஞ்சு வகைமாதிரிகளை அடிப்படையாகக் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை ஒன்றுக்கு ஆதரவாக வாதிட்டார்.

"நிறைவேற்று அதிகார தலைவர் நேரடியாக மக்களினால் தெரிவுசெய்யப்படுவார். அவர் குறித்துரைக்கப்படும் வருடங்களை உள்ளடக்கிய தனது பதவிக்காலம் முழுவதும் சட்டவாக்க சபையில் (பாராளுமன்றம்) தங்கியிருக்கமாட்டார். அவர் குறிப்பிட்ட வருடங்கள் பலம் வாய்ந்த நிறைவேற்று அதிகார பதவியில் இருப்பார். சட்டவாக்க சபையின் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகமாட்டார். பாராளுமன்ற கட்சியின் கண்டனத்துக்கு ஆளாகுவோமே என்ற பயத்தில் சரியான, ஆனால் பிரபலமான தீர்மானங்களை எடுக்காமல் விடமாட்டார்" என்று அவர் அந்த உரையில் கூறினார். "மக்களினால் நேரடியாக தெரிவுசெய்யப்படும் நிறைவேற்று அதிகார தலைவர் அதே மக்களினால் தெரிவுசெய்ப்படும் ஒரு  பாராளுமன்றத்தின் விருப்பு வெறுப்புகளில் தங்கியிருக்கமாட்டார்" என்பதே ஜெயவர்தனவின் சிந்தனையின் சாராம்சம்.

அவரின் இந்த கருத்து அரசியல் அதிகார வர்க்கத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கும் இராஜாங்க அமைச்சர் ஜெயவர்தனவுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்திருந்தன. ஜெயவர்தனவின் யோசனையை டட்லி உறுதியாக எதிர்த்தார். ஐக்கிய தேசிய கட்சிக்குள் கூட ஒரு சிலரே ஜெயவர்தனவின் யோசனையை ஆதரித்தனர். அத்தகைய சூழ்நிலையின் தனது யோசனையை அவரால் முன்னோக்கி நகர்த்த முடியவில்லை. ஆனால் அந்த சிந்தனையை ஒருபோதும் கைவிடவில்லை.

ஆறு வருடங்கள் கழித்து பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்க காலத்தில் (1970 - 1977) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி தொடர்பான தனது சிந்தனையை ஒரு புரிந்துகொள்ளத்தக்க முன்மொழிவின் வடிவில் முன்வைப்பதற்கு ஜெயவர்தனவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்காக பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. அப்போது டட்லி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்த அதேவேளை  பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெயவர்தன வகித்தார். இருவருக்கும் இடையிலான வேறுபாடுகள்  தீவிரமடைந்த நிலையில் ஜெயவர்தன கட்சிக்குள் பெரும்பாலும் தனித்து தன்னெண்ணத்தில் செயற்படும் ஒருவராக விளங்கினார்.

அரசியல் நிர்ணய சபையில் ஜெயவர்தன 1971 ஜூலை 2ஆம் திகதி ஒரு பிரேரணையை முன்வைத்தார். "அரசின் நிறைவேற்று அதிகாரம் குடியரசின் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும். அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் அவர் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவார். 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களின் வாக்குகளினால் மாத்திரம் நேரடியாக தெரிவு செய்யப்படும் குடியரசின் ஜனாதிபதி ஏழு வருடங்கள் பதவிக்காலத்தைக் கொண்டிருப்பார்.  அமைச்சரவையின் தலைவராகவும் அவரே இருப்பார்" என்று அந்த பிரேரணையில் கூறப்பட்டது. கொழும்பு மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் இருந்த ரணசிங்க பிரேமதாச  பிரேரணையை வழிமொழிந்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு ஆதரவாக ஜெயவர்தன அரசியல் நிர்ணய சபையில் தனது பேச்சுத்திறனை வெளிக்காட்டி வாதிட்டார். பிரேரணை நிராகரிக்கப்பட்டது.  அவரின் பிரேரணைக்கு எதிரான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு அரசியலமைப்பு விவகார அமைச்சர் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா தலைமை தாங்கினார். டட்லி சேனநாயக்க உறுதியாக எதிர்த்த காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பானர்களும் ஜெயவர்தனவின் பிரேரணையை ஆதரிக்கவில்லை. அன்றைய அரசியல் நிர்ணய சபையினால் ஜெயவர்தன - பிரேமதாச பிரேரணை நிராகரிக்கப்பட்டது.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் 1972 மே 22ஆம் திகதி புதிய குடியரசு அரசியலமைப்பை பிரகடனம் செய்தது. சோல்பரி அரசியலமைப்பின் கீழான மகாதேசாதிபதியை (Governor General) ஜனாதிபதி பதிலீடு செய்தார். தேசிய அரச சபை என்று அறியப்பட்ட பாராளுமன்றத்திடம் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டன. வில்லியம் கோபல்லாவ  சம்பிரதாயபூர்வமான அரச தலைவராக இருந்தபோதிலும், உண்மையான அதிகாரம் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிடமே இருந்தது.

