Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீர கொலை தொடர்பில் விசாரணை செய்யுமா ?

எதிர்ப்பாளர்களின் பார்வையில், விஜேவீர ஒரு சந்தர்ப்பவாதி, அவர் என். சண்முகதாசனின் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளவுபடுத்தி, 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரச அதிகாரத்திற்கு முயற்சித்து தனது சொந்த இராணுவத்தை உருவாக்குவதற்காக அதன் உறுப்பினர்களை இழுத்துக்கொண்டார். சுதந்திரத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட சமூக முறைமையிலிருந்து அவரது அபிமானிகள் மத்தி யில் அவர் ஒரு இலட்சியவாதி, அவர் ஏழை விவசாயிகளையும் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதன் விளிம்புநிலை இளைய பிரிவினரையும் அணிதிரட்டியவர்  .”

டி .பி .எஸ் . ஜெயராஜ்

ஜே.வி.பி யினால் ஏற்பட்ட வன்முறையின் பாரிய தன்மை மற்றும் ஜே.வி.பி தலைவர்ரோஹண விஜேவீர மீது பொலிசார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மத்தியில் கொதித்துக்கொண்டிருந்த  கோபம் ஆகியவற்றின் அடிப்படையில்அவர் கொல்லப்பட்டதாகபரவலாக நம்பப்பட்டது அது தொடர்பாக , “உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட உத்தியோகபூர்வமற்ற மரணதண்டனை” என்ற ‘இடக்கரடக்கல்’ சொற்றொடர் பிர யோகப்படுத்தப்பட்டிருந்தது.

ரோகண விஜேவீர 35 வருடங்களுக்கு முன்னர் 1989 நவம்பர் 13 இல் கொல்லப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சித் தலைவர் இறக்கும் போது அவருக்கு வயது 46ஆகும் . 1971 மற்றும் 1987 முதல் 89 வரையான இரண்டு இரத்தக்களரி கிளர்ச்சிகளின் மூளையாக செயற்பட் டவராககருதப்பட்டவர்   நவம்பர் 12 அன்று கண்டி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விஜேவீரவின் கைது  மற்றும் மரணத்துடன் இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சி படிப்படியாக முடிவுக்கு வந்தது.

தமிழில் மக்கள் விடுதலை முன்னணி என்று அழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுன வைப் பொறுத்த வரையில் நவம்பர் 13 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திகதி யாகும். 1989 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவர் ரோஹண   விஜேவீர கொல்லப்பட்டார். விஜேவீர மற்றும் 1971 மற்றும் 1987-89 ஆகிய இரண்டு கிளர்ச்சிகளில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஜே.வி.பி காரர்களின் வாழ்க்கையை நினைவுகூரும் நிகழ்வை 1994 முதல் ஜே.வி.பி ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. ” மஹா விரு சமருவ” எனப்படும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வானது உரைகள் மற்றும் பாடல்களின் கலவையாகும்.

இந்த வருடம் ரோஹண  விஜேவீர என அழைக்கப்படும் படபெந்தி டொன் ஜினதாச நந்தசிறி விஜேவீரவின் 35 ஆவது நினைவு தினமாகும் .. ஜே.வி.பி.யின் நினைவேந்தல் நிகழ்வு இந்த வருடம் நவம்பர் 15 ஆம் திகதி நடைபெற்றது. ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரி ல்வின் சில்வா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி தேர்தல்  மற்றும் பாரா ளுமன்றத் தேர்தல்களின் மூலம் கட்சி முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியதால், இது ஒரு புனிதமான நிகழ்வாக இருந்தாலும்,  பண்டிகை  உவகை நிலவியது.

