Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது 1350 படுக்கைகள் உள்ளன. எனினும் படுக்கை வசதிகள் போதாமையாக உள்ளன.

சில சமயங்களில் நோயாளிகள் நிலத்திலும் படுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் மேலும் மூன்று விடுதிகளை திறக்க உள்ளோம்.  இதன்மூலம் இந்த படுக்கை வசதிகள் ஓரளவு மேம்படும் என நினைக்கின்றேன்.

மகப்பேற்று கட்டட தொகுதி மற்றும் இருதய நோய் கட்டட தொகுதி அமைக்கப்படவேண்டும்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தொண்டர்களுக்கு நாம் நியமனங்களை வழங்க முடியாது. சுகாதார அமைச்சே அதனை செய்யவேண்டும்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையை பெறுபவர்கள் பூரணமான நம்பிக்கையை கொண்டுள்ளனர்.

ஆனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த வைத்தியசாலையில் என்ன நடைபெறுகின்றது என்பது தெரியாது என்ற வகையில் வைத்தியசாலையின் சேவையை சிதறடிக்கும் வகையில் சொல்லப்படும் காரணங்கள் பூதாகரமாக வெளியில் கொண்டு செல்லப்படும்.

ஆகவே உண்மையை அறிந்து கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி  யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள், அவர் தொடர்பில் அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவின் வைத்தியசாலை தொடர்பான நடத்தைகள் தொடர்பில் ஐபிசி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்த மேலதிக விடயங்கள் காணொளியில்...

https://ibctamil.com/article/jaffna-teaching-hospital-director-breaks-the-truth-1734797306



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.