Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சீனாவுக்கு ஆண்டுதோறும் கழுதைகளை லட்சக்கணக்கில் ஏற்றுமதி செய்வதற்கு பாகிஸ்தான் சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் வருமானம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் தற்போதைய நிலவரப்படி சுமார் 52 லட்சம் கழுதைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மாடுகள் அதிக அளவு இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது கழுதைகள் அவ்வளவாக இறைச்சிக்கு பயன்படுத்தப்படுவது கிடையாது.

இந்த நிலையில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் சீனாவுக்கு ஆண்டுதோறும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கழுதைகளை ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது. சீனாவுக்கு தோல் மற்றும் இறைச்சியை ஏற்றுமதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு, சீனாவின் இந்த ஒப்பந்தம் சரிவிலிருந்து மீள ஓரளவு கை கொடுக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் சில நூறு கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவை பொறுத்த அளவில் அங்கு பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இதற்காக கழுதையுடைய தோல்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. சீனாவில் அந்நாட்டின் தேவைக்கு தகுந்தார் போல் கழுதைகள் எண்ணிக்கை கிடையாது. இதனால் வெளிநாடுகளில் இருந்து அவற்றை இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோன்று உணவுக்காகவும் சீனாவில் கழுதை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. கழுதை இறைச்சியை பயன்படுத்தி வித விதமான உணவுப் பொருட்களை சீனர்கள் தயாரிக்கின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் உடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://thinakkural.lk/article/311398

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கழுதை  இறைச்சி நுகர்வது சீனாவில் செல்வந்த தரத்தை குறிக்கும். 

நகரங்களில் இது குறைந்து வருகிறதாயினும், கிராமப்புறம், நகரில் இருந்து சற்றே தொலைவான பகுதிகளில்  இந்த பிரதிபலிப்பு இருக்கிறது.

அனால் சீனர் முழு கழுதையையும் பாவிக்கின்றனர், உரோமம் அகற்றிய தோல் கூட உணவாக தயாரிக்கும் முறை (கழுதை மட்டும் அல்ல) சீனரிடம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சில காலத்திற்கு முன் சீனாவிற்கு இலங்கையிலிருந்து ஒரு வகை குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் ஒன்று வந்தது. சீனர்கள் அந்தக் குரங்குகளை கொல்லப் போகின்றார்கள் என்று எதிர்ப்புகளும் எழுதப்பட்டது........... ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மிகச் சிறந்தவற்றை சீனர்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள் போல................ 

Edited by ரசோதரன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

சில காலத்திற்கு முன் சீனாவிற்கு இலங்கையிலிருந்து ஒரு வகை குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் ஒன்று வந்தது. சீனர்கள் அந்தக் குரங்குகளை கொல்லப் போகின்றார்கள் எதிர்ப்புகளும் எழுதப்பட்டது........... ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மிகச் சிறந்தவற்றை சீனர்கள் தேர்ந்தெடுக்கின்றார்கள் போல................ 

இங்கு குரங்குகள் விவசாயத்துக்கு எவளவு பாதிப்பை ஏற்ப்படுத்திகிறது என்பதை அறியாதோர் தான் எதிர்ப்பு தெரிவத்தவர்கள். நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஏராளன் said:

நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் சில நூறு கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு ரணில்  ஒப்புக் கொண்டிருந்தால் பல நூறு கோடி ரூபாய்க்கள் இலங்கைக்குக் கிடைத்திருக்கலாம்.

ஒரு பேட்டியில் துக்ளக் சோ இப்படிச் சொல்லியிருந்தார்,”இலங்கை ஒரு தீவு. அது மீன்(ரின்) இறக்குமதி செய்கிறது” என்று. என்ன செய்ய எங்கள் அறிவு அவ்வளவுதான்.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.