இந்த நினைவேந்தலில் ரி ல்வின் சில்வா நீண்ட நேரம் உரையாற்றினார். “தியாகி” தலைவர் ரோஹண  விஜேவீரவைப் பற்றிய பல பிரகாசமான  குறிப்புகளுடன் ஜே.வி.பியின் பரிணாம  வளர்ச்சியை அவர் சுருக்கமாகக் கண்டறிந்தார். நசுக்கப்பட்ட இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சியின் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல் எழுந்த கட்சி மற்றும் அதன் பின்னர் அதன் வெற்றிகரமான அரசியல் மறுமலர்ச்சி பற்றி பேசிய ரி ல்வின், “நாம் காலத்திற்கு ஏற்ப உள்ளீர்த்துக்கொண்ட  ஒரு அரசியல் கட்சி… பிடிவாதமானவர்கள் , மாறாதவர்கள் , தப்பிப்பிழைக்க மாட் டார்கள் .”என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அண்மைக் காலங்களில் ரோஹண  விஜேவீர மற்றும் ஏனைய ஜே.வி.பி உறுப்பினர்களின் மரணம் மற்றுமொரு தரப்பினராலும் நினைவுகூரப்பட்டது. சிங்களத்தில் பேரதுகாமி சமாஜவாதி கட்சி என்றும் தமிழில் முன்னிலை சோசலிசக் கட்சி என்றும் அழைக்கப்படும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி (எவ்எஸ் பி  ) ஜே.வி.பி யிலிருந்து  பிரிந்த அதிருப்தியாளர்கள்  குழுவாகும். ஏப்ரல் 2012ஏப்ரலில்  ஆரம்பிக்கப்பட்டது .அதன் செயலாளர் நாயகம் பிரேமகுமார் குணரத்னம் என்ற நோயல் முதலிகே மற்றும் குமார்/குமார வால் வழிநடத்தப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியும்  தனது மறைந்த தலைவர் மற்றும் தோழர்களை ஆண்டுதோறும் “11 மஹா விரு சமருவ” நிகழ்வின் மூலம் நினைவு கூர்கிறது.

முன்னிலை  சோசலிசகட்சி   நவம்பர் 11 அன்று அதன் நினைவேந்தலை நடத்தியது. அதன் செயலாளர் குமார் குணரட் ண ம் இந்த நிகழ்வில் தனது உரையில் ஒரு தெளிவான அழைப்பை விடுத்தார். 1987-1989 கிளர்ச்சியில் உயிர் இழந்த ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு அவர்களின் முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீர உட்பட நீதி வழங்குமாறு தனது முன்னாள் தோழர் ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்கவிடம்  அழைப்பு விடுத்தார். நவம்பர் 12 அன்று “டெய்லி எவ் டி”யில் வெளியிடப்பட்ட செய்தியிலிருந்து சில தொடர்புடைய பகுதிகள் இங்கே:
”கொழும்பில் நேற்று நடைபெற்ற எவ் எஸ் பி யின் வருடாந்த நவம்பர் மாவீரர் நினைவேந்தலில் பேசிய குணரட்ணம், ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கும் ஜேவிபியின் தற்போதைய தலைவரும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 1987-1989  கிளர்ச்சிகாலப்பகுதியில் கொல்லப்பட்ட ஜே.வி.பி உறுப்பினர்களின் மரணங்களை விசாரிக்கும் கணிசமான பொறுப்பை கட்சி கொண்டுள்ளது.

“இன்று 35வதுமகாவீரர் நினைவேந்தலைக் குறிக்கிறது. 1988-1989 காலகட்டத்தில், நீதிக்காக குரல் எழுப்பிய ஒரு முழு தலைமுறையும் கொல்லப்பட்டது. தோழர்கள் ரோஹண  விஜேவீர மற்றும் உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட 60,000 க்கும் மேற்பட்ட தோழர்கள் உயிரிழந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் இப்போது அதிகாரத்தை வைத்திருக்கும்தேசிய மக்கள் சக்தியின்  பிரதான அரசியல் கட்சியான ஜேவிபியின் இலட்சியத்திற்காக நின்றவர்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

எனவே, 35வது நினைவேந்தல் வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும் என்றார்.
1987-1989 கிளர்ச்சியின் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை  உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகுமெனகுறிப்பிட்டு மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக குணரட்னம் ஒப்பிட்டார்.

“கடுமையான   தியாகத்தில் தங்கள் உயிரைக் கொடுத்த அனைவருக்மான  நீதிக்காக மக்கள் இன்னும் ஏங்குகிறார்கள். ஜே.வி.பி.யை ஆட்சிக்கு கொண்டு வர தம்மை அர்ப்பணித்த ஜே.வி.பி உறுப்பினர்களின் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இது 1988-89 காலகட்டத்தில் முழுமையான விசாரணையை நடத்துவதற்கும், மனித குலத்திற்கு எதிரான இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பான அனைவரையும் பொறுப்பேற்கச் செய்வதற்கும் முந்தைய நிர்வாகங்களை விட என் பி பி அரசாங்கத்திற்கு அதிக தார்மீகப் பொறுப்பையும் அதிகாரத்தையும் வழங்குகிறது.முன்னிலை சோசலிஸ்ட்  கட்சி  என்ற வகையில் ஜனாதிபதி திஸாநாயக்க இந்தப் பொறுப்பை ஏற்பார் என  நாங்கள் நம்புகிறோம்,” என்ரூ அவர் கூறியிருந்தார்.

