Jump to content

நவீன தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுக்க ஆணையைத் தாருங்கள் - சட்டத்தரணி வி. மணிவண்ணன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
25 Oct, 2024 | 05:21 PM
image

நவீன தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுத்து செல்ல உள்ள எங்களுக்கு தமிழ் மக்கள் ஆணையை வழங்க வேண்டும் என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.   

யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை (25)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.   

மேலும் தெரிவிக்கையில்,   

என்னை பொறுத்த வரையில் இந்த மண்ணிலும் அரசியல் மாற்றம் ஏற்பட்ட வேண்டும் அந்த மாற்றம் ஊடாக புதிய அரசியல் கலாச்சாரம் ஏற்பட்டு புதியவர்கள் பாராளுமன்றுக்கு அனுப்பப்பட வேண்டும்.   

நீங்கள் கடந்த காலங்களில் யாருக்கு வாக்களித்தீர்களோ , அவர்கள் பல்வேறு கட்சிகளாக இன்று உங்கள் முன் வந்துள்ளார்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாராளுமன்றில் இருந்தும் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யாதவர்கள் இன்று பல்வேறு வடிவங்களில் உங்கள் முன் வருகின்றார்கள்.   

தமிழ் மக்கள் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் ஆயின் முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் தேர்ந்தெடுக்காமல் , இளையோரை , தகமையுடையோரை , பல்துறை ஆளுமைகளை கொண்டோரை கொண்டுள்ள ஒரே ஒரு தரப்பான மான் சின்னத்தில் போட்டியிடும் எங்களை தேர்ந்தெடுக்க  வேண்டும்.  

எந்தவொரு கட்சிக்கு வாக்களித்தாலும் அதில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரே மீண்டும் பாராளுமன்றம் செல்வார். அதனூடாக எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை.  

கடந்த காலத்தில் எதனை செய்தோம். எதிர்காலத்தில் எதனை செய்ய போறோம் என்று உங்கள் முன் சொல்ல கூடிய ஒரே ஒரு தரப்பும் நாங்கள் தான்.  

யாழ் . மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவை குறுகிய காலமே எம்மிடம் கையளிக்கப்பட்டது அதில் செய்தவற்றை சொல்லிக்காட்ட கூடிய நிரூபிக்க கூடியவர்கள் நாமே.  

எதிர் காலத்தில் பாராளுமன்றில் என்ன செய்ய போகிறோம் என்ன மாற்றத்தை கொண்டு வர போகிறோம் என தெளிவாக சொல்ல கூடிய ஒரே ஒரு தரப்பும் நாங்களே.  

எனவே நிச்சயம் தமிழ் மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் இதுவரை காலமும் உள்ள அரசியல் சித்தாந்தத்தை மாற்றி நவீன புதுப்பிக்கப்பட்ட ஒரு தேசிய வாத அரசியலை நாங்கள் முன்னெடுக்க போறோம்  

எங்களை பொறுத்த வரை தமிழ் மக்களின் அரசியல் உரிமையும் , நீடித்த பொருளாதார வளர்ச்சியும் இரண்டு கண்கள் போன்றவை இவற்றை நாங்கள் பிரித்து பார்க்க முடியாது. ஒன்றை ஒன்று புறம் தள்ள முடியாது.  

இரண்டையும் , சமாந்தரமாக மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு தமிழ் மக்களுக்கு இருக்கிறது. இதனை செய்ய கூடிய ஒரே தரப்பு மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணி மாத்திரமே. 

ஆகவே இந்த மண்ணிலே மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் , இந்த மண்ணில் சாதித்த இளைஞர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்  

நவீன தமிழ் தேசிய வாதத்தை முன் வைக்க உள்ளோம். அதனை முன்னெடுத்து செல்ல உங்கள் ஆணையை உங்களிடம் இருந்து வேண்டிக்கொள்கிறோம் என்றார். 

