Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

உரிமைக் குரல்                   

             - சுப.சோமசுந்தரம்

         சுமார் ஓராண்டுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் மிகக் குறைந்த வயதில் (21) பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் என்ற 
தொல் பழங்குடி இன சமூகச் செயற்பாட்டாளர் தமது இனத்தின் போர் முழக்கமான ஹக்கா எனும் மரபுப் பாடலொன்றுடன் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அது உலகம் முழுவதும் வைரல் ஆனது. அது குறித்து எனது அப்போதைய முகநூற் பதிவின் இணைப்பு :
https://www.facebook.com/share/p/14bJyTCimP/

               1840 ல் நியூசிலாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தில் வந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கும் நியூசிலாந்தின் மவுரி பழங்குடி இன மக்களுக்கும் இடையே 'வைதாங்கி ஒப்பந்தம் (Treaty of Waitangi)' கையெழுத்தானது. அதன்படி சில சிறப்புச் சலுகைகளும் உரிமைகளும் மவுரி இன மக்களுக்கு வழங்கப்பட்டன. நியூசிலாந்து 1986 ல் முழுமையாக விடுதலை பெற்ற பின்னரும் நியூசிலாந்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் வைதாங்கி ஒப்பந்தம் பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் மசோதாவை அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மாற்றத்தால் மவுரி இன மக்களின் சில உரிமைகள் பறி போகும் என்பது வெளிப்படை. சமத்துவ நோக்கில் அம்மாற்றம் கொண்டு வரப்படுவதாக நியூசிலாந்து அரசு அறிவிப்பது வேடிக்கையும் வேதனையும். நியூசிலாந்தின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதமான மவுரி இன மக்களிடமிருந்து அம்மசோதாவிற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பு பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் அந்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்து அவர்களது போர் முழக்கமான ஹக்கா பாடலைப் பாடி அறச்சீற்றத்துடன் அப்பாடலுக்கான நடனத்தை மேற்கொண்டார். பிற மவுரி இன உறுப்பினர்களும் அந்த ஆவேச ஆடல் பாடலில் கலந்து கொள்ள, பாராளுமன்றம் அமளிதுமளியானது. மீண்டும் இந்நிகழ்வு உலகம் முழுவதும் வைரல் ஆனது.
             இத்தகைய நிகழ்வுகள் நம் தாய்த் திருநாட்டில் அதிகமாகவே நடைபெறுவன. நமது நாட்டின் காட்சித் திரை நம் மனக்கண்ணில் விரிவது தவிர்க்க இயலாத ஒன்று. குஜராத்தில் மதச்சிறுபான்மையினர் மீது சொல்லில் விவரிக்க இயலாத வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போதும் அதன் மீது நீண்ட காலம் விசாரணை நடைபெறும்போதும் அதுபற்றி வாயே திறக்காத குடியரசுத் தலைவரான A.P.J அப்துல் கலாம் உங்கள் நினைவுக்கு வரலாம். மணிப்பூர் பற்றியெரியும் போது அது பற்றிக் கள்ள மௌனம் சாதிக்கும் பிரதமரை ஓரளவு புரிந்து கொள்ளலாம்;  பற்றியெரிந்த/பற்ற வைக்கப்பட்ட குஜராத்தின் அன்றைய முதல்வரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? ஆனால் மணிப்பூர் கலவரத்தில் பெரும்பாலும் சிறுபான்மையினரான பழங்குடி குக்கி இன மக்களே பாதிப்புக்கு உள்ளாகும்போது, பழங்குடி இனத்தவரான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாதிக்கும் மௌனத்தை எந்த வகையில் சேர்ப்பீர்கள் ? உலகளவில் பேசப்படும் நியூசிலாந்தின் ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் பற்றியெல்லாம் திரௌபதி முர்முவுக்குத் தெரியுமா ? தன்மானம் காக்கத் தலைவிரி கோலமான மகாபாரதத் திரௌபதியின் கதையாவது தெரியுமா ? குலத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் விஸ்வகர்மா யோஜனாவை ஆதரிக்கும் எல்.முருகன் போன்றோர் தம் சந்ததியினரைக் குலத்தொழிலுக்குத் தயார் செய்து விட்டார்களா ?
           மேற்கண்ட காட்சித் திரை உங்கள் மனக்கண்ணில் விரிந்தால், உங்கள் பெற்றோர், ஆசிரியர், தோழர்கள் உங்களைச் சரியாக வளர்த்திருக்கிறார்கள் என்று பொருள். நியூசிலாந்தின் வைதாங்கி ஒப்பந்தமானது, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் அக்டோபர் 1947 ல் மகாராஜா ஹரி சிங் - மவுண்ட்பேட்டன் பிரபு இடையில் ஏற்பட்ட நிலையான ஒப்பந்தத்தை உங்களுக்கு நினைவுபடுத்தினால் நீங்கள் நல்ல தலைவர்களால் வழிநடத்தப் பட்டுள்ளீர்கள் என்று பொருள்.
           இனி உலகெங்கும் ஒலிக்கும் நியூசிலாந்து ஹனாவின் போர் முழக்கம் - உரிமைக்குரல் :

