Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அலெப்போ மாகாணத்தின் வடக்கே கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அசாஸில் சிரியா மக்கள் போராட்டம் நடத்தினர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிரியாவில் நடைபெறும் மோதல் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபாதிமா செலிக்
  • பதவி, பிபிசி செய்திகள், துருக்கி

சிரியாவில் 13 ஆண்டுகாலமாக நடைபெறும் மோதல் தற்போது தீவிரமடைந்து வந்தாலும், ஜிஹாதி குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS), கடந்த வார இறுதியில் அலெப்போ மற்றும் அந்நாட்டின் பிற பகுதிகளை கைப்பற்றிய பிறகு அந்த மோதல் தலைப்புச் செய்திகளில் இருந்து மறைந்துவிட்டது.

சிரியா அதிபர் பஷர் அல் அசத்துக்கு எதிரான அமைதியான கிளர்ச்சி, 2011 ஆம் ஆண்டு முழு அளவிலான உள்நாட்டுப் போராக மாறியது. இதன் காரணமாக, சுமார் ஐந்து லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், அப்பிராந்திய நாடுகள், ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் இது ஒரு மறைமுக போராகவும் மாறியுள்ளது.

அதிபர் அசத்தின் ஆட்சி, ஆயுதக் குழுக்கள், வெவ்வேறு சித்தாந்தங்கள் மற்றும் விசுவாசங்களைக் கொண்ட நிறுவனங்கள் என பல்வேறு தரப்புகளின் கட்டுப்பாட்டில், சிரியா இன்று நான்கு வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் எந்தப் பகுதியை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பது போரின் தொடக்கத்திலிருந்து மாறி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து பல்வேறு பகுதிகளை இழந்த அதிபர் அசத்தின் ஆட்சி, 2015 முதல் ரஷ்யாவின் ஆதரவைப் பெற முடிந்தது. சமீபத்தில் அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றும் வரை, சிரியாவின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளின் கட்டுப்பாட்டை ரஷ்யா ஆதரவுடனேயே அசத்தின் ஆட்சி மீட்டெடுத்தது.

சிரியாவின் வடக்கு எல்லையில் துருக்கி இருக்கிறது. அங்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள், தாங்களாகவே கட்டுப்பாட்டை வரையறுத்துக்கொண்ட சிரியா பகுதிகளும் இருக்கின்றன.

 

"சிரியாவின் தலைநகரமான டமாஸ்கஸின் கிழக்கிலிருந்து யூப்ரடீஸ் நதி வரை இருக்கும் பகுதிகளில் இரானின் செல்வாக்கு உள்ளது," என்று ப்ரோஸ் & கான்ஸ் செக்யூரிட்டி மற்றும் ரிஸ்க் அனாலிசிஸ் சென்டரைச் சேர்ந்த செர்ஹாட் எர்க்மென் கூறுகிறார்.

"மத்தியதரை கடற்கரை பகுதியில் இருந்து டமாஸ்கஸ் வரை உள்ள பகுதிகளும், சிரியாவின் தெற்கு பகுதிகளும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன," என்று அவர் மேலும் கூறுகிறார். இரானும் ரஷ்யாவும் அசத் அரசாங்கத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்துள்ளனர்.

ஆனால், சமீபத்தில் இப்பகுதியில் நடந்த நிகழ்வுகள் காரணமாக, சிரியாவின் கட்டுப்பாட்டின் நிலை மாறியுள்ளது. மேலும், இரான் மற்றும் ஹெஸ்பொலா ஆயுதக்குழு இஸ்ரேலுடனான மோதலிலும், ரஷ்யா யுக்ரேனுடனான தனது போரிலும் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நாடுகள் அனைத்தும் அசத் அரசாங்கத்திற்கு தங்களின் ஆதரவை தெரிவித்திருந்தாலும், தற்போதைய சூழலில் அந்நாடுகளின் ஆதரவு தளர்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அலெப்போ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஹமா மாகாணத்தின் சில பகுதிகள் இப்போது ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமிய அரசியல் மற்றும் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

மத்தியதரைக் கடலில் உள்ள சிரியாவின் முக்கிய துறைமுகமான லதாகியா, அசத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் உள்நாட்டுப் போர் வெடித்ததில் இருந்து ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.

