Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்புக்கு குவியும் வாழ்த்துகள் - யுக்ரேன், இஸ்ரேல், இந்தியா கூறியது என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார்.

வெற்றிமுகத்தில் இருக்கும் போதே ஃபுளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் "இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த அற்புதமான வெற்றியாகும். இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்திய பிரதமர் மோதி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட உலகத் தலைவர்கள் பலரும் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமர் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“அதிபர் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற என் நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்.” என்று கூறியுள்ளார்.

“நமது மக்களின் மேம்பாட்டிற்காகவும், உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.” என்று மோதி தனது பதிவில் கூறியுள்ளார்.

அந்தப் பதிவில் டொனால்ட் டிரம்ப் உடனான தனது பழைய புகைப்படங்களைப் பகிர்ந்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார் மோதி.

அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,NARENDRAMODI/X

படக்குறிப்பு, டிரம்பை வாழ்த்திய நரேந்திர மோதி

இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டொனால்ட் டிரம்புக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், "வரலாற்றின் மிகப்பெரிய மறுவரவிற்கு (Comeback) வாழ்த்துகள்! இதுவொரு மாபெரும் வெற்றி” என்று கூறியுள்ளார்.

“வரலாற்று சிறப்புமிக்க வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை நீங்கள் மீண்டும் கைப்பற்றியிருப்பது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்லுறவிற்கு ஒரு வலிமையான மறுசீரமைப்பையும் வழங்குகிறது" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியிருப்பது, அமெரிக்காவிற்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரும் என நெதன்யாகு கருத்து

பிரிட்டன் பிரதமர் வாழ்த்து

பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரும் டொனால்ட் டிரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

"வரவிருக்கும் ஆண்டுகளில் உங்களுடன் பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். மிக நெருக்கமான நட்பு நாடுகள் என்ற முறையில், சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை பாதுகாப்பதில் நாம் ஒன்றாக, உறுதுணையாக நிற்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

"வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு முதல் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் வரை, பிரிட்டன் -அமெரிக்கா சிறப்பு உறவு, வரவிருக்கும் ஆண்டுகளில் தொடர்ந்து முன்னேற்றம் காணும் என்பதை நான் அறிவேன்." என்றும் கிய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கிய்ர் ஸ்டார்மரும் டொனால்ட் டிரம்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

யுக்ரேன் அதிபர் வாழ்த்து

யுக்ரேன் அதிபர் வொலொதிமிர் ஸெலென்ஸ்கி, டொனால்ட் டிரம்பை வாழ்த்தியுள்ளார். "சர்வதேச விவகாரங்களில் "வலிமை மூலம் அமைதி" என்ற கொள்கையைக் கொண்ட டிரம்பை நான் வாழ்த்துகிறேன். இது தான் யுக்ரேனுக்கும் அமைதியை வழங்கும். இதனை நாம் இருவரும் இணைந்து நடைமுறைப்படுத்துவோம்," என்று கூறி தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார் அவர்.

"டொனால்ட் டிரம்பின் தலைமையின் கீழ் வலிமையான அமெரிக்காவை நான் எதிர்பார்க்கிறேன். அமெரிக்காவின் இரு கட்சிகளும் யுக்ரேனுக்காக வழங்கிய வலிமையான ஆதரவை நாங்கள் நம்பியுள்ளோம்.

இரு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த ஒன்றாக பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். ஐரோப்பாவில் ஒரு வலுவான ராணுவ சக்தியைக் கொண்ட யுக்ரேன் ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக் பிரதேசத்தில் உள்ள சமூகங்களுக்கான நீண்ட கால அமைதி மற்றும் பாதுகாப்பினை எங்கள் கூட்டணி நாடுகள் உதவியுடன் நிலை நிறுத்த உறுதி பூண்டுள்ளோம்.

அதிபர் டிரம்பை நேரில் பார்த்து வாழ்த்தவும், அமெரிக்காவுடனான யுக்ரேனின் மூலோபய கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவும் ஆவலுடன் இருக்கிறேன்," என்று அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, விரைவில் நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூற ஆவலுடன் இருக்கிறேன் என யுக்ரேன் அதிபர் கூறியுள்ளார்.

