சிரியாவின் கடற்படை, இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் சரமாரியான தாக்குதல்!
By
தமிழ் சிறி
in உலக நடப்பு
Share
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
SJP இன் தேசியப் பட்டியலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்காமல் ஐக்கிய மக்கள் சகதியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கு பெயர்களை அனுப்புவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. https://athavannews.com/2024/1411921 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
அசாத் சாலியின் கைது சட்ட விரோதமானது – உயர் நீதிமன்றம்! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் 2021 ஆம் ஆண்டு மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் நட்டஈடாக பிரதிவாதிகள் 75,000 ரூபா செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதிவாதிகளில் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஆகியோர் அடங்குவர். ஆசாத் சாலி 2021 மார்ச் 9 அன்று செய்தியாளர் சந்திப்பில் மதங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டுக்காக 2021 மார்ச் 16 அன்று கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் தடுப்புக்காவலில் இருந்த பின்னர், 2021 டிசம்பர் 2 அன்று கொழும்பு மேல் நீதிமன்றினால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். https://athavannews.com/2024/1411937 -
By kandiah Thillaivinayagalingam · பதியப்பட்டது
"கனவு மெய்ப்படும்" / பாரதியாரின் நினைவாக, அவர் விரும்பிய தலையங்கத்தில் ஒரு சிறுகதை [நினைவிடத்தில் உள்ள கல் பலகை மற்றும் அவரது இறப்புச் சான்றிதழில் உள்ள தகவல்களின்படி, தமிழ்க் கவிஞர் செப்டம்பர் 12 ஆம் தேதி காலமானார். ஆனால், மாநில அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியை 'மகாகவி தினமாக' அறிவித்தது.] "மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;" [பாரதியார்] கனவுகளின் அடித்தளம் விருப்பத்தின் விளைவு என்பது உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் பிராய்டு [Sigmund Freud] என்பாரின் கருத்து ஆகும். உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒவ்வொரு வகையில் கனவு காண்கின்றனர். அதை நனவாக மாற்றும் அவர்களின் பெரும் முயற்சியில் சில வெற்றி பெறும், சில கருத்துக்களாக மட்டுமே இருந்து விடும், சில மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும், சில பாதிப்பதே தெரியாமல் சூழலை சிதைத்துக் கொண்டே வரும். எப்படியிருப்பினும், கற்பனைகள், கனவுகள் உருவம் பெறுகையில் எழும் உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்கி விடாது. அப்படியான ஒன்றில் தான் நான் இன்று மகிழ்வாக, நான் கனவு கண்டவளை, நாம் இருவரும் கனவு கண்ட புத்தக கடைக்கு முன், கைபிடித்து நிற்கிறேன். யாழ்ப்பாண மாவடடத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நான் அன்று என் பெற்றோர்கள், சகோதரர்களுடன் வசித்து வந்தேன். எங்கள் பக்கத்து வீட்டில் மாயா என்ற குறும்புக்கார அழகிய பெண் இருந்தாள். அவர்களின் குடும்பம் ஒரு சிறிய குடும்பம். அவளுக்கு ஒரு தங்கை மட்டுமே இருந்தாள், தந்தை யாழ்ப்பாண கச்சரியில் ஒரு அதிகாரியாக இருந்தார். மாயாவும் நானும் ஒரே பாடசாலையில் கல்வி கற்றதாலும் பக்கத்து வீடு என்பதாலும் எண்ணற்ற நினைவுகளையும் கனவுகளையும் பகிர்ந்துகொண்டு குழந்தைப் பருவம் தொடக்கம் [பால்ய] நண்பர்களாக வளர்ந்தோம். வாலிப பருவம் அடைந்து உயர் கல்வி தொடருகையில், அவளின் தனித்துவமான அழகும் அவள் என்னுடன் சுதந்திரமாக பழகும் நட்பும் எனக்கு என்னை அறியாமலே அவள் மேல் ஒரு ஆசையை வளர்த்துக் கொண்டே வந்தது. "பக்கத்து வீட்டு பைங்கிளி கோடியில் நிற்குது வெக்கத்தை விட்டு அது ஆடிப் பாடுது தூக்கத்தை கலைத்து எனக்கு துடிப்பை தருகுது ஏக்கத்தை கூட்டி மனதை நொடியில் வாட்டுது" "வயல் வெளியில் பைங்கிளி துள்ளி திரியுது கயல் விழியில் கவர்ச்சியை அள்ளி எறியுது மயக்கம் கொடுத்து நெஞ்சை கிள்ளி இழுக்குது தயக்கம் கொண்டு கொஞ்சம் தள்ளி போகுது" என்னுடைய அந்தக் கனவில் ஒரு பகிரப்பட்ட ஆசை அவளிடமும் இருந்தது பின் ஒரு நாள் எனக்கு தெரியவந்தது. ஒரு