Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

'தமிழ் இந்து‘ வில் ‘இலங்கைத் தேர்தல்கள் உணர்த்தும் செய்தி என்ன?‘ என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் உண்டு. குறிப்பாக –

 

1. வடக்குக் கிழக்கைச் சேர்ந்த எவரும் அமைச்சுப் பதவிகளில் இல்லை என்பது. அருண் ஹேமச்சந்திர கிழக்கு மாகாணம்– திருகோணமலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதியாவார்.
2. தனிச் சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது என்பது. இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள், இரண்டு துணை அமைச்சர்கள் என நான்கு அமைச்சர்கள் தமிழர்கள் உண்டு.
3. 1971 ல் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதற்காக ஜே.வி.பி போராடியது என்பது. அது ஜே.வி.வியின் முதலாவது கிளர்ச்சி. அதில் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி, சோசலிஸ ஆட்சியொன்றை உருவாக்கவே முயன்றனர். வெறுமனே சதிப்புரட்சி மூலம் அதிபர் கதிரையைக் கைப்பற்றுவதற்காக அந்தக் கிளர்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. அப்போது இன்றுள்ளதைப்போல ‘நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர்‘ முறையும் இருக்கவில்லை. 1978 ற்தான் நிறைவேற்று அதிகாரமுடைய அதிபர் முறையை (பிரான்ஸ் நாட்டு முறை) அன்றைய பிரதமராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன உருவாக்கினார். அதற்கான சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு அந்த அதிபர் ஆட்சிமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.
4. 1983 இல் தமிழர்கள் மீதான வன்முறையைத் தூண்டியது ஜே.வி.பி என அன்றைய அரசாங்கம் அதைத் தடைசெய்தது என்பது. அந்த வன்முறையைத் தூண்டியதும் வன்முறையை நடத்தியதும் ஜே.ஆர். அரசாங்கமேயாகும். இதைப் பல நூல்களிலும் அதற்கப்பால், நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் வெளிப்படையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர, பல நூறு கட்டுரைகளும் வாக்குமூலங்களும் இதை ஆதரப்படுத்தி உள்ளன. ஜே.வி.பி உட்பட நவ சமசமாஜக் கட்சி, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகளைத் தடை செய்தவதற்கும் பழியை அவர்கள் மீது போடுவதற்கும் இதை ஒரு வாய்ப்பாக ஜே.ஆர். அரசாங்கம் முயற்சித்தது. ஜே.வி.பியை மட்டுமல்ல, தமிழ் விடுதலை இயக்கங்களையும் அது பயங்கரவாதிகள் என்று தடைசெய்தது. கடல் வலயச்சட்டம், அவசரகாலச் சட்டம் (இன்றும் அந்தச் சட்டம் நீக்கப்படாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது) எனப் பல சட்டங்களை மக்களின் மீது திணித்ததும் ஜே.ஆரின் ஆட்சியாகும்.
5. தமிழ்த்தேசியக் கட்சிகள் உடைந்து தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனது. இதனால்தான் NPP தமிழர் பகுதிகளில் வெற்றியைப் பெறக் கூடியதாக இருந்தது. தமிழ்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றிருந்தால் NPP பின்தள்ளப்பட்டிருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அடுத்த பந்தியில் இதற்கு முரணாக ‘பயங்கரவாதச் சட்டத்தை நீக்க வேண்டும். மாவீரர் துயிலுமில்லங்களைிலிருந்து இராணுவம் விலக வேண்டும், தமிழர்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், அரசியல் உரிமையைத் தமிழர்களுக்கு வழங்க வேண்டும், என்பது போன்ற கோரிக்கைகளுக்காக தமிழ் மக்களில் கணிசமானவர்கள் அநுரவுக்கு (NPP க்கு வாக்களித்துள்ளனர்‘ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு பல தகவல் பிழைகளும் முரண்களும் உண்டு.
தீபச்செல்வன் தமிழ்நாட்டில் வெளியாகும் தீராநதி, உயிர்மை போன்ற இதழ்களிலும் இதேபோன்ற பிழையான தகவல்களோடு பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்; எழுதி வருகிறார்.
அரசியலில் பார்வைகள், கண்ணோட்டங்கள், நிலைப்பாடுகள், விமரர்சனங்கள், மாறுபட்டிருக்கலாம்; மாறுபட்டிருப்பதுண்டு. அது வேறு. உள்நோக்குடைய தகவல் பிழைகள் இருப்பது நல்லதல்ல.
ஊடகக்கற்கையில் படித்துப் பட்டம் பெற்ற ஒருவர், இப்படிப் பொதுவெளியில் உண்மைக்கு மாறான முறையில் எழுதுவதும் பொய்யைக் கட்டமைக்க விளைவதும் தவறு. அதுவும் தமிழ்நாட்டிலுள்ள பெருந்திரள் மக்களிடம் இலங்கைச் சூழலைப் பற்றிப் பிழையாக வியாக்கியானப்படுத்துவது அவர்களுடைய பிழையான புரிதலுக்கே வழிவகுக்கும். இதையே சிலர் நீண்டகாலமாகச் செய்து வருகின்றனர்.
JVP மற்றும் NPP ஆகியவற்றின் கடந்த காலத்தின் மீதான விமர்சனங்கள் உண்டு. ஏன் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் கூட நிச்சயமாக விமர்சனங்கள் ஏற்படும்… அவை பற்றி தீபச்செல்வன் உட்பட யாரும் தாராளமாக எழுதலாம்; எழுத வேணும்.
-கருணாகரன், கிளிநொச்சி.
May be an image of 1 person and text
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லா இந்தியத் தமிழ் ஊடகங்களிலும் 'அடிச்சு விடுதல்' மிக அதிகம். முக்கியமான இலக்கிய மற்றும் ஊடக ஆளுமைகளும் இதற்கு விதி விலக்கல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தீபச்செல்வனிடம் இருந்து ஒரு நேர்மையான கட்டுரையை

எப்படி எதிர்பார்க்கலாம்?

இறுதி யுத்த காலத்தில்  தமிழகத்தில் வாழ்ந்து விட்டு

அப்படி போகவே இல்லை என்பவர்.

அது கூட OK

ஆனால் அங்கிருந்து வந்தபின் டக்ளசின் ஆதரவாளராக,

சிறிதர் தியேட்டரில் இருந்து இயஙகியவர் ( photo ஆதாரமும் இருக்கு)

தன் தங்கையை புலிகள் பலவந்தமாக இறுதி யுத்தத்திற்கு சேர்த்த போது எதிர்த்து கவிதை எழுதியவர்

எழுதி விட்டு புலிகள் அப்படி செய்யவே இல்லை என்பவர் ( அக் கவிதையும் சேமிப்பில் உள்ளது)

இந்தியாவில் கொடுக்கும் பேட்டிகளில் உண்மைகளை திரித்து பதில் அளிப்பவர்.

புனைவை செய்தியாக்கி அதை வியாபாரமாக்கும் வியாபாரி

பொறுக்கிகளின் கடைசி புகலிடம் தேசியவாதம்.

 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.