Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெயாங்கொடை மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் தோண்டும் பணி ஆரம்பம்!

வெயாங்கொடை மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் தோண்டும் பணி ஆரம்பம்!

வெயாங்கொடை, வந்துரம்ப பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள காணியில் புதையல் தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது.

அத்தனகல்லை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் புதையல் இருப்பதாகக் கூறி பல வருடங்களாக புதையல் வேட்டையாடுபவர்களால் மேற்படி இடம் பல தடவைகள் தோண்டப்பட்டுள்ளதாக வெயங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல சந்தர்ப்பங்களில் புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் பலரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்திருந்தனர்.

தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட சோதனையின் போது அந்த இடத்தில் புதையல் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

எவ்வாறெனினும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) நடத்திய விசாரணையில், நிலத்தில் ஏதோ ஒன்று புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தனகல்லை நீதிவான் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பின்னர், தொல்பொருள் திணைக்களம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், வெயங்கொடை பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மீரிகம பிரதேச செயலக அதிகாரிகளின் மேற்பார்வையில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2024/1409488

  • கருத்துக்கள உறவுகள்

நாடே எதிர்ப்பார்க்கும் புதையல்!

வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினத்திலும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது.

நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள இடத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இன்று மூன்றாவது நாளாகவும் குறித்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெயாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் பல்வேறு நபர்கள் புதையல் தேடும் நோக்கில் சட்டவிரோதமான முறையில் இங்கு அகழாய்வு மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்தனகல்ல நீதவான் வழங்கிய உத்தரவுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையின் போது பூமிக்குள் ஏதோ ஒன்று இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம், பொதுமக்கள் முன்னிலையில் குறித்த இடத்தில் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு வெயாங்கொடை பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

அகழ்வாராய்ச்சிக்கு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், அதன்படி நேற்றும், முந்தினநாளும் அங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் நேற்று பிற்பகல் வரையிலும் அதனை நிறைவு செய்ய முடியாத நிலையில், பாரிய கல் ஒன்று கிடைத்ததையடுத்து நேற்றைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

https://tamil.adaderana.lk/news.php?nid=196277

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

எனினும் நேற்று பிற்பகல் வரையிலும் அதனை நிறைவு செய்ய முடியாத நிலையில், பாரிய கல் ஒன்று கிடைத்ததையடுத்து நேற்றைய அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

சிலவேளை அந்தப் பாரிய கல்… இரத்தினக் கல்லாகவும்  இருக்கலாம்.
வடிவாக தண்ணீரில் கழுவி விட்டு பார்க்கவும். 😁

  • கருத்துக்கள உறவுகள்

வெயாங்கொடையில் புதையல் தேடும் பணி நிறைவு

வெயாங்கொடையில் புதையல் தேடும் பணி நிறைவு

நீதிமன்ற உத்தரவுக்கமைய, வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தில் சதுப்பு நிலப்பகுதியில் இருப்பதாக கூறப்படும் புதையல் தேடும் 3 நாள் அகழ்வுப் பணிகள் இன்று மாலை 4 மணியளவில் நிறைவடைந்தன.

பல அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட குறித்த அகழ்வு பணியின் நிறைவில் எந்தவொரு புதையல் அல்லது பெறுமதியான தொல்பொருட்கள் கிடைக்கவில்லை.

வெயாங்கொடை, வந்துரவ பிரதேசத்தின் ஊடாக நிர்மாணிக்கப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் இருப்பதாக வதந்தி பரவியதையடுத்து, கடந்த சில நாட்களாக பல்வேறு நபர்கள் இங்கு சட்டவிரோதமாக அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர். எனினும் குறித்த இடத்தில் தொடர்ந்து சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டன.

இது தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்ததையடுத்து, அத்தனகல்ல நீதவான் மேற்படி இடத்தில் புதையல் உள்ளதா என்பதை கண்டறியுமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, தொல்பொருள் திணைக்களம், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மீரிகம பிரதேச செயலகம் ஆகிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் மேற்பார்வையில் நேற்று முன்தினம் பொதுமக்கள் முன்னிலையில் புதையல் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

முதல் நாள் மழை குறுக்கிட்டதால் அகழ்வாராய்ச்சியில் எதுவும் கிடைக்காத நிலையில், 2ஆவது நாளான நேற்று நடந்த அகழ்வுப் பணியின் போது பெரிய கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று மதியம் கல் உடைக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு, குறித்த கல்லை அகற்றியும் பணியை நிறைவு செய்ய முடியவில்லை.

