Jump to content

மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ரி20 தொடருக்கு பெயரிடப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் தசுன் ஷானக்க இல்லை

image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை முன்னிட்டு 17 வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக கண்டியில் ஜூலை மாதம் நடைபெற்ற சர்வதேச ரி20 தொடரில் 0 - 3 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை அணியில் இடம்பெற்ற முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர ஆகியோருக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதிரடி வீரர் பானுக்க ராஜபக்ஷ மீண்டும் குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக தொடர்ந்து சரித் அசலன்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்கவுக்கு  மிண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி  ரி20  போட்டியில் அறிமுகமான சமிந்து விக்ரமசிங்க அப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார்.

இதேவேளை, வேகப்பந்துவீச்சாளர்களான மதீஷ பத்திரண, நுவன் துஷார, துடுப்பாடட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரும் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் இடைக்காலப் பயிற்றுநராக இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு வழிநடத்திய சனத் ஜயசூரிய, முழு நேரப் பயிற்றுநராக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருடன் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார்.

இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகள் ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும். அப் போட்டிகள் அக்டோபர் 13, 15, 17ஆம் திகதிகளில் இரவு போட்டிகளாக நடத்தப்படும்.

இலங்கை குழாம்

சரித் அசலன்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, ஜெவ்றி வெண்டசே, சமிந்து விக்ரமசிங்க, நுவன் துஷார, மதீஷ பத்திரண, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ.

https://www.virakesari.lk/article/195902

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ரி 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ரி 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 179 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் சரித்த அசலங்க அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றதுடன், கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ரோமாரியோ ஷெபேர்ட் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் ப்ரண்டன் கிங்க் அதிகபட்சமாக 63 ஓட்டங்களையும், இவின் லெவிஸ் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இங்கை அணி சார்பில் மதீஷ பத்திரன 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி 3 போட்டிகள் கொண்ட இந்த ரி 20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.

https://thinakkural.lk/article/310673

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌ ப‌டியால் தான் இல‌ங்கை அணி நேற்று தோத்த‌து...................

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.