Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மாகாண சபை முறை நீக்கப்படாது: மூன்று வருடங்களின் பின்னரே புதிய அரசியலமைப்பு

Oruvan

மாகாண சபை முறைமையை நீக்குவதற்கு எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை எடுக்கவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

மாகாண சபை முறையை நீக்கப்பட உள்ளதாக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, கூறியுள்ள கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயாக இந்தக் கருத்து மாறியுள்ளதால் இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியிடம் விசேட கூற்றொன்றை முன்வைத்து கேள்வியெழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, 

”இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறோம். ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம்.

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் இது விடயமாக ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்திருப்பதார். ஜே.வியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுடன் அன்றி ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்தி தருகிறோம். அதன்போது இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம்.” என்றார். 

இதேவேளை, இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, 

மாகாண சபை முறையை நீக்குவது தொடர்பில் இந்தத் தருணம்வரை அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பை கொண்டுவர மூன்றுவருடங்கள்வரை செல்லும். அதனால் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற முறை தொடர்பில் தமது சிபாரிகளை அனைவரும் முன்வைக்கப்படும். 

புதிய அரசியலமைப்பு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னரே கொண்டுவரப்படும். இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்த போதிய கால அவகாசம் உள்ளது. மாகாண சபை முறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை. 

புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் தருணத்தில் இதுதொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தலாம். மாகாண சபை முறை புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு மேலதிகமான அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதுடன் குறைக்கவும் படாது.” என்றார்.

 

https://oruvan.com/sri-lanka/2024/12/03/provincial-council-system-will-not-be-abolished-new-constitution-only-after-three-years

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாகாண சபை முறை ரத்தா? - சபையில் சாணக்கியன் கேள்வி

மாகாண சபை முறையை இல்லாதொழிக்கப் போவதாக ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன்  நாடாளுமன்றத்தில் இன்று (3) கேள்வி எழுப்பினார்.

ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்கு குறிப்பிட்டிருந்த விடயத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருத வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என  சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க, 

இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பதாகவும் ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம் எனவும் கோரினார். 

அதேநேரம் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்த பிமல் ரத்னாயக்க, 

ஜே.வியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா அன்றி ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்துவதாகவும் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் குறிப்பிட்டார்.

மாகாண சபை முறை ரத்தா? - சபையில் சாணக்கியன் கேள்வி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

புதிய அரசியலமைப்பில் தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு மேலதிகமான அதிகாரங்கள் வழங்கப்படாது என்பதுடன் குறைக்கவும் படாது

எண்டால் 13 முழுமையாக காணி, பொலிஸ் அதிகாரத்துடன் அமல்படுத்த படுமா? ஏன் என்றால் அதுதான் தற்போதைய நிலை.

எனக்கு டில்வின் மூலம் தமிழர்கள் என்ன நிலைப்பாடு என் நூல் விட்டு பார்க்கிறார்கள் போலத்தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என நான் கூறவில்லை: டில்வின் சில்வா விளக்கம்

Oruvan

புதிய அரசியலமைப்பியில் சிறந்த தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படாது. அது தொடர்பில் சகல தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றே நான் கூறினேன் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

மாறாக மாகாண சபை முறை எவ்வித கலந்துரையாடல்களுமின்றி ஒழிக்கப்படும் என நான் ஒருபோதும் கூறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என அண்மையில் அவர் தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்ததாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த செய்தியில், ”தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாகக் கூறிய இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 13ஆவது அரசமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தை ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வந்துள்ளோம். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாகவும் அமைச்சரவையில் கூட அனுமதி பெறாமலுமே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இருப்பினும் அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் அரசமைப்பின் ஊடாக நாட்டில் நடைமறைப்படுத்தப்பட்டுள்ள 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை. மாறாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான சூழலே காணப்படுகின்றது.

