Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு குட்நியூஸ்? நடிகை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு.. மார்ச் 3ல் விசாரணை

Nantha Kumar RUpdated: Saturday, March 1, 2025, 20:02 [IST]

seeman supreme court ntk

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர் சீமான். இவர் மீது கடந்த சில ஆண்டுகளாக நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். திருமணம் செய்வதாக கூறி சீமான் ஏமாற்றிவிட்டார். கருக்கலைப்பும் செய்தேன் என்று நடிகை கூறி வருகிறார்.

மேலும் அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு சீமானை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதுதொடர்பாக நடிகை புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால் சீமானின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார். அதோடு பாலியல் புகார் தீவிரமானது.இதனை விசாரிக்க போலீசாருக்கு உரிமை உள்ளது. போலீசார் விசாரித்து 12 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு சீமானுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து பெங்களூரில் வசிக்கும் நடிகையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல் நேற்று இரவு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சீமானிடம் போலீசார் 1 மணிநேரம் 15 நிமிடங்கள் வரை விசாரித்துவிட்டு அனுப்பினர்.

இதற்கிடையே தான் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரியும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‛‛இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாதங்களும், அனைத்து அம்சங்களும்

முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதவிர விசாரணையை போலீசார் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சீமானின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி சீமானின் மேல்முறையீட்டு மனு என்பது நாளை மறுநாள் (மார்ச் 3) ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிபி நாகரத்தினா, சதிஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு என்பது விசாரணைக்கு வர உள்ளது. இதனால் வரும் 3ம் தேதி சீமானுக்கு குட்நியூஸ் வருகிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதற்கிடையே தான் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரியும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், ‛‛இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாதங்களும், அனைத்து அம்சங்களும்

முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே இந்த விவகாரத்தில் முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதவிர விசாரணையை போலீசார் 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

1 hour ago, goshan_che said:

நீதிபதிகள் பிபி நாகரத்தினா, சதிஷ் சந்திர சர்மா ஆகியோர்

மானஸ்தன் சீமான் அமித்ஷா காலில் வீழ்ந்த தருணம்.

#மண்டியிடாத மானம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

மானஸ்தன் சீமான் அமித்ஷா காலில் வீழ்ந்த தருணம்.

#மண்டியிடாத மானம்🤣

நல்லா உருட்டுங்கோ!! எல்லாம் உங்கள் கற்பனைகள்தானே!!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

மானஸ்தன் சீமான் அமித்ஷா காலில் வீழ்ந்த தருணம்.

சுத்தி சுத்திசுப்பரற்ற கொல்லைக்குள்ளேயே நிற்கிறீர்கள். அந்த நடிகை சீமானுடன் மட்டுமல்ல மற்றும் பலருடன் தொடர்பு வைத்திருக்கிறார். சீமான் விடயத்தை மட்டும் ஒவ்வாரு தேர்தல் வேளைகளிலும் நடிகையை எல்லாவழிகளிலும் உசுப்பேத்தி சீமானை அவமானப்படுத்தி அவரை அரசியல்அரங்கிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். சீமானைத்தவிர வேறு யாராக இருந்தாலும் அரசியலை விட்டே காணாமல் போய் விட்டிருப்பார்கள். சீமானை சுற்றி 200 இற்ககு மெற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. பெண்சம்பந்தமான வழக்கு என்பதால் இது எடுபடும் என்று ஆட்சியாளர்கள் நினை;தார்கள். அரசியல்கட்சிகளும் மெளனம் காத்தன.நினத்தற்கு மாறாக Back fireஆகிவிட்டது. முதல்வரின் பிறந்தநாள் நேரஞ்சல் பண்ண முடியாது எங்கும் எங்கும் அன்புமணியும் அண்ணாமலையும் மிகவும் தாமதமாக னண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.சீமானுக்கு இலவச விளம்பரம் கொடுத்து இருக்கிறார்கள். திமுக அரசுசீமானைவிமர்சிப்பவரகளும் சேர்த்து பல்பு வாங்கியுள்ளது.

https://youtu.be/eGKCbzuyLaY?si=a-TWNcn3zXZuIrED

Edited by புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமித்ஷா வழிப்படி நாளைக்கு சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லும் என்பதை நீங்கள் இருவரும்

9 minutes ago, புலவர் said:

சுத்தி சுத்திசுப்பரற்ற கொல்லைக்குள்ளேயே நிற்கிறீர்கள். அந்த நடிகை சீமானுடன் மட்டுமல்ல மற்றும் பலருடன் தொடர்பு வைத்திருக்கிறார். சீமான் விடயத்தை மட்டும் ஒவ்வாரு தேர்தல் வேளைகளிலும் நடிகையை எல்லாவழிகளிலும் உசுப்பேத்தி சீமானை அவமானப்படுத்தி அவரை அரசியல்அரங்கிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். சீமானைத்தவிர வேறு யாராக இருந்தாலும் அரசியலை விட்டே காணாமல் போய் விட்டிருப்பார்கள். சீமானை சுற்றி 200 இற்ககு மெற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. பெண்சம்பந்தமான வழக்கு என்பதால் இது எடுபடும் என்று ஆட்சியாளர்கள் நினை;தார்கள். அரசியல்கட்சிகளும் மெளனம் காத்தன.நினத்தற்கு மாறாக ஆகிவிட்டது. முதல்வரின் பிறந்தநாள் நேரஞ்சல் பண்ண முடியாது எங்கும் எங்கும் அன்புமணியும் அண்ணாமலையும் மிகவும் தாமதமாக னண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.சீமானுக்கு இலவச விளம்பரம் கொடுத்து இருக்கிறார்கள். திமுக அரசு பல்பு வாங்கியுள்ளது.

https://youtu.be/eGKCbzuyLaY?si=a-TWNcn3zXZuIrED

ஊகித்து விட்டீர்கள் போலுள்ளது.

அரசியல் தரகுவேலை செய்து நீதிமன்றில் இருந்து தப்பலாம்.

ஆனால் மக்கள் மன்று 2026 இல் என்ன தீர்ப்பு கொடுக்கும் என பார்ப்போம்.

44 minutes ago, Eppothum Thamizhan said:

நல்லா உருட்டுங்கோ!! எல்லாம் உங்கள் கற்பனைகள்தானே!!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

அரசியல் தரகுவேலை செய்து நீதிமன்றில் இருந்து தப்பலாம்.

ஆனால் மக்கள் மன்று 2026 இல் என்ன தீர்ப்பு கொடுக்கும் என பார்ப்போம்.

விழுந்தாலும் மீசை யில் மண்படவில்லை.2026 அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புலவர் said:

விழுந்தாலும் மீசை யில் மண்படவில்லை.2026 அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

பாபர் மசூதி புகழ் உச்ச நீதிமன்றம் அமித் ஷா கையில் என்பதும் சீமான் அங்கே விசாரணை இன்றி விடுவிக்கபட வாய்ப்பு அதிகம் என்பது யதார்த்தம்.

ஆனால் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு வடிவில் தீர்ப்பு கிடைக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.