Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

g8yihbo.jpg?resize=596%2C375&ssl=1

மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்.

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யுக்ரைன் ஜனாதிபதியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் ரத்தானது. இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு ஊடகவியலாளர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பில், ‘மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார்” என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் தங்களுக்கு நன்றியுடன் இருக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதி, யுக்ரைன் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் எந்த ‘சமரசமும்” இருக்க கூடாது என யுக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த சந்திப்பை அடுத்து சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த யுக்ரைன் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியுடனான மோதல் இரு தரப்புக்கும் ‘நல்லதல்ல” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க மற்றும் யுக்ரைன் ஜனாதிபதிகளுடன் பிரித்தானிய பிரதமர் தொலைபேசியில் உரையாடியதாக அவரது பேச்சாளர் தெரிவித்தார். யுக்ரைனுடன் அசைக்க முடியாத ஆதரவை அவர் வெளிப்படுத்தியதாகவும் பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Athavan News
No image preview

மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் - வெள...

யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வோன்ஸ்க்கும் இடையிலான சந்திப்பின் போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ள...

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேருக்கு நேர் எச்சரித்த டிரம்ப் - வெள்ளை மாளிகையில் என்ன நடந்தது?

டிரம்ப் - ஜெலன்ஸ்கி, அமெரிக்கா - யுக்ரேன், ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மைரோஸ்லாவா பெட்ஸா மற்றும் டேனியல் விட்டென்பர்க்

  • பதவி, பிபிசி யுக்ரேனியன், ஓவல் மாளிகை

  • 1 மார்ச் 2025, 01:56 GMT

    புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்காவில் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் ஏற்பாடுகளுடன் ஒரு வழக்கமான நாளாக தொடங்கியது.

யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெஸ்ட் விங் வாசலில் மரியாதையுடன் வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கிக் கொண்டனர்.

யுக்ரேன் ஊடகக் குழுவில் நாங்கள் ஓவல் அலுவலகத்தில் இருந்தோம். முன்பே திட்டமிடப்பட்டிருந்த வழக்கமான சம்பிரதாயங்களையும் சுமார் அரை மணி நேர கண்ணியமான பேச்சையும் கண்டோம்.

ஜெலன்ஸ்கி டிரம்பிற்கு யுக்ரேனிய குத்துச்சண்டை வீரர் ஒலெக்சாண்டர் உசிக்கின் சாம்பியன்ஷிப் பெல்ட்டை வழங்கினார்.

ஜெலன்ஸ்கியின் உடையை டிரம்ப் பாராட்டினார்.

இதுவரை, எல்லாமே இராஜ தந்திர ரீதியில் அமைதியாக நகர்ந்தது.

ஆனால் சில நிமிடங்களிலேயே நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாறியது. அன்பான தொனி கோபமாகவும் குழப்பமாகவும் மாறியது. உரத்த குரல்களையும், கோபம் கொப்பளிக்கும் கண்களையும், எதிர்பார்ப்புகளுடன் இருந்த முகத்தையும் உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் படம் பிடித்தன.

உலக தொலைக்காட்சிகளின் கேமராக்கள் முன்பாகவே, அமெரிக்க அதிபரும் துணை அதிபரும் யுக்ரேன் அதிபரை கண்டித்தனர், யுக்ரேனின் போர் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி போதுமான அளவு நன்றியுள்ளவராக இல்லை என்று அவர்கள் இருவரும் குற்றம் சாட்டினர்.

துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், போரை ராஜ தந்திர நகர்வுகள் மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஜெலன்ஸ்கியிடம் கூறிய போது பதற்றம் அதிகரித்தது.

எப்படிப்பட்ட ராஜ தந்திரம்? என்று ஜெலன்ஸ்கி கேட்டார்.

ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்பாகவே வாதிடுவது அவமரியாதை என்று யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வான்ஸ் கூறினார். டிரம்பின் தலைமைக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுததினார்.

Play video, "யுக்ரேனிய - அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு: வார்த்தைப் போரில் இறங்கிய இரு நாட்டுத் தலைவர்கள்!", கால அளவு 1,24

01:24

p0kvfdd2.jpg.webp

காணொளிக் குறிப்பு,யுக்ரேனிய - அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு: வார்த்தைப் போரில் இறங்கிய இரு நாட்டுத் தலைவர்கள்!

