Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக குடியரசு காங்கோவில் மீண்டும் பயங்கர சண்டை: வன்முறையால் பல ஆயிரம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம்

0

 

 
9-133.jpg?type=webp&quality=80காங்கோ: ஜனநாயக குடியரசு காங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கும், ஆயுதம் ஏந்திய இன குழுக்களுக்கும் இடையே மீண்டும் உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சி படைகளில் ஒன்றான M23 தற்போது காங்கோ நாட்டு ராணுவத்தையும், ஐநா-வின் சமாதான தூதுவர்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கோமா என்ற நகருக்குள் புகுந்துள்ள கிளர்ச்சியாளர்கள் தங்கள் கண்ணில் படும் இன குழுக்களையும், ராணுவத்தையும் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அதற்கு ராணுவமும், இன குழுக்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

 

 

வைரம், தங்கம், கனிம வளங்கள் கொட்டிக்கிடக்கும் ஜனநாயக குடியரசு காங்கோவை மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு உருக்குலைத்து கொள்ளையடித்து வருகின்றன என்பது குற்றச்சாட்டு. கிளர்ச்சியாளர்களையும் மேற்கத்திய நாடுகள் உருவாக்குகின்றன என்ற புகாரும் உண்டு. அந்த நாடுகளின் தூண்டுதலுக்கு இரையாகி கிடைக்கும் காங்கோவில் பலமுறை தாக்குதல் தொடர்வதால் எப்போதும் தோட்டாக்கள் சுடும் சத்தம் கேட்டு கொண்டே இருக்கின்றன. இதனால் உயிருக்கு பயந்து லட்ச கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பியோட தொடங்கியுள்ளனர்.

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Fighting rages between rebels and army in Democratic Republic of Congo | BBC News

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கோவின் முக்கிய நகரம் ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் - வீதிகளில் உடல்கள்

Published By: RAJEEBAN   30 JAN, 2025 | 10:53 AM

image

ருவாண்டா ஆதரவு கொங்கோ கிளர்ச்சியாளர்கள் கொங்கோவின் கிழக்கில் உள்ள முக்கியநகரமான கோமாவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

ருவாண்டா துருப்பினரின் உதவியுடன் கொங்கோ கிளர்ச்சியாளர்கள் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் ஏரிகரை நகரமான கோமாவிற்குள் திங்கட்கிழமை நுழைந்ததை தொடர்ந்து கடும் மோதல் இடம்பெற்றது.

ஒருதசாப்த காலத்திற்கு மேல்நீடிக்கும் மோதலின் ஒரு பகுதியாகவே இந்த புதிய திருப்பம் அமைந்துள்ளது.

கொங்கோ கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தொடர்ந்து கோமா நகர வீதிகளில் உடல்களை காணமுடிகின்றது  மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன.

congo_violence.jpg

செவ்வாய்கிழமை இந்த நகரத்தின் பிரதான விமான நிலையத்தை கொங்கோ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதன் காரணமாக பொதுமக்களிற்கு நிவாரணங்களை கொண்டு செல்வதற்கான பிரதான வீதி நகரத்திலிருந்து துண்டிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது.

கோமா நகரத்தின் மீதான தாக்குதலிற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

பல நாடுகள் ருவாண்டாவை கண்டித்துள்ளதுடன் உடனடி யுத்த நிறுத்தத்தை கோரியுள்ளன.

ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை தடுப்பதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை எடுக்கவேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொங்கோவின் எம் 23 கிளர்ச்சிக் குழுவிற்கு  டுட்சி இனக்குழு தலைமைதாங்குகின்றது, அவர்களிற்கு ருவாண்டா ஆதரவளிக்கின்றது.

30வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இனப்படுகொலை இடம்பெற்ற காலம் முதல் கொங்கோ இந்த  மோதல்களில் சிக்குண்டுள்ளது.

30 வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலை உலகை உலுக்கியமை குறிப்பிடத்தக்கது. ஹூட்டு தீவிரவாதிகள் டுட்சி இனத்தவர்களை இனப்படுகொலை செய்தனர். இதன் பின்னர் ஹூட்டு ஆட்சியாளர்கள் டுட்சிக்கள் தலைமையிலான படையினரால் பதவி கவிழ்க்கப்பட்டனர்.

இந்த இனப்படுகொலையில் ஈடுபட்ட சிலர் இன்னமும் கொங்கோவில் உள்ளனர் என ருவாண்டா குற்றம்சாட்டுகின்றது.

