Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று!

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று (02) இடம்பெறவுள்ளதாக என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று  காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய கிரியைகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் அன்னாரது உடல்  பி.ப 3 மணியளவில்  தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சகலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு  இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரியுள்ளார்.

 உடல்நிலை பாதிப்பால் கடந்த 29 ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1419299

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர் , மத குருமார்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் , என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

1942ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா, வீட்டில் தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 29ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

2025_02_02_12_29_IMG_7073-600x338.jpg

2025_02_02_12_48_IMG_7100-600x338.jpg

2025_02_02_12_04_IMG_7002-600x336.jpg

2025_02_02_13_11_IMG_7165-600x338.jpg

2025_02_02_14_04_IMG_7233-600x338.jpg

https://athavannews.com/2025/1419369

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

  • கருத்துக்கள உறவுகள்

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்

Published By: DIGITAL DESK 3   02 FEB, 2025 | 03:59 PM

image
 

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல், இன்று ஞாயிற்றுக்கிழமை (02) தகனம் செய்யப்பட்டது.

மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாவிட்டபுரம் தச்சன்காடு இந்துமயானத்தில் அன்னாரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதி நிகழ்வில் அரசியல்வாதிகள், பொது அமைப்பினர், மத குருமார்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

1942ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி பிறந்த மாவை. சோ. சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சிகிச்சைகள் பலனின்றி கடந்த 29ஆம் திகதி காலமானார். 

01__8_.jpg

01__3_.jpg

2025_02_02_12_05_IMG_7007.JPG

IMG-20250202-WA0011.jpg

2025_02_02_13_03_IMG_7140.JPG

2025_02_02_13_11_IMG_7165.JPG

01__7_.jpg

01__2_.jpg

2025_02_02_14_00_IMG_7221.JPG

2025_02_02_14_04_IMG_7233.JPG

02__4_.jpg

https://www.virakesari.lk/article/205601

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.