இந்த முயற்சிக்காக  தேவையான எந்தவொரு ஆதரவையும் வழங்க எவ் எஸ் பி  தயாராக இருப்பதாகவும் குணரட்ண ம் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்த குழுவான குணரட்ண த்தின் கட்சியும் இந்த வார தொடக்கத்தில் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு விடுத்த அறிக்கையில் இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியது. 1988-89 காலப்பகுதியில் அரச அனுமதி பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும், ரோஹண விஜேவீர உட்பட உயிரிழந்த ஜேவிபி மாவீரர்களின் உயிர்களுக்கு நீதி வழங்குமாறும் ஜனாதிபதியிடம் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

சோசலிச மாற்றத்திற்கான போராட்டத்தில் உயிர்நீத்த ரோஹண  விஜேவீர மற்றும் ஏனையோருக்குஎவ் எஸ் பி  அஞ்சலி செலுத்தியது, அந்தக் காலப்பகுதியில் “அரச பயங்கரவாதத்தின்” ஊடாக நடத்தப்பட்ட கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போதல்கள் மற்றும் சட்டவிரோத கொலைகளை முன்னிலைப்படுத்தியதுடன்  இந்த அட்டூழியங்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டியதன் முக்கியத்துவத்தையும்  எவ் எஸ் பி .கோடிட்டுக் காட்டியது.

ஜே.வி.பி.யின் தலைவர் தற்போது ஜனாதிபதியாக பதவியில் இருப்பதால், ரோஹண  விஜேவீர மற்றும் பிறரின் மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தி, முன்னுரிமை அளிக்கும் வகையில் விரிவான விசாரணைக்கு முன்னிலை சோசலிசகட்சி   வலியுறுத்தியுள்ளது.

பொதுவாக ஜே.வி.பி காரர்களின் மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் மற்றும் குறிப்பாக ரோஹண  விஜேவீர உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களின் மரணங்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மு.ச.க தலைவர் குமார் குணரட்ணம்   கூறியிருப்பது, ஜே.வி.பி.யின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களின் இதயங்களிலும் பதிலுக்கான தாக்கத்தை  கொடுக்கும். இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சிநசுக்கப்பட்டபோது  தப்பிய அநு ரகுமார திஸாநாயக்க, விஜித ஹேரத் மற்றும் ரி ல்வின் சில்வா போன்ற மூத்தவர்களுக்கு இது நிச்சயமாக எதிரொலிக்கும்.

மேலும், அரச முகவர்களால் மனித குலத்திற்கு எதிரான அந்த கொடூரமான குற்றங்களை நேரில் பார்த்தவர்கள், அந்த காலத்தில் ஜே.வி.பி.யும் பல அட்டூழியங்களுக்கு காரணமாக இருந்த போதிலும், உண்மை வெளிவர வேண்டும் என்று விரும்புகிகிறார்கள்.

ஜே.வி.பி இப்போது ஆட்சியில் உள்ளது, எனவே கடந்த கால சம்பவங்களை ஆராய்வதற்கான சரியான பொறிமுறையை அமைக்க முடியும் என்ற குமார் குணரட்ண த்தின் கருத்து தர்க்கரீதியானது. மேலும் தனிப்பட்ட கோணத்திலும் அதனைபார்க்க  முடியும்  , ஏனெனில் அந்த இருண்ட நாட்களில் “காணாமல் போனதாக” அறிவிக்கப்பட்ட பல இளைஞர்களில் பிரேம் குமாரின் மூத்த சகோதரர் ரஞ்சிதன் குணரட்ண மும் இருக்கிறார்.