இட்லிப்பைக் கட்டுப்படுத்துவது யார்?

சிரியாவின் வடக்கு எல்லையை நோக்கி 120 கிமீ தொலைவில் இட்லிப் மாகாணம் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் இருந்து, இந்த பகுதியின் கட்டுப்பாட்டை அரசாங்கப் படைகள் இழந்ததில் இருந்து, பல எதிர் தரப்பினரின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி இருக்கின்றது. இப்போது இட்லிப் பெரும்பாலும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

"ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் முன்பு நுஸ்ரா முன்னணி என்று அழைக்கப்பட்டது, பலருக்கு அந்த பெயர் தெரிந்திருக்கும். ஏனென்றால் அது சிரியாவில் அல்கொய்தாவின் கிளை அமைப்பாக இருந்தது", என்று பிபிசி மானிட்டரிங் பிரிவின் ஜிஹாதி ஊடக நிபுணர் மினா அல்-லாமி கூறினார்.

சிரியா போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் முன்பு நுஸ்ரா முன்னணி என்று அழைக்கப்பட்டது

அல்கொய்தா என்ற பெயரின் காரணமாக உள்நாட்டில் இருந்த கிளர்ச்சிக் குழுக்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்ற மறுத்து வருவதால், அல்கொய்தாவுடனான தனது உறவை முறித்துக் கொள்வதாக 2016 ஆம் ஆண்டு நுஸ்ரா முன்னணி அறிவித்தது.

"எல்லோரும் அல்கொய்தா என்ற பெயரைக் கண்டு பயந்தனர். எனவே, அதிலிருந்து விலகுவதாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அறிவித்தது," என்கிறார் மினா அல்-லாமி.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இனி தனித்து செயல்படும் என்றும் எந்த அமைப்புடனும் தொடர்பில் இல்லை என்றும் அது வலியுறுத்தினாலும், அதற்கு உலகளாவிய ஜிஹாதி லட்சியங்கள் இல்லை என்று கூறினாலும், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா மற்றும் துருக்கி ஆகியவை, அதனை அல்கொய்தாவுடன் தொடர்புடைய குழுவாகக் கருதி, ஒரு பயங்கரவாத அமைப்பாகவே பட்டியலிட்டன.

சீன உய்குர் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஜிஹாதி குழுவான துர்கிஸ்தான் இஸ்லாமியக் கட்சி போல ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பல குழுக்கள் இங்கு இருப்பதாக, சிரியாவை சேர்ந்த பத்திரிகையாளர் சார்கிஸ் கசார்ஜியன் கூறுகிறார்.

பெரும்பாலான துருக்கி ஆதரவு போராளிகளை இட்லிபில் இருந்து வெளியேற்றிய பின்னர், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இந்த பகுதியை கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது.

"இந்த குழுவில் அமைச்சகங்களும் இருக்கின்றன. அதன் அமைச்சர்கள் சமூக ஊடகங்களில் செயல்படுகிறார்கள், புதிய திட்டங்களைத் தொடங்குகிறார்கள், புனரமைப்பு செய்கிறார்கள், பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்" என்று மினா அல்-லாமி கூறுகிறார்.

"இட்லிப் தன்னை ஒரு தனி நாடாக கருதி, சொந்தமாக மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், உலக நாடுகள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது".

சிரியா அரசாங்கத்தையும், சிரியாவின் நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் இரானையும் துருக்கி எதிர்த்து வந்தது. 2017 ஆம் ஆண்டில், கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்த பேச்சுவார்த்தையில், மோதலை நிறுத்தும் நோக்கில் இட்லிப் உட்பட பிற பகுதிகளில் போரின் தீவிரத்தைக் குறைக்கும் மண்டலங்களை அமைக்க துருக்கி ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது.