ஜே.ஆர். தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி 

டட்லி சேனநாயக்க 1973 ஏப்ரலில் காலமானதை அடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ஜெயவர்தன பொறுப்பேற்றார். தனது தலைமைத்துவத்தை மிகவும் விரைவாகவே நிலையுறுதிப்படுத்தக்கொண்ட அவர் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார். இப்போது ஒரு வலுவான நிலையில் இருந்துகொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பான தனது சிந்தனையை அவரால் முன்னெடுக்கக்கூடியதாக இருந்தது.

"மக்களினால்  தெரிவு செய்யப்படும் ஒரு ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் ஒப்படைக்கப்படும். எமக்கு பழக்கப்பட்டுவிட்ட பாராளுமன்ற முறையும் பேணப்படும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக்  கொண்ட  கட்சியில் இருந்து பிரதமரை ஜனாதிபதி தெரிவுசெய்வார். தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே அமைச்சர்களாக இருப்பர்" என்று ஐக்கிய தேசிய கட்சியின் 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் ஆட்சிமுறையில் இருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்கான மாற்றம் என்பதே அந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான பிரசாரப் பொருளாக அமைந்தது. மகத்தான வெற்றி பெற்ற அந்த கட்சி பாராளுமன்றத்தின் 168 ஆசனங்களில் 141  ஆசனங்களைக் கைப்பற்றியது. 1977 ஜூலையில் ஜெயவர்தன பிரதமராக பதவியேற்றார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தும் தனது சிந்தனையை நடைமுறைப்படுதும் நோக்கில் அவர் விரைவாகச் செயற்படத் தொடங்கினார்.

ஜே.ஆர். ஜெயவர்தனவும் சில அமைச்சர்களும்  ஐக்கிய தேசிய கட்சியின் சில முக்கியஸ்தர்களும் (ஜே. ஆரின்  சகோதரரர் எச்.டபிள்யூ. ஜெயவர்தன  கியூ.சி. உட்பட) முன்னணி சட்ட அறிஞர் மார்க் பெர்னாண்டாவின் உதவியுடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தும் இலக்கை  நோக்கி செயற்படத் தொடங்கினர்.  பூர்வாங்க கலந்தாலோசனை 1977 ஆகஸ்ட் 7ஆம் திகதி இடம்பெற்றது. முதலில் 1972 அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்று வரையப்பட்டது. அது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்ட பிறகு தேசிய நலனுக்கு  அவசரமான ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

அதற்கு பிறகு அது தொடர்பான சட்டமூலம்  'அவசர சட்டமூலமாக' அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்த  அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு சபாநாயகரால் அனுப்பி வைக்கப்பட்டது.  அந்த நீதிமன்றம் 24 மணி நேரத்துக்குள் சட்டமூலத்தை அங்கீகரித்தது. பிறகு தேசிய அரச சபையில் (பாராளுமன்றம்) விவாதித்து வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்காக சமர்ப்பிக்கப்பட்டது. 1972 குடியரசு அரசியலமைப்புக்கான இரண்டாவது திருத்தமாக அது 1977 செப்டெம்பர் 22ஆம் திகதி தேசிய அரச சபையினால் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு மாற்றப்பட்டது. இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஜெயவர்தன 1978 பெப்ரவரி 4ஆம் திகதி (சுதந்திர தினம்) பதவியேற்றார்.