ரி ல்வின் சில்வா

உண்மை வெளிவருவதற்கு ஜே.வி.பியின் கண்ணோட்டத்தில் இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. 16 நவம்பர் 2024 இன் “தி இந்து” நாளிதழில் வெளியான ஜேவிபிபொதுச்செயலாளர்  ரி ல் வின்  சில்வாவுடனான நேர்காணலில், பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீநிவாசன் பின்வருமாறு எழுதினார்:

“இருப்பினும், . சில்வா கட்சியின் வரலாற்றை சூழலுடன் மீண்டும் கூற வேண்டும் என்று வாதிட்டார். “எ ம்மை தோற்கடித்தவர்களால், வெற்றி பெற்றவர்களால் எழுதப்பட்டதே எ மது வரலாறு என்பதால் தவறான கருத்து உள்ளது. எங்கள் பாதை விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அது எங்கள் மீது கட்டாயப்படுத்தப்பட்டது. ஜே.வி.பி எதிர்கொள்ளும் மிருகத்தனமான வன்முறை குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி, அவர் மேலும் கூறியதாவது: “இது [எங்கள்] நடவடிக்கை அல்ல, மாறாக எங்கள் முடிவில் இருந்து வந்த எதிர்வினை. [அரசின்] அடக்குமுறை ஆயுதம் ஏந்தியிருந்தால், [எங்கள்] பதிலும் அவ்வாறே இருந்தது.

அவரது (ரி ல்வின்) பார்வையில், இலங்கையின் தற்போதைய அரசியல் தருணம், “சிலரை காரணமின்றி ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் என்று சித்தரிக்காமல்” கட்சி மட்டுமல்ல, நாட்டின் கதையையும் மீண்டும் எழுதுவதற்கான இடத்தைத் திறந்துள்ளது. “ஆனால் நாங்கள் இந்த கதையை வார்த்தைகளால் அல்ல, ஆனால் எங்கள் செயலால் சொல்ல விரும்புகிறோம். தற்போதைய சூழல் அதற்கான வாய்ப்பை அளிக்கிறது.

உண்மை எ ம்மை விடுவிக்கும்

ஜே.வி.பி.யின் கண்ணோட்டத்தில் வரலாறு முன்வைக்கப்படுவது குறித்து ரி ல்வின் சில்வா உண்மையிலேயே தீவிரமானவராக இருந்தால் மற்றும் ஜே.வி.பி.யின் உண்மைக் கதையில் கட்சியின் பொதுச் செயலாளருக்கு உண்மையான ஆர்வம் இருந்தால், விஜேவீர மற்றும் ஏனைய ஜே.வி.பி.காரர்களின் கொலைகள் தொடர்பில் தீவிர விசாரணை மிகவும் அவசியமாகும். ஜே.வி.பி.யை வெள்ளையடிக்கவோ, அரசின் பிரதிமையை   கெடுக்கவோ முயலாமல் உண்மையை வெளிக்கொணரும் வகையில் விசாரணை சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும்.  அது உண்மையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும், ஏனென்றால் இறுதியில் உண்மை மட்டுமே “எ ம் அனைவரையும் விடுவிக்கும்”

இந்தப் பின்னணியில்தான், ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவர் விஜேவீர இறந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கொல்லப்பட்டதை முந்தைய எழுத்துக்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் உதவியுடன் இந்தப் பத்தி கவனம் செலுத்துகிறது.

ரோகண விஜேவீர 35 வருடங்களுக்கு முன்னர் 1989 நவம்பர் 13 இல் கொல்லப்பட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் புரட்சித் தலைவர் இறக்கும் போது அவருக்கு வயது 46. 1971 மற்றும் 1987 முதல் 89 வரையான இரண்டு இரத்தக்களரி கிளர்ச்சிகளின் மூளையாக இருந்தவர் நவம்பர் 12 அன்று கண்டி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார். விஜேவீரவின் பிடி மற்றும் மரணத்துடன் இரண்டாவது ஜே.வி.பி கிளர்ச்சி படிப்படியாக வெளியேறி முடிவுக்கு வந்தது.

சுமார் மூன்று வருடங்களாக நீடித்த ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் விளைவாக ஆயிரக்கணக்கான மக்கள் ஜே.வி.பி மற்றும் பொலிஸ், துணை இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய எதிர் கிளர்ச்சிப் படைகளால் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இத்தனை குழப்பங்களும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், ஜே.வி.பி.யின் அதியுயர் புரட்சித் தலைவர், நிமல் கீர்த்திசிறி அத்தநாயக்க என்ற தோட்டக்காரராகக்தன்னை  காட்டிக் கொண்டு கண்டி உலப்பனையில் தனது குடும்பம் மற்றும் இரண்டு வேலையாட்களுடன் வசதியாக வாழ்ந்து வந்தார்.