அறையில் இருந்த பத்திரிகையாளர்கள் ஒரு அசாதாரண நிகழ்வை தொடர்ந்து அதிர்ச்சி மேலிட பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நீங்கள் போதும் போதும் எனும் அளவுக்கு பேசிவிட்டீர்கள். நீங்கள் இதில் வெல்லவில்லை," என்று ஒரு கட்டத்தில் ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் கூறினார்.

"நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த ஆட்டத்தில் தொடர்ந்து நீடித்திருக்க உங்களிடம் ஏதும் இல்லை." என்றார் டிரம்ப்.

"நான் விளையாடவில்லை," ஜெலன்ஸ்கி பதிலளித்தார்.

"நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் அதிபர் அவர்களே. நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்" என்றார் ஜெலன்ஸ்கி.

"நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடியுடன் விளையாடுகிறீர்கள்," என்று டிரம்ப் பதிலளித்தார்.

டிரம்ப் - ஜெலன்ஸ்கி, அமெரிக்கா - யுக்ரேன், ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

"நீங்கள் செய்வது நாட்டிற்கு, இந்த நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது." என்றார் டிரம்ப்.

"இந்த முழு சந்திப்பிலும் ஒரு முறையாவது 'நன்றி' என்று சொன்னீர்களா? இல்லை" என்று வான்ஸ் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கான யுக்ரேன் தூதர் தனது தலையில் கைகளை வைத்துக் கொண்டு அந்த நிகழ்வுகளை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்களில் அங்கே சூழல் முற்றிலுமாக மாறியிருந்தது.

இதுபோன்ற எதையும் நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று அமெரிக்காவைச் சேர்ந்த சக ஊடக நண்பர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.

"வெள்ளை மாளிகையில் இதுபோன்ற ஒரு காட்சியை கற்பனை செய்து பார்க்கவே முடியாது," என்று ஒருவர் என்னிடம் கூறினார்.

செய்தியாளர்கள் ஓவல் அலுவலகத்தை விட்டு வெளியேறியதும், பலர் அதிர்ச்சியில் அசையாமல் நின்றிருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, தலைவர்களின் சந்திப்பில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை முழுமையாக வெள்ளை மாளிகையில் உள்ள பத்திரிகையாளர் அறையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கே ஒரு குழப்பம் ஏற்பட்டது.

திட்டமிடப்பட்டபடி, செய்தியாளர் சந்திப்பு நடக்குமா அல்லது அமெரிக்காவிற்கும் யுக்ரேனுக்கும் இடையே கனிம வளங்கள் தொடர்பாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்பது குறித்து உடனடி கேள்விகள் எழுந்தன.

டிரம்ப் - ஜெலன்ஸ்கி, அமெரிக்கா - யுக்ரேன், ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

சில நிமிடங்களுக்குப் பிறகு, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் ஜெலன்ஸ்கி "அமைதிக்குத் தயாராக இருக்கும் போது திரும்பி வரலாம்" என்று பதிவிட்டார்.

வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் நடைபெறவிருந்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது.

ஜெலன்ஸ்கி வெளியே வந்து, அங்கே காத்திருந்த ஒரு எஸ்.யூ.வி. காரில் ஏறிய சிறிது நேரத்திலேயே, அவரது தூதர் அவரை பின்தொடர்ந்தார்.

உலகம் ஒரு அசாதாரண தருணத்தை ஜீரணிக்கத் தொடங்கியிருந்த போது அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

முழு வீச்சிலான ஒரு வாக்குவாதம் நடந்துவிட்ட போதிலும், விரைவிலோ அல்லது சற்று கால தாமதமாகவோ ஒரு கனிம ஒப்பந்தத்திற்கான சாத்தியம் இருக்கவே செய்கிறது.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ஜெலன்ஸ்கியின் இந்த அமெரிக்க வருகை முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக நினைவுகூரப்படும்.

டிரம்ப் - ஜெலன்ஸ்கி, அமெரிக்கா - யுக்ரேன், ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு நடக்கின்றன என்பதை உலகம் நேரடியாகவே கண்டது. அவை கடினமானவை, உணர்ச்சிப்பூர்வமானவை மற்றும் பதற்றமானவை.

இது இரு தரப்பினருக்குமே கடினமான பேச்சுவார்த்தை என்பது தெளிவாகத் தெரிந்தது.

