Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அவரது குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, இவர்கள் நேற்றிரவு (17) 10.00 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-196 மூலமாக அவர்கள் இந்தியாவின் புதுடெல்லியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Image

Image

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 15 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்டார்.

இந்தச் சுற்றுப் பயணத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன், இரு நாடுகளுக்கு இடையில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஸ்ரீ ஜக்தீப் தன்கர், (Vice President Of India Shri Jagdeep Dhankhar), இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் (Dr.S.Jayashankar – Minister of External Affairs of India), இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நந்தா (J.P. Nanda – Minister of Health), இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் (Shri Ajith Doval – National Security Advisor of India) உள்ளிட்ட இராஜதந்திரிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது, இருநாடுகளுக்கும் இடையில் முதலீடு, வணிகம், பாதுகாப்பு தொடர்புகளை பலப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டிருந்தன.

இதையடுத்து நேற்யை தினம் புத்த காயாவிற்கான பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, உள்ளிட்ட குழுவினர் அங்கு வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1412754

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of text

 

May be a doodle of text

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தியா, சீனா உதவிகள் கடன்கள் இல்லாமல் இருக்க வேண்டும், அது வரை மாமா மச்சானை அனுசரித்து தான் போக வேண்டும். 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானை குறிவைத்து ஈராக் மற்றும் சிரியாவில், அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறது   Andre Damon 6 February 2024             மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம்  அமெரிக்க F-35B மின்னல் வேக ஸ்டெல்த் போர் விமானங்களுடன் விமானப்படையின் B1-B லான்சர் மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் ஜப்பான் கடல் மீது பறக்கின்றன. ஈரானை இலக்கு வைத்து மத்திய கிழக்கில் ஒரு வார அல்லது மாதக்கணக்கான தாக்குதல் என்று அதிகாரிகள் கூறிய ஒன்றை அமெரிக்கா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஈராக் மற்றும் சிரியா முழுவதிலும் ஏழு இடங்களிலுள்ள 85 இலக்குகள் மீது 125 க்கும் அதிகமான குண்டுவீச்சுக்களை நடத்த டெக்சாஸிலுள்ள டைஸ் விமானப்படை தளத்தில் இருந்து அணுஆயுதமேந்தும் திறன் கொண்ட B-1B குண்டுவீச்சு விமானங்களை அனுப்பினார். “ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC), கட்ஸ் படை (Quds Force) மற்றும் அதனுடன் இணைந்த போராளிக் குழுக்கள்” பயன்படுத்திய இராணுவ தளங்களை இலக்கில் வைத்ததாக அமெரிக்கா கூறியது. இத்தாக்குதல்கள் சட்டவிரோதமானவையாகும், சிரியா மற்றும் ஈராக் அரசாங்கங்களை மீறி நடத்தப்பட்டன, காங்கிரசின் அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்பட்டன அல்லது அமெரிக்க மக்களின் ஒப்புதல் அல்லது ஒப்புதலைப் பெறுவதற்கான எந்த முயற்சியும் இல்லாமல் நடத்தப்பட்டதாகும். ஒரு ஈராக்கிய அதிகாரி ஈராக்கில் நடந்த தாக்குதல் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் “ஈராக்கிய இறையாண்மையை மீறுவது” ஆகவும்  கண்டித்தார், மேலும் அமெரிக்காவானது “ஈராக்கையும் அப்பிராந்தியத்தையும் எதிர்பாராத விளைவுகளுக்கு இழுக்கும் ஒரு அச்சுறுத்தல்” என்றும் சேர்த்துக் கொண்டார். சிரிய