“உத்தியோக பூர்வ மாக அனுமதிக்கப்பட்ட அதிகாரபூர்வமற்ற மரணதண்டனை”
ஜே.வி.பி யினால் ஏற்பட்ட வன்முறையின் பாரிய தன்மை மற்றும் ஜே.வி.பி தலைவர்ரோஹண விஜேவீர மீது பொலிசார் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மத்தியில் கொதித்துக்கொண்டிருந்த  கோபம் ஆகியவற்றின் அடிப்படையில்அவர் கொல்லப்பட்டதாகபரவலாக நம்பப்பட்டது அது தொடர்பாக , “உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்பட்ட உத்தியோகபூர்வமற்ற மரணதண்டனை” என்ற ‘இடக்கரடக்கல்’ சொற்றொடர் பிர யோ கப்படுத்தப்பட்டிருந்தது.

உத்தியோகபூர்வ பதிவானது ,   விஜேவீர மற்றும் மற்றொரு சிரேஷ்ட  ஜே.வி.பி தலைவர் எச்.பி. ஹேரத் ஆகிய இருவரும் சில ஆவணங்களைத் தேடி ஜே.வி.பியின் இரகசிய அலுவலகமாகப் பயன்படுத்தப்பட் ட  கொழும்பின்  புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர் . ஹேரத் சில ஆவணங்களை எடுப்பது போல் பாசாங்கு செய்து விஜேவீரவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது பாதுகாப்புப் படையினர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவை தகனம் செய்யப்பட்டன.

ஜே.வி.பி.யின் வன்முறை மற்றும் எதிர் வன்முறைச் சூழலில் இலங்கை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது  விஜேவீரவின் மரணச் செய்தியில் பெரிதும் நிம்மதியடைந்தது. அப்போது நிலவிய சூழ்நிலையில், உத்தியோகபூர்வ பதிவுடன்  அமைதியாக செல்வதற்கு  நாடு மிகவும் தயாராக இருந்தது. தனிப்பட்ட ரீதியில்  வெகு சிலரேஅதனை  நம்பினர். இவ்வாறான சூழ்நிலைகளில் வழமை போல் வதந்திகள் அதிக காலம்  வேலை செய்தன மற்றும் ரோஹண  விஜேவீரவின்இறுதிக்கட்டம்  பற்றிய பல கதைகள் பரவ ஆரம்பித்தன.

விஜேவீர கொழும்பு கோல்ப் மைதான வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தியாகும் . ஜே.வி.பி.யால் குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட  பொலிஸ்  அதிகாரி ஒருவர்,சிரேஷ்ட  ராணுவ அதிகாரிகள் பார்த்துக்கொண்டிருக்க  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், இருவரது உடல்களும் மயானத்தில்  இரவில் எரிக்கப்பட்டன. இந்த கொடூரமான தகனத்தின் போது விஜேவீர முழுமையாக இறக்கவில்லை என்ற கதை இந்த பதிப்பில் ஒரு பயங்கரமான திருப்பமாக இருந்தது.

சரத் முனசிங்கவின் பதிவு

ரோஹண  விஜேவீரவின் இறுதிக் கட்டம் குறித்து உத்தியோகபூர்வமாக நேரில் கண்ட சாட்சியங்கள் எதுவும் இல்லை. ரோஹண  விஜேவீரவின் வாழ்வில் பொது வெளியில் அவர் இறப்பதற்கு முந்தைய சில மணிநேரங்கள் தொடர்பான உண்மையான பதிவு  ஒன்று உள்ளது. மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க தனது சுயசரிதை நூலான “ஒரு சிப்பாயின் கதை”யில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்புடைய பகுதிகள் கீழே மீண்டும் உருவாக்கப்படுகின்றன:
“நேரம் 11.30 மணி. நாங்கள் (லயனல் பலகல்ல மற்றும் சரத் முனசிங்க) ‘நடவடிக்கை க்கான கூட்டு  த்  தலைமையகத்தின் ’ வளாகத்தை அடைந்தோம். ரோஹண  விஜேவீர அமர்ந்திருந்த மாநாட்டு மேசைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எனக்கு மேசைக்கு குறுக்காக  விஜேவீரவுக்கு எதிரே ஒரு நாற்காலி வழங்கப்பட்டது. நான் அவருடன் உரையாடத் தொடங்கினேன். நான் ரோஹண  விஜேவீரவிடம் நீண்ட நேரம் பேசினேன்.