ஹங்கேரி பிரதமர் வாழ்த்து

டிரம்பின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்பட்ட ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

"உலக நாடுகள் அனைத்திற்கும் தேவையான முக்கியமான வெற்றி இது," என்று குறிப்பிட்ட அவர், "அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மறுவரவு இது," என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபராக போட்டியிட முடிவு செய்த போது அதனை ஆர்பன் வெளிப்படையாக ஆதரித்தார். 2016ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள உறுப்பு நாடுகளில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவு வழங்கிய முதல் மற்றும் ஒரே தலைவர் இவர் மட்டுமே.

 
அமெரிக்க அதிபர் தேர்தல், டொனால்ட் டிரம்ப் - கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம்,REUTERS/X

படக்குறிப்பு, ஹங்கேரி பிரதமருடன் டொனால்ட் டிரம்ப்

வாழ்த்திய இதர தலைவர்கள்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், டிரம்பை வாழ்த்தியுள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில், "அமைதிக்காகவும் செழுமைக்காகவும் மரியாதையுடனும் லட்சியத்துடனும்," முன்பு ஒன்றாக பணியாற்றியதைப் போன்று தொடர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ருட்டே, டிரம்பின் தலைமை "எங்களின் கூட்டாளிகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும். அவருடன் தொடர்ந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளேன்," என்று கூறியுள்ளார்.

நேட்டோவை டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்திருக்கிறார். கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஐரோப்பிய உறுப்பு நாடுகள், பாதுகாப்பிற்காக போதுமான நிதியை வழங்குவதில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி , "இரு நாடுகளும் அசைக்க முடியாத கூட்டணி, பொது மதிப்புகள் (Common Values), வரலாற்று ரீதியிலான நட்பால் இணைந்திருக்கிறது. இது மூலோபாய கூட்டணி. வருங்காலத்தில் இந்த கூட்டணி வலுப்பெறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று கூறி வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார்.

சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, "அமெரிக்க அதிபர் தேர்தலானது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம். அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம்," என்று கூறினார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜக்ரோவா, "அமெரிக்கா அதன் ஜனநாயகத்தை முதலில் சரி செய்ய வேண்டும். அதன் சொந்த தோல்விகளுக்கு மற்றவர்களை குற்றம் சொல்லக் கூடாது," என்று கூறினார். கடந்த முறை தேர்தலின் போது ரஷ்யாவின் தலையீடு அமெரிக்க அதிபர் தேர்தலில் தாக்கம் செலுத்தியது என்று குற்றம் சுமத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

us-result.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் டிரம்ப்: இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக அவரது ஆட்சி எப்படி இருக்கும்?

இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

அவரின் புதிய ஆட்சி எப்படி இருக்கும் என்பதற்கான அறிகுறிகளை அவரின் கடந்த கால ஆட்சியே கூறியள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு அவர் எங்கே எதை விட்டுச் சென்றாரோ அதைத் தொடர்வார் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் திட்டம்

அப்படி விட்டுச்சென்ற பல திட்டங்களில், அமெரிக்காவின் தெற்கு எல்லையில், குடியேறிகள் வருவதை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்புவதும் ஒன்று. அவரின் அந்தத் திட்டத்திற்கு நிதி அளிப்பதற்கான நாடாளுமன்ற ஒப்புதல் அவருக்கு அப்போது கிடைக்கவில்லை.

இந்த முறை தேர்தல் பிரசாரத்தின்போது அந்தக் கட்டுமானத்தை விரைவில் முடிப்பேன் என்று கூறியே வாக்கு சேகரித்தார். அதை அவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான அவருடைய திட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அவர் நாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில், 2022ஆம் ஆண்டில் 11 மில்லியன் மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியுள்ளார்கள் என்ற தரவுகளை வெளியிட்டது பியூ ஆராய்ச்சி அமையம். ஆனால் டிரம்ப் மற்றும் அவருடைய பிரசாரம் இந்த எண்ணிக்கைக்கும் அதிகமாக சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர் என்று கூறியுள்ளது.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர்: டொனால்ட் டிரம்பின் புதிய ஆட்சி எப்படி இருக்கும்?

