Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ"
 
 
"சூரியன் மறைய, தனிமை வாட்டுதா
சூனிய வாழ்வில், வெளிச்சம் வேண்டுமா
சூதுவாது தெரியா, அழகு தேவதையே
சூசகமாய் கேட்கிறேன், ஏமாற்ற வேண்டாம்"
 
"நேர்த்தியான சுருள்முடி, தோளைத் தழுவ
நேரே வந்து, புன்முறுவல் எனோ
நேரார் வருமுன், நான் அணைக்கவா
நேசம் கொண்டு, என்னிடம் வந்தாய்"
 
"புத்தன் சொன்ன, கருனை இரக்கம்
புரிந்தோர் சொற்பர், இன்று இருக்கினம்
புருவம் நெளித்து, கண்சிமிட்டி நீ
புங்கலம் குளிர, கருணை பொழிகிறாய்"
 
"அரசு தராத, பேச்சு சுதந்திரம்
அழகி உன்னில், நான் காண்கிறேன்
அக்கம் பக்கம், யார் இருந்தாலும்
அச்சம் இன்றி, காதல் பேசு"
 
"உன் கன்னத்தில், ஒருவன் அறைந்தால்
உன் மறுகன்னத்தை, காட்டு என்றான்
உகவை கொண்டு, கன்னத்தில் தந்தேன்
உலோபி இல்லாமல், மறுகன்னம் காட்டாயோ "
 
"வலிந்த குடியேற்றமும், காணாமல் போக்குவதும்
வளமான ஜனநாயக, அரசின் செயல்பாடோ
வளைத்துநெளித்து, மனதை காணாமல் போக்குவதும்
வனப்பான எழில் மேனியின், செயல்பாடோ"
 
"அதிகாரம் குவிய, இருபதாம் திருத்தமாம்
அற்பன், தொப்பி பிரட்டி கைதூக்கினான்
அன்பு குவிய, உள்ளம் திருத்தி
அம்புலி முகத்தாளே, கை தூக்காயோ"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[சூசகம் - மறைமுகம்,
நேரார் - பகைவர்,
புங்கலம் - ஆத்துமா,
உலோபி - கருமி]
 
124129756_10218097344607908_4382305368140251472_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=FCCXEQZLpNcQ7kNvgG7Pk-i&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AjO5QUM574B0dqKLDTI_YDw&oh=00_AYDUvuTL16usIZxBkTFgAvx7rBpmci9tPa-N3t2tz9bdQw&oe=672CDBB7  124066930_10218097345527931_2569832179169119866_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=o7111et7VowQ7kNvgFt0DSm&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AjO5QUM574B0dqKLDTI_YDw&oh=00_AYBPs1RmuzCn91e6Mvtc92x7_RVr8DIbyMW5rkV3hyuG8g&oe=672CF63F
  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அசாத்தை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு அசாத்தை விட மனித உரிமையில்   முன்னேற்றகரமான  அரசையோ அல்லது கிளர்ச்சியாளர்களையோ கொண்டுவந்திருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும்.  ஆனால் தற்போதைய கிளர்ச்சியாளர்கள் முன்னைய ஆட்சியாளர்களைவிட மோசமானவர்களெல்லோ,.? அசாத் தூக்கில் மாட்டிக் கொலை செய்தாரானால் கிளர்ச்சியாளர்கள் கழுத்தை அறுக்கிறார்கள் அல்லது உயரமான கட்டடத்தின் உச்சியில் அல்லது கோட்டை கொத்தளத்தின் உச்சியில் வைத்து கீழே தள்லிவிடும் ஆட்களல்லவா?  சிறுவர்களின் கழுத்தை அரிந்துவிட்டு அல்லாஹு அக்பர் என்கிறார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். சிறுபான்மையினரை அழிக்கிறார்கள்.  அசாத் செய்தது பிழை என்று கூறும் தாங்கள் கிளர்ச்சியாளர்களது பக்கத்தை மூடி மறைப்பது பக்கச் சார்பானது அல்லவா,......? 
    • தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றம் December 14, 2024  02:01 pm தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இரவு திடீரென இராணுவச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் அடிப்படையில் தென் கொரிய எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக ஒரு குற்றப்பிரேரணையை கொண்டு வந்தன. எனினும், ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் மக்கள் சக்தி கட்சியினர் வாக்கெடுப்பை புறக்கணித்து, பாராளுமன்றத்தை விட்டு வௌிநடப்பு செய்ததன் காரணமாக முதலாவது குற்றப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. நேற்று, இரண்டாவது முறையாக ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்தன. அங்கு தென்கொரிய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் தமது வாக்குகளை பயன்படுத்தியதோடு 204 உறுப்பினர்கள் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். பதவி நீக்கத்திற்கு எதிராக 85 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதன்படி, தென்கொரிய அதிபர் யுன் சுக் யோலுக்கு எதிரான பதவி நீக்கம் இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கப்படுவதால், பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.   https://tamil.adaderana.lk/news.php?nid=197286
    • என்னெண்டு என்ரை வாயால சொல்லுவன்.கொண்டாட்டத்தை நீங்களே போய் பாருங்கோ.அதில சொல்லியிருக்கிற கருத்துக்களையும் பாருங்கோ....😂 🤣  
    • மத்திய கிழக்கு முழுவதுமே ஓரளவுக்குமேல் நாகரீகமடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டது.  இந்த வகையான ஆட்சிக்குத்தான் அது  பழக்கப்பட்டது. அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைகளை உற்றுக் கவனித்திருந்தீர்களென்றால் அது ஏன் என்று புரியும்.   குர்ரானைக் கட்டிப்பிடித்து வரிக்குவரி அதனைக் கடைப்பிடிக்க முயற்சித்தால் இது அப்படியே தொடரும். 
    • தலைவரும் கருணா அம்மானின்  தவறுகளை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு என்ன நடந்தது என்று சொன்ன வரலாற்றில் இருந்து படிக்கவேண்டாமா? அதிகாரிகளின், நிறுவனங்களின், மருத்துவமனைகளின் தவறுகளை சும்மா கேள்விமட்டும் கேட்டால் நிறுத்தமுடியாது. சட்டம், நீதிமன்றம் என்று பலவழிகள் இருக்கின்றது. அருச்சுனா மிகவும் மோசமாக ஒருவரை (இன்னும் பலரை) நடத்துவதைப் பார்த்தும் அவருக்கு முண்டுகொடுப்பதற்கும் ஒரு மனம் வேண்டும்!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.