7d39996f-9891-4d49-a3f6-23f69d4530b3.jfi

பாராளுமன்ற தெரிவுக்குழு 

அதேவேளை, 1972 அரசியலமைப்புக்கு பதிலாக புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவரும் இலக்கு நோக்கியும் ஜெயவர்தன செயற்படத் தொடங்கினார். தேசிய அரச சபையில் 1977  அக்டோபர் 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றையடுத்து சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமித்தார். இலங்கை குடியரசு அரசியலமைப்பையும் எழுத்தில் உள்ள ஏனைய சட்டங்களையும் மீளாய்வு செய்வதே அந்த தெரிவுக்குழுவுக்கு உரிய ஆணையாகும்.

பாராளுமன்ற தெரிவுக்குழு 1977 நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. பிரதமராக இருந்த ஜெயவர்தனவே தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் கொழும்பு மேற்கு தொகுதி உறுப்பினராக இருந்தார். பிறகு அவர் 1978ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற  பிரேமதாச தெரிவுக்குழுவுக்கு தலைவராக சபாநாயகரால் நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே அவர் தெரிவுக்குழுவின் உறுப்பினராக இருந்தார்.

காமினி திசாநாயக்க, லலித் அத்துலத் முதலி, றொனி டி மெல், கே.டபிள்யூ.தேவநாயகம்,   எம்.எச்.எம். நைனா மரிக்கார்  ஆகியோர் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கவும் மைத்திரிபால சேனநாயக்கவும் தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறூப்பினர்கள். 1977ஆம் ஆண்டில் அரசாங்கத்தில் இணைந்துகொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானும் தெரிவுக்குழுவில் இருந்தார்.

அந்த நேரத்தில் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தெரிவுக்குழுவில் பங்கேற்பதற்கு மறுத்துவிட்டது. இடதுசாரி கட்சிகள் 1977 பொதுத் தேர்தலில் துடைத்தெறியப்பட்டதன் விளைவாக தெரிவுக் குழுவில் ரொட்ஸ்கியவாதிகளோ அல்லது கம்யூனிஸ்டுகளோ அந்த குழுவில் இடம்பெறுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

முன்னதாக இரண்டாவது அரசியலமைப்பு திருத்தத்தின் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி பதவி புதிய அரசியலமைப்பு வரைவில் இப்போது சேர்க்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இப்போது அரசினதும் அரசாங்கத்தினதும் தலைவர். தேர்தல் முறையும் தொகுதி அடிப்படையிலான முறையில் இருந்து விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு மாற்றப்பட்டது. இலங்கை குடியரசு இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாக மாறியது.

"ஜே.ஆர். அரசியலமைப்பு" என்று பிரபல்யமாக கூறப்படும் புதிய அரசியலமைப்பு  1978 செப்டெம்பர் 7ஆம் திகதி பிரகடனம் செய்யப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டதை அடுத்து இலங்கையின்  அரசியல் முறைமை பிரிட்டிஷ் வெஸ்ட்மினிஸ்டர் முறைமையில் இருந்து பிரெஞ்சு கோலிஸ்ட் அரசியலமைப்பை நெருக்கமாக ஒத்த முறைமையாக மாறியது. அதிகாரம் சம்பிரதாயபூர்வமான பதவியில் இருந்து மெய்யான அரச தலைவராக மாற்றப்பட்ட  ஜனாதிபதிக்கு மாறியது. இதையடுத்து பிரதமர் பதவியின் மதிப்பு குறைக்கப்பட்டது.

அவசரமாக நிறைவேறிய திருத்தம்

 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை  அறிமுகப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு முன்னதாக 1972 குடியரசு அரசியலமைப்புக்கு இரண்டாவது திருத்தத்தை ஜெயவர்தன கொண்டு வந்தபோது பெருமளவு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக அந்த திருத்தத்தில் அவர் காட்டிய அவசரம் குறித்து கடுமையாக விசனம் தெரிவிக்கப்பட்டது.

