Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யொஹாணிக்கு வீடு கொடுத்த அரசாங்கம் அகிலத்திருநாயகியை ஏன் கண்டுகொள்ளவில்லை?

ஜனாதிபதியைச் சந்திக்க சாணக்கியனுக்கு சந்தர்ப்பம்!

ஜே.வி.பியன் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க போவதாகப் பத்திரிகைகளுக்குக் குறிப்பிட்டிருந்த விடயத்தை தாம்  தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? எனவும்  இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த   சபை முதல்வர் பிமல் ரத்னநாயக்க  ”இராசமாணிக்கம் சாணக்கியன் மீது மிகுந்த மரியாதை எனக்கு உள்ளது. ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை சபையில் எழுப்ப வேண்டாம்.

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் இது விடயமாக
ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். எனவே நாம் அதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்றோம். ஜே.வியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவை விடுங்கள். நாம் ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்துகின்றோம்.

இந்த விடயம் குறித்து நீங்கள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது சாணக்கியனுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். ஜனாதிபதியுடனான சந்திப்பினை இந்த வாரத்திற்குள் ஒழுங்குபடுத்துகின்றோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1410892

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

 

 

 

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் இது விடயமாக
ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். எனவே நாம் அதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்றோம். ஜே.வியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வாவை விடுங்கள். நாம் ஜனாதிபதியுடன் சந்திப்புக்கு ஒழுங்குபடுத்துகின்றோம்.

 

 

இது நெசமா சார்...அனுரவைச் சந்திக்கமுன் பெர்ய குண்டொன்று ..இன்று வெடிக்கப் போகுதாமே

 

சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

வடக்கில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொண்ட அமைச்சார்கள் யார் யார் என்பது பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakityan) தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் தங்களிடம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு தெரிவித்திருந்தது.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் இதுவரை  அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதி பத்திரங்களி்ல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு (C. V. Vigneswaran) வழங்கப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிலையிலேயே மதுபானசாலை அனுமதி பத்திரம் தொடர்பிலான அறிக்கையை இன்று மாலை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted

 

 

பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தும் அநுர அரசு!

 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.