Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மைக் டைசன் Vs ஜேக் பால்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒட்டுமொத்தப் போட்டியில் டைசன் 18 குத்துக்களை மட்டுமே பதிவு செய்தார்.
  • எழுதியவர், கல் சஜாத்
  • பதவி, டெக்சாஸ், பிபிசி ஸ்போர்ட் பத்திரிகையாளர்

உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை, யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பால் வென்றுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸில் AT &T மைதானத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசனை அவர் வீழ்த்தியுள்ளார். இந்த ஆட்டத்தை 70 ஆயிரம் ரசிகர்கள் நேரிலும், லட்சக்கணக்கானோர் நெட்ஃபிளிக்ஸ் மூலம் நேரலையிலும் கண்டு களித்தனர்.

58 வயதான மைக் டைசன் இரண்டு முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர். அவர் 19 வருடங்களாக தொழிற்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அவரை எதிர்த்து களம் கண்ட 27 வயதான ஜேக் பால் ஒரு குத்துச்சண்டை களத்துக்கு புதியவர். டைசனுடன் ஒப்பிடுகையில் அவர் மிகவும் இளமையாகவும், தடகள வீரரைப் போன்ற உடற்தகுதியுடனும் இருந்தார்.

இரண்டு நிமிட சுற்றுகள் கொண்ட எட்டு-சுற்றுப் போட்டியில் அவர் டைசனை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். தன் துல்லியமான தாக்குதல்களால் (jabs and accurate punches) டைசனை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் டைசன் மெதுவாகவும் மந்தமாகவும் செயல்பட்டார்.

குத்துச்சண்டை போட்டிக் களத்திற்குள் டைசன் நுழையும் போது அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. மக்கள் அவரை நாயகனாக பாவித்து கோஷங்கள் எழுப்பினர். ஆனால் சண்டை முடிவடையும் போது அங்கு பெரும் கூச்சல்கள் எழுந்தன. விரக்தியின் அலைப் பரவியது.

ரசிகர்கள் சந்தேகம்

போட்டியின் நடுவர்கள் 80-72, 79-73 மற்றும் 79-73 என்ற புள்ளிகளை அறிவிப்பதற்கு முன்பே சில ரசிகர்கள் வெளியேறினர்.

இந்த போட்டியின் உண்மைத் தன்மை மற்றும் போட்டியாளர்கள் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டு விளையாடினார்கள் என்பதில் ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் இருந்தன.

போட்டிக்குப் பிந்தைய ஒரு சங்கடமான தருணத்தில், டைசன், ஜேக் பாலின் சகோதரர் லோகனை அழைத்து, இதுவரை அவர் விளையாடிய 57 போட்டிகளில் இது தனது ஏழாவது தோல்வி என்றும் இதற்கு பின்னரும் மீண்டும் போட்டியிடுவேன் என்றும் கூறினார்.

டெக்சாஸ் கமிஷன் நிர்ணயித்த நிபந்தனைகளின் ஒரு பகுதியாக இருவரும் கூடுதல் ஸ்பாஞ்ச் நிரப்பப்பட்ட கனமான கையுறைகளை அணிந்திருந்தனர். இது தொழிற்முறை போட்டிக்கான (pro fight) ஒரு அம்சம். ஆனால் போட்டி முடிந்ததும் இந்த கையுறைகள் விவகாரம் கேலிக்குரியதாகத் தோன்றியது.

இலகுவான கையுறைகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தியிருக்காது. இரண்டு வீரர்களும் வீசிய எந்த குத்துகளும் நாக் அவுட் நிலையை நெருங்கவில்லை.

பால் ஒட்டுமொத்தப் போட்டியில் 78 குத்துகளை பதிவு செய்தார். ஆனால் டைசன் 18 குத்துகள் மட்டுமே விட்டார்.

பால் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு முன், ஆன்லைனில் காமெடி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரை சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றன்ர.

இது ஜேக் பாலின் 11-வது தொழிற்முறை குத்துச்சண்டைப் போட்டி. கடந்த ஆண்டு டாமி ப்யூரியிடம் அவர் தோற்றார். மேலும் மெக்சிகன் சூப்பர் ஸ்டார் சவுல் 'கனெலோ' அல்வாரெஸுடன் சண்டையிடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் தெரிவித்தார்.

