Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
கீழ்பாக்கம் மனநல காப்பகம் விவகாரம்
படக்குறிப்பு, கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகம் கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ், சென்னை
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சென்னையில் 230 ஆண்டுகள் பழமையான கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை மேம்படுத்த தனி அரசு நிறுவனம் தொடங்குவது தொடர்பாக, அரசு செயலர் சுப்ரியா சாஹூ எழுதியுள்ள கடிதத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

அரசு மனநல காப்பகங்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கவே இவ்வாறு செயல்படுவதாக, மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்துகின்றன.

ஆனால், கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை தன்னார்வலர்களுக்கும் தனியாருக்கும் தாரை வார்க்கும் எண்ணம் இல்லை என்கிறார், அமைச்சர் மா.சுப்ரமணியன்.

சுமார் 230 ஆண்டுகள் பழமையான கீழ்பாக்கம் மனநல மையத்தில் என்ன பிரச்னை? இதற்கென தனியாக அரசு நிறுவனத்தை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளதா?

கடிதத்தில் என்ன உள்ளது?

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் சங்குமணிக்கு கடந்த அக்டோபர் 23ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் சுப்ரியா சாஹூ எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், 'மனநல காப்பகத்தின் மேம்பாட்டுக்கு தனியாக அரசு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கான காரணங்களையும் சுப்ரியா சாஹூ பட்டியலிட்டுள்ளார். அதில், "மனநல காப்பகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு, பணியாளர்கள் நிலை, காலிப் பணியிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தபோது 360 டிகிரி கோணத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம் எனத் தெரிய வந்துள்ளது."

ஆனால், "அவற்றை முன்னெடுக்கும் திறன் தற்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்புக்கு இல்லை. உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள நிறுவனங்கள், கார்ப்பரேட் பங்களிப்புகள் மூலம் நிதியைத் திரட்டும் வாய்ப்புகள் மனநல காப்பகத்திற்கு உள்ளன," எனக் குறிப்பிட்டுள்ளார்.

 
கீழ்பாக்கம் மனநல காப்பகம் விவகாரம்

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலர் சுப்ரியா சாஹூ

இதை உறுதிசெய்யும் வகையில் நிறுவன சட்டப் பிரிவு 8ன்கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு நிறுவனங்களைப் போன்று பிரத்யேக அரசு நிறுவனம் அமைப்பது அவசியம் எனவும் இதன் வாயிலாக காப்பகத்தின் மேம்பாட்டிற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனவும் சுப்ரியா சாஹூ குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான முன்மொழிவை மருத்துவ கல்வி இயக்குநர் அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திட்டத்திற்கு மருத்துவக் கல்வியின் கூடுதல் இயக்குநர் சாந்தாராமன் தொடர்பு அதிகாரியாகச் (Nodel officer) செயல்பட உள்ளதாகவும் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார்.

மருத்துவ சங்கங்கள் எதிர்ப்பு

இந்தக் கடிதத்திற்கு மருத்துவ சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. "அரசு சார்பில் பிரத்யேக நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் கூறுகிறார். ஆனால், அப்படியொரு நிறுவனம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மருத்துவக் கல்வியின்கீழ் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலே போதுமானது" என்றார்.

"வெளியில் இருந்து நன்கொடை பெற உள்ளதாக அரசு செயலர் கூறுகிறார். அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் தனித்தனி கணக்குகள் உள்ளன. நிதி உதவி செய்ய விரும்புகிறவர்கள் அந்த எண்ணுக்குப் பணம் அனுப்பலாம்.

 
கீழ்பாக்கம் மனநல காப்பகம் விவகாரம்

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்

பெரு நிறுவனங்கள் தங்களின் சி.எஸ்.ஆர் நிதியில் உணவு, உடை, கட்டடப் பராமரிப்பு ஆகியவற்றுக்குச் செலவு செய்வது வழக்கம். அந்த நிதியை அரசு முறையாகப் பராமரித்தால் போதும். இதற்கெனத் தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினாலும் இதே வேலைகள்தான் நடக்கும்" என்கிறார்.