நவீன தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுக்க ஆணையைத் தாருங்கள் - சட்டத்தரணி வி. மணிவண்ணன்! | Virakesari.lk

Edited by பிழம்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நவீன தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுக்க ஆணையைத் தாருங்கள் - சட்டத்தரணி வி. மணிவண்ணன்!

 நல்ல wording!

டேய் எப்டிர்ரா?!

மாரீசன்களுக்கு மட்டுமல்ல பட்டாசு ரெஜிமண்டுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்!😂

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குறைந்த செலவில் நிறைந்த இன்பம் பெற இன்றே செல்லுங்கள் சிறிலங்கா...அதாவது 100டொலருக்கு அமெரிககாவில ஒருநாள் தங்க முடியாது ஆனால் அறுகம்பேயில் 100 டொலருக்கு நாலு நாள் தங்கலாம்..இலவச மாசாஜ் எல்லாம் கிடைக்கும் ...ரஸ்யர்கள்,அமெரிக்கர்கள் எல்லாம் சிறிலங்காவுக்கு ஓடி வருவதன் நோக்கம் அதுதான்..காற்றில் எவ்வளவு தூசு இருக்கு,நாட்டில எவ்வளவு சத்தம் வருகிறது ...நாடு சுத்தமா இருக்கா,நாட்டில் மனித உரிமை நன்றாக செயல் படுகிறதா என எங்களை( என்னை  போல )உள்ள மக்கள் சிந்திக்க மாட்டார்கள் ... சில ரோயல் வமிலிகள் மற்றும் அவர்களை கொப்பி பண்ணி ரோயல் வமிலியாக நடிக்கும் சில சனம் தான் இதெல்லாம் பார்த்து (தூசு,சத்தம்,பிற..)வர பயப்படுங்கள் .... இஸ்ரெல்காரன் வந்து நிலம் வாங்கி கோவில் கட்டி வழிபடுகிறான் என்றால் யோசித்து பாருங்களேன்...நான் பிராண்சுக்கு சுற்றுலா வந்தா ஒரு கிழமை வாடகைக்கு ரூம் போடத்தான் சரிபட்டு வரும் ...
    • ஒரு காலத்தில் எம்மை இந்தியர்கள் அல்லது பாகிஸ்தானியர்கள் என்று பார்க்கும் நிலை இருந்தது. ஆனால் தற்போது தமிழ் என்று சொன்னால் போதும். சிறீலங்கா நான்காவது இடத்தில்.....
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.✍️ 
    • 2018 உலக வங்கியின் கருத்துப்படி இலங்கையின் உட் கட்டுமானங்களை சரி செய்வதற்கு இலங்கைக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது, இவ்வாறான எதிர்மறைகளான  சூழ்நிலையிலும் இலங்கையின் தமிழர் வாழும் பகுதியில் உற்பத்தி நிறுவனம் அமைக்க முற்பட்ட புலம்பெயர் தமிழர்களின் முயற்சியினை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி தனக்கு இலஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டமையால் கைவிடப்பட்டது. மக்களின் வாழ்க்கையினை மேம்படுத்த அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகளே அவர்களது நல் வாழ்க்கைக்கு குறுக்கே நிற்கிறார்கள். இவர்கள் எல்லோரும் கடைசியாக பதுங்குமிடம்தான் தமிழ்தேசியம்.
    • எங்கள் ஊரில் கந்தசாமி கோயில் பூங்காவனத்திருவிழா உபயகாரர்களான எங்கள் குடும்பத்தினுடையது. பூங்காவனத்திருவிழா அன்று இரவிரவாக இலங்கையின் அதி உச்ச நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்கள் வந்து வாசிப்பது வழமை. விழாவின் இறுதியில் சின்னமேளம் நடக்கும். அரைகுறை ஆடையில் தான் ஆட்டம் நடக்கும். வரும் நாதஸ்வர மற்றும் தவில் வித்துவான்கள் சின்னமேளங்களை பாவிப்பதாக பெரிசுகள் பேசிக் கொள்வதை கேட்டிருக்கிறேன். நம்ம @புங்கையூரன் அண்ணைக்கே வெளிச்சம் 😋
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.