குடியேறிகளை நாட்டைவிட்டு வெளியேற்றும் திட்டமானது அதிக செலவீனத்தைக் கொண்டது என்றும் கடினமானது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் ஆவணப்படுத்தப்படாத பணியாட்கள் முக்கியப் பங்காற்றும் பொருளாதாரத்தின் சில பகுதிகளில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக் கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பணவீக்கம், வட்டி விகிதத்தைக் குறைப்பேன், எரிசக்திப் பொருட்களின் விலை கட்டுக்குள் வைக்கப்படும் என்றும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்ட பிறகு கடந்த ஜூலையில் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்தார்.

அடுத்த ஆண்டுக்குள் நிறைவடைய உள்ள, அவர் அறிமுகம் செய்த வரிக்குறைப்பை நீட்டிக்க உள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 2017ஆம் ஆண்டு வரிகளை எளிமைப்படுத்தவும், வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கவும், பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட்ட வரி மறுசீரமைப்புத் திட்டம் அது.

ஆனால் அத்தகைய குறைப்பானது வர்த்தகம் மற்றும் அதிக வசதி படைத்தவர்களுக்கு உதவும் வகையில் அமைந்தது. அதை மாற்றக் கூறி ஜனநாயகக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

கார்ப்பரேட் வரிகளை 15% ஆகக் குறைக்கவும், 'டிப்ஸ்' மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான 'சோசியல் செக்யூரிட்டி' பரிவர்த்தனைகளுக்கான வரிகளை டிரம்ப் நீக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்றொரு வர்த்தகப் போர்?

இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, கடந்த 2021ஆம் ஆண்டு தெற்கு எல்லையைப் பார்வையிட்ட டொனால்ட் டிரம்ப்

கச்சா எண்ணெய் உற்பத்தியில் அவர் அதிக நாட்டம் செலுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க இது பயன்பட்டது என்று அவர் நம்புகிறார். வருங்காலத்தில் எரிசக்திப் பொருட்களின் விலையை இதைக் கொண்டு குறைக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார். ஆனால் நிபுணர்கள் இதற்கான சாத்தியத்தைச் சந்தேகிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கும் பொருட்களுக்கு 10 முதல் 20% வரை வரி விதிக்கப்படும் என்றும் சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 60% வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். பொருளாதார ஆய்வாளர்கள் இதனால் ஏற்படக்கூடிய பாதகங்களைப் பட்டியலிட்டினர். இது விலைவாசியை அதிகரித்து, அமெரிக்க நுகர்வோர்கள் அதிக பணம் கொடுக்கும் சூழலுக்கு ஆளாகக் கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

தன்னுடைய முதல் ஆட்சியின்போது, சீனா நியாயமற்ற வர்த்தக முறைகளைப் பின்பற்றுவதாகவும், அறிவுசார் சொத்துகளைத் திருடுவதாகவும் குற்றம் சுமத்தி வர்த்தகப் போரை துவங்கினார்.

அவர் நினைத்தது போன்ற மாற்றங்களை கொள்கைகள் மூலமாகக் கொண்டு வர இயலுமா என்பதை அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானிக்கும்.

கடந்த 2017 முதல் 2019 வரை குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தின் செனெட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் எப்படிப் பணியாற்றுகிறது என்பது குறித்து முழுமையாக அறியாத காரணத்தால், வெள்ளை மாளிகையில் இருந்த குடியரசுக் கட்சியின் பலத்தையும், நாடாளுமன்றத்தில் இருந்த பெரும்பான்மையையும் பயன்படுத்திப் பெரிய கொள்கைகளை அறிமுகம் செய்து டிரம்பால் வெற்றி பெற இயலவில்லை என்று அரசியல் நிபுணர்கள் அந்தக் காலகட்டத்தில் கூறினார்கள்.

 

கருக்கலைப்பு தடை

இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தன்னுடைய முதல் ஆட்சியின்போது, சீனா நியாயமற்ற வர்த்தக முறைகளைப் பின்பற்றுவதாகவும், அறிவுசார் சொத்துகளைத் திருடுவதாகவும் குற்றம் சுமத்தி வர்த்தகப் போரை துவங்கினார்.