ஜெலன்ஸ்கி பரிசளித்த யுக்ரேனிய குத்துச்சண்டை வீரர் ஒலெக்சாண்டர் உசிக்கின் பெல்ட் நிச்சயமாக அங்கிருந்த பதற்றமான சூழலை மாற்றவில்லை. வெள்ளை மாளிகையில் நடந்த இந்த நேரடி மோதலுக்குப் பிறகு, யுக்ரேன் போருக்கும், ஜெலன்ஸ்கியின் சொந்த எதிர்காலத்திற்கும் இது என்ன அர்த்தம் தருகிறது என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

https://www.bbc.com/tamil/articles/cwygnn10xq2o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப்... செலென்ஸ்கியை, வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றினார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இது அமெரிக்காவின் வழமையான, எதிர்பார்த்த செயல்தான். ஒவ்வொரு நாட்டின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைப்பது, ஆயுத  இராணுவ உதவிகளை வழங்குவது, அந்த நாட்டை சுடுகாடாக்குவது,  இடைநடுவில் அம்போ என்று கைவிடுவது, அச்சுறுத்தி தான் நினைத்ததை சாதிப்பது. இவ்வாறு தனக்கு எதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறது.  போர் என்று தொடங்கினால் எல்லா நாடுகளும் சேர்ந்து அமெரிக்காவை மொத்தும். அதற்கு ஏற்ற ஆள்தான் ட்ரம்ப்.

  • கருத்துக்கள உறவுகள்

It is dangerous to be American’s enemy and fatal to be American’s ally

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ragaa said:

It is dangerous to be American’s enemy and fatal to be American’s ally

//அமெரிக்கர்களின் எதிரியாக இருப்பதும் ஆபத்தானது,

அமெரிக்காவின் கூட்டாளியாக இருப்பதும் ஆபத்தானது.//

சரியாக சொன்னீர்கள். 👍

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

//அமெரிக்கர்களின் எதிரியாக இருப்பதும் ஆபத்தானது,

அமெரிக்காவின் கூட்டாளியாக இருப்பதும் ஆபத்தானது.//

சரியாக சொன்னீர்கள். 👍

உதாரணம்; ஒசாமா பின் லேடன், மத்திய கிழக்கு நாடுகள், இப்போ உக்ரேன். முட்டாளை நம்புவோரின் நிலை அம்போ.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

உதாரணம்; ஒசாமா பின் லேடன், மத்திய கிழக்கு நாடுகள், இப்போ உக்ரேன். முட்டாளை நம்புவோரின் நிலை அம்போ.  

0521_modi-trump.gif

மோடி மாதிரி... "சிங், சக்" போட்டுக் கொண்டு இருக்கிறதுதான் நல்லது போல கிடக்கு. animiertes-gefuehl-smilies-bild-0234.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் உலகப் போரில் தான் சூதாடுவதாக... டிரம்ப், ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் கூறுகிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை மாளிகையில் ஜெலென்ஸ்கியுடன் டொனால்ட் டிரம்ப் நடத்திய சண்டை, அமெரிக்கா உக்ரைனை காலனியாக எப்படி நடத்துகிறது என்பதைக் காட்டுகிறது.

சீனாவை பலவீனப்படுத்தவும், மீண்டும் தொழில்மயமாக்கவும் மற்றும் அமெரிக்க தொழில்நுட்பத்தை உருவாக்கவும், உக்ரைனின் அரிய பூமிகள் மற்றும் முக்கியமான தாதுக்களின் கட்டுப்பாட்டை டிரம்ப் கோருகிறார்.

டிரம்ப் $350 பில்லியன் ஊதியம் பெற விரும்புகிறார்: உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்கு.

  • கருத்துக்கள உறவுகள்

5 ஆண்டுகளுக்கு முந்தைய பகை; ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெறுக்க காரணம் இதுதான்

2 ஆண்டுகளை கடந்து நீடித்துக்கொண்டிருக்கும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து தொடர்ந்து பேசி வந்தார். இதை தொடர்ந்து டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்பாக அமைதியை ஏற்படுத்த அமெரிக்காவும் ரஷ்யாவும் உயர்மட்ட மத்தியஸ்தக் குழுவை நியமித்தன.

அதன் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி துபாயில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்கோப், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ஸ், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய அதிபர் புடினின் வெளியுறவு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் மற்றும் பிற உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மிக முக்கியமாக இந்த கூட்டத்தில் போரின் மற்றொரு தரப்பான உக்ரைன் சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை.