அகழ்வு பணிகளுக்கு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் இரண்டு நாட்களே அவகாசம் வழங்கியிருந்த நிலையில், அந்த கால அவகாசம் நேற்று பிற்பகல் நிறைவடைந்தது.

எனினும், இது தொடர்பில் நீதிமன்றில் காரணங்களை முன்வைத்து மேலதிகமாக இன்றைய நாளையும் பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதன்படி, மூன்றாவது நாளாக இன்று காலை 9 மணிக்கு புதையல் தோண்டும் பணி தொடங்கியது.

பாரிய கல்லை அகற்ற முடியாத பின்னணியில் அதை வெட்டி எடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் கல் துண்டுகளாக நொறுக்கப்பட்டன.

அதன்படி, புதையல் அல்லது தொல்பொருள் மதிப்பு எதுவும் கிடைக்காததால், அங்கு கூடியிருந்த அனைத்து அரச அதிகாரிகளின் உடன்படிக்கையின்படி இன்று மாலை 4 மணிக்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் காரணங்களை அறிக்கையிட்டு, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அங்கு திரண்டிருந்த மக்களும் கலைந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த இடத்தில் தொல்பொருள் பெறுமதியான எதுவும் இல்லை என தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் இன்று தெரிவித்துள்ளார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196305

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

468209460_979228820908757_64019348297388

 

 

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தினம் அனுஷ்டிப்பதை மறைப்பதற்கே புதையல் தோண்டும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது - சமன் ரத்னப்பிரிய

26 NOV, 2024 | 05:55 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அரசாங்கம் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒருவார காலம் அனுமதி வழங்கி இருப்பதை மறைப்பதற்கா புதையல்தோண்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது என்ற சந்தேகம் எழுகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாவீரர்கள் தினம் என வடக்கு மக்கள் குறிப்பிட்ட ஒரு நாளை அனுஷ்டித்து வருகின்றனர். அந்த நாளில் தங்களின் மரணித்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எந்த தடையும் நாட்டில் இருக்கவில்லை. 

எமது அரசாங்க காலத்திலும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் விடுதலை புலிகள் அமைப்பை நினைவுகூரும் வகையில், அவர்களின் கொடி, இலச்சினைகளை காட்சிப்படுத்தி அந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்து. குறிப்பிட்ட ஒரு தினத்திலேயே அதனை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் ஒரு வாரகாலம் அனுமதி வழங்கி இருக்கிறது. அதனால் வடக்கில் பல்வேறு இடங்களில் கொடிகளை பரக்கவிட்டு பாரியளவில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த காலங்களில் எமது ஆட்சியில் வடக்கு மக்களுக்கு மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஒரு தினத்துக்கு அனுமதி வழங்கியபோது அதற்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு, வடக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது இதற்கு ஒரு வாரகாலம் அனுமதி வழங்கி இருக்கிறது. 

அதேநேரம் இந்த ஒருவாரகாலத்தை மறைப்பதற்கா அரசாங்கம் புதையல் தோண்ட ஆரம்பித்திருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. அத்துடன் அரசாங்கம் பல கோடி ரூபாக்களை செலவிட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் வெயங்கொடை பிரதேசத்தில் புதையல் தோண்டி வருகிறது. 

ஆனால் அரசாங்கத்துக்கு பாரிய கருங்கல் ஒன்றே தற்போது கிடைத்திருக்கிறது. இலங்கை வரலாற்றில் உத்தியோகபூர்வமாக அரச பாதுகாப்புடன் புதையல் தோண்டிய ஒரே அரசாங்கம் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும்.

மக்களின் வரி பணத்தை வீணடிப்பத்தில்லை, மக்களின் பணத்தை பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், தற்போது மக்களின் கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு புதையல் தோண்டுவதாக தெரிவித்து, பாரிய கருங்கற்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறது. 

இதுதான் இந்த அரசாங்கத்தின் நிலைமை. மக்கள் எதிர்பார்த்த எந்த மாற்றத்தை அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/199747

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.