"அவர் பணம் பெற விரும்புவதை அறிந்ததால், பணம் எங்குள்ளது என்பது அவருக்குத் தெரியும்." என்று பால் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

இது மைக் ரைச‌னுக்கு அவ‌மான்

போயும் போயும் இள‌ம் பெடிய‌னிட‌ம் தோத்த‌து

கிழ‌ட்டு வ‌ய‌தாகியும் மை ரைச‌னுக்கு நினைப்பு தான் 2000ம் ஆண்டுக‌ளில் இருந்த‌ ரைச‌ன் என்று

ந‌ல்ல‌ நிலையில் இருக்கும் போது ஓய்வை அறிவித்து இள‌மையில் உழைத்த‌ காசை பிச்ச‌ம் பிடித்து அழ‌கான‌ வாழ்க்கை வாழ்ந்து இருக்க‌லாம்

தோல்விக்கு மேல் தோல்விய‌ ச‌ந்திச்சு க‌ட‌சியில் சில்ல‌றை காசுக்கு விள‌ம்ப‌ர‌ங்க‌ளில் ந‌டித்தார்

இவ‌ரை விட‌ திற‌மையான‌ குத்து ச‌ண்டை வீர‌ர்க‌ள் சாதித்து விட்டு 

தாங்க‌ளும் த‌ங்க‌ட‌ குடும்ப‌முமேன‌ வாழுகின‌ம்................................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

58 வயதான மைக் டைசன் இரண்டு முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டம் வென்றவர். அவர் 19 வருடங்களாக தொழிற்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. அவரை எதிர்த்து களம் கண்ட 27 வயதான ஜேக் பால் ஒரு குத்துச்சண்டை களத்துக்கு புதியவர். டைசனுடன் ஒப்பிடுகையில் அவர் மிகவும் இளமையாகவும், தடகள வீரரைப் போன்ற உடற்தகுதியுடனும் இருந்தார்.

இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை  நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன்.

அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.

Bild

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை  நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன்.

அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.

Bild

இவ‌ர் அமெரிக்காவில் ப‌ல‌ சுத்து மாத்து விளையாட்டுக்க‌ளில் கூட‌ க‌ல‌ந்து கொண்ட‌வ‌ர்................
இவ‌ரின் வாழ்க்கை நாச‌மாய் போக‌ முத‌ல் கார‌ன‌ம்

1 காம‌ம்
2 போதைக்கு அடிமை
3 சிறைக்கு போய் விளையாட்டில்  வீழ்ச்சி க‌ண்டார்

4 எத‌ற்க்கு எடுத்தாலும் உட‌ன் கோவ‌ப் ப‌டுவ‌து

5 தான் தோக்கும் நிலை வ‌ந்தால் ச‌க‌ வீர‌ரின் காதை க‌டிப்ப‌து

2002க‌ளோட‌ இவ‌ரின் குத்து ச‌ண்டை முடிவுக்கு வ‌ந்து விட்ட‌து

2002 க‌ளில் ல‌ண்ட‌ன் நாட்டை சேர்ந்த‌ எவ‌ன் லுயூஸ் கூட‌விளையாடி ரைச‌னின் முக‌த்தில் ர‌த்த‌ம் கொட்ட‌ தொட‌ங்கிட்டு

க‌ட‌சியில் லுவிஸ்சுன் குத்தால் கீழ‌ விழுந்து தோல்வி அடைந்தார்......................

அந்த‌ விளையாட்டு 2002க‌ளில் நீங்க‌ளும் பார்த்து இருக்க‌ கூடும் தாத்தா..........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, வீரப் பையன்26 said:

இந்த உலகத்திலை 100 வீதம் யோக்கியன் இருக்கிறானா இல்லையே. அது போல்தான் மைக் டைசனும் ஒரு சாதாரண மனித குணம் உள்ளவர்.

