Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அருண் ஜஞ்சால்: யூடியூப் தளத்தால் ...

இவர் தான் அருண் ஜஞ்சால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தின் மோர்காவோன் கிராமத்தில் பிறந்த இவருக்கு பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது.

தபேலா இசைக்கலைஞரான இவர் தன்னுடைய திறமையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

யூடியூப் பற்றியோ, சமூக வலைதளங்கள் எப்படி இயங்கும் என்பது பற்றியோ அறிந்திராத அருணுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அவருடைய இந்த இணைய பயணம் துவங்கியது எப்படி? அதற்கு அவருடைய சகோதரன் எந்த வகையில் உதவி வருகிறார்? யூடியூப் சேனல் மூலம் அவர்கள் பெற்ற வரவேற்பு எப்படியானது? விளக்குகிறது இந்த வீடியோ!

செய்தி & கேமரா - ஷாகித் ஷேக்

வீடியோ எடிட் - அரவிந்த் பரேக்கர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c704jkpj4nro

 

  • Like 2
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பார்வை இல்லனா என்ன? YouTube-ல் கவனம் ஈர்க்கும் இசைக்கலைஞர்

இவர் தான் அருண் ஜஞ்சால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தின் மோர்காவோன் கிராமத்தில் பிறந்த இவருக்கு பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது.
தபேலா இசைக்கலைஞரான இவர் தன்னுடைய திறமையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென்கொரியாவில் அவசரகால ராணுவ சட்டம் திடீர் பிரகடனம்: காரணம் என்ன ?   சியோல்: வட கொரிய கம்யூ. படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் இன்று (டிச.,04) அவசரகால ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வட கொரியா - தென் கொரியா இடையே முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாடுகளுக்கு இடை யேயான உறவு பாதிக்கப்பட்டு பகை நாடுகளாக உள்ளன. வட கொரியா மீது தென் கொரியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டேன் என வடகொரியா அதிபர் கிம் ஜான் உங் எச்சரித்திருந்தார்.   https://www.dinamalar.com/news/world-tamil-news/sudden-declaration-of-martial-law-in-south-korea-what-is-the-reason-/3795824       தென் கொரியாவில் ராணுவ ஆட்சி - அதிபர் அறிவிப்பு; காரணம் என்ன? 3 டிசம்பர் 2024, 17:20 GMT Getty Images அதிபர் யூன் சாக் யோல்   தென் கொரியாவில் ராணுவ ஆட்சி பிரகடனத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சாக் யோல் அறிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் கடந்த 50 வருடங்களில் முதல் முறையாக ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற கட்டடம் அருகே மக்கள் போராட்டம் நடத்தினர். வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே இது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது தொலைக்காட்சி உரையில் யூன் சாக் யோல் கூறினார் ராணுவச் சட்டத்தை விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என அதிபர் யோல் கூறினார். எனினும், இதன் கீழ் என்ன குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. ராணுவச் ஆட்சியை அறிவிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கையைத் தடுக்க தென் கொரிய நாடாளுமன்றம் வாக்களித்துள்ளது ராணுவச் ஆட்சியை அமல்படுத்துவதாக அதிபர் அறிவித்துள்ள போதிலும், நாட்டில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றும், அது தவறானது என்றும் ஆளும் மக்கள் சக்தி கட்சியின் தலைவரான ஹான் டோங்-ஹூன் கூறியதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிபர் யோல் இந்தக் கட்சியின் உறுப்பினர் ஆவார். எதிர்க்கட்சித் தலைவர்கள் நடவடிக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், நாடாளுமன்றத்தில் திரளுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் சோலில் போராட்டக்காரர்கள் கூடுவதை தடுக்க நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் போலீஸ் குவிக்கப்பட்டது. இன்னும், போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டடத்திற்கு விரைந்தனர். ''ராணுவ ஆட்சி இல்லை! ராணுவ சட்டம் இல்லை" என்று கோஷமிட்டனர். அவர்களுக்கும், காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. Getty Images   அழுத்தத்தில் அதிபர்   இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் தீர்மானங்களுக்கு எதிராக அவரது அரசு போராடி வந்தது. அரசியல் தாக்குதல்களைத் தடுக்கும் ஜனநாயக விரோத உக்தியாக ராணுவத்தின் ஆட்சியை அறிவிக்கும் நிலைக்கு அவர் இப்போது தள்ளப்பட்டுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அவரச காலத்தில் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட தலைவர்கள் செயல்பட முடியாது எனக் கருதப்படும் போது, ராணுவ சட்டத்தின் கீழ் தற்காலிக ராணுவ ஆட்சி அமைக்கப்படும். தென் கொரியாவில் கடைசியாக 1979இல் ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. நீண்ட கால அதிபர் ஆட்சி கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டார். அப்போது ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது   https://www.bbc.com/tamil/articles/c9831gnq2gvo  
    • அவர்கள் செத்து விடவில்லை,.ஆம்,.ஆனால்  அவர்களுக்கு கட்டளை இடும். கட்டளைப்பீடம்   பூண்டோடு இறந்து விட்டது”   அத்துடன் இவர்களின் வினைத்திறனும். இறந்து விட்டது    இறுதியில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றும் ஒற்றுமையாக செய்ய முடியாது   எனபது மிக மிக உறுதியாகியுள்ளது  நன்றி வணக்கம்…   🙏🙏 நீங்கள் தேனீரை குடியுங்கள். 
    • பிறநாடுகள் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் இங்கு அமெரிக்காவில் கதவைத் தட்டியவுடன் கதை முற்றும் முடிந்துவிடுகின்றது. அதன் பின் அவர்கள் எங்கேயும் நெருப்பாக நிற்கமுடியாது. முகநூல் கணக்கையே மூடிவிட்டுப் போக வேண்டியதுதான்................. பெயரில் கூட நெருப்பு, அக்னி இப்படி எதுவும் இருந்தால், அதையும் எடுத்து விடவேண்டும்.............🤣.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.