அரசு ஊடக நிறுவனங்களானது “அமெரிக்க ஆக்கிரமிப்பு” செயலைக் கண்டித்தன. 62 மைல்களுக்கும் அதிகமான நீளமுள்ள நாட்டின் பரந்த பகுதியான, கிழக்கு சிரியாவில் குறைந்தபட்சம் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகளுக்கான ஏகாதிபத்திய-சார்பு சிரிய கண்காணிப்பகம் AFP க்கு அறிவித்தது. கடந்த வாரம் ஜோர்டானில் மூன்று அமெரிக்க இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா கூறியது. சிப்பாய்களின் உடல்கள் எடுத்துச் செல்லப்படுவதைக் காண பைடென் தனது சொந்த மாநிலமான டெலாவேரில் உள்ள டோவர் விமானப்படை தளத்திற்கு விஜயம் செய்தார். அவர் ஒரு சுருக்கமான மூன்று பத்தி அறிக்கையை வழங்கியபோது, குண்டுவீச்சு விமானங்கள் ஏற்கனவே தங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தன. யதார்த்தத்தில், இந்த சிப்பாய்களின் மரணங்கள், பிராந்தியத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் கடந்த மூன்று மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட பிரமாண்டமான இராணுவ விரிவாக்கத்தின் விளைவேயாகும். காஸாவில் இனப்படுகொலைத் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேலுக்கு நிதி, ஆயுதங்கள், விநியாக ஆதரவு மற்றும் அரசியல் மறைப்பை வழங்கியது போல், பரந்த மோதலைத் தூண்டும் வேண்டுமென்றே என்ற நோக்கத்துடன் அமெரிக்கா அப்பிராந்தியம் முழுவதும் போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் படைகளைக் கொண்டு அப்பகுதியை நிரப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை தாக்குதல்களை அறிவிக்கையில், பைடென் இவ்வாறு அறிவித்தார், “அமெரிக்காவானது மத்திய கிழக்கிலோ அல்லது உலகில் வேறெங்கிலும் மோதலை விரும்பவில்லை.”   இத்தகைய அறிக்கைகள், ஒவ்வொரு நாளும் வெறுப்பூட்டும் வகையில் திரும்பத் திரும்ப கூறப்பட்டாலும், அர்த்தமற்றவையாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் முழுவீச்சிலான போரை “விரும்புகிறதோ” இல்லையோ, அது ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிரிழப்புக்கு இட்டுச் சென்ற 2003 ஈராக் படையெடுப்பு உட்பட பல தசாப்தங்களாக அப்பிராந்தியம் முழுவதிலும் உள்ள நாடுகளின் மீது தொடர்ந்து குண்டுவீசியும், பட்டினி போட்டும் வந்துடன் படையெடுத்தும் வருகிறது. ரஷ்யா மற்றும் சீனாவை அடிபணிய வைப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சியின் பாகமாக மத்திய கிழக்கை மறுஒழுங்கமைக்கும் இந்த விரிவாக்கப் போரின் இலக்கை அமெரிக்கா “நாடுகிறது” என்பது தெளிவாகிறது. இந்த இலக்கையொட்டி, பைடென் மத்திய கிழக்கில் புதிய இராணுவத் தாக்குதலானது ஒரு நீண்ட காலத்திற்கு தொடரும் என்பதை தெளிவுபடுத்தினார். குண்டுத்தாக்குதல்கள், “நாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரங்களிலும் இடங்களிலும் தொடரும்” என்று பைடென் கூறினார். பைடென் மேலும் ஓர் அச்சுறுத்தலையும் சேர்த்துக் கொண்டார், “எங்களுக்கு தீங்கு செய்ய முனையும் அனைவருக்கும் இது தெரியட்டும்: நீங்கள் ஒரு அமெரிக்கருக்கு தீங்கு விளைவித்தால், நாங்கள் பதிலடி கொடுப்போம்.” “இது முதல் தொகுப்புப் பதில்கள்” என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறினார், அவர் “எதிர்காலத்தில் மேலும் பதில்கள் இருக்கும்” என்று கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “நிரந்தர போரின்” தொடர்ச்சியையும் விரிவாக்கத்தையும் குறிக்கின்றன. தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் முற்றிலும் விமர்சனமின்றி இருந்தன, அவை “பதிலடி” மற்றும் “தற்காப்பு” என்ற போலியான நியாயப்படுத்தலை மீண்டும் கூறின. அரசியல் அமைப்பிற்குள் இருந்த விமர்சனம் பைடென் அதிகளவு நடவடிக்கைகள் எடுக்காததற்காக கண்டனம் செய்தது. “பைடென் இறுதியாக ஈரானைத் தடுத்து நிறுத்துவாரா” என்று தலைப்பிட்ட ஒரு