Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ் மக்கள் 80 வீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் - இலங்கை தமிழ் அரசு கட்சி வேட்பாளர் சண்முகம் குகதாசன்

image

இம் முறை நடை பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் 80 சதவீதமான வாக்குகளை அளித்தால் இரு பிரதிநிதிகளை பெறலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுன்ற முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

திருகோணமலையில் (22) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் 

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இருந்தால் தான் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 1985ம் ஆண்டு முதல் நில அபகரிப்பு செய்யப்பட்ட விவசாய மக்கள் காணிகளை மீளப் பெறலாம் வன இலாகா 4000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களையும் தொல்பொருள் திணைக்களம் 2600 ஏக்கர்களையும் இது போன்று இலங்கை துறை முக அதிகார சபை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்களையும் பௌத்த பிக்குகள் விகாரைக்கான கட்டுமானம் என்ற போர்வையில் பல நிலங்களை அபகரித்துள்ளனர்.

இதனை மீட்க தமிழ் மக்களுக்கான பிரதிநிதிகள் தேவை. எனவே தான் அனைவரும் ஒன்றினைந்து ஒரே குடையின் கீழ் செயற்படுவதுடன் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இரு ஆசனங்களை பெறலாம் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஆகிவிடும்.

பல கட்சிகளும் பல சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன, தமிழ் வாக்குகளில் மொத்தமாக 98ஆயிரம் வாக்குகள் காணப்படுகிறது. இதில் சுமாராக எழுபதாயிரம் வாக்குகளையாவது தமிழ் மக்கள் அளிக்க வேண்டும். வாக்குகளை அளிப்பதற்காக மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இஸ்லாமியர்கள் 80 வீதமான வாக்குகளை அளிக்கின்றனர். தமிழ் மக்கள் 65 வீதமான வாக்குகளையே அளிக்கின்றனர். எனவே இம் முறை 85 வீதமான வாக்குகளை அளிக்க வேண்டும். அப்போது தான் நம் மண்ணின் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு உரிமைகள் அபிவிருத்திகளை பெற முடியும்.

இந்தியாவில் 15 பேரை வைத்து மோடி ஆட்சி நடத்துகிறார் தெலுங்கான மக்கள் ஒற்றுமை காரணமாகவே இந்த ஆட்சி நடைபெறுகிறது மொத்தமாக 545 உறுப்பினர்களை வைத்து அங்கு ஆட்சி இடம் பெறுகிறது அது போன்று இங்கு 225 உறுப்பினர்களில் நாம் 25 தமிழ் பிரதிநிதிகளை பெற வேண்டும்.

இவ்வாறாக தான் நாம் இலங்கை தமிழ் அரசு கட்சி டெலோ, புளட், ஈபிஆர்எல் எப் போன்ற கட்சிகள் ஒற்றுமையாக இணைந்துள்ளோம். இதனால் நம் பிரதிநிதித்துவத்தை ஒற்றுமை மூலமே பாதுகாக்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/196958

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசை, தோசை, அப்பளம், வடை....
நீங்கள் இரண்டு தொகுதிகளை பெற்று பாராளுமன்றம் என்ன செய்ய உத்தேசம்.
வழமை போல்.... கன்ரீன் சாப்பாடு சாப்பிட ஆசை விடுகுதில்லை.
நீங்கள் செய்யிற வேலையாலை,  திருகோணமலை இந்த முறை உங்களுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, தமிழ் சிறி said:

ஆசை, தோசை, அப்பளம், வடை....
நீங்கள் இரண்டு தொகுதிகளை பெற்று பாராளுமன்றம் என்ன செய்ய உத்தேசம்.
வழமை போல்.... கன்ரீன் சாப்பாடு சாப்பிட ஆசை விடுகுதில்லை.
நீங்கள் செய்யிற வேலையாலை,  திருகோணமலை இந்த முறை உங்களுக்கு இல்லை.

இல்லையண்ணை இந்த முறை எல்லாக் கட்சியும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக தேர்தலில் நிற்பதால் அதிசயமாக 2 வேட்பாளர் தெரிவு செய்யப்படலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

இல்லையண்ணை இந்த முறை எல்லாக் கட்சியும் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக தேர்தலில் நிற்பதால் அதிசயமாக 2 வேட்பாளர் தெரிவு செய்யப்படலாம்!

திருகோணமலையில்... அனுர கட்சி சார்பாக கேட்கும் தமிழர் ஒருவருக்கு அதிக ஆதரவு உள்ளதாக சொல்கிறார்கள். ஏனென்றால்... தமிழரசு கட்சி தனது பெயரை "ரிப்பேர்" பண்ணி வைத்திருக்கு. 
வேணுமென்றால்... ஒன்று கிடைக்கலாம்.  மற்றது அனுர கடசிக்குத்தான் என்பது எனது ஊகம்.
தமிழரசு கட்சி அந்த ஒன்றுக்கே... தலையால் தண்ணி குடிக்க வேண்டி வரும். 😂



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.