Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த பெண் கைது

06 MAY, 2025 | 03:21 PM

image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ“ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட பெண் ஒருவர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல் - குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள காணி  பதிவாளர் அலுவலகம் ஒன்றில் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட பெண் ஒருவர்  இருப்பதாக குளியாப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை உடனடியாக கைது செய்துள்ளனர்.

இது தொடர்பில் குளியாப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தியின் விபரங்கள் :

பெயர்  - பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி 

வயது - 25 

தேசிய அடையாள அட்டை இலக்கம் - 995892480v

முகவரி - இல. 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம

https://www.virakesari.lk/article/213834

  • Replies 81
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    பாக்க நம்ம அர்ச்சனா மாதிரி இருக்கார் 🤣

  • goshan_che
    goshan_che

    பாலாவி இப்படியுமா பெயர் வைப்பார்கள்🤣 இல்லையாம்…பின்புர செவ்வந்தியாம்🤣

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    Clean Srilanka ல, அவனும் பங்கெடுக்க நினைத்தானோ..... என்னவோ... அதுவும் ID ல Covid QR code வச்சி அடிச்சான் பாரு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஏராளன் said:

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை; இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த பெண் கைது

குருணாகல் - குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள காணி  பதிவாளர் அலுவலகம் ஒன்றில் இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட பெண் ஒருவர்  இருப்பதாக குளியாப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை உடனடியாக கைது செய்துள்ளனர்.

இவர்தான்... உண்மையான சந்தேக நபராக இருந்தால்...

மூன்று மாதமாக... அரச அலுவலகத்தில் வேலை செய்துள்ளார். துணிவு தான்.

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் புதிய திருப்பம்

Published By: DIGITAL DESK 3

04 JUN, 2025 | 05:13 PM

image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த  "கணேமுல்ல சஞ்சீவ" சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சமிந்து தில்ஷான் பியுமங்க, செவ்வாய்க்கிழமை (04)  அடையாள அணிவகுப்புக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, பூசா சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ள பியுமங்க, பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.  அடையாள அணிவகுப்பிற்கு சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் இருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பியுமாங்க தான்  என்பதை அவர்களால் உறுதியாக அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் பிரதான சந்தேகநபர் தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, ஜூன் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், அடுத்த விசாரணைக்கு ஸ்கைப் மூலம் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 கொலை வழக்குகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் 5ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த நேரத்தில் பூசா சிறைச்சாலையிலிருந்து சிறைசாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/216592

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-58.jpg?resize=750%2C375&ssl=

துப்பாக்கிச் சூட்டில் கணேமுல்ல சஞ்ஜீவவின் நெருங்கிய சகா உயிரிழப்பு!

ராகமை, படுவத்தை பகுதியில் நேற்றிரவு (03) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்ஜீவவின் நெருங்கிய நண்பரான “ஆர்மி உபுல்” என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் பாதிக்கப்பட்ட நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான போட்டியுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து ராகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437976

  • கருத்துக்கள உறவுகள்

கமாண்டோ சலிந்த மற்றும் கெஹெல்பத்தர பத்மே கைது?

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் இன்று (9) மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கைதுகள் தொடர்பான தகவல்களை இலங்கை பொலிசார் ஏற்கனவே சர்வதேச பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுள்ளனர்.

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகக்குழுத் தலைவரான கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்த சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதாக மன்தினு பத்மசிறி என்ற கெஹேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளும் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

கெஹேல்பத்தர பத்மே டுபாயில் இருந்தும், கமாண்டோ சலிந்த மலேசியாவில் இருந்தும் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, குறித்த இரண்டு குற்றவாளிகளுக்கும் சர்வதேச பொலிஸார் ஊடாக பொலிஸார் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டிருந்தனர்.

https://adaderanatamil.lk/news/cmcw1aqft00yhqp4k5rtnruf6

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-146.jpg?resize=600%2C300&ssl

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பியோட்டம்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான கெஹல்பத்தர பத்மே, அவரது காதலி மற்றும் கமாண்டோ ஆகியோர் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கெஹல்பத்தர பத்மே, உள்ளிட்ட மூவரும் கடந் 9ஆம் திகதி மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்கு படகு மூலம் தப்பிச் செல்ல முயற்சித்த போது, மலேசியா பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

பின்னர், இலங்கை பொலிஸாரும் இந்த செய்தியை உறுதிப்படுத்திய நிலையில், பின்னர் அவர்களை அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவை அந்த நாட்டிற்கும், மற்றொரு அதிகாரிகள் குழுவை தாய்லாந்திற்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நாளை(14) நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1438969

  • கருத்துக்கள உறவுகள்

கேல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த கைது செய்யப்பட்டதாக தகவலில்லை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

14 JUL, 2025 | 06:31 PM

image

(எம்.வை.எம்.சியாம்)

பல்வேறு திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட சிலர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக இதுவரை இராஜதந்திர ரீதியிலான எந்தவித தகவல்களும் பாதுகாப்பு பிரிவுக்கு  கிடைக்கப்பெறவில்லை என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார்.

ஏற்கனவே மலோசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட 26 சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராய பொலிஸ் குழுக்கள் மலோசியா மற்றும் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தெரிவித்த அவர் குறித்த பெயர் பட்டியலில் கேல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என குறிப்பிட்டார்.

சஞ்சீவ குமார சமர ரத்ன என்னும் கனேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர் என குற்றஞ்சாட்டப்பட்டு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே  கமாண்டோ சலிந்த  உள்ளிட்ட சிலர் அண்மையில் மலேசியாவில் வைத்து அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் திங்கட்கிழமை (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளரிடம்  கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக்கூறப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. இந்நிலையில்  திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கைச் சேர்ந்த இருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் கடந்த 11 ஆம் திகதி மலேசிய பாதுகாப்பு பிரிவினரால் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய அவர்களில் 20 வயதுடைய ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  மலோசியாவின் குடிவரவு குடியகல்வு சட்டத்துக்கு ஏற்ப சந்தேகநபரை நாட்டுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

மேலும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 29 பேருடைய பெயர் பட்டியலை மலேசியா பொலிஸார் எமக்கு அனுப்பியுள்ளனர். இவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்,

அரச புலனாய்வு பிரிவு மற்றும் குற்றச் செயல்களை பதிவு செய்யும் பிரிவு ஆகியன விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.  இதன் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இரு விசாரணை குழுக்கள் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு அனுப்பட்டுள்ளன. 

இந்த நாட்களில் பல்வேறு திட்டமிட்டக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கேல்பத்தர பத்மே மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட சிலர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. எனினும்  சர்வதேச பொலிஸார் இவ்விடயம் தொடர்பான  எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் வழங்கவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/220003

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.