நாள் நான் பல்கலைக் கழகத்துக்கு போகும் பொழுது, தனக்கு உயர் வகுப்புக்கு பிந்திவிட்டது என்று, தன்னை என் மோட்டார் சைக்கிளில் இறக்கி விடும்படி கூறினாள். ஆனால் ஏறியதும் இன்று தனக்கு விடுதலை என்றும் ஏதேதோ கதைக்கத் தொடங்கி தன் கனவையும் எனக்கு, என்னை இறுக்க பிடித்துக்கொண்டு சொன்னாள், அந்த இறுக்கம், அந்த தழுவல் என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. மாயா ஒரு திறமையான கலைஞர். நன்றாக படம் வரைவதிலும் சிறு சிறு கதைகள் எழுதுவதிலும் வல்லவர். எனவே ஒரு வசதியான சிறிய புத்தகக் கடையை, படிப்பின் பின் தான் முதலில் என்னுடன் ஒன்றாகத் திறக்க வேண்டும் என்றும், அதன் பின் என்னுடன் வாழவேண்டும் என்றும் தன் அவாவை கெஞ்சலாக, ஆனால் உறுதியாக கூறினாள். "நெருங்கி வந்து இருந்தாள் நெஞ்சம் குளிர கதைத்தாள் குறும்பாய் சில செய்தாள் மறுத்தால் முறைச்சு பார்த்தாள்" "மனம் திறந்து பேசுவாள் கள்ளம் கபடம் இல்லை வித்தகம் கண்ணில் காட்டுவாள் கவனம் தன்னில் இருக்கும்" "சந்திக்க பதுங்கி வருவாள் பாடம் புரியலை என்பாள் புத்தகம் கையில் இருக்கும் கவனம் எங்கோ இருக்கும்" "பதறி ஓடி வருவாள் பிந்தி விட்டது என்பாள் துள்ளி ஏறி இருப்பாள் மெல்ல போ என்பாள்" வருடங்கள் செல்ல செல்ல நானும் மாயாவும் தனித்த தனி பாதையில் சென்று விட்டோம். நான் வணிகத்தில் ஒரு தொழிலைத் தொடங்கி, இலங்கையின் தலைநகர் கொழும்பு போய்விட்டேன், மாயா ஒரு திறமையான கலைஞராக யாழ்ப்பாணத்திலேயே பிஸியான வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். என்றாலும் நாம் ஒருபோதும் தொடர்பை இழக்கவில்லை. நாம் அடிக்கடி மின்னஞ்சல் கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை பரிமாறிக்கொண்டோம். ஒரு நாள், எதிர்பாராத அழைப்பு எனக்கு வந்தது. மாயா தனது கலையை யாழ்ப்பாண கலை காட்சி கூடம் ஒன்றில் காட்சிப்படுத்த இருக்கிறார் என்றும், அதன் தொடக்க இரவுக்கு என்னை வரும்படியும் அழைத்திருந்தார். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு நான் அவளுடன் மீண்டும் இணைந்தபோது உற்சாகமும், ஆர்வமும் பெருமையும் என்னுள் நிறைந்தன. மாயாவின் கலை திகைப்பூட்டக் கூடியதாக அத்தனை அழகாக இருந்தது, ஒவ்வொரு பகுதியும் வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் மூலம், இலங்கை தமிழ் மக்களின் வரலாறையும் பெருமையையும் தனித்துவமான பாணியில் சொல்லிக்கொண்டு இருந்தன. "அறுவடை சரியாய் நடைபெறுகிறது. விதைத்தது தானே விளையும் தமிழர் வம்சத்தை அடியோடு அழிக்க நினைத்து முழு நாட்டையுமே அழித்து நிற்கும் “மகாவம்ச” சிந்தனை!" கலை காட்சி கூடம் வாசலில் இருந்த அந்த வார்த்தை, அவளின் அர்ப்பணிப்பு என் சிந்தனையை தூண்டியது. கூட்டத்தின் மத்தியில், நானும் மாயாவும் மீண்டும் எம் பழைய வாழ்வை கனவு கண்டோம். எங்கள் இன்றைய வாழ்வை, அனுபவங்களை பேசினோம். எமது படிப்புக் காலத்தில் பற்றவைத்த தீப்பொறி மீண்டும் எரியத் தொடங்கியது. இரவு நெருங்க நெருங்க, மாயா ஆழ்ந்த மூச்சை இழுத்து என்னிடம் ஒரு புத்தகக் கடையைத் திறக்கும் கனவு இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அந்த கனவை அவள் ஒருபோதும் கைவிடவில்லை என்றும் தன் கல்யாணத்தைப் பற்றியும் நினைவூட்டினாள். நான் அவளை மனைவியாக்கும் என் கனவும் அவளின் கனவுடன் பின்னிப் பிணைந்திருப்பதை உணர்ந்து எனக்குள் மகிழ்ந்தேன். நான் இன்று வணிகத்தில் ஓரளவு வசதியாகவும் செல்வாக்குடனும் இருப்பதால், அவளின் கனவை விரைவில் நிறைவேற்றி, என் கனவையும் மெய்ப்படுத்த புத்தகக் கடையை திறக்கும் நோக்கத்துடன் கொழும்பு பயணமானேன். நாம் இருவரும் சரியான இடத்தில் முறையான புத்தகக் கடையை உருவாக்க இரவு பகலாக திட்டம் போட்டு, ஒரு புது கட்டிடத்தை கட்டி, சுவர்களை வர்ணம் பூசி, அலமாரிகள் மற்றும் அலமாரிகளை நிரப்ப கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் மூலம் ஒரு ஒழுங்கு வரிசையில் நிரப்பி அந்த கடையை திறந்து, "கனவு காண்பவரின் சொர்க்கம்" என்று அதற்கு பொருத்தமாக பெயரிட்டு, வசதியான சூழல், புதிய புத்தகங்களின் வாசனை மற்றும் சுவரில் தொங்கும் துடிப்பான கலைப் படைப்புக்கள் மூலம் ஒரு மாயாஜால சூழலை உருவாக்கி, யாழ் நகரத்தைச் சுற்றியுள்ள மக்களை ஈர்த்து, இந்த கனவு