Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

ரஷ்ய கதிரியக்க பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவர் கொலை

December 17, 2024  11:54 

ரஷ்ய பாதுகாப்புப் படைத் தலைவர் ஒருவர் கொலை

 
ரஷ்யாவின் மாஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் பலியாகினர்.

ரஷ்யாவின் கதிரியக்க வேதியியல் மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ கிரிலோஃப் இந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamil.adaderana.lk/news.php?nid=197417

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொஸ்கோ வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் மரணம்!

மொஸ்கோ வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் மரணம்!

மொஸ்கோவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மொஸ்கோவில் நடந்த வெடிப்பின் விளைவாக, ரஷ்ய ஆயுதப்படைகளின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணையின்படி, செவ்வாயன்று (டிசம்பர் 17) காலை, ஒரு மெஸ்கோவின் ரியாசான்ஸ்கி ப்ராஸ்பெக்டில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, வீட்டின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த மின்சார ஸ்கூட்டரில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.

புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் புலனாய்வு பணிகளை மேற்கொண்டனர், மருத்துவ மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நடவடிக்கைக்கு உதவ அழைக்கப்பட்டனர்.

குற்றவாளியை தேடும் பணி நடந்து வருகிறது என்று ரஷ்ய புலனாய்வு குழுவின் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்ய பாதுகாப்புப் படைகள் தென்கிழக்கு மொஸ்கோவில் லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்ட கட்டிடத்தின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கமராக்களில் இருந்து வீடியோவை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன என்று தலைநகரின் அவசர சேவைகளின் பிரதிநிதி கூறியுள்ளார்.

https://athavannews.com/2024/1412628



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.