அதற்கு அடுத்த ஆண்டு, அங்குள்ள கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அரசாங்கப் படைகளைப் பிரிப்பதற்காக, ரஷ்யாவும் துருக்கியும் இட்லிப் மாகாணத்தில் ஒரு ராணுவ பாதுகாப்பு மண்டலத்தை (buffer zone) உருவாக்க ஒப்புக்கொண்டன.

அஃப்ரினை கட்டுப்படுத்துவது யார்?

சிரியாவின் வடமேற்கில் ஒரு காலத்தில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அஃப்ரின், இன்று துருக்கியின் ஆதரவு பெற்ற அசத்தின் எதிர்ப்பு குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில், குர்திஷ் ஒய்பிஜி (YPG) போராளிகளைக் கொண்ட ஒரு எல்லைப் பாதுகாப்புப் படையை அமைப்பதற்கான அமெரிக்காவின் முடிவைத் தொடர்ந்து, எல்லையின் மறுபக்கத்தில் உள்ள குர்திஷ் படைகள் மீது துருக்கி மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியது.

குர்திஷ் ஒய்பிஜி போராளிகளை, தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்றும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக துருக்கியின் தென்கிழக்கில் போரை நடத்திய பிகேகே (PKK) என்ற போராளிக் குழுவின் ஒரு பகுதியாகவும் துருக்கி கருதியது. அப்போதிலிருந்து, துருக்கி மற்றும் அதன் சிரிய ஆதரவு குழுக்கள் இப்பகுதியை கட்டுப்படுத்தி வருகிறது.

சிரியா போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2017 இல் துருக்கி, தான் ஆதரித்த ஆயுதக் குழுக்களை 'சிரிய தேசிய ராணுவம்' என்ற பெயரில் ஒன்றிணைத்தது

"2017 ஆம் ஆண்டு, துருக்கி தான் ஆதரித்த ஆயுதக் குழுக்களை 'சிரியா தேசிய ராணுவம்' (SNA) என்ற பெயரில் ஒன்றிணைத்தது. இதற்கு முன்பு அது சுதந்திர சிரியா ராணுவம் (FSA) என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

'சிரியா தேசிய ராணுவம்' ஆனது துருக்கி ராணுவத்துடன் நேரடியாக இணைக்கப்பட்ட குழுக்கள் அல்லது சுல்தான் முராத் பிரிவு போன்ற உளவு அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் இயக்கம் (Muslim Brothers), கத்தாருடன் இணைந்த பிற குழுக்களை உள்ளடக்கியது.

"எங்களுக்குத் தெரிந்தவரை, இந்த குழுக்கள் ஜிஹாதி குழுக்களுடன் இணைந்து செயல்படவில்லை, ஆனால் துருக்கியின் கொள்கைகள், பிராந்தியத்தின் முன்னுரிமைகள் மற்றும் லட்சியங்களுக்கு ஏற்ப செயல்படுகின்றது. எனவே, அவர்கள் குர்திஷ் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படைகளுக்கும், சிரியா அரசாங்கப் படைகளுக்கும் கடும் எதிராக உள்ளனர்", என்று பிபிசி மானிட்டரிங் பிரிவை சேர்ந்த மினா அல்-லாமி கூறுகிறார்.

துருக்கியின் ஆதரவுடன் சிரியா தேசிய ராணுவம், இன்று அஃப்ரின் முதல் ஜராப்லஸ் வரையிலும், யூப்ரடீஸ் நதியின் மேற்கில் உள்ள பகுதிகளையும், டெல் அபியாட் முதல் கிழக்கில் ராஸ் அல்-அய்ன் வரையிலான பகுதிகளையும் கட்டுப்படுத்துகிறது.