தலையங்கத்தில், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பைடென் அளவுக்கு அதிகமான “கட்டுப்பாட்டை” கடைப்பிடிப்பதாக குற்றஞ்சாட்டியது, வெள்ளை மாளிகையானது “எதிரி இலக்கு நடைமுறைக்கு அமெரிக்க துருப்புகள் இனியும் தீனியாக இருக்காத வகையில் சரியான இலக்குகளுக்கு எதிராக போதுமான பலத்தைப் பயன்படுத்த” அழைப்பு விடுத்தது. அமெரிக்க அரசியல் நிறுவனத்தின் முன்னணி உறுப்பினர்களும் உடனடியாக தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்தனர், செனட் ஆயுத சேவைகள் குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் செனட்டர் ஜாக் ரீட் பகிரங்கமாக அவற்றை ஆதரித்தார். இந்தப் பெரும், நீண்ட தூர குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஈரானுக்குள் இருக்கும் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா எத்தகைய தாக்குதல்களை நடத்தும் திறனைக் கொண்டுள்ளது என்பதற்கு தெளிவாக நிரூபணம் ஆகும். “அமெரிக்க குண்டுவீச்சு விமானத்தின் திறன் என்னவென்றால், நாங்கள் விரும்பும் நேரத்தில் உலகில் எங்கு வேண்டுமானாலும் தாக்க முடியும்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் டக்ளஸ் ஏ. சிம்ஸ் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் கூறினார். முக்கியமாக, இந்தக் குண்டுவீச்சு விமானங்கள் அணுகுண்டு தாங்கிகளாக இருக்கின்ற வேளையில், அதே வகையான தாக்குதல்களைச் செயல்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன.  இத்தாக்குதல்கள் ஈரானின் பிரதான நிலப்பகுதியை நேரடியாக இலக்கு கொள்ளவில்லை என்றாலும், வெள்ளை மாளிகை அவற்றிற்கு முன்னதாக இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு புதிய சுற்று பொருளாதாரத் தடைகள் மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. ஜோர்டானில் இருந்து வரும் விமானங்கள் வரவிருக்கும் தாக்குதல்களில் கூட்டுச்சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று வெள்ளை மாளிகை குறிப்புக் காட்டியுள்ளது. இது எந்த அளவிற்கு மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் பிராந்தியப் போரின் பெரும் சுழற்சிக்குள் இழுக்கப்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது.   சிரியா மற்றும் ஈராக் மீதான அமெரிக்க தாக்குதல்கள், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் அடுத்த வாரம் சவூதி அரேபியா, எகிப்து, கட்டார், இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையை உள்ளடக்கிய பிராந்தியத்தில் அவரது சுற்றுப்பயணத்தைத் தொடர்கின்ற வேளையில் நிகழ்ந்துள்ளன. “காஸாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை நிலையாகவும், அதிகரித்த முறையிலும் வழங்க அனுமதிக்கும் மனிதாபிமான போர் இடைநிறுத்தம்” குறித்த பேச்சுவார்த்தை தான் தனது நோக்கம் என்று பிளிங்கன் கூறினார். யதார்த்தத்தில், பிளிங்கனின் விஜயம், ஏகாதிபத்தியத்தால் தூண்டிவிடப்பட்ட பிராந்திய போரை விரிவாக்குவதற்கு வசதி செய்து கொடுப்பதையும், அமெரிக்க ஆதரவுடன் காஸா மக்களுக்கு எதிராக நிர்மூலமாக்கும் போரை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஆதரவை முடுக்கி விடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிப்ரவரி 1 அன்று, உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) ஒரு செய்தியாளர் கூட்டத்தில், “100,000 க்கும் அதிகமான காஸாவாசிகள் இறந்துவிட்டதாகவோ, காயமடைந்துள்ளதாகவோ அல்லது காணாமல் போயுள்ளதாகவோ மற்றும் இறந்துவிட்டதாகவோ கருதப்படுகிறது” என்று கூறினார். யூரோ-மெட் மானிட்டரின் ஜனவரி 13 அறிக்கையை டெட்ரோஸ் மேற்கோள் காட்டினார், அது கொல்லப்பட்டவர்களில் 92 சதவீதம் பேர் அப்பாவி மக்கள் என்று குறிப்பிட்டது. யூரோ-மெட் இன் புள்ளிவிபரங்களின்படி, 32,246 காஸாவாசிகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக இறந்துவிட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது மேலும் இறந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது. இவர்களில் பெண்கள் 6,860 பேரும் குழந்தைகள் 12,660 பேரும் உள்ளனர். காஸாவில் 190,000 வீடுகளை இஸ்ரேல் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழித்துள்ளது, இது மொத்த வீட்டுத் தொகுதிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானதாகும். வியாழனன்று, நியூ யோர்க் டைம்ஸ் ஆனது காஸாவில் கட்டிடங்கள் திட்டமிட்டு இடிக்கப்பட்டதை அறிவித்து ஒரு கட்டுரை வெளியிட்டது, அதாவது “நவம்பர் முதல் குறைந்தபட்சம் 33 கவனமாக திட்டமிடப்பட்ட  அழிப்புகளாக மசூதிகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளின் ஒட்டுமொத்த பிரிவுகள் உட்பட நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தகர்த்துள்ளனர்,” என்று குறிப்பிட்டது. டைம்ஸ் மேலும் குறிப்பிட்டது, “இத்தகைய தகர்ப்புகளை நடத்த, சிப்பாய்கள் கண்ணிவெடிகள் அல்லது பிற வெடிகுண்டுகளை வைத்து, இலக்கு வைக்கப்பட்ட கட்டமைப்புகளுக்குள் நுழைந்து, பின்னர் பாதுகாப்பான தூரத்தில் இருந்து வெடிக்க வைக்கும் விசையை இழுத்து வெளியேற வேண்டும்.” கடந்த வாரம், சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலிய அரசாங்கம் இனப்படுகொலை நம்பத்தகுந்த வகையில் செய்திருக்க முடியும் என்று தீர்ப்பளித்ததுடன், மேலும் இனப்படுகொலை நடவடிக்கைகளையும் அறிக்கைகளையும் தடுக்க உத்தரவிட்டது. ஆனால் இது நடந்த ஒரு வாரத்தில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குறைந்தது 874 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. இதனுடன் பாரிய கூட்டு மரண தண்டனைகள் குறித்து மேலதிக சான்றுகளும் சேர்ந்துகொண்டுள்ளன. அதாவது இந்த வாரம் கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட 30 பேரின் பெரும் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது உட்பட, அவர்கள் உடனடியாக நியாயமான விசாரணையின்றி உடனடியாக கொல்லப்பட்டதாகத் தோன்றுகிறது. ஏகாதிபத்திய சக்திகளால் மத்திய கிழக்கில் நடத்தப்பட்டு வரும் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்க சர்வதேச நீதிமன்றமோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையோ இலாயக்கற்றவை என்பதையே காஸாவில் நடந்து வரும் மற்றும் அதிகரித்து வரும் இனப்படுகொலையும் மத்திய கிழக்கு முழுவதிலும் பாரிய புதிய அமெரிக்க குண்டுவீச்சு நடவடிக்கையும் தெளிவுபடுத்துகின்றன. ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனத்தின் இந்த வெடிப்பை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவது அவசியமாகும்.   https://www.wsws.org/ta/articles/2024/02/06/hixh-f06.html
    • சாத்திரி நல்ல அனுபவபட்டவர்👍, சாத்திரி மறைமுகமாக இவருக்கு உணர்த்தியுள்ளார், இவருக்கு தான் கோழியை விழுங்க வேண்டுமென்பதை தவறாக நிஜ கோழியை விளுங்கிவிட்டார்😪, இவருக்கு நெருக்காமான பஸ் இரயில் பயணங்களை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • 1. நான்  சொன்னது (சொல்ல வந்தது, ஏனெனில் அசாத்தையும், புலிகளையும் ஒன்றோடு ஒன்று நேரடியாக ஒப்பீடு, சமப்படுத்தல் செய்து இருக்கிறேன் என்ற புரிதல் வந்ததினால்)  - அசாத்தின் தேவையும், புலிகளின் தேவையும் ஒன்று - அதாவது இருப்பு -  வெளியில் சாதாரணமாகத் தெரிவது, அதிகார புலத்தினுள்  இருந்து பார்க்கும் போது அவை அச்சுறுத்தலாக தெரிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இப்பொது தெளிவாக  இருக்கிறது தானே.  2. இதில் இருந்தே மற்ற இயக்ககளை ஏன் புலிகள் அழித்தது என்று எழுந்தது  நான் சொன்னது இருப்பை அடிப்படையாக கொண்டு. நீங்கள்  சொல்லியது போராட்டத்தை பாதுகாக்க.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.