Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

02 MAR, 2025 | 12:13 PM

image

துருக்கியுடன் நாற்பது வருடகாலமாக போரிட்ட குர்திஸ் போராளிகள் அமைப்பான பிகேகே யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து இரண்டு நாட்களின் பின்னர் அந்த அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிகேகே அமைப்பிற்கு நெருக்கமான பிராட் செய்தி நிறுவனம்  அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை முதலில் வெளியிட்டுள்ளது.

pkk1.jpg

1999 முதல் துருக்கியின் சிறையில் வாடும் பிகேகே அமைப்பின் தலைவரை மேற்கோள்காட்டி இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிராட் செய்தி நிறுவனம் சமாதான ஜனநாயக சமூகத்தினை  ஏற்படுத்துவதற்காக பிகேகே தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று யுத்த நிறுத்தத்தை அறிவிப்பதாக பிகேகே அமைப்பு தெரிவித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எங்கள் படைப்பிரிவினர் ஆயுதத்தை பயன்படுத்த மாட்டார்கள் என பிகேகே அமைப்பு அறிவித்துள்ளது.

மத்தியகிழக்கில் அடிப்படை மாற்றங்கள் பல நிகழ்ந்துகொண்டுள்ள சூழ்நிலையிலேயே குர்திஸ் அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துருக்கியின் அயல்நாடான சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் அதிகார மறுசீரமைப்பு இடம்பெறுகின்றது, லெபானில் ஹெஸ்புல்லா அமைப்பு பலவீனமடைந்துள்ளது மேலும் காசாவில் இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் போரிடுகின்றன.

1984 இல் ஆரம்பித்த துருக்கி அரசாங்கத்திற்கும் பிகேகே அமைப்பிற்கும் இடையிலான மோதல்கள் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

2015 இல் இரு தரப்புபிற்கும் இடையிலான யுத்த நிறுத்தம் முடிவடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஒகலானை தனிமைதீவு சிறையில் சந்தித்த பின்னர் அவரது அறிவிப்பை வெளியிட்ட குர்திஸ் அரசியல்வாதிகள் குர்திஸ் போராளிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார் என தெரிவித்தனர்.

இதேவேளை தங்கள் தலைவரின் அறிவிப்பு குர்திஸ்தானிலும் மத்திய கிழக்கிலும் புதிய வரலாற்று செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளதை வெளிப்படுத்துவதாக பிகேகே அமைப்பின் மத்திய குழு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனிற்கு சாதகமாக அமையலாம்.

https://www.virakesari.lk/article/208059

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

25வருடங்களுக்கு மேலாக ஒரு விடுதலை இயக்க தலைவரை சிறையில் அடைத்து வைத்திருந்து..... இன்று அவர் மூலமாக ஒரு யுத்த நிறுத்த அறிவிப்பை துருக்கி அரசு அறிவித்திருக்கிறது.

இதன் மூலம் இன விடுதலை போராட்டங்கள் கேள்விக்குறியாகி விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா இவர்களையும் கைவிட்டு விட்டதா? (சிரியாவில்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகேகே துருக்கி மோதல் - அப்துல்லா ஒகாலன் - எங்களிற்கு தெரிந்திருக்கவேண்டிய விடயங்கள் என்ன?

Published By: Rajeeban

03 Mar, 2025 | 12:47 PM

image

By Ben Hubbard

newyork times

முதலாம்  உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் குர்திஸ் இனத்தவர்களிற்கான நாடு குறித்து வாக்குறுதிகளை வழங்கின.ஆனால் இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது.

பல தசாப்தகால போராட்டத்தின் பின்னர் குர்திஸ் போராளிகள் அமைப்பு யுத்தநிறுத்தத்தை அறிவித்துள்ளது.

சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான்  ஆயுதங்களை கைவிடுமாறுதனது அமைப்பினரை  கேட்டுக்கொண்டார்.

pkk_3.jpg

சுமார் 4 தசாப்தங்களாக குர்திஸ்தான் தொழில்கட்சியான பிகேகேவுடன் துருக்கி மோதலில் ஈடுபட்டிருந்தது.

பிகேகே துருக்கியின் குர்திஸ் சிறுபான்மை இனத்தவர்களிற்கு அதிகளவு உரிமைகளை கோரி போராடும்  அமைப்பு.

தசாப்தகால மோதலில் இதுவரை 40000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். பிகேகே அமைப்பு பொதுமக்கள் மற்றும் துருக்கியின் இராணுவ இலக்குகள் மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவும், குர்திஸ் போராளிகள் மற்றும் அவர்களிற்கு ஆதரவளிக்கும் குர்திஸ் மக்கள் மீதான துருக்கியின் இராணுவ தாக்குதல்கள் காரணமாகவும் இந்த உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

துருக்கியும் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் பிகேகே அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றன.

தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ள அந்த அமைப்பின் தலைவர் அப்துல்லா ஒகலான் தனது போராளிகளை ஆயுதங்களை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், இதனைதொடர்ந்து அந்த அமைப்பு யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

எனினும் 40 வருடகால யுத்தம் முடிவிற்கு வருமா என்பது உறுதியாக தெரிவிக்கப்பட முடியாத விடயமாக காணப்படுகின்றது, யுத்த நிறுத்தத்திற்கு பதில் துருக்கி அரசாங்கம் போராளிகளிற்கு எதனை வழங்குவதற்கு முன்வந்துள்ளது என்பதும் தெளிவாக தெரியவில்லை.