நவம்பர் 30 ஆம் தேதியன்று, அவர்கள் அலெப்போவின் வடக்கில் குர்திஷ் படைகளுக்கு எதிராக ஒரு தாக்குதலை தொடங்கினர் மற்றும் முன்னர் குர்திஷ் படைகளால் கட்டுப்படுத்தப்பட்ட டெல் ரிஃபாத் நகரம் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினர்.

சிரிய தேசிய ராணுவமானது சிரிய இடைக்கால அரசாங்கம் என்ற பெயரிடப்பட்ட சிரிய நிர்வாக அதிகாரத்தின் ஒரு பகுதியாகும், மேலும் துருக்கி அரசாங்கமும் ராணுவமும் இந்த பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

மன்பிஜியை கட்டுப்படுத்துவது யார்?

வடக்கில் இருக்கும் மற்றொரு முக்கியமான குழு, `சிரியா ஜனநாயகப் படை' (SDF) ஆகும்.

குர்திஷ் மற்றும் அரபு போராளிகள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களின் இந்த கூட்டணி யூப்ரடீஸ் நதியின் கிழக்கில் இருந்து இராக் எல்லை வரையிலும் மற்றும் மேற்கில் மன்பிஜ் நகரம் வரையிலும் உள்ள பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டில், சிரியா ஜனநாயகப் படை வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகம் (Autonomous Administration) என்ற பெயரில் ஒருதலைப்பட்சமாக ஒரு நிறுவனத்தை அறிவித்தது. இது சிரியா பிராந்தியத்தின் கால்வாசி பகுதியை கட்டுப்படுத்துகிறது. மேலும், இங்கு அமெரிக்க மற்றும் ரஷ்ய ராணுவ தளங்களும் இருக்கின்றன.

சிரியா போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிரியா ஜனநாயகப் படைகள் ஐஎஸ் குழுவிற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் கூட்டாளியாகக் கருதப்படுகின்றனர்

"சிரியா ஜனநாயகப் படை (SDF), மற்ற கிளர்ச்சிக் குழுக்களில் இருந்து வேறுபட்டு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா வழியாக இரண்டு நாடுகளின் ஆதரவை பயன்படுத்தி, ஒரு சர்வதேச சட்டபூர்வமான ஆட்சியை நிறுவ முயற்சிக்கிறது" என்கிறார் பாதுகாப்பு ஆய்வாளர் செர்ஹாட் எர்க்மென்.

"ஒருபுறம், அவர்கள் சிரியாவின் நல்ல எதிர்காலத்திற்காக சிரியா அரசாங்கத்துடன் எவ்வாறு ஒருங்கிணைய முடியும் என்பதை தீர்மானிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம், அவர்கள் சிரியா கடுமையாக எதிர்க்கும் அமெரிக்காவுடன் நெருக்கமான அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்பையும் பராமரிக்கிறார்கள்" என்றும் அவர் கூறுகிறார்.

துருக்கி எல்லையில் சிரியா ஜனநாயகப் படையின் (SDF) இருப்பு துருக்கிக்கு முக்கிய கவலையாக உள்ளது. பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அலெப்போவிற்கு கிளர்ச்சியாளர்கள் முன்னேறியதற்கான நோக்கங்களில் ஒன்று, வடக்கில் இருக்கும் ராணுவ நடவடிக்கையற்ற இடைப்பட்ட பகுதி தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்த அசாத் அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பது தான்.

சிரியாவில் ஐ.எஸ் அமைப்பின் அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துவிட்டதா?

அரபு மொழியில் `ஐஎஸ்ஐஎஸ்' அல்லது`தைஷ்' என்றும் அழைக்கப்படும் தங்களை ஐ.எஸ் அமைப்பு என்று கூறுகின்றனர். ஐஎஸ் அமைப்பு 2014 ஆம் ஆண்டு அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பற்றி அறிவித்தது மற்றும் பல ஆண்டுகளாக சிரியா மற்றும் இராக்கின் பகுதிகளை கைப்பற்றியுள்ளது.

