Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வைத்தியர் அர்ச்சுனாவை நேற்று சனிக்கிழமை (16) சாவகச்சேரி மக்கள் வரவேற்றிருந்தனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல் தடவையாக வைத்தியர் அர்ச்சுனா சனிக்கிழமை பிற்பகல் யாழ். சாவகச்சேரி சென்றிருந்த நிலையில் மக்கள் அவருக்கு அமோக ஆதரவளித்தனர். 

IMG-20241116-WA0090.jpgIMG-20241116-WA0079.jpgIMG-20241116-WA0082.jpgIMG-20241116-WA0084.jpgIMG-20241116-WA0089.jpg

https://www.virakesari.lk/article/198956

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இரண்டரை வருடங்களில் எம்.பி. பதவியை இராஜினாமா செய்யும் மருத்துவர் அர்ச்சுனா

1200009111.jpg

யாழ்ப்பாணம், கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள மருத்துவர் அர்ச்சுனா இரண்டரை வருடங்களில தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

சுயேட்சைக் குழுவாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் அர்ச்சுனா தங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஆசனங்கள் கிடைக்கும் என்று தேர்தலுக்கு முன்னர் எதிர்வுகூறியிருந்தார். ஆயினும் அவரது சுயேட்சைக் குழுவுக்கு ஒரு ஆசனமே கிடைத்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்தள்ள மருத்துவர் அர்ச்சுனா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரண்டரை வருடங்களில் இராஜினாமா செய்து, தனது கட்சியில் உள்ள மற்றொரு பெண் வேட்பாளருக்கு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், ஆசனத்தைக் கைப்பற்றிய ஒரேயொரு சுயேச்சைக் குழு என்ற சிறப்பை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட மருத்துவர் அர்ச்சுனா தலைமையிலான சுயேச்சைக் குழு 17 தரப்பினர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://newuthayan.com/article/எம்.பி._பதவியை_இராஜினாமா_செய்யும்_மருத்துவர்_அர்ச்சுனா#google_vignette



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் கூறிய இந்த Supporters கள்   போற்றிப் புகழுவது போல் பாசாங்கு செய்து  தமது சுயநல அரசியலை வளர்தது கொள்கிறார்களே தவிர நீங்கள் கூறியதைப் போல் அரசியல் தீர்வு முயற்சியில் கிஞ்சித்தும் முன் நகரவில்லை. அதை செய்யும் திறமையும் இவர்களுக்கு இல்லை.  இந்த Supports தங்களது  அரசியல் கொள்கைகளுடனும்,  அவர்கள் தற்போது செய்துவரும் அரசியல் மூலமோ இவர்களால் இலங்கையில் எந்த அரசியல் தீர்வையும் காணமுடியாது மட்டுமல்ல அதை நெருங்கக் கூட முடியாது.    அரசியலமைப்பு மூலமான எந்த தீர்வும் இலங்கையில் வாழும் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் ஒத்துழைப்புடன் மட்டுமே சாத்தியம். உலக நாடுகள் கூட அதையே வலியுறுத்தும். புலிகள் பலமாக இருக்கும் போதே உலக நாடுகள் அதையே வலியுறுத்தின என்பது உங்களுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது இன்றைய டுபாக்கூர் அமைப்புகளின் நிலை எப்படி இருக்கும்.  நாம் விரும்புகிறோமோ இல்லையோ அதுவே reality.  இதற்கு தமிழர் சார்பில் Neutral ஆன தமிழ் அமைப்புகள் மூலம் மக்களின் அபிலாசைகள் நியாயப்பாடுகள்,  பாதிப்புக்கள் குறித்த தெளிவான  பரப்புரைகளை பெரும்பான்மை  மக்கள் மத்தியிலும் செய்து அவர்களின் ஆதரவுடனேயே நிரந்தரமான  அரசியல் தீர்வை காண முடியும். இந்த Supporters  களுக்கு தமிழ் மக்களின் நல்வாழ்வில் உண்மையான அக்கறை இருந்தால் தங்கள் லூசுத்தனமான அரசியலை விடுத்து  இப்படியான  neutral அமைப்புகளுடன்  இணைந்து வேலை செய்து மக்களின் நன்மைக்கான பங்களிப்பினை வழங்கலாம்.  மற்றப்படி  Supports இன் சொந்த  அரசியல் என்பது குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் பயன்றற அரசியலே.   2009 க்கு முன்னரான Supporters என்பது புலிகளை இராணுவரீதியில்  பலப்படுத்துவதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை உயர்த்தி ஓரு நியாயமான அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அவாவின் அடிப்படையில் பரவலாக  உருவானது. அது புலிகளுக்கு பலத்தை வழங்கியது.  ஆனால்,   இன்றைய Supporters இன் நோக்கம், “ போற்றிப் பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே” என்ற ரேஞ்சில் மட்டுமே உள்ளதேயொழிய  எந்த தெளிவான அறிவுசார் அரசியல் மயப்பட்டதல்ல. அவ்வாறான அறிவுசார் அரசியலில் அவர்களில் பெரும்பான்மையினர் வளர்தெடுக்கப்படவும் இல்லை. அவர்களும் என்ன செய்வார்கள் வச்சுக்கோண்டா வஞ்சகம் செய்கிறார்கள்.  
    • சாணக்ஸ்  உண்மையாகவா😇 .... நீங்கள் இப்படித் தான் சும்முக்கும் முந்தி முட்டுக் கொடுத்தனீங்கள்   
    • "சாவகச்சேரீஸ்"என சொல்ல வேண்டும் ...😅 யாழ்ப்பாணீஸ் டிசன்ட மக்கள் சக்திக்கு எல்லோ வாக்கு போட்டவையள்..எதற்கு எடுத்தாலும் யாழ்ப்பாணிஸ் யை குற்றம் சொல்லப்படாது.(அவையள் வைச்ச ஆப்பு பெரிசு அது வேற கதை)😅
    • சுமந்திரன் வெளியில் இருந்து பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுக்காமல் தீர்வு முயற்சிக்கு உதவலாம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.