“நான் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டபோதெல்லாம் அவர் சிங்களத்தில் பதிலளித்தார். உண்மையில், எனக்கு ரஷ்ய மொழி தெரியுமா என்று கேட்டார். நான் இல்லையென   பதிலளித்தேன். ரோஹண  விஜேவீர தனது இரண்டாவது மொழி ரஷ்ய மொழி என்று என்னிடம் கூறினார். ஆரம்பத்தில் பண்டாரவளையிலும் பின்னர் கண்டி உலப்பனையிலும் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கூறினார். ஜே.வி.பி.யின் செயற்பாடுகள் குறித்து பேசுவதற்கு அவர் தயங்கினார்”.

“நள்ளிரவுக்குப் பிறகு, பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ரஞ்சன் விஜேரத்ன உள்ளே சென்று மாநாட்டு மேசையின் தலைமைநாற்காலியில்   அமர்ந்தார். ஜெனரல் விஜேரத்ன சில கேள்விகளைக் கேட்டார், ஆனால் ரோஹண  விஜேவீர பதிலளிக்கவில்லை.

“நாங்கள் எங்கள் உரையாடலைத் தொடர்ந்தோம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது பல கோப்பை  சாதாரண தேநீர்  பருகினோம் . வன்முறையில் ஈடுபடாமல் இருக்குமாறு அவரது உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு ரோஹண  விஜேவீரவிடம் கோரிக்கை விடுத்தேன். வற்புறுத்தலுக்குப் பிறகு ஒப்புக்கொண்டார். எனவே அவரது வார்த்தைகளையும் அவரது படத்தையும்  க மராவில் பதிவு செய்ய முடிந்தது.

“நேரம் 1989 நவம்பர் 13 அதிகாலை 3.45 மணி. விசாரணையை முடித்துக்கொண்டு ரோஹண  விஜேவீரவை கீழே அழைத்துச் செல்லுமாறு  எனக்குத் தெரிவிக்கப்பட்டது. கீழே ஒன்றாக நாங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகநடந்து  சென்றோம் . விஜேவீர என் கையைப் பிடித்துக் கொண்டு, ‘கடைசித் தருணத்திலும் உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இனி வாழாமல் இருக்கலாம். தயவு செய்து எனது செய்தியை என் மனைவிக்கு தெரிவிக்கவும்என்று கூறினார்  ரோஹண  விஜேவீரவின் செய்தியில் ஐந்து முக்கிய விடயங்கள் அடங்கியிருந்தன. அவை அனைத்தும் அவரது குடும்பத்தைப் பற்றிய தனிப்பட்ட விட யங்கள்.

“சில நிமிடங்களுக்குப் பிறகு, விஜேவீர கண்கல் கட்டப்பட்டு   பச்சை பஜேரோவின் பின் இருக்கையில் ஏற உதயளிக்கப்பட்டது . விஜேவீரவின் இருபுறமும் இருவர் அமர்ந்திருந்தனர். காரின் பின்பகுதியில் மற்றவர்கள் இருந்தனர். பஜெரோ புறப்பட்டது. நடவடிக்கை கூட்டுதலைமையக    கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நின்றிருந்த கேணல் லயனல் பலகல்லவுடன் நான் சேர்ந்தேன். நல்ல தூக்கத்தை  நினைத்துக்கொண்டு வீட்டுக்குப் போனோம்.

“காலையில் விஜேவீரவின் புகைப்படத்தை அச்சிடுவதில் நான் மும்முரமாக இருந்தேன். தாடி இல்லாமல் விஜேவீரவை யாரும் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள். எனவே நான் உதவியை நாட வேண்டியிருந்தது மற்றும் விஜேவீரவின் புகைப்படத்தில் தாடியை சேர்க்க வேண்டியிருந்தது. அது மிகவும் சிறப்பாக செய்யப்பட்டது. பிற்பகலில் கூட்டு நடவடிக்கைக் தலைமையகத்தில்  செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“விஜேவீர மற்றும் எச்.பி. ஹேரத் [மற்றொரு ஜே.வி.பி தலைவர்] கொழும்பிற்கு வெளியே உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு ஜே.வி.பி. அவர்களின் பொக்கிஷத்தின் ஒரு பகுதியை மறைத்து வைத்திருந்தது. தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்த போது, ஹேரத் துப்பாக்கியை எடுத்து விஜேவீரவை சுட்டுக் கொன்றார்.என்று  அமைச்சர் மேலும் விவரங்களைத் தெரிவித்தார். விஜேவீரவின் கொலையைத் தொடர்ந்து, ஜே.வி.பியின் வன்முறைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு தவிர்ந்த நாட்டின் ஏனையபகுதியில்  அமைதி நிலவியது.
ஜெனரல் முனசிங்கவின் பதிவு , விஜேவீரவின் வாழ்க்கையின் இறுதிக் கட்டங்களை ஓரளவு விவரிக்கிறது, ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய விவரங்களை வெளியிடுவதில் அமைச்சர் விஜேரத்னவின் செய்தியாளர் மாநாட்டைச் சார்ந்திருக்கிறது. முனசிங்க அந்தப் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபடாத காரணத்தினால், விஜேவீர எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது பற்றிய தகவல்களும் குறைவாகவே உள்ளன.