ஐஎஸ் அமைப்பின் தோற்றம் சிரியாவில் போரின் போக்கை மாற்றியது. மேலும், இந்த அமைப்பை தோற்கடிக்க 70க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்கா தலைமையிலான ஒரு கூட்டணி உருவாவதற்கு வழிவகுத்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்த கூட்டணி சிரியாவில் இருந்து ஐஎஸ் அமைப்பை முற்றிலுமாக வெளியேற்றியது.

ஆனால் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல் உண்மையிலேயே முற்றிலுமாக நீங்கிவிட்டதா?

சிரியா போர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தடுப்பு முகாம்களில் ஐ.எஸ் குழுவினர் என்று சந்தேகிக்கப்பட்டுபவர்களுடன், ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

"அது ஒரு கிளர்ச்சிக் குழுவாக உருமாறியுள்ளது,`ஹிட் மற்றும் ரன்' (திடீரென தாக்குதல் நடத்தி, உடனடியாக பின்வாங்குதல்) வகையில் தாக்குதல்களை நடத்துகிறது. சிரியாவில் அதன் பலம் மிகவும் தீவிரமாக உள்ளது, மேலும் இந்த ஆண்டு அதன் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன" என்று மினா அல்-லாமி கூறுகிறார்.

சிரியா ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு முகாம்களில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ் படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் விடுவிக்கப்பட்டால், சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு மீண்டும் குறிப்பிடத்தக்க திருப்புமுனை ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஐ.எஸ் தோல்வியடைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகியும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது.

சுமார் 11,500 ஆண்கள், 14,500 பெண்கள் மற்றும் 30,000 குழந்தைகள் குறைந்தது 27 தடுப்பு மையத்திலும் அல்-ஹோல் மற்றும் ரோஜ் ஆகிய இரண்டு தடுப்பு முகாம்களிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

"ஐ.எஸ் அமைப்பு அந்த முகாம்கள் மீது தனது கவனத்தை வைத்திருக்கிறது. அந்த முகாம்களில் ஏதேனும் நெருக்கடி ஏற்படுகிறதா, பாதுகாப்பு பலவீனமாகிறதா என்ற நிலைவர அது காத்திருக்கிறது. அப்போது, இந்த முகாம்கள் மற்றும் சிறைகளுக்குள் நுழைந்து அவர்களால் அங்குள்ள மக்களை விடுவிக்க முடியும்" என்கிறார் மினா அல்-லாமி.

"வடக்கு சிரியாவில் துருக்கி தலைமையிலான ஒரு பெரிய ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் ஐஎஸ் எதிர்பார்க்கும் அந்த நெருக்கடி வரும். ஒருவேளை குர்திஷ் படைகளுக்கு எதிராக அல்லது சிரியாவில் ஷியா போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தாலும் அங்கு நெருக்கடி ஏற்படும்" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

https://www.bbc.com/tamil/articles/cp31yxy2l4qo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதாவது  சிரியா என்ற நாடு  இனிவரும் காலங்களில் பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி  இருக்கும்  எண்டும் சொல்லலாம்.
தொடர்ந்து வழமைபோல டுமீல்...டுமீல்...டிசும்....டிசும்...😂

  • கருத்துக்கள உறவுகள்

 

இனி என்ன முஸ்லிம் மத குழுக்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் சிரியா என்ற நாடு முழுவதும் அன்பும் அமைதியும் தழைத்து ஓங்கும். சகோதரத்துவம் இரும்பு போலாகும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சமூகத்திற்கு எப்படியான ஆட்சி இருக்க வேண்டும் என்பதை கடந்த 50 வருடங்களில் பார்த்து விட்டோம்.
ஆசிய ஆபிரிக்க ஐரோப்பிய அமெரிக்க அவுஸ்ரேலிய கண்டங்கள் இருப்பது போல் அந்தந்த மண்ணுக்கு அந்தந்த ஆட்சிகள் இருக்க வேண்டும்.

மண்வாசனை.😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.