உலகின் முதல் நிலை அதி எடை பிரிவு(heavy weight) குத்துச்சண்டை போட்டியில் உலக புகழ் மைக்டைசனை வீழ்த்தி ஜேக்பால் பட்டம் வென்றார்..
வெற்றி பெற்றவருக்கு 330 கோடி பரிசுத்தொகை வழங்கியதுடன் தோற்ற மைக் டைசனுக்கு 169 கோடியும் கிடைத்துள்ளது..
ஆச்சரியம் என்னவென்றால் மைக்டைசனின் வயது 58! எதிர்த்து விளையாடி வெற்றி பெற்ற ஜேக் பாலின் வயது வெரும் 27 தான்..
58 வயதில் தைரியமாக களமிறங்கிய போதே நீ வெற்றி பெற்றுவிட்ட தல..👍💖
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

2002ம் ஆண்டு டென்மார்க் த‌லைந‌க‌ர‌த்தில்

டென்மார்க் நாட்டை சேர்ந்த‌ )விரிய‌ன் எதிர் மைக் ரைச‌ன் )

எதிர் பார்த்த‌ ஒன்று தான் மைக் ரைச‌ன் வெல்வார் என்று மூன்று ர‌வுன்ட் முடிந்த‌ உட‌ன் மைல் ரைச‌ன் வெற்றி என்று அறிவிக்க‌ப் ப‌ட்டார்

மைக் ரைச‌னை பேட்டி க‌ண்ட‌ டென்மார்க் நாட்டை சேர்ந்த‌ ஊட‌க‌ பெண்ன‌ பார்த்து................நீ அழ‌காய் இருக்கிறாய் என‌ வெளிப்ப‌டையாய் சொன்னார் ஹா ஹா அத‌ற்க்கு பிற‌க்கு என்ன‌ ந‌ட‌ந்திச்சோ ஏது ந‌ட‌ந்திச்சோ யாருக்கு தெரியும் ஹா ஹா...................................

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

குத்துச்  சண்டை போட்டியின் முடிவில் டைசன் இவ்வாறாக சொன்னார்,
நேற்றைய இரவுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், 
கடைசியாக ஒரு முறை இந்த வளையத்துக்கு வந்ததற்காக எனக்கு எந்த வருத்தமுமில்லை. 

நான் கிட்ட தட்ட ஜீன் மாதமே இறந்து விட்டேன். 
அந்த மாதத்தில் மட்டும் எனக்கு எட்டு முறை ரத்தம் ஏற்றப்பட்டது, 
25 பவுண்ட்கள் எடையும் குறைந்தேன், அதனால் தான் 
நான் ரிங்கில் போராட வேண்டியிருந்தது. 

மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த டல்லாஸ் ஸ்டேடியத்தில் 
எனது வயதில் பாதி வயதுடையை ஒரு திறமையான போராளியுடன் 
நான் போராடினேன். 

இந்த வயதிலும் எட்டு ரவுண்ட்கள் தாக்கு பிடித்து நின்றதை 
என் பிள்ளைகள் பார்த்தால் போதும், 
வேறு எவருக்கும் இதை விமர்சிக்க உரிமை இல்லை..!!💜

M Jency Stefana 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

இவ‌ர் இவ‌ரின் வ‌ய‌தான‌ வீர‌ர்க‌ளுட‌ன் மோதி 2002க‌ளில் தோத்து போனார் அப்போது இவ‌ரின் குத்து ச‌ண்டை வாழ்க்கை முடிந்து விட்ட‌து

தோல்வி ப‌ய‌த்தில் கொலிவூட்டின் காதை க‌டிச்ச‌து

லுவிஸ் கூட‌ தேவை இல்லாம‌ முர‌ன் ப‌ட்டு குறிக்க‌ப் ப‌ட்ட‌ தேதியில் விளையாட்டை ந‌ட‌த்தாம‌ த‌ள்ளி போட்ட‌வ‌ர்

பிற‌க்கு நேருக்கு நேர் லுவிஸ் கூட‌ 2002 விளையாடி ர‌த்த‌ம் முக‌த்தில் இருந்து வெளியில் வ‌ர‌ அதோட‌ கீழ‌ விழுந்து தோல்விய‌ அடைந்த‌வ‌ர்

இள‌மைக் கால‌த்தில் இவ‌ர் உண்மையான‌ குத்து ச‌ண்டை வீர‌ர் என‌ ப‌ழைய‌ காணொளிக‌ளில் பார்க்க‌ முடிந்த‌து

2002ஓட‌ இவ‌ரின் வொக்ஸ்சிங் வாழ்க்கை முடிவுக்கு வ‌ந்த‌து

பின்ன‌ர் மிருக த‌ன‌மாய் முக‌த்தில் ப‌ச்சை குத்தி ப‌ல‌ அசிங்க‌ங்க‌ளை செய்தார்..................