அவர்கள் கொங்கோ அரசபடைகளுடன் இணைந்து ஆயுதகுழுக்களை உருவாக்கியுள்ளனர்  என தெரிவிக்கும் ருவாண்டா கொங்கோவில் உள்ள டுட்சி இனத்தவர்களிற்கும் ருவாண்டாவிற்கும் அவர்களால் ஆபத்து எனவும் தெரிவிக்கின்றது.

கொங்கோ இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், ருவாண்டா ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி கனியவளங்களை கொள்ளையடிக்கின்றது என  குற்றம்சாட்டுகின்றது.

https://www.virakesari.lk/article/205303

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கோவின் கிழக்கு பகுதி நகர மோதல்கள் - 775 பேர் பலி

Published By: RAJEEBAN   02 FEB, 2025 | 11:11 AM

image

கொங்கோவின் கிழக்கில் உள்ள கோமா நகரத்தில் ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து இடம்பெற்ற மோதல் காரணமாக 775 பேர் உயிரிழந்துள்ளனர் என கொங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நகரம் தற்போது கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது.

எனினும் ஏனைய பகுதிகளை நோக்கி கிளர்ச்சியாளர்கள் நகர்வதை கொங்கோ இராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது சில கிராமங்களை கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்டுள்ளது  கொங்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோமா நகரின் பிரேத அறைகள் மருத்துவமனைகளில் 773 உடல்கள் உள்ளன ,2800 பேர் இதுவரை காயமடைந்துள்ளனர்  என கொங்கோ அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

உயிரிழப்புகள் அதிகமாகயிருக்கலாம் என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

congo_goma_2.jpg

கிளர்ச்சியாளர்கள் கோமா நகரத்தின் வீதிகளை சுத்தம் செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்,இதன்காரணமாக உயிரிழப்புகள் குறித்த இந்த எண்ணிக்கை  தற்காலிகமானது என தெரிவித்துள்ள கொங்கோ அரசாங்கத்தின் பேச்சாளர் பாரிய மனித புதைகுழிகள் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை குடிநீர் உட்பட அடிப்படை சேவைகளை வழங்குவதாக கிளர்ச்சியாளர்கள் உறுதியளித்துள்ளதை தொடர்ந்து கோமா நகரமக்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்பியவண்ணமுள்ளனர்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளை சுத்தம் செய்கின்றனர்.

நான் களைப்படைந்துவிட்டேன்  ,ஒவ்வொரு பக்கத்திலும் யாராவது ஒருவர் உறவினை இழந்துள்ளார் என 25 வயது ஜீன் மார்கஸ் தெரிவித்துள்ளார். இவரும் வன்முறை காரணமாக உறவுகளை இழந்துள்ளார்.

கொங்கோவின் எம் 23 கிளர்ச்சிகுழுவிற்கு  டுட்சி இனக்குழு தலைமைதாங்குகின்றது  அவர்களிற்கு ருவாண்டா ஆதரவளிக்கின்றது.

30வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இனப்படுகொலை இடம்பெற்ற காலம் முதல் கொங்கோ இந்த  மோதல்களில் சிக்குண்டுள்ளது.

30 வருடங்களிற்கு முன்னர் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலை உலகை உலுக்கியமை குறிப்பிடத்தக்கது. ஹ_ட்டு தீவிரவாதிகள் டுட்சி இனத்தவர்களை இனப்படுகொலை செய்தனர். இதன் பின்னர் ஹ_ட்டு ஆட்சியாளர்கள் டுட்சிக்கள் தலைமையிலான படையினரால் பதவி கவிழ்க்கப்பட்டனர்.

 இனப்படுகொலையில் ஈடுபட்ட சிலர் இன்னமும் கொங்கோவில் உள்ளனர் என ருவாண்டா குற்றம்சாட்டுகின்றது.

அவர்கள் கொங்கோ அரசபடைகளுடன் இணைந்து ஆயுதகுழுக்களை உருவாக்கியுள்ளனர்  என தெரிவிக்கும் ருவாண்டா கொங்கோவில் உள்ள டுட்சிஇனத்தவர்களிற்கும் ருவாண்டாவிற்கும் அவர்களால் ஆபத்து எனவும் தெரிவிக்கின்றது.

கொங்கோ இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன் ருவாண்டா ஆயுதக்குழுக்களை பயன்படுத்தி கனியவளங்களை கொள்ளையடிக்கின்றது என  குற்றம்சாட்டுகின்றது.

https://www.virakesari.lk/article/205576

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.