Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"உலக அமைதி"

 

"யாதும் ஊரே யாவரும் கேளிர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்"
[உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் நம்முடைய சகோதர சகோதரிகளே.! அது போன்று உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமக்கு சொந்தமானதே என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக நம் உலகிற்கு எடுத்துக்காட்டிவிட்டு சென்றுள்ளார் கணியன் பூங்குன்றனார்.] 

இன்றைய என் அனுபவத்தில், உலக சமாதானம் என்று எடுத்தவுடன் அதைப்பற்றி மட்டும் கதைப்பதில் எந்த பயனும் இல்லை. அமைதிக்கான நோபல் பரிசு 1901 மற்றும் 2022 க்கு இடையில் 140 நோபல் பரிசு பெற்றவர்களுக்கு, 110 தனிநபர்கள் மற்றும் 30 அமைப்புகளுக்கு 103 முறை வழங்கப்பட்டுள்ளது. 


உதாரணமாக, அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான அவரது முயற்சிகளுக்காகவும், குறிப்பாக அண்டை நாடான எரித்திரியாவுடனான எல்லை மோதலைத் தீர்ப்பதற்கான அவரது தீர்க்கமான முயற்சிக்காகவும் எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலிக்கு 2019 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது. அதேபோல, அமைதிக்கான நோபல் பரிசு 2014  பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசித்த ஒரு மாணவியான மலாலா யூசுப்சாய் என்பவருக்கு பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடைக்கு எதிராக  "குழந்தைகள் மற்றும் இளைஞர்களை ஒடுக்குவதற்கு எதிராகவும், அனைத்து குழந்தைகளின் கல்வி உரிமைக்காகவும் போராடியதற்காக" வழங்கப்பட்டது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசு 2000  கிம் டே-ஜங் "தென் கொரியா மற்றும் பொதுவாக கிழக்கு ஆசியாவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகவும், குறிப்பாக வட கொரியாவுடன் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவும்" கொடுக்கப்பட்டது. அந்த வரிசையில், அமைதிக்கான நோபல் பரிசு 1994 யாசர் அராபத், ஷிமோன் பெரஸ் மற்றும் யிட்சாக் ராபின் ஆகியோர் "மத்திய கிழக்கில் அமைதியை உருவாக்குவதற்கான அவர்களின் முயற்சிகளுக்காக" வழங்கப்பட்டது

இவை ஒரு சில எடுத்துக்காட்டே . ஆனால் என் கேள்வி எத்தியோப்பிய - எரித்திரியா எல்லைப்பிரச்சனை உண்மையில் தீர்ந்து உள்ளதா?, பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடைக்கு என்னவாச்சுது இப்ப ? [ஆப்கானிஸ்தான்], தென் கொரியா -  வட கொரியாவில் அமைதி நிலவுகிறதா?, அதே போல மத்திய கிழக்கில் இன்னும் என்ன நடக்கிறது?. இவை ஒரு சில கேள்விகளே!

நான் பிறந்து வளர்ந்த இலங்கையில் அமைதிப்படை ஒன்றை இந்தியா 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி அனுப்பியது. அது, அந்த ஒப்பந்தம், இன்னும் இன்றும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம்  தொல்லியல், கல்வெட்டு, வரலாறு, அறிவியல்  மற்றும் பண்டைய பயணிகளின் குறிப்புக்களை தவிர்த்து மகாவம்சம் என்ற கற்பனை புராணத்தை சிங்களவர் தமது வரலாறாக, சிங்கள மக்களைத் தவறாக நம்பவைத்து, புத்தர் போதிக்காத, விரும்பாதவற்றை கையில் தூக்கி வைத்திருப்பதே ஆகும். அப்படித்தான் இந்தியாவில் ராமாயணம் என்ற புராணக்கத்தையும் இருக்கிறது என்பது வெள்ளிட மலையே! 