உலப்பன வில் ரோகண கைதானார்

ரோஹண  விஜேவீர பிடிபடுவதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் பற்றிய சுருக்கமான ஆனால் துல்லியமான விளக்கத்தை ஊடகவியலாளரும் எழுத்தாளருமான சி.ஏ. சந்திரபெரும  வின்  “இலங்கை  :பயங்கரமானஆண்டுகள்  – 1987-1989ஜே. வி . பி கிளர்ச்சி ” என்ற புத்தகத்தில்உள்ள தொடர்புடைய பகுதிகள் வருமாறு :

“பியதாச ரணசிங்க மற்றும் எச் பி ஹேரத் ஆகியோர் கலஹாவில் கைது செய்யப்பட்டனர். இந்த இரண்டு ஜே.வி.பி தலைவர்களும் ரோஹண  விஜேவீரவை அடிக்கடி சந்தித்தனர். சிறிது நேர விசாரணையின் பின்னர் விஜேவீரவின் இருப்பிடத்தை ஹேரத் தெரிவித்திருந்தார். சில மணித்தியாலங்களின் பின்னர், கண்டி உலப்பன வில், விஜேவீர, அத்தநாயக்க என்ற பெயரில் தோட்டஉரிமையாளராக  மாறுவேடமிட்டு, அவர் வசித்த  தோட்ட பங்களாவில் கைது செய்யப்பட்டார்.

“பிற்பகல் 2 மணியளவில் தரப்பினர்  சென்றபோது போது, விஜேவீர சவரம் செய்துகொண்டிருந்தார் . இராணுவக் குழு ஒரு வாசலில்   ஏறி வீட்டைச் சுற்றி வளைத்தது. விஜேவீர, “நான் அத்தநாயக்க, இங்கு வர உங்களுக்கு உரிமையில்லை. நான் அமைதியை விரும்பும் மனிதன்.” என்றுகூறினார்
“விஜேவீரவின் நம்பிக்கையானகூற்றினால்   கேர்ணல் .ஜானக பெரேரா குழம்பிப்போய், அவர்கள் தவறான இடத்திற்கு வந்துவிட்டதாக நினைத்தார். அப்போதும் அவர் தனது கைத்துப்பாக்கியை மெல்ல மெல்ல அத்தநாயக்கவின் தலையில் வைத்துவிட்டு, “ஓயா விஜேவீர?” என்று கேட்டார்.

“அத்தநாயக்க”, கேர்ணல்  சுட்டு விடுவார் என்று பயந்து, தான் விஜேவீர என்று ஒப்புக்கொண்டார், மேலும் “நான் உங்களுடன்  வருவேன், ஆனால் என் குடும்பத்திற்கு தீங்கு செய்யவேண்டாம்”என்றுகூறினார் ர்   . வீட்டில் விஜேவீரவின் மனைவியைத் தவிர இரண்டு பெண் வேலைக்காரர்கள் இருந்தார்கள், விஜேவீர வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது எல்லாப் பெண்களும் புலம்பத் தொடங்கினர்.

பின்னர்  ரோஹண  விஜேவீர கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஜே.வி.பி தலைமையிலான-என்.பி.பி அரசாங்கம் விஜேவீரவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடுவார் மற்றும் அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றிய நம்பகமான தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார்.    என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2004 ஆம் ஆண்டு ஜே.வி.பி தலைவர் ரோஹண விஜேவீரவின்  15வது நினைவு தினத்தை முன்னிட்டு,ரெஜி சிறிவர்தனவினால்”இரங்கல் செய்தியாளர்களின்இளவரசர்”  என்று வர்ணிக்கப்பட்டபிரபல ஊடகவியலாளர் அஜித் சமரநாயக்க எழுதிய அவரது ஞாயிற்று க்கிழமை     கட்டுரையின் ஒரு பகுதியுடன்  நிறைவு செய்கிறேன் .

