Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ணம் : மலேசியாவை வீழ்த்திய இலங்கை, பங்ளாதேஷிடம் தோற்றது

16 DEC, 2024 | 05:23 PM
image

(நெவில் அன்தனி)

மலேசியாவின் கோலாலம்பூர், பெயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை பெரும்பாலும் அரை இறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது.

இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஏ குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன.

மலேசியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற தனது ஆரம்பப் போட்டியில் மிக இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை, இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங்களாதேஷிடம் தோல்வி அடைந்தது. எனினும் நிகர ஓட்ட வேக அடிப்படையில் அரை இறுதி வாய்ப்பை இலங்கை பெறும் என நம்பப்படுகிறது.

துடுப்பாட்டத்தில் மனுதி நாணயக்கார அபாரம்

மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை 94 ஓட்டங்களால் மிக இலகுவாக பெற்றிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்ளில் 4 விக்கெட்களை இழந்து 153 ஓட்டங்களைக் குவித்தது.

ஒரு கட்டத்தில் 9.5 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

எனினும், அணித் தலைவி மனுதி நாணயக்கார மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 40 பந்துகளில் 10 பவுண்டறிகள். ஒரு சிக்ஸ் உட்பட ஆட்டம் இழக்காமல் 74 ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார்.

அவருக்கு பக்கபலமாக பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய லிமன்சா திலக்கரட்ன ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 61 பந்துகளில் 110 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பந்துவீச்சில் ஹிருணி ஹன்சிகா 2 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசேனி தலகுனே 6 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரமுதி மெத்சரா 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் சமுதி முனசிங்க 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பங்களாதேஷிடம் பணிந்தது இலங்கை

மலேசியாவுடனான ஆரம்பப் போட்டியில் இலங்கை, இரண்டாவது போட்டியில் பங்களாதேஷிடம் பணிந்தது.

அப் போட்டியில் 28 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

கோலாலம்பூரில் பெய்த மழை காரணமாக இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான போட்டி 17 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

பங்களாதேஷ் பெண்கள் அணியிடம் 19 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணி 28 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட  பங்களாதேஷ் 17 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.

சாடியா அக்தர் 31 ஓட்டங்களையும் ஆபிகா ஆஷிமா ஈரா 25 ஓட்டங்களையும் சுமய்யா அக்தர் சுபோர்னா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ரஷ்மிக்கா செவ்வந்தி 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ப்ரமுதி மெத்சரா 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், அசெனி தலகுனே 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 17 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சஞ்சனா காவிந்தி (21), ரஷ்மிக்கா செவ்வந்தி (20) ஆகிய இருவரே ஒரளவு திறமையாகத் துடுப்பெடுத்தாடினர்.

பந்துவீச்சில் சுமய்யா அக்தர் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பர்ஜானா ஈஸ்மின் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

1612_rashmika_sewwandi_4_for_vs_bang.jpg1612_sl_u_19_women.jpg1612_madudhi_nanayakkara_and_limansa_thi

https://www.virakesari.lk/article/201427

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை அதிரவைத்து வெற்றியீட்டியது நேபாளம்

16 DEC, 2024 | 08:49 PM
image
 

(நெவில் அன்தனி)

மலேசியாவின் கோலாலம்பூரில் அமைந்துள்ள பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை முற்றிலும் எதிர்பாராத விதமாக 6 விக்கெட்களால் நேபாளம் வெற்றிகொண்டது.

1612_puja_mahato_nepal.jpg

இப் போட்டி முடிவை அடுத்து பிரதான கிண்ணத்திற்கான இரண்டாம் சுற்றில் விளையாட பி குழுவிலிருந்து இந்தியாவும் நேபாளமும் தகுதிபெற்றுள்ளன.

1612_nepal_vs_pak.png

19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் பெண்கள் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 105 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நேபாள பெண்கள் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

அணித் தலைவி பூஜா மஹாட்டோ 47 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றினார்.

பூஜா மஹாட்டோவும் சீமானா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து ஒரு ஓவர் மீதம் இருக்கையில் நேபாளத்தின் வெற்றியை உறுதிசெய்தனர்.

மஹாட்டோவைவிட சொனி பாக்ரின் 13 ஓட்டங்களையும் சிமானா ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் சானா பர்வீன் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

முன்னதாக அப் போட்டியில் முதலில துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றது.

கோமல் கான் 38 ஓட்டங்களையும் மஹாம் ஆனீஸ் ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் ரவாய்ல் பர்ஹான் 13 ஓட்டங்களையும் அணித் தலைவி ஸூபிஷான் அயாஸ் 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பூஜா மஹாட்டோ 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/201458

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது

Published By: VISHNU   22 DEC, 2024 | 06:41 PM

image

(நெவில் அன்தனி)

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. 

2212_india_u19_w_t20_asia_cup_champions.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின.

2212_player_of_the_final_and_tournament_

இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது.

கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான  இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.

ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார்.

நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23  ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர்.

இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/201909

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவில் இந்தியா ம‌க‌ளிர் அணி ப‌ல‌மான‌ அணி..................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.