Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் வடக்கு படை நடவடிக்கையின் உயிர்நாடியில் விழுந்த பேரிடி

Featured Replies

சிறிலங்காவின் வடக்கு படை நடவடிக்கையின் உயிர்நாடியில் விழுந்த பேரிடி

இலங்கையின் வடக்குப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கமானது படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உயிர்நாடியாக இருந்த அனுராதபுரம் வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலித் தாக்குதல் அணி நடத்திய அதிரடித் தாக்குதலானது சிறிலங்காவுக்குப் பேரிடியாக கருதப்படுகிறது.

அநுராதபுரம் வான்படைத் தளம் வடக்குப் போர்முனையின் பிரதான முதன்மைத் தளமாக உள்ளது.

மன்னார்- வவுனியா- மணலாறு முன்தளங்களின் குறிப்பாக வன்னியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா படைத்தரப்பின் நடவடிக்கைக்கான உயிர்நாடியாக அநுராதபுரம் தளம் உள்ளது.

1961 இல் சிறிமாவோ அரசால் குடிசார் வானூர்தி நிலையமாக உருவாக்கப்பட்ட அநுராதபுரம் வானூர்தி நிலையம் 1983 இல் வான்படை இயங்கும் தளமாக மாறியது.

வான்படையின் வடபகுதிப் பின்தளமாக இது 1983 இல் மாற்றப்பட்டது. வடபகுதியில் தாக்குதல் நடத்தும் சப்சொனிக் தாக்குதல் வானூர்திகளின் தளமாக அநுராதபுரம் விளங்கியது.

சியமாசெற்றி- புக்காரா வானூர்திகளின் தளமாக இது விளங்கியது.

வடக்கு - கிழக்குப் பகுதி வான்படைத் தளங்களில் திருகோணமலை சீனன்குடா தவிர்ந்த வேறு எந்த தளத்திலும் வானூர்திகள் நிறுத்தப்படுவதில்லை. விடுதலைப் புலிகள் ஊடுருவித் தாக்குவார்கள் என்பது இதன் காரணமாகும்.

இந்த நிலையில் அநுராதபுரம் வான்படையின் வடக்கு - கிழக்குப் பின்தளமாக இருந்தது. சுப்பர் சொனிக் தாக்குதல் வானூர்திகள் வந்த பின்னர் அவை இறங்கி ஏறும் வசதிகள் இல்லாத காரணத்தாலும் பலாலி சீனன்குடா தளங்களில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு இல்லை என்பதால் கட்டுநாயக்க வான்படைத்தளத்துக்கு அனைத்தும் மாற்றப்பட்டன.

அநுராதபுரம் வான்படையின் முதன்மை பயிற்சித்தளமாகவும் மாற்றப்பட்டது. முன்னர் அது சீனன்குடாவில் இருந்தது. சீனன்குடாவிலிருந்து வான்படையினர் வானூர்திப் பயிற்சி மையம் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டது. அத்துடன் வன்னிப்பகுதி எல்லையில் சிறிலங்கா வான்படை உடனடித்தாக்குதல் நடத்துவதற்கு எம்ஐ - 24 ரக உலங்குவானூர்திகள் பெரும்பாலானவை அநுராதபுரத் தளத்தில் தான் நிறுத்தப்பட்டு வந்துள்ளன.

மேலும் செஸ்னா வகை பயிற்சி வானூர்திகள் குண்டுத்தாக்குதல் பயிற்சிக்காக சியமா செற்றி- புக்கார வானூர்திகளும் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் வடக்கு போர்முனைக்கான முதன்மைப் பின்தளமான அநுராதபுர தளத்தின் மீது விடுதலைப் புலிகள் இரு பரிமாணத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தரைவழியில் முன்னரண் பகுதிகள் வழியில் விடுதலைப் புலிகளின் கரும்புலித்தாக்குதல் அணி ஒன்று ஊடுருவியது.

ஊடுருவிய இந்த அணி காடுகள் வழியாக அநுராதபுரத்துக்குள் நுழைந்தது. அநூராதபுரம் வான்படைத்தளம் நகரிலிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் நுவரவேவ என்ற குளத்தின் கரையில் அமைந்துள்ளது.

கரும்புலி அணியினர் தாக்குதல் நடத்திய அதே நேரத்தில் தமிழீழ வான்படையினரும் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி தளத்துக்கு பின் திரும்பியுள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலினால் சிறிலங்கா கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

http://www.puthinam.com/

Tamil Tiger suicide squad in audacious strike

By Peter Foster, South Asia Correspondent

Last Updated: 2:41am BST 23/10/2007

Tamil Tiger rebels staged a spectacular pre-dawn raid on a Sri Lankan air force base on Monday, using light aircraft and suicide-bombers to destroy military planes and equipment worth more than £20 million.

Part of a helicopter gunship shot down during the Tamil raid

The attack, by 21 members of the elite Black Tiger suicide unit, has left Sri Lanka's military stunned and is a major setback to the government's attempts to seek a military solution to the country's 24-year civil war.

Read More

http://www.telegraph.co.uk/news/main.jhtml...3/wlanka123.xml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.