கடந்த 1973ஆம் ஆண்டு கருக்கலைப்பிற்கான அரசியலமைப்பு உரிமையை நிலைநாட்டிய வழக்கின் தீர்ப்பை மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு திரும்பப் பெற்றது.

இந்தக் குழுவை நியமித்தவர் டொனால்ட் டிரம்ப். தற்போது மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார் என்று பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

செப்டம்பர் மாதம் கமலா ஹாரிஸுடன் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வில் நாடு முழுமைக்குமான கருக்கலைப்பு தடைக்கு ஆதரவு வழங்க மாட்டேன் என்று கூறினார்.

 

தனிமைவாதம், ஒருதலைப்பட்சவாதம்

இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தார் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, செப்டம்பர் மாதம் கமலா ஹாரிஸுடன் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்வில் நாடு முழுமைக்குமான கருக்கலைப்பு தடைக்கு ஆதரவு வழங்கமாட்டேன் என்று கூறினார்

வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தமட்டில், உலகின் பல பகுதிகளில் நடந்து வரும் போர்களில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது என்ற கடந்த ஆட்சியில் அவர் பின்பற்றிய கொள்கைகளையே தற்போதும் பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் யுக்ரேன் போரை நிறுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார். இது ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை வலுவாக்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் வாதாடுகிறார்கள்.

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் போரைப் பொறுத்தவரை, அவர் இஸ்ரேலுக்கு ஆதரவானவர் என்ற நிலைப்பாட்டை ஏற்கெனவே கூறிவிட்டார். காஸாவில் நடைபெறும் போரை நிறுத்துவது எப்படி என்று இதுவரை அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.

"தனிமைவாதம் மற்றும் ஒருதலைப்பட்ச நிலைப்பாடுகளைக் கொண்ட ஆட்சியாகவே டிரம்பின் ஆட்சியை நான் பார்க்கிறேன். அந்த ஆட்சியில் குறைவான நன்மைகளையே வழங்குகின்றன ஆனால் அது சர்வதேச அளவிலான நிச்சயமற்ற தன்மையை ஆழப்படுத்தும்" என்கிறார் மார்டின் க்ரிஃபித்ஸ்.

மார்டின் க்ரிஃபித்ஸ் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளைச் சிறப்பாக நடத்தும் மத்தியஸ்தர் என்று அறியப்பட்ட அவர் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா.வின் துணைச் செயலாளராகவும், அவசரக் கால நிவாரண ஒருங்கிணைப்பாளராகவும் அவர் பணியாற்றி வந்தார்.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர்: டொனால்ட் டிரம்பின் புதிய ஆட்சி எப்படி இருக்கும்?

பட மூலாதாரம்,REUTERS

முன்னாள் நேட்டோ அதிகாரியும், எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் வியூகம் மற்றும் பாதுகாப்புப் பிரிவு பேராசிரியருமான ஜேமி ஷியா, டொனால்ட் டிரம்பின் முந்தைய ஆட்சியானது சீர்குலைக்கும் தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால் அதில் ஒரு தொடர்ச்சி இருந்து வந்தது," என்று கூறுகிறார்.

"அவர் நாட்டோவில் இருந்து வெளியேறவில்லை. ஐரோப்பாவில் இருந்து தன்னுடைய ராணுவ துருப்புகளை வெளியேற்றவில்லை. யுக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கிய முதல் அதிபர் அவரே" என்றும் மேற்கோள் காட்டுகிறார் ஷியா.

அமெரிக்க வரலாற்றில் இரண்டு முறை (தொடர்ச்சியாக அல்லாமல்) அதிபராகப் பதவியேற்கும் இரண்டாவது அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இதற்கு முன்பு க்ரோவர் க்ளீவ்லேண்ட், 1885 முதல் 1889ஆம் ஆண்டு வரை அமெரிக்காவை ஆட்சி செய்தார். அதற்கு அடுத்த தேர்தலில் அவரால் வெற்றிபெற இயலவில்லை. பிறகு 1893ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் 1897ஆம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தார்.

முன்னதாகத் தனது வெற்றி உறுதியான பிறகு, புளோரிடாவில் உள்ள தனது பிரசாரக் குழுவின் தலைமையகத்தில், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "இந்த நாட்டை மீட்டெடுக்க நாங்கள் உதவப் போகிறோம்" என்று கூறினார்.

