Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

IMG-7388.jpg

ஜாம்ஷிட் ஷர்மாத்துக்கு( Jamshid Sharmahd)வழங்கப்பட்ட தீர்ப்பானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று தயவு செய்து தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்என யேர்மனிய வெளியுறவு அமைச்சர்  அன்னலெனா பேர்பொக் ஈரானைக் கேட்டிருந்தார்ஆனால் தான் வழங்கிய தீர்ப்பில் ஈரான் உறுதியாக இருந்தது. யேர்மனி,ஈரான் இரட்டைக் குடியுரிமை பெற்ற  ஷர்மாத்துக்கு, ஈரான் இஸ்லாமியக் குடியரசு இப்போது மரண தண்டனையை நிறைவேற்றியிருக்கிறது.

ஷர்மாத் அவரது ஏழு வயதில் தனது தந்தையுடன் யேர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். ஷர்மாத் சொந்தமாக ஒரு  மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்திருக்கிறார். 2003 முதல் அமெரிக்காவில் வசித்துக் கொண்டிருந்தார்.

2007இல் ஒரு சைபர் தாக்குதலை நடத்தினார் என்று ஈரான் ஷர்மாத் மேல் குற்றம் சுமத்தியது. அத்துடன் ஈரானுக்கு எதிரான ரொன்டர் (Tondar) இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும், ரொன்டர் இயக்கத்துக்காக,லொஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட தொலைக்காட்சி,வானொலி நிகழ்ச்சிகளை இயக்குவதற்கு உதவினார் என்றும் ஈரான் அவர்மேல் குற்றம் சாட்டியிருந்தது.

2020இல்  தொழில் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றி விட்டு யேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷர்மாத், விமானம் இடைத் தங்கலுக்காக துபாயில் நின்ற போது ஈரானிய உளவாளிகளால் ஈரானுக்குக் கடத்தப்பட்டிருந்தார். ஈரானில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்ட ஷர்மாத்துக்கு 2023ம் ஆண்டு ஈரான் புரட்சிகர நீதிமன்றம்  மரணதண்டனையை விதித்தது. ஷர்மாத்திற்கு வழங்கப்பட்டஇந்தத் தீர்ப்புக்கு யேர்மனி உடனடியாகவே தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது. உலகளாவிய ரீதியில் மனித உரிமை அமைப்புகளும்  தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன.

ஈரான் மரண தண்டனைகளை கடுமையாக நடைமுறைப்படுத்தினாலும், மேற்கத்திய வெளிநாட்டவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது மிகவும் அரிதானது. ஆனால் ஷர்மாத்தின் விடயத்தில் அவர் ஈரானிய குடியுரிமையையும் வைத்திருந்ததால் அவருக்கான மரணதண்டனையை ஈரானால் நிறைவேற்ற முடிந்திருக்கிறது.

சிறையில் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 69 வயதான தனது தந்தையை விடுவிக்க ஷர்மாத்தின் மகள் கெஸல் இறுதிவரை போராடினர். அவரது போராட்டமும் பலனில்லாமல் போனது. 28.10.2024 அதிகாலை ஷர்மாத், அவருக்கு விதிக்கப்பட்ட  தண்டனைக்காக  தூக்கிலிடப்பட்டார் என ஈரான் அறிவித்திருக்கிறது.

சில ஆண்டுகளாக ஈரானுக்கும் யேர்மனிக்கும்  இடையே நல்ல உறவுகள் இருக்கவில்லை. இப்பொழுது இன்னும் மோசமான நிலை ஏற்படலாம் என யேர்மனிய வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பேர்பொக் தெரிவித்திருக்கிறார்.

https://www.spiegel.de/ausland/jamshid-sharmahd-iran-weist-deutschlands-kritik-an-hinrichtung-zurueck-a-dd4d9b9d-e8b0-4a5e-bdd0-4c5f8edc748a

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

சில ஆண்டுகளாக ஈரானுக்கும் யேர்மனிக்கும்  இடையே நல்ல உறவுகள் இருக்கவில்லை. இப்பொழுது இன்னும் மோசமான நிலை ஏற்படலாம் என யேர்மனிய வெளிவிவகார அமைச்சர் அன்னலெனா பேர்பொக் தெரிவித்திருக்கிறார்.

முன்னரெல்லாம் ஜேர்மனியில் அரசியல் முதிர்ச்சியும்,உலக அனுபவமும் உள்ளவர்கள் தான் அரசியல்வாதிகளாகவும் அமைச்சர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர். அவர்கள் பல உலக குழப்ப நிலைகளிலும் சகல நாடுகளுடனும் நல்ல உறவையே வைத்திருந்தார்கள்.வியாபார ரீதியிலும் எல்லா நாடுகளுடனும்  சுமுக நிலையிலேயே இருந்தார்கள்.
ஆனால் இன்று இருக்கும் அரசியல்வாதிகள் சொந்த நாட்டையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் திணறுகின்றார்கள்.பல நாடுகளுடன் நல்லுறவும் இல்லை.

அன்னலேனா பேர்பொக் சொல்லி வேலையில்லை.ஒரு முட்டாள்த்தனமான வெளிவிவகார அமைச்சர்.😂

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, Kavi arunasalam said:

2020இல்  தொழில் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பற்றி விட்டு யேர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு விமானத்தில் புறப்பட்ட ஷர்மாத், விமானம் இடைத் தங்கலுக்காக துபாயில் நின்ற போது ஈரானிய உளவாளிகளால் ஈரானுக்குக் கடத்தப்பட்டிருந்தார்.