லங்கா சமசமாஜ கட்சியின் பழம்பெரும் ரொட்ஸ்கியவாத தலைவரான கலாநிதி என்.எம். பெரேரா அந்த விசனங்களை வெளிப்படுத்தி ஒரு பகிரங்க சொற்பொழிவை நிகழ்த்தினார். அது ஒரு நூலாகவும் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை.

"இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதற்கு காட்டப்பட்டிருக்கும் அவசரம் எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்பு ஒன்றை திருத்துவதில் ஏன் இந்தளவு அவசரம்?  எல்லாவற்றுக்கும் மேலாக அரசியலமைப்பு திருத்தங்கள் எனப்படுபவை ஓரிரு வருடங்களுக்கு உரியவை அல்ல. எல்லாக் காலங்களுக்கும் உரியவை. எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட வேறு எந்த நாடுமே  ஜெயவர்தன  செய்வதைப் போன்று ஒரு திருத்தத்தை முன்யோசனையற்ற முறையில் அவசரமாக கொண்டுவந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

"பெரும்பாலான அரசியலமைப்பு திருத்தங்கள் பயனளிப்பதற்கு பல வருடங்கள் எடுக்கும். சில நாடுகள் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு முன்னதாக சர்வஜன வாக்கெடுப்பை நடத்தும். இந்த நாட்டில் ஜனாதிபதி ஆட்சிமுறை தொடர்பில்  வேறுபட்ட அபிப்பிராயங்களை கொண்டவர்கள் பலர் இருக்கலாம். அவர்கள் தங்களது அபிப்பிராயங்களை பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்தி அவற்றை முழுமையாக பரிசீலனை செய்யுமாறு வலியுறுத்துவதற்கான உரிமையை ஏன் பறிக்கவேண்டும்?" என்று கலாநிதி பெரேரா கூறினார். 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் ஊடாக அவசரமாக கொண்டுவருவதற்குஎ பதிலாக புதிய அரசியலமைப்பு ஒன்றின் மூலமாக் ஏன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் கொண்டு வரமுடியாது என்பதே பல வட்டாரங்களிலும் கிளப்பப்பட்ட தர்க்க ரீதியான கேள்வியாகும். இந்த விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தாமல் ஜெயவர்தன  2வது திருத்தத்தை தான் நினைத்தபடி நிறைவேற்றினார்.

ஐக்கிய தேசிய கட்சி முகாமில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்புவதற்கு முன்னதாக அதைச் செய்துமுடித்துவிட வேண்டும் என்பதற்காகவே அந்தளவு அவசரத்தை ஜெயவர்தன காட்டினார். பிரதமர் பதவியை மலினப்படுத்தி பாராளுமன்றத்தின் பெறுமதியையும் குறைத்து தனியொருவரிடம் அதிகாரங்களை குவிக்க வழி செய்யும் முறைமை ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடமே அங்கீகாரத்தை கோருவது என்பது துணிச்சலானதும் ஆபத்தானதுமான காரியமாகும். அது தாங்களாக முன்வந்து மரக்குற்றியில் தலைகளை வைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்பதற்கு சமமானதாகும். 

அதனால் சாத்தியமானளவு விரைவாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை கொண்டுவர வேண்டியது ஜெயவர்தனவை பொறுத்தவரை அவசரமானதாக இருந்தது. காலம் தாழ்த்தினால் சந்தேகங்களும் எதிர்ப்பும் கிளம்பக்கூடும். அதனால் ஜெயவர்தன தனது அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டார். ரணசிங்க பிரேமதாச தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு "ஜெயவேவா" போட்டார்கள். பிரதமராக வந்ததன் மூலம் பிரேமதாச பெருமிதமடைந்தார். ஆனால், பிரதமர் பதவி என்பது "கௌரவமான பீயோனாக" தாழ்த்தப்பட்டதை அவர் விளங்கிக்கொள்வதற்கு அப்போது காலங் கடந்துவிட்டது.

அரசியல் என்பது சாத்தியமானதை சாதிக்கும் கலையாகும். அதில் நேரம் முக்கியமானது. ஜெயவர்தனவைப் பொறுத்தவரை புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக தாமதமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை கொண்டுவருவதை விடவும் அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் ஊடாக அதைச் செய்வது விருப்பத்துக்குரியதாக இருந்தது. அரசியலயைப்பு திருத்தம் என்பது உடனடி யதார்த்தம். புதிய அரசியலமைப்பு ஒன்று தொலைவில் உள்ள சாத்தியப்பாடு மாத்திரமே.

அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன்  

ஜனாதிபதி ஆட்சிமுறை நிறுவப்பட்ட பிறகு பேராசிரியர் அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் "ஆசியாவில் கோலிஸ்ட் முறைமை; இலங்கையின் அரசியலமைப்பு"  என்ற நூலில் அது குறித்து ஆய்வு செய்தார். "உள்ளுக்குள் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ எளிதில் தாக்கத்துக்கு உள்ளாகாத உறுதி வாய்ந்த நிறைவேற்று அதிகாரத்தை ஜெயவர்தன விரும்பினார். அதன் இறுதி விளைவே பல வழிகளிலும் அதுவும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் பிரெஞ்சு ஜனாதிபதியையும் விட கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட  இந்த ஜனாதிபதி பதவி" என்று அவர் எழுதினார்.

ஜெயவர்தன ஜனாதிபதி ஆட்சிமுறை ஒன்றை  அறிமுகப்படுத்திய போதிலும் கூட, பாராளுமன்றத்துக்கு வெளியில் இருந்து அமைச்சரவையை நியமிக்கும் ஏற்பாட்டைக் கொண்டுவரவில்லை. அமைச்சரவைக்கு  சமாந்தரமான ஒரு அதிகார மையமாக பலம்பொருந்திய ஜனாதிபதி செயலகம் ஒன்று இருப்பதையும் ஜெயவர்தன விரும்பவில்லை. ஏன் அது? 

அந்த விவகாரத்தில் பேராசிரியர் வில்சனின் விசேடமான கேள்விக்கு பதிலளித்த ஜெயவர்தன, "ஜனாதிபதியைச் சுற்றி இருக்கக்கூடிய ஆலோசகர்களை நியமிக்க நான் தயங்குகிறேன் என்பதை நான் நிச்சயம் கூறவேண்டும். அதற்கு காரணம் பிரதமரையும்  அமைச்சரவை உறுப்பினர்களையும்  மாத்திரமே ஜனாதிபதி ஆலோசகர்களாகக் கொண்டிருக்கவேண்டும். ஏனென்றால், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களே மக்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்" என்று கூறினார்.

இந்த நிலைப்பாட்டை ஜெயவர்தன  1978 மே 31ஆம் திகதி இலங்கை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்தியபோது விபரித்துக் கூறினார்.

"நான் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி, அரச தலைவர், அரசாங்க தலைவர். இது அதிகாரம் மிக்க பதவி. அதனால் பொறுப்பு வாய்ந்த பதவி. எனக்கு பிறகு பலர் இந்த பதவிக்கு வரவிருப்பதால் அவர்கள் எல்லோரும் பின்பற்றுவதற்கு பெறுமதியான முன்னுதாரணங்களை எனது பதவிக் காலத்தில் உருவாக்க விரும்புகிறேன். முதலாவதாக, அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் ஊடாகவே நான் எப்போதும் செயற்படுவேன். அவர்களது அதிகாரங்களை மலினப்படுத்தாமல் பாராளுமன்ற முறைமையை பேணுவேன். இரண்டாவதாக, ஜனாதிபதி மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய அவரின் ஆட்கள் என்று அறியப்படும் ஒரு குழுவை நான் உருவாக்கப்போவதில்லை"  என்று அவர்  தனதுரையில்  கூறினார்.

ஜெயவர்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்தபோது பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலத்தை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். "தரங்குறைக்கப்பட்ட" பாராளுமன்றத்தை விடவும் ஜனாதிபதி பதவி மேலானதாகவும் சுதந்திரமானதாகவும் இருந்தபோதிலும், ஜெயவர்தன சாத்தியமானளவுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக செயற்படுவதற்கே விருப்பினார். அது உண்மையில் அவரின் பொம்மையாக இருந்ததே அதற்கு காரணமாகும். தவிரவும், அவ்வாறு செய்வது ஒரு சர்வாதிகாரி போன்று அதிகாரத்தை அபகரித்துவிட்டதாக முன்வைக்கப்பட்ட  குற்றச்சாட்டுக்களின் கடுமையை  தணிக்கவும் உதவியது. 