டாஸ்மாக் நிறுவனத்தைப் போல அனைத்து மனநல மருத்துவமனைகளையும் பிரத்யேக நிறுவனத்தின்கீழ் கொண்டு வருவதுதான் அரசின் நோக்கம் எனக் கூறும் ரவீந்திரநாத், இதனால் அரசு மனநல காப்பகத்தின் நோக்கம் பயனற்றதாகிவிடும் என்று எச்சரிக்கிறார்.

இது தொடக்கப்புள்ளியாக மாறும் என கவலை

"கீழ்பாக்கம் மனநல காப்பகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து, போதிய ஊழியர்களையும் மருத்துவர்களையும் நியமிக்கும் வேலைகளைச் செய்யாமல் தனி கம்பெனியாக மாற்றுவதை ஏற்க முடியாது" என்கிறார் மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் காசி.

இதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் மனநலம் சார்ந்த சிகிச்சைக்காக மக்கள் இங்கு வருகின்றனர். பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் நிமான்ஸ் நிறுவனத்திற்கு இணையான சேவையை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை வழங்கி வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அரசு மருத்துவமனையை கம்பெனியாக மாற்றியதாக முன்னுதாரணம் இல்லை," எனத் தெரிவித்தார்.

 
கீழ்பாக்கம் மனநல காப்பகம் விவகாரம்

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, இந்தக் கடிதத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைக்கிறார் மருத்துவர் காசி

மேலும், சுகாதாரத்துறை செயலரின் கடிதம் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளதாகக் கூறுகிறார் மருத்துவர் காசி.

மேலும், "மனநல மருத்துவமனையை கம்பெனியாக மாற்றுவது என்பது பிற்காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் இதேபோன்று மாற்றி அதை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கப்புள்ளியாக இதைக் கருத வேண்டியுள்ளது" என்றார்.

இந்தக் கடிதத்தை அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் மருத்துவர் காசி வலியுறுத்துகிறார்.

தமிழ்நாடு அரசு கூறுவது என்ன?

அரசு செயலரின் கடிதத்திற்கு எதிர்ப்பு வலுக்கவே, "தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிகள் எதுவும் அரசுக்கு இல்லை" என மக்கள் நல்வழ்வுத்துறை செயலர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

திங்கள் (அக்டோபர் 28) அன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "மருத்துமனையின் கட்டமைப்பை மேம்படுத்தும் நல்ல எண்ணத்தில் அரசு செயலர் இதை முன்னெடுத்து வருகிறார். ஆனால், தனியார் மற்றும் தன்னார்வலர்களிடம் மனநல காப்பகத்தை ஒப்படைக்கும் எண்ணம் இல்லை" என்றார்.

அதோடு, கீழ்பாக்கம் மனநல காப்பகத்திற்கு தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் மேற்கொண்டு வரும் திட்டங்களையும் அமைச்சர் மா.சுப்ரமணியன் பட்டியலிட்டார்.

 
கீழ்பாக்கம் மனநல காப்பகம் விவகாரம்

பட மூலாதாரம்,@SUBRAMANIAN_MA/X

படக்குறிப்பு, தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிகள் எதுவும் அரசுக்கு இல்லை என அமைச்சர் தகவல்

"தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் 2.30 கோடி ரூபாய் செலவில் இடைநிலை பராமரிப்பு மையம் ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதோடு பரந்துபட்ட மனநல சேவைகளை வழங்குவதற்கு 40 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டும் பணியையும் தொடங்கி வைத்துள்ளார்" என்றார்.

பெங்களூருவில் உள்ள மத்திய அரசின் நிமான்ஸ் மருத்துவமனைக்கு இணையாகக் கட்டமைப்புகளை மேம்படுத்த முதலமைச்சர் நிதி ஆதாரம் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் குறிப்பிட்டார்.

கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "தனியாரிடம் இருந்து சி.எஸ்.ஆர் நிதிப் பங்களிப்பு வந்தால் அதை ஏற்று மருத்துவமனையை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்" என்றார்.