என‌க்கு இவ‌ரை விட‌

கொலிபீட் ம‌ற்றும் லுவிஸ்

இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரையும் அதிக‌ம் பிடிக்கும்

அவ‌ர்க‌ள் நேர்மையான‌ குத்து ச‌ண்டை வீர‌ர்க‌ள்...........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/11/2024 at 22:01, வீரப் பையன்26 said:

மைக் ரைச‌னை பேட்டி க‌ண்ட‌ டென்மார்க் நாட்டை சேர்ந்த‌ ஊட‌க‌ பெண்ன‌ பார்த்து................நீ அழ‌காய் இருக்கிறாய் என‌ வெளிப்ப‌டையாய் சொன்னார் ஹா ஹா அத‌ற்க்கு பிற‌க்கு என்ன‌ ந‌ட‌ந்திச்சோ ஏது ந‌ட‌ந்திச்சோ யாருக்கு தெரியும் ஹா ஹா...................................

மொத்தம் எட்டுச் சுற்றுகள். ஒவ்வொன்றும் இரண்டு நிமிடங்கள். 
மொத்தமாக பதினாறு நிமிடங்கள். தோற்றாலோ, வென்றாலோ, 20 மில்லியன் டாலர். 
ஒரு நிமிடத்துக்கு 1.25 மில்லியன் டாலர். 58 வயதான மைக் டைசன் பெற்றுக்கொண்ட ஊதியம். 
நிஜப் போட்டியா, பாவனைப் போட்டியா கவலையில்லை. உலகம் முழுக்க, விழித்திருந்து பார்த்த குத்துச்சண்டை நிகழ்வு. 

“படி.. படி… படிக்காவிட்டால் நாளை மாடு மேய்க்கத்தான் லாயக்கு” என்று திட்டிப் படிக்கவைத்த உலகம் போய், இப்போது நவீன வியாபார உலகமாக மாறிவிட்டிருக்கிறது. 
எந்த விதத்திலும் கோடி கோடியாகப் பணத்தைச் சம்பாதிக்க முடியுமென நம்ப வைத்திருக்கிறது. 
மைக் டைசன் ஒரு சிறந்த வீரர் என்பதிலோ, திறமைசாலி என்பதிலோ எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 
அவர் இதற்கெல்லாம் தகுதியானவர்தான். நான் சொல்ல வந்தது அவரின் தகுதிபற்றியல்ல. 
ஒரு நிமிடத்திற்குப் பத்து இலட்சம் டாலர்களை அள்ளிக் கொடுக்கும் நவீன வியாபாரச் சந்தை பற்றியே! 
முன்னரெல்லாம் உடல் உடைந்து, நாளெல்லாம் பாடுபட்டு உழைத்து, ஒரு மாதச் சம்பளமாகக் கொண்டுவரும் பணத்தை, இன்றைய இளைஞர்கள் ‘ஜஸ்ட் லைக் தட்’ ஒரு நாளில் கொண்டு வருகிறார்கள். 

இது வியப்பைக் கொடுத்தாலும், கூடவே ஒருவிதப் பயத்தையும் கொடுக்கிறது. 

இதுவும் பரிணாம  வளர்ச்சியின் ஒருவிதப் படிநிலையென ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
 
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

நீங்க‌ள் சொல்வ‌தில் உட‌ன் ப‌டுகிறேன் தாத்தா

ஆனால் மைக் ரைச‌ன் ப‌ண‌ ஆசையில் தான் விளையாட‌ ச‌ம்ம‌தித்தார்.................இள‌ம் வீர‌ர் தொட‌ர்ந்து ப‌ல‌ வெற்றிக‌ள்.................என்ர‌ சிறு வ‌ய‌து ந‌ண்ப‌ன் சொன்னான் மைக் ரைச‌ன் அன்டைக்கு வெல்ல‌க் கூடும் என்று

மைக் ரைச‌ன் தான் நேசித்த‌ விளையாட்டில் இன்னும் சாதிக்க‌னும் என்று ம‌ன‌ம் வைச்சு இருந்தால் இன்னும் ப‌ல‌ வெற்றிக‌ளை 20வ‌ருட‌த்துக்கு முத‌லே வென்று இருப்பார்

ஆர‌ம்ப‌ கால‌த்தில் மைக் ரைச‌ன் கூட‌ யாரும் வெல்ல‌ ஏலாது 3ரொன்ட் ஓட‌ விளையாட்டை வென்று விடுவார் குத்தின் வேக‌ம் அதிக‌ம் இள‌ம் ரைச‌னாய் இருக்கும் போது.................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.