போரே இல்லாத சமுதாயம்தான் மிகவும் மேம்பட்ட சமுதாயம் ஆகும், மனிதன் பண்பட்டவன் என்பதைக் காட்டுவதும் ஆகும். போரினால் ஏற்படும் அழிவு ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் இராணுவத்திற்கெனச் செலவிடும் தொகையினை ஆக்கபூர்வச் செயல்களுக்கெனச் செலவிட்டால் உலகில் எங்கும் வறுமையும் கல்வியறிவின்மையும் வேலையின்மையும் போன்ற கொடுமைகளே இருக்கமாட்டா என்பதனை எத்தனையோ சான்றோர்கள் எத்தனையோ விதங்களில் அறிவுறுத்தியுள்ளனர். 


உதாரணமாக இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தி, ஏற்றத்தாழ்வு இல்லா சம உரிமை கொடுக்காததால் தான் அங்கு போரே உண்டாக்கியது. முக்கியமாக மொழி உரிமை, தரப்படுத்தல் என்ற பல்கலைக்கழகம் புகும் தகமை, சிங்களமயமாக்கல், குடியேற்றம், போன்றவற்றைக்  கூறலாம். அதுமட்டும் அல்ல போர்விதிகள், ஒழுங்குமுறைகள் அங்கு நடைபெறவில்லை என்பதும் அதற்கான முறையான விசாரணையோ அல்லது நீதியோ இன்னும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

புறநானுறு ஐந்து, குழந்தையைக் காக்கும் தாய் போல உன் நாட்டை நீ காப்பாற்றுக. அது கிடைத்தற்கு அரிய பேறு ஆகும். நாடுகள் அமைதியைப் பேணி, நல்லுறவோடு வாழ வேண்டும் என்றால் மற்ற நாடுகளின் [இன்றைய சூழலில்: மற்ற இனத்தவரின்] உள் ஆட்சிப்போக்கில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்கிறது.    
 


“நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீங்கி, நீங்கா

நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி !
அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே“

தகடூர் யாத்திரை என்னும் நூல் அதியமானின் மீது நடத்தப்பட்ட  போர் குறித்த ஒரு நூலாகும். முழுதும் கிடைக்காத ஒரு அரிய நூல். இதில் ஒரு மறக்குடி மறவனுக்கும் ஒரு மன்னனுக்கும் நடக்கும் உரையாடல் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய படைபலத்தைக் கொண்டு எதிரியை வெற்றி பெற முடியாது என்று ஒரு மன்னன் உணர்கிறான். உடனே, படைத்தளபதியாக விளங்கும் மறக்குடி தலைவனை அழைத்து இரவில் எதிரிப்படையைத் தாக்குமாறு அறிவுறுத்துகிறான், ஆணையிடுகிறான். 


இதைத்தான் இலங்கை, முள்ளிவாய்க்காலில் கண்டோம். உதாரணமாக வெள்ளைக்கொடி விடயம், கொத்துக்குண்டு, மற்றும் பாதுகாப்பு வளைய தாக்குதல் போன்றவற்றைக் கூறலாம்.  

“பரவை வேல் தானைப் பகலஞ்சு வேனா
இரவே எறியென்றாய் என்னை – விரைவிரைந்து
வேந்தே நீ ஆயினாய் அன்றிப் புகுவதோ
போந் தென்னைச் சொல்லிய நா” 
(தகடூர் யாத்திரை – பா – 14) 

எனவே உண்மையில் அமைதியை நிரந்தரமாக பேணவேண்டுமாயின் குறைந்தது மூன்று நிலைகள் முக்கியம் . 

முதலாவது உள் அமைதி - மனது. 


இரண்டாவது நமது உடனடி சூழல், நமது குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்தில் அமைதி. 


மூன்றாவது உலகில், நாடுகளுக்கு இடையேயான அமைதி.


சமூகங்கள் மற்றும் குடும்பங்களில் அமைதியைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின்,  உள் அமைதியே அடித்தளம். மற்றும் மனிதகுலத்தின் மேலான நன்மைக்காக செயல்பட தேவையான தைரியம் மற்றும் நம்பிக்கைக்கு அமைதியான மனநிலையும் அவசியம்.

