Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூளாயைச் சேர்ந்த சிறிபானுசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இரண்டு மாணவர்கள் இன்று காலை வகுப்பிற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மறந்துபோய் வீட்டில் விட்டுச் சென்ற பணத்தினை எடுப்பதற்காக திரும்பி வந்துகொண்டிருந்தவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் மதலுடன் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த இரண்டு மாணவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். (ப)

மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் மோட்டார் வாகனத்தில் சென்ற பாடசாலை மாணவன் பலி

யாழ்ப்பாணம் சுழிபுரம் சந்தியில் மோட்டார் வாகனத்தில் சென்ற பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம் (05.12.2024) இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

17 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் மோட்டார் வாகனத்தில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையில், சுழிபுரம் சந்தியில் வாகனம் வேகக்கட்டுபாட்டினை இழந்து மின்சார கம்பத்துடன் மோதிய நிலையில் மாணவன் உயிரிழந்துள்ளார்.

நேயாளர் காவு வண்டி

மோட்டார் வாகனத்தில் உடன் பயணித்த 15 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவர் காயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணித பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார்.

சம்பவம் குறித்து நேரில் கண்டவர்கள் கூறுகையில், 

யாழில் மோட்டார் வாகனத்தில் சென்ற பாடசாலை மாணவன் பலி | School Student Killed In A Motor Vehicle In Jaffna 

“விபத்து ஏற்பட்டவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவரும் கீழே விழுந்திருந்தனர். உடனே '1990' சேவைக்கு அழைத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகியும் நேயாளர் காவு வண்டி வரவில்லை. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு தொடர்பு எடுத்தும் அவர்கள் பல கேள்விகளை வினவினர்.

ஆனால், நோயாளர் காவு வண்டி வரவில்லை. இந்நிலையில், உறவினர்களுக்கு அறிவித்ததன் பின்னர் குறித்த மாணவனின் நண்பர்கள் வந்தனர்.

மேலதிக விசாரணைகள்

இதனையடுத்து, பட்டா ரக வாகனத்தில் மாணவர்களை ஏற்றி சென்றோம்.

எனினும், தீவிர தன்மையை கருத்திற் கொண்டு மூன்றாம் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டபொழுது அங்கு மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அத்துடன், மற்றைய மாணவனை யாழ். போதனா வைத்தியசாலைக்கும் மாற்றினர்.

இதேவேளை, விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்த மோட்டார் வாகனம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் பின்னர் மீட்கப்பட்டது” என குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், சுழிபுரம் சந்தியில் விபத்து நிகழ்ந்ததில் ஒருவர் இறந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/school-student-killed-in-a-motor-vehicle-in-jaffna-1733386473



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.