எனவே, பயனற்ற மாகாண சபை முறைமைக்குப் பதிலாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேறக்கூடியதும், அனைத்து இன மக்களுக்கும் சமமாக உரிமையைப் பெற்றக்கொள்ளும் வகையிலுமான புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது.

இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் கேட்டறிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து குறுகிய காலங்களே ஆகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டாலும், நிரந்தர தீர்வுகளுக்கான பல நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம்.

நடைமுறையில் உள்ள பழைமை வாய்ந்த அரசமைப்புக்குப் பதிலாக புதிய அரசமைப்பு உருவாக்குவது முக்கிய பொறுப்பாக நாங்கள் கருதுகின்றோம்.

புதிய அரசமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்கும். அப்போது 13ஆவது அரசமைப்பு திருத்தமோ அல்லது மாகாண சபை முறைமைக்கான தேவையோ நாட்டில் இருக்காது." என ரில்வின் சில்வா கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டில்வின் சில்வா,

வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987இல் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தம் தவறியுள்ளது. அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளது. அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13ஆவது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை என்றே நான் கூறினேன்.

மேற்படி புதிய தீர்வுகள் எதிர்காலத்தில் கலந்துரையாடலுக்கு இலக்காக்கப்படுகின்ற அரசியலமைப்பில் உள்ளடக்கப்படும். அந்த தீர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள் மற்றும் முன்மெழிவுகளை அடிப்படையாகக்கொண்டே தயாரிக்கப்படும். எனது செய்தி திரிவுபடுத்தப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.

 

https://oruvan.com/sri-lanka/2024/12/04/i-did-not-say-that-the-13th-amendment-will-be-abolished-tillvn-silva-clarifies