இன்று உலகில் நடைபெறும் பல பிரச்சனைகள், அமைதியைப் பற்றி சாதாரணமாக கவலைப்படாதவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் அதைத் தேடத் தொடங்குகிறார்கள். உதாரணமாக உக்ரைன் போர் நிலவரத்தை பாருங்கள். உலக பொருளாதாரம் எவ்வளவு பாதிக்கப் பட்டுள்ளதை கவனியுங்கள். அது மட்டும் அல்ல உலகின் வல்லரசு எனப்படும் அமெரிக்க கொத்துக்குண்டை கூட  அண்மையில் கொடுத்து உள்ளது. இது அமைதியை ஏற்படுத்துமா ? சற்று சிந்தியுங்கள்!

ஆப்கானிஸ்தான், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, யேமன் மற்றும் இலங்கை உட்பட உலகின் பிற பகுதிகளில் மனிதாபிமான நெருக்கடிகள் அல்லது சிறுபான்மை மொழி / சமய மக்களுக்கு எதிரான வன்முறைகள், இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் பல பரிமாண சவால்களின் சிக்கலான தன்மையை மேலும் மோசமாக்கியுள்ளன. அறியாமை, தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவது காலத்தின் தேவை. இந்த நச்சு கலவையானது மனித நாகரிகத்தின் அடித்தளத்தையே அச்சுறுத்தி வருகிறது.

உள் அமைதி இல்லாமல், உலக அமைதி, நிலையான வளர்ச்சி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் வெளிப்புற இலக்குகள் கட்டாயம் மாயமாகவே இருக்கும். அமைதி என்பது சந்தையில் வாங்கக்கூடிய ஒன்றல்ல. அது நம் ஒவ்வொருவருக்குள்ளும் வளர்க்கப்பட வேண்டும்.

உள் அமைதியைக் கண்டறிவதில் முதன்மையான தடையாக இருப்பது மன அழுத்தமே. இன்று, இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முன் எப்போதும் இல்லாத அளவில் மன அழுத்தம், தனிமை மற்றும் கவலையை அனுபவித்து வருகின்றனர். மனச்சோர்வு மற்றும் மன ஆரோக்கியம் உலகளாவிய கவலையாக மாறியுள்ளது. அது மட்டும் அல்ல புராணங்கள், பொய் தகவல்கள் அவர்களுக்கு சமயம் என்ற போர்வையில் அவையுடன் கலந்து ஊட்டப்படுகின்றன.

"எம் மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒன்றே இறைவன்" எத்தனை பேர் இதை பின்பற்றுகிறார்கள், இலங்கை விடயம் உங்களுக்கு தெரியும், அதை விட, மக்கள் ஆட்சியின் பெரிய அண்ணனாக இருக்கும் இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற மணிப்பூர் பிரச்சனை, பாபர் மசூதி,  இப்படி பல கூறலாம். உங்களுக்கு தெரியும். நான் சொல்லத் தேவையில்லை.       

துரதிர்ஷ்டவசமாக, வீட்டிலோ அல்லது பள்ளியிலோ நம் எதிர்மறை உணர்ச்சிகளை எவ்வாறு நிர்வகிப்பது, மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது மற்றும் வாழ்க்கையின் கடினமான கட்டங்களைத் தாங்குவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதும் இல்லை. கற்றுக் கொடுப்பதும் இல்லை. மன அழுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உணவளிக்கிறார்கள், இதனால் வன்முறை சுழற்சியை உருவாக்குகிறது. மறுபுறம், உள் அமைதியிலிருந்து வரும் வலிமை ஒரு ஆக்கபூர்வமான மனநிலையுடன் சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது.

ஒன்றைக் கவனத்தில் கொள்ளுங்கள் உயர்மட்டக் கொள்கைகளை இயற்றுவதால், அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதால், அமைதியைப்பற்றி பேசுவதால் மட்டும் உலக அமைதி ஏற்பட முடியாது. அது செயல்பட வேண்டும். அமைதியான மனிதர்கள்தான் அமைதியான உலகத்தை உருவாக்க முடியும். உள் அமைதி கொண்ட ஒரு நபர், தங்கள் தொடர்பில் வருபவர்களை சாதகமாக மாற்ற முடியும், இதனால் அவர்களின் சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்பது என் சிறிய கருத்து