அஜித் சமரநாயக்க வின் கட்டுரை

“ரோஹண விஜேவீர 46 வயதில் கொல்லப்பட்டபோது, நாட்டின் வாழ்வில்  அவரது வகிபாகம்  பற்றி இலங்கையில் எந்த வொரு அரசியல் தலைவரும் இவ்வளவுக்கு  கூர்மையான மற்றும் முரண்பட்ட கருத்துக்களை உருவாக்கவில்லை.

நடைமுறை  நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்காகஇலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான  உயரடுக்குதாங்கள்  முதலாளித்துவவாதியாக , தாராளவாதியாக  அல்லது மார்க்சியவாதியாகஇருந்தாலும்நடைமுறை  நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்காக    கருத்தொருமைப்பாட்டை  கொண்டிருந்த  நிலையில் அவரது சொந்தக் கண்ணோட்டத்தில் விஜேவீர கவனமாக திட்டம் தீட்டி  குழப்ப முயன்றார்.

“வலது மற்றும் மரபுவழி இடது இரண்டிற்கும் அவர் பிசாசாக அவதாரம் எடுத்தார், ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர் ஒரு  கடவுள். விஜேவீரவே இந்த பாத்திரத்தில் மிகவும் மகிழ்ந்தார்.  தாடியுடன், அவரது அனல்கக்கும்  பேச்சுக்களுடன், அவர் காலத்தின் அரசியல் பரப்பின் ஒரு பகுதியாக இருந்தார், இலங்கையின் வளம்குன்றிய  அரசியல் அரங்கில் தீங்கான காரணத்திற்காக வாதாடுபவர்  முதல் ஜனாதிபதி வேட்பாளர் வரையிலான அனைத்து பாத்திரங்களையும் வகித்தார்.

“அவரது எதிர்ப்பாளர்களின் பார்வையில், விஜேவீர ஒரு சந்தர்ப்பவாதி, அவர் என். சண்முகதாசனின் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பிளவுபடுத்தி, 1971 ஆம் ஆண்டு ஏப்ரலில் அரச அதிகாரத்திற்கு முயற்சித்து தனது சொந்த இராணுவத்தை உருவாக்குவதற்காக அதன் உறுப்பினர்களை இழுத்துக்கொண்டார். சுதந்திரத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட சமூக முறைமையிலிருந்து அவரது அபிமானிகள் மத்தி யில் அவர் ஒரு இலட்சியவாதி, அவர் ஏழை விவசாயிகளையும் குறிப்பாக ஒதுக்கப்பட்ட அதன் விளிம்புநிலை இளைய பிரிவினரையும் அணிதிரட்டியவர்  .”

எந்தக் கருத்து யதார்த்தத்துக்கு அதிகளவுக்கு ஏறத்தாழ  பொருந்தும் ?

”சிலசமயம் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் சந்தர்ப்பவாதத்தின் ஒரு அம்சம் இருக்கலாம் மற்றும் அரசியல் என்பது சந்தர்ப்பவாதம் மற்றும் இலட்சியவாதத்தின் கலவையாகும். பாராளுமன்ற  தேர்தல்  மார்க்கத்தினூடாக  மட்டுமே  இலக்கை  அடைவதற்கான திருக்குருதிக்கலத்தை [இயேசுநாதர் இறுதிஉணவு வட்டில்   ]கொண்டுசெல்வதென  சுதந்திரத்துக்கு  பின்னரான  காலகட்டத்தில்  இடது சாரிகளுக்கும்  வலதுசாரிகளுக்குமிடையிலான கருத்தொருமைப்பா ட்டு   அரணினால் பாதுகாக்கப்பட்ட இலங்கை அரசின்மீது   மூன்று தசாப் தத்திற்குள் இருதடவை  தாக்குதல் நடத்தியதன் அ டிப்படையில் அவரது காலகட்டத்தில்  ரோஹண விஜேவீர அதிகளவுக்கு துணிச்சலான அரசியல் வாதி என  கூறப்பட்டது

பினான்சியல் டைம்ஸ்  

 

https://thinakkural.lk/article/313010

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.