“இது அமெரிக்காவின் பொற்காலம்" என்று கூறிய டிரம்ப், "இது அமெரிக்க மக்களுக்குக் கிடைத்த அற்புதமான வெற்றி, இது அமெரிக்காவை மீண்டும் சிறந்த தேசமாக மாற்றும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c86qgpx4z01o

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா,  

ஒருவாறு இந்திய நுளம்புக் கடியில் இருந்து தப்பியாச்சு. அதுக்காகவாவது Trump ஐத் தெரிவு செய்த அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

அப்பாடா,  

ஒருவாறு இந்திய நுளம்புக் கடியில் இருந்து தப்பியாச்சு. அதுக்காகவாவது Trump ஐத் தெரிவு செய்த அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 

😉

கனடா அமைதியாக இருக்கிறது     பயமா??    இல்லை மகிழ்ச்சியா ???    

அமெரிக்காவை ஒரு ஜேர்மனியன். ஆளப்போவது    மகிழ்ச்சி தான்    🤣.    எல்லைகள் பூட்டப்பட்டதா??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் அதிபராக பதவியேற்பது எப்போது? அதுவரை டிரம்ப், ஜே.டி.வான்ஸ் என்ன செய்வர்?

டிரம்ப் எப்போது அமெரிக்க அதிபர் ஆவர்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் என்றாலும், அதை உறுதி செய்யும் இறுதி தேர்தல் முடிவுகள் இன்னும் வரவில்லை.
  • எழுதியவர், ஜார்ஜ் பௌடன்
  • பதவி, பிபிசி நியூஸ், வாஷிங்டன்

வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்குப் பிறகு, அமெரிக்காவின் அடுத்த அதிபராகிறார் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். இரண்டாவது முறையாக வெள்ளை மாளிகைக்குள் நுழையப் போகிறார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுடனான போட்டி மிக நெருக்கமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் ஒரே இரவில், அதிபராவதற்கு தேவையான வாக்குகளை டிரம்ப் பெற்றுள்ளார் என்பது உறுதியானது.

கடந்த 130 ஆண்டுகளில், ஒரு முன்னாள் அதிபர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும், 78 வயதான ஒருவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதும் முதல் முறையாகும்.

தேர்தல் முடிவுகள் எப்போது இறுதி செய்யப்படும்?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உள்ளிட்ட உலக தலைவர்கள் ஏற்கனவே டிரம்பிற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டனர். எனினும், அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக இன்னும் இறுதிசெய்யப்படவில்லை.

முடிவை தீர்மானிக்கக் கூடிய முக்கிய மாகாணங்களில் மிக நெருக்கமான போட்டி இரு வேட்பாளர்களுக்கு இடையில் நிலவினால், முடிவுகள் நிச்சயமற்றதாக இருக்கும் என்ற அச்சம் இருந்தது.

ஆனால், எதிர்ப்பார்த்ததை விட முன்னதாகவே வட காரோலினா, ஜார்ஜியா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் வெற்றி கிடைத்துவிட்டது. அத்துடன் குடியரசுக் கட்சியின் கோட்டையாக கருதப்படும் மாகாணங்களில் கிடைத்த வெற்றி, டிரம்ப் 270 இடங்கள் பெற்று அதிபராவதை சாத்தியமாக்கியது.

அமெரிக்காவில் உள்ள பிபிசியின் கூட்டாளியான சிபிஎஸ் ஊடகம், டொனால்ட் டிரம்ப் தான் வெற்றி பெறுவார் என்று தேர்தலுக்கு அடுத்த நாள் காலை 5.30 மணிக்கே (பிரிட்டன் நேரப்படி) கணித்திருந்தது.

எனினும், ஒவ்வொரு மாகாணத்திலும் விரிவான தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க மேலும் சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்.

டொனால்ட் டிரம்ப் இப்போது அதிபரா?

இல்லை. டிரம்ப் இப்போது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர், மற்றும் ஜேடி வான்ஸ் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்.

2025ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்பார். அப்போது தான் அவர் அதிபருக்கான அதிகாரங்களையும் பொறுப்புகளையும் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்வார்.