இதுபோன்ற சமயங்களில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். எல்லா நாடுகளுக்கும், அதில் வசிக்கும் மக்களுக்கும் இடையே உள்ள அனைத்து வேறுபாடுகளுடன், பூமியில் ஒருபோதும் அமைதி இருக்காது என்பது என் கருத்து. இருப்பினும், சமூக, தனிப்பட்ட, பொருளாதார, மற்றும் அரசியல் அமைதி மூலம் அதை அடைய முடியும் என்று நம்புகிறேன். உலகம் வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது, அதைத் தடுக்க மனித இனம் ஒன்றுபட வேண்டும். இருப்பினும், மனிதர்கள் சுயநலம் மற்றும் கருணை இரண்டையும் கொண்டுள்ளனர், இதன் பொருள் எப்போதும் சில வேறுபாடுகள் இருக்கும். ஒரு மனிதனாகிய நாம் உலகத்தை மேம்படுத்த உதவக்கூடிய பல விடயங்கள் உள்ளன, 

வன்முறை என்பது எப்போதும் நிற்காத ஒரு பெரிய மோதல். பல ஆண்டுகளாக வன்முறைகள் போர்களைத் தொடங்கி, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று, குடும்பங்களைத் தனித்தனியாகப் பிரிக்கின்றன. வன்முறை மட்டுமல்ல, உலகம் நடத்தப்படும் விதமும் கவலைக்குரியது. 

இப்போது எங்களிடம் கார்கள், செல்போன்கள், இணையம், நம் வாழ்க்கையை எளிதாக்கும் அன்றாட உபயோகப் பொருட்கள் உள்ளன. என்றாலும் யுத்தம் மற்றும் கொலைகள் தொடர்கின்றன.  அது எப்போதாவது முடிவுக்கு வருமா என்பது உண்மையில் அது ஒரு கேள்வியே இன்னும்? மனித இனம் ஒன்று சேராமல் உலகம் நிம்மதியாக இருக்க முடியாது, ஏனென்றால் அதைத்  துண்டாடியவர்கள் நாம்தான். ஆனால் அதைத் தடுக்க அவர்கள் எங்கும் நெருங்கவில்லை. 

பூமியில் அமைதியை ஏற்படுத்த, ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை கொண்டு வர வேண்டும். ஆதிகாலம் முதல் பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்தவில்லை. இந்த நேரத்தில், உலகளாவிய மக்களாகிய நாம் பாலின சமத்துவத்தை சமப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பாலின சமத்துவம் என்பது ஒரு உரிமை மட்டுமல்ல, மிகவும் அமைதியான உலகத்தை நோக்கி சரியான திசையில் செல்வதற்கான ஒரு வழியாகும். 

உலக அமைதியின் இலக்கை அடைவதன் மூலம், நாடுகளுக்கு இடையேயான அமைதி செயல்முறை நடைமுறையில் இருக்க வேண்டும். கி மு 2,700  இலிருந்து பல்வேறு நம்பிக்கைகளுக்கு இடையே  ஒரு போர் இருந்து உள்ளது,  இது பெரும்பாலும் மத மோதல்கள், பழிவாங்குதல், பிரதேச தகராறுகள் அல்லது அரசியல் நிலைப்பாடுகளில் இருந்து நிகழ்கிறது. மக்கள் எப்பொழுதும் தங்களுக்கும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள் , எனவே இன்றைய உலகில் மக்கள் ஒருவரின் எண்ணங்களையும் உணர்வுகளையும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும், மேலும்  உடன்படாமல் அல்லது மோதலை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒரு கருத்துக்கு உரிமையாளராக இருப்பது, ஒரு கருத்தை வன்முறையில் வெளிப்படுத்துவதில் இருந்து வேறுபட்டது. ஒருவரைக் கொல்வதாலோ, பாகுபடுத்திப் பார்ப்பதாலோ அல்லது புண்படுத்துவதாலோ எதுவும் கிடைக்காது என்பதை மக்கள் உணர வேண்டும். கதை அல்லது கருத்தின் இரு பக்கங்களையும் பார்ப்பது மற்றும் மக்கள் அனைவரும் வெவ்வேறு விடயங்களை நம்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் மிகவும் அவசியம். 

