Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 DEC, 2024 | 12:27 PM

image

இலங்கையர்களின் நினைவுகளிலிருந்து என்றும் அகலாத டச்மார்ட்டின் Dutch Martinair DC8    விமான விபத்து நிகழ்ந்து டிசம்பர் நான்காம் திகதியுடன் ஐம்பது வருடங்களாகியுள்ளது.

இந்தோனேசியாவின் சுரபயா சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையில்  மோதி விழுந்துநொருங்கியது.

அந்த விமானத்திலிருந்த 182 பயணிகள் உட்பட 191 பேரும் உயிரிழந்தனர்.

Martin-Air-Flight-138-Accident-1974-Sri-

மக்காவிற்கு சென்றுகொண்டிருந்த யாத்திரிகர்கள் உட்பட 191 பேர் பயணித்துக்கொண்டிருந்த அந்த விமானம் கடும் காடுகள் மத்தியில் காணப்பட்ட மலையில் மோதி விபத்துக்குள்ளானது.விமானத்தின் சிதைவுகள் காணப்பட்ட பகுதியில்  பயணிகளின் உடல்களும் உடமைகளும் சிதறிக்கிடந்தன.

கடல்மைலிற்கு 36000 மீற்றர் மேலே பறந்துகொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து விமானி விமானத்தை கொழும்பு விமானநிலையத்தில் தரையிறக்குவதற்கு அனுமதியை கோரினார்.சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவின்படி விமானி விமானத்தை 4000 மீற்றருக்கு கீழே கொண்டுவந்தார் என குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.

எனினும் பொகவந்தலாவ காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு மேலே பயணித்துக்கொண்டிருந்த விமானம் உயரத்தை குறைத்து பயணித்துக்கொண்டிந்தவேளை அதன் இறக்கைகளில் ஒன்று மலையுடன் உரசியது இதனால் வெடிப்புநிகழ்ந்தது.

அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள் இன்னமும் அந்த விபத்து குறித்த துயரமான நினைவுகளை சுமக்கின்றனர்.

'விமானப்பணிப்பெண்ணின் உடலை அவரின் காதலன் அடையாளம் காட்டினார் அவரது உடல் இந்தோனேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது "என அவர்கள் அன்றைய நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றனர்

.

இந்த கட்டுரையை எழுதியவர் அந்தபகுதி விமானவிபத்தின் 50 ஆண்டுகளை நினைவுகூருவதற்கு தயாராகிக்கொண்டிருந்தவேளை அங்கு சென்றார். நோர்ட்டன் பிரிட்ஜின் ஏழு கன்னிமலையின் அடிவாரத்தில் உள்ள முல்கம தோட்டத்திலேயே நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன.

விமானவிபத்தில் உயிரிழந்தவர்களின் கல்லறைகள் உரிய பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமை கவலையை ஏற்படுத்தியது.

அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டவர்கள் இன்னமும் அந்த விபத்து குறித்த துயரமான நினைவுகளை சுமக்கின்றனர்

அந்த சம்பவத்தை நேரில் பார்த்த இருவரை பலத்த சிரமத்தின் மத்தியில் தொடர்புகொள்ள முடிந்தது.அவ்வேளை இளையவர்களாக காணப்பட்ட அவர்கள் தற்போது முதியவர்கள்எனினும் என்ன நடந்தது என்பது அவர்களின் நினைவுகளில் தெளிவாக பதிந்துள்ளது.

அவர்களில் ஒருவர் நோர்வூட் கிளங்கன் தோட்டத்தை சேர்ந்த பிஎச் நிமால் டி சில்வா அவருக்கு அப்போது 19 வயதுஇதியத்தலாவ இராணுவமுகாமின் கெமுனுவோச் படைப்பிரிவின் வாகனச்சாரதியாக பணியாற்றிவந்தார்.

'நான் அவ்வேளை 19 வயது இளைஞன்இகெமுனுவோட்ச் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகயிருந்தவர்லக்கி அல்கம அவர் 100 பேருடன் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு விரைந்தார்.

கொத்தன்லேனவில் உள்ள சிங்கள மகாவித்தியாலத்தில் நாங்கள் தங்கவைக்கப்பட்டோம்- உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதே எங்களிற்கு வழங்கப்பட்ட பணி - மலையின் உச்சியிலும் அடிவாரத்திலும் உடல்கள் சிதறிக்கிடந்தன.என தெரிவித்துள்ள நோர்வூட் கிளன்கனை சேர்ந்த பிஎச்நிமால் டி சில்வா நாங்கள் சிதறிக்கிடந்த உடல்களை மலைஅடிவாரத்தில் உள்ள பகுதியொன்றிற்கு கொண்டுவந்தோம்19 உடல்களை ஒரே புதைகுழியில் புதைத்தோம் எனது வாழ்க்கையில் மிகவும் வேதனையான அனுபவம் என அவர் தெரிவித்தார்.