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏராளன் குறிப்பிட்டது போல ஒரு நாள் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வெள்ளை பந்து அதன் அரக்கு முதல் 10 ஓவர்களில் இழக்கப்படுவதால் பந்து காற்றில் திரும்புவது மட்டுப்படுத்தப்படும் 25 ஓவர்களுக்கு மேல் பந்து ரிவர்ஸ் சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், ஆனால் சிவப்பு பந்து 40 ஓவர்கள் வரை அதன் அரக்கு பகுதி காக்கப்படுகிறதாக கூறுகிறார்கள், அத்துடன் பந்தின் கட்டும் உறுதியாக இருக்கும் அதனால் பந்து தரையில் பட்டு ஏற்படும் Seam movement (பந்து எந்த பக்கம் திரும்பும் என கணிப்பது) பந்து வீச்சாளருக்கு சாதகமாக இருக்கும், ஆனால் வெள்ளைப்பந்து பொதுவாக மட்டையாளருக்கு சாதகமாக இருக்கும். இரண்டும் வேறுபட்ட ஆட்டங்கள் என கருதுகிறேன்.   மின்னொளியில் பந்து அதிகமாக சுவிங் ஆகும் என கூறுகிறார்கள், இந்தியாவின் நிலை இலகுவாக இருக்காது. மெல்பேர்னில் நடக்கும் பொக்ஸிங் டே போட்டி ஒரு முக்கிய போட்டியாக இங்கு பார்ப்பார்கள் அதனால் அதனை அவுஸ் வெல்லவே விரும்புவார்கள் கடந்த இரு தொடர்களிலும் இந்தியாவே தொடரை வென்றுள்ளது இந்த தொடரில் சிட்னியில் நடைபெறும் போட்டியே இந்தியா வெல்லும் என முன்பு நினைத்திருந்தேன் முதல் போட்டியிலேயே இந்தியா வென்றுள்ளது ஆனால் சிட்னி மைதானம் பெரிய ஓட்டங்களை குவிக்கலக்கூடிய 3 ஆம்நாளின் பின்னர் சுழற் பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளை முதலில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் துடுப்பெடுத்தாடினால் அந்த அணி வெல்லும், தற்போதுள்ள நிலவரத்தினை பார்த்தால் இந்தியாவினால் சுழற்பந்து வீச்சுக்கூட விளையாட முடியவில்லை, மெல்பேர் சிட்னி இரு நகர்களிலும் பெருமளவு  இந்தியர்கள் உள்ளார்கள் மைதானம் நிறைந்தே காணப்படும். நன்றி ஏராளன், அவுஸ் 3:2 என இந்த தொடரை வென்று இந்த தொடரை இந்தியாவிடமிருந்து கைப்பற்றலாம் என கருதுகிறேன்.
    • இந்தியா ஒரு ஆய்வு கூடம் என்பதில் என்ன சந்தேகம்? பில்கேட்சின் ஆய்வு கூடம் ஆபிரிக்கா அல்லவா?
    • அரசின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றம் 04 DEC, 2024 | 07:03 PM அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் புதன்கிழமை (04) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதம் செவ்வாய்க்கிழமை (03) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், புதன்கிழமை (04)  காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரையும் இரண்டு நாள் விவாதமாக நடைபெற்றது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கடந்த நவம்பர் 21ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/200445
    • 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்: ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகுவான வெற்றி (நெவில் அன்தனி) ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை - இந்திய அணிகள் விளையாடவுள்ளன. முதலாவது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை பங்களாதேஷ் எதிர்த்தாடும். இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தானும் இந்தியாவும் வெற்றிபெற்றதை அடுத்து அரை இறுதிப் போட்டிகளில் எந்தெந்த  அணிகளை   எந்தெந்த  அணிகள்   எதிர்த்தாடும் என்பது தீர்மானிக்கப்பட்டது. எட்டு அணிகள் பங்குபற்றிய 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெற்ற இலங்கையும் ஏ குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தானும் மாத்திரமே தோல்வி அடையாத அணிகளாக அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன. இந்த இரண்டு குழுக்களிலிருந்து முறையே பங்களாதேஷும் இந்தியாவும் தலா ஒரு தோல்வியுடன் அரை இறுதிக்கு முன்னேறின. இந்தியா எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையில் ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஏ குழு போட்டியில் இந்தியா 10 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 44 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது. இதில் முஹம்மத் ரெயான் (36), அக்சத் ராய் (26) ஆகிய இருவரே 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் யூதாஹித் குஹா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 16.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 143 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. வைபவ் சூர்யாவன்ஷி 46 பந்துகளில் 3 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடனும் அயுஷ் முஹாத்ரி 67 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றைய ஏ குழு போட்டியில் ஜப்பானை 180 ஓட்டங்களால் பாகிஸ்தான் மிக இலகுவாக வெற்றிகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. முஹம்மத் ரியாஸுல்லா ஆட்டம் இழக்காமல் 66 ஓட்டங்களைவும் ஷாஹ்பாஸ் கான் 45 ஓட்டங்களையும் பஹாம் உல் ஹக் 34 ஓட்டங்களையும் அஹ்மத் ஹுசெய்ன் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நிஹார் பாமர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்பான் 28.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 63 ஓட்டங்களைப் பெற்றது. நிஹார் பாமர் மாத்திரமே (25) இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். ஜப்பானின் மொத்த எண்ணிக்கையில் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாக 10 உதிரிகள் அமைந்திருந்தது. பந்துவீச்சில் மொஹம்மத் ஹுசெய்வா 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். அரை இறுதிப் போட்டிகள் நாளை  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி ஷார்ஜாவிலும் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி துபாயிலும் நாளை நடைபெறவுள்ளன. https://www.virakesari.lk/article/200446
    • உண்மைதான்…. என்ன செய்வது ஐலண்ட் …..இனி போய் நீலனை கூட்டி வர முடியாது. தலைவரையும் கூட்டி வந்து செய்தது பிழை என ஏற்றுகொள்ளவைக்கம்முடியாது…. இப்படியே எவ்வளவு காலம்தான் மாறி மாறி பழைய கறள் கதைகளை கதைச்சு கொண்டே இருக்க போறம்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.