தேர்தல் நாளுக்கும் பதவியேற்புக்கும் இடையில் என்ன நடக்கும்?

தகுதியான ஒவ்வொரு வாக்கும் இறுதி முடிவுகளில் இடம்பெற்ற பிறகு, தேர்வாளர் குழு தேர்தல் முடிவுகளை உறுதி செய்யும்.

ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்வாளர் குழுவின் வாக்குகள் வெவ்வேறு எண்ணிக்கையில் இருக்கும். வாக்காளர்களின் ஆதரவு மட்டுமல்லாமல் இந்த வாக்குக்களை பெறுவது தான் அதிபராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.

பொதுவாக, பெரும்பான்மையான வாக்குகளை (popular vote) யார் பெறுகிறார்களோ அவர்களுக்கே தேர்வாளர் குழுவின் வாக்குகளை மாகாணங்கள் வழங்கிவிடும். இது டிசம்பர் 17-ம் தேதி கூட்டங்களுக்கு பிறகு முடிவு செய்யப்படும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க காங்கிரஸ் ஜனவரி 6-ம் தேதி கூடி, தேர்வாளர் குழுவின் வாக்குகளை எண்ணி, புதிய அதிபர் யார் என்பதை உறுதி செய்யும்.

கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடனிடம் தோற்றதை டிரம்ப் ஏற்க மறுத்த பிறகு அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்த முயன்றது, இந்தக் கூட்டத்தை தான்.

 
டிரம்ப் எப்போது அமெரிக்க அதிபர் ஆவர்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2021ம் ஆண்டு டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை இறுதி செய்யும் காங்கிரஸ் கூட்டத்தை தடுக்க முயன்றனர்.  

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இப்போது என்ன செய்வர்?

அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேடி வான்ஸ் இருவரும் தங்கள் குழுக்களுடன் பணியாற்றி, பைடன் அரசிடமிருந்து நிர்வாக மாற்றத்துக்கு ஏற்பாடுகளை செய்வர்.

தங்கள் கொள்கை முன்னுரிமைகளை கண்டறிந்து, புதிய ஆட்சியில் முக்கியப் பொறுப்புகள் யாருக்கு வழங்கப்படலாம் என முடிவு செய்து, அரசின் செயல்பாடுகளை ஏற்று நடத்தத் தயாராவர்.

தற்போது நிலவும் அச்சுறுத்தல், நடைபெற்றுக்கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு குறித்து ரகசியங்கள் டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கப்படும்.

அமெரிக்க ரகசிய சேவையின் கட்டாய பாதுகாப்பு, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் வழங்கப்படும்.

 
டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தேர்தல் முடிந்த பிறகு, வழக்கமாக பொறுப்பில் இருக்கும் அதிபர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபரை வெள்ளை மாளிகைக்கு அழைப்பார்.

ஆட்சி அதிகாரம் சுமூகமான முறையில் கைமாறியதற்கு அடையாளமாக, பதவிக்காலம் முடியவிருக்கும் அதிபர், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது வழக்கம். ஆனால், 2020ம் ஆண்டு பைடன் அதிபராக பதவியேற்ற போது டிரம்ப் இந்நிகழ்வை புறக்கணித்துவிட்டார்.

எனினும், அடுத்து வரப்போகும் அதிபருக்காக தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரின் வேலை நிமித்த அறையில் விட்டுச் சென்றார். இது முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் தொடங்கி வைத்த வழக்கமாகும்.

டிரம்ப் “மிக தாராளமான கடிதம்” ஒன்றை தனக்காக எழுதியிருந்ததாக பைடன் அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார்.

பதவியேற்பு விழாவுக்குப் பின், அதிபர் உடனடியாக தனது வேலைகளை தொடங்குவார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tamils in US: கவலையா or நம்பிக்கையா? Trump வெற்றி குறித்து அமெரிக்கா வாழ் தமிழர்கள் சொல்வதென்ன?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்பின் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக இருந்தது குடியேற்றம் தான். அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன், மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்பு அமைப்பேன் என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், டிரம்ப்பின் வெற்றியை அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்?

பிபிசிக்காக அமெரிக்காவில் இருந்து விஷ்ணு வி ராஜா மற்றும் அய்யப்பன் கோதண்டராமன் 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.