அந்த துயரசம்பவத்தை நேரில் பார்த்த மற்றுமொரு நபர் தன்னை திலக் என அறிமுகப்படுத்தினார்- 62வயது எனக்கு அவ்வேளை 12 வயது ஆனால் சம்பவம் நன்றாக நினைவில் உள்ளது என அவர்  குறிப்பிட்டார்.

marin_air_crash.jpg

'பெருமளவானவர்கள் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் குவிந்தார்கள் அவர்கள் விமானத்தின் சிதைவுகளை எடுத்துச்சென்றார்கள்இவிமானவிபத்து இடம்பெற்ற பகுதியை பார்ப்பதற்காக பலர் பலநாட்களாக வந்தார்கள்" என அவர் தெரிவித்தார்.

ஏழுகன்னி மலையின் முன்னால் உள்ள திபேர்ட்டன் தோட்டத்தை சேர்ந்த வீரன் ராஜிற்கும் ( 58) அந்த விபத்து குறித்த விடயங்;கள் நினைவில் உள்ளது.சம்பவம் இடம்பெற்றபோது தனக்கு 8 வயது என  அவர் தெரிவித்தார்.

இரவு பத்துமணியளவில் தோட்டத்தின் தீ அபாய மணி ஒலித்ததும்நாங்கள் அந்த தொழிற்சாலையை நோக்கி ஒடினோம்அந்த தோட்டத்தின் உரிமையாளர் சொய்சா என்ற கனவான்அவர் விமானமொன்று மலையில்மோதி விழுந்துள்ளது என தெரிவித்தார்அந்த பகுதி முழுவதும் கடும் பனியில் சிக்குண்டிருந்ததால் எங்களால் அங்கு செல்லமுடியவில்லை சொய்சா நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸாருக்கு அறிவித்தார்அதன் பின்னர் இரண்டு பொலிஸ் குழுக்களும் இரண்டு ஹெலிக்கொப்டர்களும் அவ்விடத்திற்கு வந்தன என அவர் தெரிவித்தார்.

அதன் பின்னரே விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொருங்கியுள்ளதையும் பலர் உயிரிழந்துள்ளதையும் நாங்கள் உணர்ந்தோம்இராணுவத்தினரும் பொலிஸாரும் உடல்களை மீட்டெடுத்தனர்." என அவர் தெரிவித்தார்.

ranjith rajapaksha

தமிழில் -ரஜீவன்

https://www.virakesari.lk/article/200883

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமான விபத்து நடந்த போது… வந்த செய்திகளை தொடர்ந்து பத்திரிகைகள் எழுதியதை, தேடி   வாசித்த அனுபவம் எனக்கும் உண்டு.

அப்போ… தொலைக்காட்சி இல்லை. வானொலியும், பத்திரிகையும் மட்டுமே. பத்திரிகையில் வரும் படங்கள் மட்டுமே… நிலைமையின் தீவிரத்தை கண் முன்னே கொண்டு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2024 at 06:37, தமிழ் சிறி said:

இந்த விமான விபத்து நடந்த போது… வந்த செய்திகளை தொடர்ந்து பத்திரிகைகள் எழுதியதை, தேடி   வாசித்த அனுபவம் எனக்கும் உண்டு.

அப்போ… தொலைக்காட்சி இல்லை. வானொலியும், பத்திரிகையும் மட்டுமே. பத்திரிகையில் வரும் படங்கள் மட்டுமே… நிலைமையின் தீவிரத்தை கண் முன்னே கொண்டு வரும்.

இந்த விபத்து நடந்த அன்று என் தந்தை ஹட்டனில் இருந்தாராம். மீட்புப் பணியின் இரெண்டாம் அடுக்கில் தாம் இணைந்து கொண்டதாக சொல்லியுள்ளார்.

பின்னர் ஒரு பயணத்தின் போது வாகனத்தை இந்த வழியாக விட்டு, இடங்களையும் காட்டினார்.

அந்த காலத்தில் இலங்கையின் ரெக்கோர்ர்ட்டில் அதிக அளவான மக்கள் இறந்த நிகழ்வுகளில் ஒன்று இதுவென சொன்னார். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.