 

 

https://www.facebook.com/share/p/189yZuZxQp/

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இனி உலகெங்கும் ஒலிக்கும் நியூசிலாந்து ஹனாவின் போர் முழக்கம் - உரிமைக்குரல் :

நானும் பார்த்தேன்.

அதிர்ச்சியாக இருந்தது.

தகவலுக்கு நன்றி பேராசிரியரே.

  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • கோசான், சிறீபவானந்தராஜா கட்சியால் சிலகாரணங்களுக்காக கண்டனத்துக்குள்ளானவர் என்று தகவல்
    • தனது கடமைகளை பொறுப்பேற்றார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை (18) பொறுப்பேற்றுக் கொண்டார். வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சராக விஜித ஹேரத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்த பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் காலை நடைபெற்றது. களனிப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விஞ்ஞானப் பட்டம் பெற்ற இவர் இதற்கு முன்னர் கலாச்சார விவகாரங்கள், மற்றும் தேசிய மரபுரிமை, துறைமுகம் மற்றும் சிவில் விமானப்  போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றியுள்ளார்.  https://www.virakesari.lk/article/199106
    • நன்றி புரோ,  தாங்கள் பாடசாலைப் பக்கமே ஒதுங்காதவர் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு.  😁,.. பிறருக்கு பரிந்துரை செய்வதற்கு என்று ஒரு தராதரம் வேண்டுமல்லவா?  அந்தத் தரம் உங்களுக்கு இல்லை என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது. அதனால் உங்கள் பரிந்துரை ஏற்கப்படவில்லை.  Rejected.  🤣
    • பாகிஸ்தானுடனான ரி - 20 தொடரை 3 - 0 என முழுமையாக கைப்பற்றியது அவுஸ்திரேலியா (நெவில் அன்தனி) பாகிஸ்தானுக்கு எதிராக ஹோபாட், பெலேரிவ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றியீட்டியது. பிறிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 29 ஓட்டங்களாலும் சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 13 ஓட்டங்களாலும்  வெற்றிபெற்றிருந்த அவுஸ்திரேலியா, இன்றைய வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என முழுமையாகக் கைப்பற்றியது. இன்றைய போட்டியில் ஆரோன் ஹார்டியின் சிறப்பான பந்துவீச்சும் மாக்கஸ் ஸ்டொய்னிஸின் அதிரடி துடுப்பாட்டமும் அவுஸ்திரேலியாவை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 18.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பாகிஸ்தான் 7ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றிருந்ததால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானின் எஞ்சிய 9 விக்கெட்கள் 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் 41 ஓட்டங்களையும் ஹசீபுல்லா கான் 24 ஓட்டங்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆரோன் ஹார்டி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அடம் ஸம்ப்பா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 11.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. மாக்கஸ் ஸ்டொய்னிஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 27 பந்துகளில் 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அணித் தலைவர் ஜொஷ் இங்லிஷ் 27 ஓட்டங்களைப் பெற்றதுடன் 3ஆவது விக்கெட்டில் மாக்கஸ் ஸ்டொய்னிஸுடன் 55 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.   அவர்களைவிட ஜேக் ப்ரேஸர் மெக்கேர்க் 18 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி, ஜஹாந்தாத் கான், அபாஸ் அப்றிடி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மாக்கஸ் ஸ்டொய்னிஸ். தொடர்நாயகன்: ஸ்பென்சர் ஜோன்சன் https://www.virakesari.lk/article/199111
    • ஜேவிபி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார தெரிவித்துள்ளார் அதனால தான் இணைத்தேன் அண்ணை. இருந்தாலும் சந்தேகம் வரும் தான்!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.