Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சதுரங்க வேட்டை
-----------------------------
இது கதையில்லை, செய்திதான். ஆனால் கதைகளை மிஞ்சும் செய்தி. இன்றைய டெயிலி மிர்ரரில் இருக்கின்றது.
 
அனுராதபுரத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வயது 70. அவர் தன்னிடம் இருந்த ஒரு டிராக்டரை 29 இலட்சம் ரூபாய்களுக்கு விற்றார்.
 
டிராக்டரை வாங்க வந்தவர்களில் ஒருவர் தான் ஒரு  சோதிடர் என்று அந்தச் செல்வந்தருக்கு சொன்னார். இந்த வீட்டில் உள்ள தோட்டத்தில் ஒரு பெரும் புதையல் புதைக்கப்பட்டு இருப்பதை தன்னால் உணரக்கூடியதாக இருப்பதாகவும், அதை எடுப்பதற்கு தான் அந்தச் செல்வந்தருக்கு உதவுதாகவும் சொன்னார்.
 
சோதிடர் அன்றிரவு யாருக்கும் தெரியாமல் செல்வந்தரின் தோட்டத்தில் சில போலி இரத்தினக்கற்களை புதைத்தார்.
 
அடுத்த நாள் இன்னொருவருடன் அங்கே போனார். அவருடன் கூடப் போனவர் ஒரு பாம்பாட்டி. அவர்கள் ஏற்கனவே ஒரு பாம்பை செல்வந்தரின் தோட்டத்தில் விட்டு வைத்தும் இருந்தனர். அந்தப் பாம்பு தான் புதையலைக் காக்கும் சக்தி என்று செல்வந்தருக்கு சொன்னார்கள்.
 
பின்னர் புதைத்து வைத்திருந்த போலி இரத்தினக்கற்களை எடுத்துக் கொடுத்தனர். அதன் பெறுமதி நான்கு கோடி ரூபாய்கள் என்றனர். சோதிடரின் பங்காக 50 இலட்சம் ரூபாய்கள் கேட்டனர். மிகவும் மகிழ்ந்திருந்த செல்வந்தர் கையில் டிராக்டரை விற்று வைத்திருந்த 29 இலட்சம் ரூபாய்களை அவர்களிடம் கொடுத்து விட்டு, மிகுதியை இரத்தினக்கற்களை விற்ற பின் கொடுப்பதாகச் சொன்னார்.
 
சோதிடர் செல்வந்தரை இரத்தினக்கற்களை ருவான்வெலிசாயவிற்கு எடுத்துப் போய் ஒரு பூஜை செய்யும் படி கேட்டுக்கொண்டார். தான் ஒரு சில நாட்களில் திரும்பி வருவதாகவும் சொன்னார்.
 
போன சோதிடர் போனது தான்.................... அவர் திரும்பி வரவேயில்லை.
 
இரத்தினக்கற்களை ஒரு நகைக்கடைக்காரர் பார்த்து, போலிக் கற்கள் என்று சொன்னார்.
 
அனுராதபுர போலீசார் இப்பொழுது சோதிடரையும், பாம்பாட்டியையும் தேடிக் கொண்டிருக்கின்றார்கள்.
 
கேள்வி என்னவென்றால், இந்த செல்வந்தர் எப்படி 70 வயதுகள் வரை எங்கும் ஏமாறாமல் ஒரு செல்வந்தராகவே இருந்தார் என்பதே.............
 
 
 
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

டிராக்க்டர் விற்ற பெரியவரை யாழ்ப்பாணத்தவராகவும்...மற்ற  இருவரை என்.பி.பி காரராகவும் கற்பனை  செய்து பார்க்கலாமே....என்றாலும்  கொப்பிக்கதை நன்றாக இருக்கு..அச்சுத் தவறாத மொழிபெய்ர்ப்பு

Edited by alvayan
  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.