 

இடைவெளியில் துபாயில் வைத்து எவ்வாறு கடத்தினார்கள்? இவர் துபாய் வரும் செய்தி எப்படி கிடைத்தது? அரச புலனாய்வு அமைப்புக்கள் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல போலும்.

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மொழிபெயர்ப்பு சரி என்றால். கோவிட் வைரஸ் ஆகக்குறைந்தது வேறு ஏதோ இடத்திலும் இருந்து இருக்கிறது. வூஹானை தவிர, வேறு எந்த உயிரியல் பரிசோதனை கூடங்களில் கோவிட் வைரஸ் இருக்கவில்லை என்பதை ஏன்  அமெரிக்கா விசாரணை உறுதிப்படுத்தமுடியவில்லை? அப்படி உறுதிப்படுத்தும் விசாணையே நடக்கவில்லை. அமெரிக்காவும் சேர்ந்தே இந்த ஆய்வில் ஈடுபட்டது, அந்த பக்கத்தை மறைகிறது போலும்.
    • சீமான் திரியில் எழுதி இருந்தேன். தமிழ் நாட்டில் பெரியாரை, வடகிழக்கில் தலைவரை மறுதலித்து தேர்தல் அரசியல் செய்யம்முடியாது என. இது சம்பந்தமாக சுமந்திரன் - தன் நாவடக்கத்தை கடைபிடித்திருக்க வேண்டும். சீமானை போல - எல்லா கேள்விக்கும் ஒரு பதிலை கூறியே தீர வேண்டும் என அவர் நினைத்தார்.  ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் இருப்பார். அவரை ஒத்த ரோட்டு என சக குடும்பத்தவர் அழைப்பார்கள். அந்த குடும்பத்தில் உள்ள எல்லோரையும் குறை கூறுவார். மூதைதகளை மதிக்க மறுப்பார். அவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் - அவரின் குணைவியல்பால் சக குடும்பத்தினர் அவரை விலகி நடக்க ஆரம்பிப்பார்கள். இன்னொரு திரியில் ஓணாண்டி சொன்னது போல் - சுமந்திரன் நேராக சொல்வதை சிறிதரன் மறைமுகமாக செய்வார். வெளிப்படையாக இருக்கிறேன் பேர்வழி என மனதில் பட்டதை எல்லாம் சாதாரண மனிதர்கள் நாம் கூறினாலே, வீடு, வேலையிடம் இரெண்டாகி விடும். ஒரு அரசியல்வாதி? யாகாவாயினும் நா காக்க.
    • இது நெசமா சார்...அனுரவைச் சந்திக்கமுன் பெர்ய குண்டொன்று ..இன்று வெடிக்கப் போகுதாமே   சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். வடக்கில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொண்ட அமைச்சார்கள் யார் யார் என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakityan) தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு தெரிவித்திருந்தது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் இதுவரை  அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதி பத்திரங்களி்ல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு (C. V. Vigneswaran) வழங்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.   இந்நிலையிலேயே மதுபானசாலை அனுமதி பத்திரம் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • புலம்பெயர் மக்களில் ஒரு பகுதி சுமந்திரனை வச்சு செய்தது உண்மை. ஆனால் கடந்த இரெண்டு தேர்தல்களில் இப்படி வச்சு செய்தும் அவரினை தோற்கடிக்க இவர்களால் முடியவில்லை என்பதும் உண்மை. ஊரில் மக்கள் புலம்பெயர்ந்தவர் கதையை கேட்டு சுமந்திரனை தூக்கி அடிக்கும் நிலையில் இல்லை. அவர் இந்த முறை தோற்க காரணம் அவரே. தமிழரசு கட்சியில் சாணாக்கியனை தவிர மிகுதி எல்லோருடனும் சுமந்திரன் சண்டை. தலைவர் விடயத்தில் தோற்ற பின் அவர் செய்த கோக்குமாக்குகள் மக்களை கோபத்தின் எல்லைக்கே கொண்டு போயின. வேட்பாளர் தேர்வில் அவர் நடந்து கொண்ட விதம் முத்தாய்ப்பாய் இருந்தது. வழமையாக சொல்லும் பெட்டி வாங்கி விட்டார் கதைகளை அல்லது தீர்வை வாங்கி தரவில்லை கதைகளை நம்பி மக்கள் அவரை தோற்கடிக்கவில்லை. 2019-2024 அவர் நடந்து கொண்ட விதம், தமிழரசு கட்சியை, தமிழ் தேசிய அரசியலை அவர் சிறுக சிறுக சிதைக்கிறார் என்பதை மக்களுக்கு உணர்த்தியது. ஆகவே அவரை அப்புறபடுத்த தீர்மானித்தனர். சுமந்திரன் ஏன் இப்படி நடந்து கொண்டார் உண்மையில் இவர் தெற்கின் ஏஜெண்டா என்பதல்லாம் விடை காண முடியா கேள்விகள். அப்படி பட்ட ஏஜெண்ட் இல்லை அவர், ஆனால் அவர் இப்படி நடந்து கொள்வது அவரின் குணவியல்பு சம்பந்தமான விடயம் என்பது என் கருத்து.  
    • மிகத் தவறான கருத்து. ஒரு தேசியம் சார்ந்த விடயங்களை பேச இன்ன தகுதிகள் வேண்டும் என்ற இறுமாப்புடன் செயற்படமுடியாது. அவரவர் தத்தமது கடமைகளை செவ்வனே செய்தாலே போதும். தூய்மை வாதம் பேசி ஆட்களை தேட தொடங்கினால் நானும் இல்லை நீங்களும் இல்லை. எவரும் இல்லை. அப்படியானால் யார்?????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.