சமாதானத்தை அடைய நாம் எடுக்கக்கூடிய மற்றொரு படி சமமான செல்வம்.  உலக வங்கியின் கணக்கெடுப்பின்படி, கிளர்ச்சி குழுக்களில் சேருபவர்களில் பெரும்பாலானோர்  பொருளாதார வாய்ப்புகள் இல்லாததால் அவ்வாறு செய்கிறார்கள் என்கிறது. அதுமட்டும் அல்ல, இன்றைய ஊழல், உறவினர்கள், நண்பர்கள் அல்லது கூட்டாளிகளுக்கு ஆதரவாக செயல்படுதல் போன்றவற்றால், பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த நாட்டு அரசாங்கத்தை நம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மக்களால் காவல்துறையை நம்ப முடியாத அல்லது நீதிக்கான அணுகலைப் பெற முடியாத இடங்களில் மோதல்கள் நடக்கும் என்பது என் நம்பிக்கை. அதேபோல ஒரு சமயத்தை வளர்ப்பதற்காக மற்ற சமயத்தை தாக்குதல் அல்லது பணங்கள், வசதிகள் கொடுத்து மாற்றுதல் இவைகளையும் கூறலாம். 


நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் தமிழர்கள், முதலில் கிருஸ்துவத்துக்கு மாற்றப்பட்டு, பின் அவர்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்ட வரலாறு கதையல்ல, உண்மை நிகழ்வு!  

ஒருசாராருக்கான ஒதுக்கீட்டை நிறுத்துதல், ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்மையான சமத்துவத்தைக் கொண்டு வருதல், சமமான செல்வத்தைப் பகிர்தல், காலநிலை மாற்றத்தை சமாளித்தல், ஆயுத விற்பனையைக் கட்டுப்படுத்துதல், அரசியல் இடைவெளிகளை [ political space] ஏற்றுக்கொள்வது போன்றவற்றின் மூலம் உலக அமைதியை கட்டாயம் அடைய முடியும், ஆனால் ஒருவரால் மட்டும் உலகை மாற்ற முடியாது என்பதை மக்கள் உணர வேண்டும். ஒரு மாற்றத்தை உருவாக்க பூமியில் வாழும் மக்கள் அனைவரும் இணைய வேண்டும். 

ஆம், மக்கள் ஒருவரையொருவர் சமாதான கருத்துக்கள் மூலம் அணைக்கவேண்டும். தங்களுக்குள் செயல் படுத்தவேண்டும். எனவே, ஒருவரையொருவர் கருத்துக்களைக் கேட்டு ஒருவரையொருவர் சிக்கலைத் தீர்ப்பதன் மூலம், உங்கள் சமாதானத்துக்கான பங்கை ஆரம்பியுங்கள்! அது அறியாமை என்னும் ஒரு முனைக்கும், அறிந்துகொள்ளல் என்னும் இன்னொரு முனைக்கும் இடையில் அப்பாவி மக்களின் இரத்தத்தையும், வெறுப்பையும் கொண்டிராததும், மாறுபட்ட நுண்ணுர்வுகளை மிக நுட்பமாக எடுத்துரைக்கும் கலை என்னும் எரிபொருளை கொண்டு வேகமாக ஓடும் ஒரு வாகனம் போல உலக சமாதான பாதையில் நீங்கள் புறப்படுவீர்களாக !!

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம், 
அத்தியடி, யாழ்ப்பாணம்]

472783739_10227791476435145_7039242437143526869_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=9TpVG9P2fRUQ7kNvgECKxjp&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AFHxw9Cy4urLDQ6u_L2J6CX&oh=00_AYB-IVdMWy4PS3qDXNy4G4Y1aWFGU7KMK4vydzBi7VZ3-A&oe=67901004  472921251_10227791476875156_2227149544939293480_n.jpg?stp=dst-jpg_p526x395_tt6&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=OfJJSXaiTA8Q7kNvgE7Fei6&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AFHxw9Cy4urLDQ6u_L2J6CX&oh=00_AYD2MA7ZK1itnEcC34JAd4S01KcEdjOagqSYJqxw_raTxw&oe=678FF593


 

  • கருத்துக்கள உறவுகள்

கடவுளால் மட்டுமே சாத்தியம் 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.