அவ்வாறாக  பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு இருந்த பிரமாண்டமான பெரும்பான்மை ஜெயவர்தன  சர்வாதிகாரி என்று நாமம் சூட்டப்படாமலேயே  ஒரு சர்வாதிகாரியை போன்று  ஆதிக்கப் போக்குடன் அதிகாரத்தை பயன்படுத்த உதவியது. இவை எல்லாவற்றுக்கும் பாராளுமன்றத்தின் மீது முழுக்கட்டுப்பாடு தேவைப்பட்டது. சர்ச்சைக்குரிய பல வழிமுறைகளின் ஊடாக பாராளுமன்றத்தை தனது கட்டுப்பாட்டில் அவர் தொடர்ந்து வைத்திருந்தார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிறகு பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை ஜே.ஆரின் அரசியலைமைப்பு தடுத்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத் தரப்பில் இருந்து எதிர்க்கட்சிக்கு மாறுவதை அரசியலயைப்பு ரீதியான சட்டத்தின் மூலமாக அவர் தடுத்தார். ஜெயவர்தனவும் பிரேமதாசவும் ஐக்கிய தேசிய கட்சியின் தளத்தை சமூகத்தின் பல தரப்பினரையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியதன் விளைவாக  1977 பொதுத் தேர்தலில் பெருமளவு "சாமானியர்கள்" பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். 

கடுமையான உயர் வர்க்க உணர்வு கொண்ட ஜெயவர்தன மக்கள் பிரதிநதிகளின் விசுவாசங்கள் குறித்து நம்பிக்கையற்றவராக இருந்தார். அதனால் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்கு கட்சிமாறலை தடுக்க வேண்டியிருந்தது. என்றாலும், மட்டக்களப்பு தொகுதி தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரை அரசாங்கத்துடன் இணைவதற்கு வசதியாக ஜெயவர்தன அரசியலமைப்புக்கு திருத்தம் ஒன்றைக் கொண்டுவந்தார். அபகீர்த்தி மிக்க அந்த "இராஜதுரை திருத்தம்" எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்க பங்கத்துக்கு வருவதற்கு வசதியாக அமைந்தது. ஆனால், அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தரப்புக்கு செல்லமுடியாது.

பிரமாண்டமான பாராளுமன்ற பெரும்பான்மைப் பலத்தை பேணுவதற்கு இன்னொரு சூழ்ச்சித்தனமான வழிமுறையையும் ஜெயவர்தன  கையாண்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமானைத் தவிர அரசாங்கத்தின் ஏனைய சகல பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் திகதியிடப்படாத பதவிவிலகல் கடிதங்களை அவர் கேட்டுப் பெற்றுக்கொண்டார். கட்சிக்கு அவர்கள் துரோகம் இழைப்பதை அது தடுத்தது.

பழிப்புக்குள்ளான சர்வஜன வாக்கெடுப்பு 

1982ஆம் ஆண்டின்  சர்வஜன வாக்கெடுப்பு ஜெயவர்தன செய்த மிகப் பெரிய ஜனநாயக விரோதச் செயலாக அமைந்தது. 1977ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை இன்னொரு ஆறு வருடங்களுக்கு நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி அதில் அவர் வெற்றியும் பெற்றார். 

பாராளுமன்ற தேர்தல் 1983ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஜெயவர்தனவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையும் வரை ஐக்கிய தேசிய கட்சியின் ஆறில் ஐந்து பாராளுமன்ற பெரும்பான்மையை வைத்திருப்பதே அதன் நோக்கமாகும்.

இதே ஜெயவர்தனதான் சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கம் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 1975ஆம் ஆண்டில் இருந்து 1977ஆம் ஆண்டு வரை நீடித்ததை ஜனநாயக விரோத நடவடிக்கை என்று ஆட்சேபித்தார். கொழும்பு தெற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய அவர் "ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக" 1975ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு பெருவெற்றி பெற்றார். தனது ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை ஆறு வருடங்கள் நீடிப்பதில் அவருக்கு எந்த மன உறுத்தலும் இருக்கவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை இப்போது 46 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது. அதன் ஆரம்பத்தில் இருந்தே அந்த ஆட்சி முறை கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இலங்கையில் தவறாகிப்போன சகல விடயங்களுக்கும் ஜே.ஆரின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை மீதே பழிபோடப்பட்டது. இலங்கையில் உள்ள சகல கெடுதிகளுக்கும் மூல காரணம் ஜனாதிபதி ஆட்சி முறையே என்று கண்டனம் செய்வது  அரசியல் ரீதியில் ஒரு நாகரிகமாகிவிட்டது.