இதுகுறித்து, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் சுப்ரியா சாஹூவிடம் விளக்கம் பெற பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, அவரிடம் இருந்து பதிலைப் பெற முடியவில்லை.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சங்குமணியிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர், கடிதம் தொடர்பாக அடுத்தகட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

 

கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை உருவான கதை

கீழ்பாக்கம் மனநல காப்பகம் விவகாரம்

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு, சுப்ரியா சாஹூவின் கடிதம்

ஆசியாவில் மிகப் பழமையான, மிகப் பரந்துபட்ட மருத்துவமனையாக கீழ்பாக்கம் மனநல காப்பகம் அமைந்துள்ளது.

கடந்த 1794ஆம் ஆண்டில் மருத்துவர் வாலன்டைன் கனோலி (Valentine Connolly) என்பவர் கிழக்கிந்திய கம்பெனியின் மானியம் (Grant) மூலம் இதைத் தொடங்கினார். தொடக்க காலங்களில் ஆங்கிலேயே அதிகாரிகளும் போர் வீரர்களும் இங்கு சேர்க்கப்பட்டனர்.

அப்போது மனநல காப்பகத்தை 'mental asylum' (மனநலம் பாதித்தோர் விடுதி) என அழைத்துள்ளனர். பிறகு 1913ஆம் ஆண்டில் மனநோய் மருத்துவமனைகளை நிர்வகிக்கும் வகையில் 'மனநல குறைபாடு சட்டம்' (Mental Deficiency Act 1913) கொண்டு வரப்பட்டது.

உள்துறையின்கீழ் வரும் சிறைத்துறையின் கட்டுப்பாட்டிலேயே கீழ்பாக்கம் மனநல காப்பகம் இருந்துள்ளது. பிறகு, 1920ஆம் ஆண்டில் அரசு மனநல மருத்துவமனையாக மாறிய பின்னரே சுகாதாரத்துறையின் வசம் வந்துள்ளது.

கடந்த 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை உள்நோயாளிகள் பிரிவு மட்டுமே இயங்கி வந்துள்ளது. அதன்பிறகு புறநோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.

அங்கு தற்போது, வெளிப்புற நோயாளிகள், குழந்தைகள் மற்றும் வயது வந்தோருக்கான மனநல சிகிச்சை, போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையம், தீவிர மனநலம் பாதித்தோர் வார்டுகள், நீண்டகால மனநல சிகிச்சை, மனமகிழ் தெரபி, மனநலம் பாதித்தோர் இல்லம், சிறைவாசிகளுக்கான மனநல மையம் எனப் பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.

தற்போதைய நிலவரப்படி, கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்நோயாளிகளாக சுமார் 750 பேர் உள்ளனர். தினமும் 400 முதல் 500 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்வதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இங்கு பேராசிரியர் பணியில் 5 பேரும் உதவிப் பேராசிரியர்களாக 19 பேரும் பணிபுரிகின்றனர். இவர்களைத் தவிர பட்ட மேற்படிப்பு மாணவர்கள் 54 பேரும் எம்.ஃபில் கிளினிக்கல் சைக்காலஜி பிரிவில் 20 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

இப்போதுள்ள சூழலில், மனநல காப்பகத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அங்கு பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் 43 மனநல மருத்துவமனைகள் உள்ளன. அதில், மாநில அரசுகள் நடத்தும் மனநல மருத்துவமனைகளில் முதல் மூன்று இடங்களுக்குள் கீழ்பாக்கம் மனநல காப்பகம் இடம்பெற்றுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கதையும் அறிவுரையும். எனக்கு தெரிந்தவரின் சகோதரருக்கும் அண்மையில் இப்படிதான் நடந்தது. 50 வயது தொழில் அதிபர் பூரண குணம் அடைய கடவுளை பிராத்திக்கிறேன்.   
    • இங்கே புலிகளை judge  பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது  தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு  (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
    • வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள்         
    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.