பிகேகே குறித்தும் துருக்கிக்கு எதிரான அதன் போராட்டம் குறித்தும் அறிந்துகொள்ளவேண்டிய விடயங்கள்

பிகேகேயின் பின்னணி என்ன?

இந்த அமைப்பு துருக்கிக்கு எதிராக 1980களின் பிற்பகுதியில் போரிட ஆரம்பித்தது, துருக்கியின் சனத்தொகையில் 15 வீதத்திற்கும் அதிகமானவர்களாக உள்ள குர்திஸ் மக்களிற்கு சுதந்திரத்தை கோரியது.

துருக்கியின் கிழக்கு தெற்கு மலைப்பகுதியிலிருந்து தங்கள் தாக்குதல்களை பிகேகே போராளிகள் ஆரம்பித்தனர். அவர்கள் துருக்கியின் தளங்கள் பொலிஸ் நிலையங்கள் போன்றவற்றை தாக்கினர். துருக்கி அரசாங்கம் கடுமையான பதில் தாக்குதலை மேற்கொண்டது, இதன் காரணமாக மோதல்கள் வன்முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கும் பரவின.

pkk.jpg

பிகேகே அமைப்பு துருக்கியின் பல நகரங்கள் மீது குண்டுதாக்குதல்களை மேற்கொண்டது இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.

எனினும் கடந்த ஒரு தசாப்தகாலமாக  துருக்கி இராணுவம் துருக்கியின் தென்கிழக்கில் உள்ள முக்கிய குர்திஸ் நகரங்களில் இருந்து பிகேகே அமைப்பினரை பின்வாங்க செய்துள்ளது.

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி பிகேகே அமைப்பின் தலைவர்களையும் போராளிகளையும் கொலை செய்துள்ளது.

இதன் காரணமாக தாக்குதல்களை மேற்கொள்வதற்கான போராளிகளின் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக இந்த மோதல்  மிகப்பெரிய வன்முறையாக மாறாத ஒன்றாக காணப்படுகின்றது, எனினும் பிகேகே அவ்வப்போது மேற்கொண்ட தாக்குதல்கள்  பரந்துபட்ட யுத்தம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.

கடந்த வருடம் ஆயுதமேந்திய சிறிய எண்ணிக்கையிலான போராளிகள் துருக்கியின் விமானதயாரிப்பு நிறுவனமொன்றிற்குள்  நுழைந்து தாக்குதலை மேற்கொண்டதில் ஐவர் கொல்லப்பட்டனர்.

குர்திஸ் இனத்தவர்கள்

40 மில்லியன் சனத்தொகையை கொண்ட இனக்குழுவே குர்திஸ்கள். அவர்களின் எண்ணிக்கை குறித்து பல்வேறு புள்ளிவிபரங்கள் உள்ளன. ஈரான் ஈரான் சிரியா துருக்கியில் இவர்கள் வாழ்கின்றனர்.

அவர்கள் குர்திஸ் மொழியின் பல பேச்சுவழக்குகளை பேசுகின்றனர். அவர்களின் மொழி அராபிய, துருக்கி  மொழிகளுடன் நேரடியாக தொடர்பில்லாதது.

மேலும் இவர்கள் சுனி முஸ்லீம்கள்.

முதலாம்  உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் குர்திஸ் இனத்தவர்களிற்கான நாடு குறித்து வாக்குறுதிகளை வழங்கின. ஆனால் இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது.

அதன் பின்னர் பல நாடுகளில் குர்திஸ் மக்களின் கிளர்ச்சிகளும் இடம்பெற்றன.

குர்திஸ் மக்கள் தங்களின் மொழி கலாச்சாரம் தொடர்பில் அரச ஒடுக்குமுறைகளை அனுபவித்துள்ளனர்.

சிரியாவில் குர்திஸ் இனத்தவர்கள்

2014 இல் சிரியாவின் வடக்கில் ஐஎஸ் அமைப்பு தீவிரமாக செயற்பட்டவேளை குர்திஸ் மக்கள் அங்கிருந்து தப்பியோடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். எல்லையை கடந்து துருக்கிக்குள் நுழைந்த இவர்கள் அகதி முகாமகளை சென்றடைந்தனர்.

சிரியாவில் குர்திஸ் இனத்தவர்களின் தலைமையிலான சிரிய ஜனநாயக படையணியினர் நாட்டின் வடகிழக்கு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர், இவர்களின் வேர்கள் பிகேகேயுடன் தொடர்புபட்டவை இவர்கள் பிகேகே தலைவர் அப்துல்லா ஒகலானின் கொள்கையை பின்பற்றுகின்றனர்.

அவர்களிற்கு அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரவளித்து வந்தது, ஐஎஸ் அமைப்பினை தோற்கடிப்பதில் இவர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கினார்கள்.

எனினும் சிரியாவின் சர்வாதிகாரி பசார்அல் அசாத்தின் வீழ்ச்சி இவர்களின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இவர்கள் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் மோதுவதுடன் டமஸ்கஸில் உள்ள சிரியாவின் புதிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளனர்.

https://www.virakesari.lk/article/208145

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.