சொர்க்கம் விரைவில் சமூகத்தில் ஒரு பிரியமான இடமாக மாறும் என்ற நம்பிக்கையுடன் புத்தகக் கடையில் அருகருகே நின்று, அவள் கையை என் கையுடன் கோர்த்து, வாடிக்கையாளர்கள் தாங்கள் கவனமாகக் கண்டுபிடித்த கதைகளில் மூழ்குவதைப் பார்த்து, நான் மாயாவிடம், "எங்கள் கனவு நனவாகிவிட்டது" என்றேன். மாயா சிரித்தாள், அவள் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் நிரம்பி, "ஆம், நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக கடையும் நீங்களும் இருக்கிறீர்கள்" என்று பதிலளித்தாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ராஜஸ்தானில் 150 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன்; வீணான 56 மணி நேர மீட்பு போராட்டம்! ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் (Dausa) 150 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கி 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 56 மணி நேரம் அல்லது இரண்டு நாட்களுக்கும் மேலான அதிகாரிகளின் தொடர்ச்சியான மீட்பு பணிகளின் பின்னர், கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட ஆர்யன் என்ற சிறுவன் மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கலிகாட் கிராமத்தில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தார். மீட்புப் பணி ஒரு மணி நேரம் கழித்து தொடங்கியது. ஜேசிபி வாகனங்கள், துளையிடும் இயந்திரங்கள் மற்றும் ஒரு பைலிங் ரிக் ஆகியவை மூலம் சிறுவனை மீட்பதற்காக இணையான சுரங்கப்பாதை தோண்டப்பட்டன. அதேநேரத்தில் குழாய் மூலம் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது மற்றும் சிசிடிவி கமராக்கள் மூலம் ஆர்யனின் நிலை கண்காணிக்கப்பட்டன. துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சுமார் 160 அடியாக மதிப்பிடப்பட்ட நீர்மட்டம் உள்ளிட்டவை மீட்பு பணிகளில் பல சவால்களை ஏற்படுத்தியிருந்தன. எனினும், நீண்ட நேர போராட்டத்தின் பின்னர், மீட்புப் பணியாளர்கள் சிறுவனை சுற்றி கயிறு கட்டி மயக்கமடைந்த நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர். பின்னர், மேம்பட்ட உயிர் பாதுகாப்பு அமைப்பு பொருத்தப்பட்ட ஆம்பியூலன்ஸில் ஆர்யன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. https://athavannews.com/2024/1411868 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது! தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிலிருந்து, படகு மூலமாக சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப முயன்ற 4 இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ரோந்துக் குழுவினர், செவ்வாய்க்கிழமை இரவு, தண்ணிரோட்டு கடற்கரைப் பகுதியில் நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணப் பைகளுடன் நடந்துகொண்டதைக் கண்டறிந்து அவர்களை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சசிகுமார் (28 வயது), கோகிலவாணி (44 வயது), வேலூரில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜ்மோகன் (39 வயது), சிதம்பரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த நாகராஜ் (68 வயது) என பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களுக்கு படகு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்த உள்ளூர்வாசிகளை தேடும் பணி நடந்து வருகிறது. பொதுவாக இலங்கைப் பிரஜைகள் புகலிடம் கோரி இந்தியாவுக்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாகவும், சட்டவிரோதமாக மீண்டும் நாட்டிற்குத் திரும்புவதற்கு அரிதாகவே முயற்சிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 2019 இல் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடங்கியதிலிருந்து, பல இலங்கை பிரஜைகள் தனுஷ்கோடிக்கு வருகிறார்கள். 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் இலங்கையர்களின் புகலிட நிலை குறித்து மத்திய அரசு முடிவு செய்யவில்லை என்றாலும், மனிதாபிமான அடிப்படையில் மாநில அரசு அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளது. தற்போது மண்டபம் முகாமில் 300 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1411844
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts