Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

சிரியாவின் புதிய அரசின் பிரதமராக முகமது அல் பஷீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே முக்கியத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், அடுத்தாண்டு மார்ச் ஒன்றாம் தேதி வரை இடைக்கால அரசு செயல்படும் என்று அறிவித்தார்.

அபு முகமது அல் கோலனி தலைமையிலான கிளர்ச்சி படைகள், கடந்த சில நாள்களாக முன்னேறி, தலைநகர் டமாஸ்கஸை கடந்த 8 ஆம் தேதி அடைந்தன. அப்போது அந்நாட்டு அதிபர் பஷார் அசாத், ரஷ்யா தப்பிச் சென்றார். இப்படியான சூழலில், சிரியா தங்கள் கட்டுபாட்டுக்குள் வந்ததாக கிளர்ச்சி படைகள் அறிவித்த நிலையில், அரசாங்கம் கிளர்ச்சிப் படைகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/313543

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதே கூத்துதான் ஈராக்கிலும்,லிபியாவிலும் நடந்தேறியது. அதன் பின்னர் அந்த நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் அனர்த்தங்கள் யாவரும் அறிந்ததே.
இது மேற்குலகின் வெற்றி என்றால்..... தற்போது சிரியா மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேலின்  செயலை என்னவென்பது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

இதே கூத்துதான் ஈராக்கிலும்,லிபியாவிலும் நடந்தேறியது. அதன் பின்னர் அந்த நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் அனர்த்தங்கள் யாவரும் அறிந்ததே.
இது மேற்குலகின் வெற்றி என்றால்..... தற்போது சிரியா மீது குண்டுமழை பொழியும் இஸ்ரேலின்  செயலை என்னவென்பது?

இது மேற்குலகின் வெற்றி அல்ல.

இது முழுக்க முழுக்க துருக்கியின் வெற்றி.

புட்டின், ஆசாத்தின் தோல்வி.

இஸ்ரேல் வெளுத்து வாங்குவது, இந்த புதிய சிரிய அரசின் கைக்கு கனரக ஆயுதம் போனால் பின்னாடி தனக்கு அது ஆபத்தை தரும் என்பதால்.

ஈராக்கில் அமேரிக்க படைகள் புதிய இடைக்கால அரசை உருவாக்கின. இங்கே வெளியார் இல்லாமல் அவர்களே உருவாக்குகிறனர்.

ஆகவே லிபியாவுடனான ஒப்பீடே அதிக பொருத்தம்.

உங்களை போலவே, ஈராக், லிபியா போல் சிரியாவும் சின்னாபின்னமாகும் (இப்போதும் ஒன்றும் சிறப்பாக இல்லை) என்பதே என் எதிர்வுகூறலும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு சிரிப்புக்காகவே அதை எழுதினேன், கோஷான்.......... கூகிள், மைக்கிரோசாஃப்ட் இப்படி எல்லாமே அவர்களாலேயே நிரம்பி இருக்கின்றது என்றும் அதில் சொல்லியிருந்தேன்.  தொழில்நுட்ப துறை மட்டும் அல்ல, மருத்துவர்கள், விஞ்ஞானிகள்................ இப்படி இந்தியா அமெரிக்காவிற்கு துறைசார் நிபுணர்களையும், பணியாளர்களையும் உருவாக்கும் ஒரு தொழிற்சாலை ஆகிவிட்டது. இரு பக்கங்களும் வெற்றி - வெற்றி என்று கருதுகின்றார்கள்...........
    • அண்ணா,  தரமாட்டம் என்று கூறியே வழிக்கு கொண்டுவரும் 🤣🤣🤣
    • நன்றி. அயர்லாந்தில் இதுபோல் இருந்த சட்டத்தை யூகே, ஏனைய நாடுகள் அளுத்தம் கொடுத்து மாற்றினர் என அப்போ வாசித்த நினைவு. 🤣
    • 🤣.............. போன தடவை ட்ரம்ப் வந்து ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை. இந்த தடவை தனிப்பட்ட சில கணக்கு வழக்குகளை அவர் தீர்க்க வேண்டியிருக்கின்றது. அவருக்கு வேற வேலைகளுக்கு நேரமே இருக்காது. உலகம் முழுக்க சண்டைகள் வேற................ அவர் சும்மா ஏதாவது சொல்லிவிட்டு நாலு வருடத்தில் போய்விடுவார்..................  அர்ச்சுனா திரியிலேயே இலவசப் பிரச்சனை என்ன ஓட்டம் ஓடினது........... அர்ச்சுனாவிற்கு இது தெரிந்தால், இப்ப உடனடியாக ஏதாவது ஒரு ஆஸ்பத்திரிக்குள்ள போகப் போகுது..............  
    • ஏன் சிங்களம் உங்கள் தெய்வம் அனுரவின் தாய் மொழி ஆச்சே…. இனவாதத்தை தடுக்க பயங்கரவாத தடைசட்டம் அவசியம் என்று எந்த ஒரு இனவாதியும் கூட சொல்லாத அரிய கண்டுபிடிப்பை சொல்லி முட்டு கொடுக்கும் நீங்கள் ஆங்கிலத்தில் முகபுத்தகத்தில் போய் எழுதலாமே? சிங்கள இனவாதிகளிடம் நான் முடிந்தளவு பேசியாகி விட்டது - ஒரு மண்ணாங்கட்டியும் நடவாது என்பது பட்டறிவு. The definition of insanity is doing the same thing over and over, expecting a different outcome. 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.