1991ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக காமினி திசாநாயக்கவும் லலித் அத்துலத் முதலியும் கிளர்ச்சி செய்யத்தொடங்கிய நாள் முதலாக இலங்கையின் அரசியல் விவாதத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக் கோரிக்கை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இலங்கையில் முதலாவது சிங்கள பேசும்படம் 1947ஆம் ஆண்டில் வெளியானது. அந்த படத்தின் பெயர் "கடவுனு பொறந்துவ" (மீறப்பட்ட வாக்குறுதி) என்பதாகும். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது என்ற வாக்குறுதியைப் பொறுத்தவரை கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இலங்கை மக்கள் மீறப்பட்ட வாக்குறுதிகளையே பார்த்து வருகிறார்கள்.  ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக தேர்தல்களில் வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் வெற்றிபெற்று பதவிக்கு வந்ததும் அதை நிறைவேற்றாமல் விட்டதே இதுவரையான அனுபவமாக இருக்கிறது.

பல்வேறு அரசாங்கங்கள் வந்து போய்விட்டன. பல ஜனாதிபதிகளும் வந்து போய்விட்டார்கள். ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதை ஒழிப்பது தொடர்பில் பொதுவில் அரசியல் கட்சிகளினாலும் குறிப்பாக பிரதான கட்சிகளினாலும் கருத்தொருமிப்புக்கு வரமுடியாமல் இருப்பது அல்லது கருத்தொருமிப்புக்கு வர விருப்பமில்லாமல் இருப்பதே இதற்கு காரணமாகும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதையோ அல்லது அதன் அதிகாரங்களை குறைப்பதையோ  அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் ஊடாக அல்லது புதிய அரசியலமைப்பு ஒன்றின் ஊடாக மாத்திரமே செய்யமுடியும்.  இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை என்பதுடன் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமாக மக்களின் அங்கீகாரமும் பெறப்படவேண்டும்.  மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கங்கள்  ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவில்லை. அதேவேளை ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு விரும்பிய அரசாங்கங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை.

அல்பிரட் ரெனிசனின் நீரோடை 

விருப்பம் இருந்த இடத்தில் அதிகாரம் இருக்கவில்லை. அதிகாரம் இருந்த இடத்தில் விருப்பம் இருக்கவில்லை. அதனால் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்தொருமிப்பு நழுவிக்கொண்டே செல்கிறது.  ஜனாதிபதிகள் வரலாம் போகலாம். ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தனவின் நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சிமுறை ஆங்கிலேயக் கவிஞர் அல்பிரட் ரெனிசனின் நீரோடை போன்று  என்றென்றைக்கும் ஓடிக்கொண்டேயிருக்கும்.

https://www.virakesari.lk/article/195539



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவர் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தற்கால சந்ததியைச் சேர்ந்தவர் என்றால் சில விடயங்களைச் சொல்ல விரும்புகிறேன். இலங்கையில் தமிழினம் மீதான சிங்கள இனத்தின் அடக்குமுறையென்பது பன்முகப்படுத்தப்பட்டது. மொழி என்பது அதில் ஒரு முகம் மட்டுமே.  1948 ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தவுடனேயே முதலாவது சிங்களக் குடியேற்றம் தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டாயிற்று. மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை ஆற்றினை அண்டி உருவாக்கப்பட்ட குடியேற்றமே கல் ஓயாக் குடியேற்றம். 1952 இல் பூர்த்தியாக்கப்பட்ட இக்குடியேற்றத்தில் கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இருந்த சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்றினார்கள். அப்போது மொழி ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனாலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் தாயகத்தில் சிங்களவர்கள் குடியேறினார்கள். இப்பகுதிகளில் இருந்த வெளியேற மறுத்த தமிழர்களுக்கும் குடியேற்றச் சிங்களவர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அரச ஆதரவுடன் தமிழர்கள் கொல்லப்பட்டும் அடித்தும் விரட்டப்பட்டார்கள்.  கல்லோயாக் குடியேற்றத்தைத் தொப்டர்ந்து பதவியா (பதவிக்குளம்), மொறவெவ (முதலிக் குளம்), கந்தளாய் ஆகியவையும் 80 களில் முல்லைத்தீவின் வலி ஓய (மணலாறு), கொக்குத்தொடுவார், கொக்கிளாய், தென்னைமரவாடி, கென்ட், டொலர் பண்ணைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிங்களக் குடியேற்றங்களும் அரசுகளால் முன்னெடுக்கப்பட்டுத் தொடர்ந்தன.  ஆனால் இவற்றினை தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்பதாலோ அல்லது சிங்களவர் தமிழ் மொழியைக் கற்பதாலோ தடுத்திருக்க முடியுமா? அவர்கள் செய்வதே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து இருப்பை அழிப்பதற்காகவே எனும்போது மொழிகளைப் பரஸ்பரம் கற்பது எவ்வாறு இதனைத் தடுத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?  நவீன காலத்துச் சிங்கள இனவாதத்தின் பிதாமகன் என்று அறியப்பட்ட பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்தார். இலங்கையில் ஒரே உத்தியோகபூர்வ அரச மொழியாக சிங்கள மொழியே இருக்கவேண்டும் என்றும் தமிழர்கள் உட்பட அனைவரும் சிங்கள மொழியைக் கற்பது அவசியம் என்று கூறப்பட்டது. குறிப்பாக அரச சேவைகளில் சிங்களம் கற்றால் ஒழிய தமிழர்கள் பணிக்கு அமர்த்தப்படுவது தடுக்கப்பட்டது, தனியார் துறை பற்றிக் கேட்கவே தேவையில்லை. தாய்மொழியாகிய தமிழ் மொழியிருக்க தம்மை ஆக்கிரமித்து நிற்கும் அந்நிய மொழியான சிங்களத்தைக் கற்குமாறு தமிழர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். இச்சட்டமே தமிழர்களை இன்னொரு வழியில் அடக்கியாளத்தான் என்றாகிறபோது நாம் அதனைக் கற்றிருந்தால் இவை எதுவுமே நடந்திருக்காது என்று எப்படி நினைக்கிறீர்கள்? தமிழ் இனம் தனது தாய்மொழிக்கு அடுத்ததாக இன்னொரு மொழியினைக் கற்கவேண்டும் என்றால் பொது மொழியொன்றைக் கற்கலாம், ஆங்கிலம் இங்கு கைகொடுக்கும். மூன்றாவதாக சிங்களத்தை, விரும்பினால் கற்கலாம். ஆனால் இவை எதுவுமே சிங்களம் எம்மீது நடத்தும் ஆக்கிரமிப்பை தடுக்காது. சிங்களத்தைக் கற்றால் அவர்களுக்கு எமது பக்க நியாயத்தை எடுத்துரைக்கலாம் என்று கூறுவதெல்லாம் எம்மை நாமே ஏமாற்றும் வேலை, ஏனென்றால் தாம் செய்வது என்னவென்று நன்கு தெரிந்தே  சிங்களவர்கள் செய்கிறார்கள். சகோதர இனமொன்றிற்கு எதிராக தாம் செய்யும் அக்கிரமங்கள் அநீதியானவை என்பதை நாம் சிங்களம் கற்றுத்தான் அவர்களுக்குக் கூற வேண்டியதில்லை.   
    • உண்மையை உரத்துச்சொல்லி உள்ளீர்கள்.   இவர்களின் தமிழ் எழுத்து பிழைகள் அர்த்தங்களை தவறாக சித்தரிக்கின்றன. நன்றி 
    • அதுவும்  மோடி கொடுத்த ஆலோசனைதான். பின்னர், அனுரா நாட்டுக்கு திரும்பி வரவேண்டாமோ? இந்து ஆலயங்களை தரிசிக்கவில்லையா இந்தியாவை (மோடியை) மகிழ்விக்க?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.