உக்ரைன் தரப்பு இல்லாமலேயே நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அறிவித்தார். இந்த நிலையில்தான் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவது தொடர்பான கருத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை முகத்திற்கு நேராகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக சாடினார், மேலும் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெலன்ஸ்கியை டிரம்ப் வெறுக்க காரணம் என்ன?

ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்த தற்போதைய சூழல் மட்டுமே காரணம் அல்ல. 5 ஆண்டுகளுக்கு முன்பு டிரம்பின் தனிப்பட்ட கோரிக்கைக்கு ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்திருந்ததுதான் இப்போதைய நடவடிக்கைக்கு காரணம் என கூறுகிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் முதன்முதலில் பதவியேற்ற போது, அந்த தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதற்கிடையே அமெரிக்க அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்களை வெளியிட்டதாக கூறப்பட்டது. வெளியே கசிந்த அந்த மின்னஞ்சலில் 2016 தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக பெர்னி சாண்டர்ஸ்க்கு பதில் ஹிலாரி கிளிண்டன் வர வேண்டும் என கட்சி தலைமை விரும்பியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது தேர்தலில் குடியரசு கட்சியினர் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அந்த தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வியை சந்தித்தார்.

இருப்பினும் டிரம்ப் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். ரஷ்யா மீது அவதூறுகளை வீச உக்ரைன் ஹேக்கர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் இந்த விவகாரம் தொடர்பாக உக்ரைனில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சம்பந்தபட்ட ஆவணங்களை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இருப்பினும் இதற்கு மறுப்பு தெரிவித்த ஜெலன்ஸ்கி, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவது உக்ரைனின் தலையீடு தொடர்பான கருத்துருவாக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும் எனக்கூறி இறுதி வரை விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்துவிட்டார்.

நீடிக்கும் பகை..

டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம் இந்த உதவி மட்டும் கேட்கவில்லை. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனுக்கு எதிராக முக்கிய குற்றச்சாட்டை டிரம்ப் முன்வைத்தார். அதாவது ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் புரிஸ்மா என்ற உக்ரேனிய தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருந்தார். இந்த நிறுவனத்தின் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை 2016 ஆம் ஆண்டு பைடன் துணை அதிபராக இருந்தபோது தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஹண்டர் பைடன் மீதான விசாரணையை உடனே நடத்தி 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே ஜோ பைடன் மீது புகார்களை முன்வைக்க உதவ வேண்டும் என்றும் டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம் கேட்டுள்ளார்.

இந்த உதவிகளுக்கு மாற்றாக ஜெலன்ஸ்கிக்கு வெள்ளை மாளிகைக்கு அழைப்பு மற்றும் உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர் இராணுவ உதவியும் வழங்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரம் வெளியே கசிந்து தனது அதிகாரத்தை சொந்த நலனுக்காக தவறாக பயன்படுத்தியதாக டிரம்ப் அதிபராக இருந்தபோதே அவர் மீது இம்பீச்மெண்ட் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வளவு நடந்த பின்னரும் கூட ஜெலன்ஸ்கி ஹண்டர் பைடன் மீதான விசாரணையையும் தொடங்கவில்லை டிரம்பும் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.

இதனால் டிரம்ப் மட்டுமல்ல அவரது ஆதரவாளர்களுமே 2020 முதலே ஜெலன்ஸ்கி மீது கடும் கோபத்தில் உள்ளனர். டிரம்ப் மீதான இம்பீச்மெண்ட் நடவடிக்கை, 2020 தேர்தலில் டிரம்ப் தோல்வி போன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் ஜெலன்ஸ்கியை அவர்கள் காரணமாக பார்த்தனர். அதன் தொடர்ச்சிதான் இப்போது டிரம்ப் மீண்டும் அதிபரானதில் இருந்து ஜெலன்ஸ்கி மீது அமெரிக்கா கடுமையாக நடந்துகொள்ள காரணம் என்றும் கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/315528

  • கருத்துக்கள உறவுகள்

Trump, Zelensky கடும் மோதல்; 1949-ல் அமெரிக்கா கொடுத்த வாக்குறுதியை Trump காப்பாற்றுவாரா?

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நடந்த காரசார விவாதம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பிபிசி நியூஸின் சர்வதேச ஆசிரியர் ஜெர்மி போவன் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/theivigan.panchalingam/videos/1539574740779215 👈

செலென்ஸ்கி, ட்றம்ப்... சந்திப்பு, யாழ் வலம்புரி ஹோட்டலில் இடம் பெற்று இருந்தால்…. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.