Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ranil.jpg?resize=750%2C375&ssl=1

அல்ஜசீராவில் ரணில்!

ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,ரணில் விக்ரமசிங்கவை அல்ஜசீரா அம்பலப்படுத்தியிருக்கிறது.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானமானது பொறுப்புக் கூறலுக்கானது. அதாவது நிலைமாறு கால நீதிக்கானது. இந்தத் தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையாளராக செயல்பட்டது. அதாவது அரசாங்கமும் சேர்ந்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதற்கு முன் நிறைவேற்றப்பட்ட எல்லாத் தீர்மானங்களும் அரசாங்கத்துக்கு எதிரானவை. இலங்கை அரசாங்கங்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவை.அதற்கு பின்வந்த தீர்மானங்களும் அத்தகையவைதான்.

2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான அந்தத் தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியபொழுது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தார். அதாவது இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதிக்கான ஐநா தீர்மானத்திருகு ரணிலும் மைத்திரியும் பெற்றோர் ஆவர். ஆனால் 2018 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அந்தத் தீர்மானத்தைக் காட்டிக்கொடுத்தார். மஹிந்தவோடு இணைந்து அதற்கு எதிராகத் திரும்பினார். அதனால் பழி அவர் மீதுதான் விழுந்தது. அதாவது நிலைமாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி தன் குழந்தையைக் குப்பைத் தொட்டிக்குள் வீசினார் என்று.

ஆனால் இரண்டாயிரத்தி இருபத்தி நாலாம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மக்கள் அமைப்பு,யாழ்ப்பாணம் உரும்பிராயில் சுமந்திரனைச் சந்தித்தபோது அவர் என்ன சொன்னார்? ரணில் விக்கிரமசிங்கதான் அதைக் குழப்பியவர் என்று சொன்னார். ரணில் விக்கிரமசிங்க நிலைமாறு கால நீதிக்கு விசுவாசமாக இருக்கவில்லை என்றும் சொன்னார். ஆனால் அவர் அதை உரும்பிராயில் வைத்துச் சொல்வதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு திருநெல்வேலியில்,யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட வளாகத்தில், ரணிலும் அமர்ந்திருந்த மேடையில் உரையாற்றும் பொழுது என்ன சொன்னார்? 2005 ஆம் ஆண்டு உங்களைத் தெரிவு செய்யாமல் விட்டதற்காக தமிழ் மக்கள் வருந்துகிறார்கள் என்ற பொருள்பட உரையாற்றினார்.

இலங்கைத் தீவில் நிலைமாறு கால நீதி எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது. அதற்கு ரணிலும் பொறுப்பு; மைத்திரியும் பொறுப்பு. மட்டுமல்ல அவர்களோடு பங்காளிகளாக இருந்த தமிழ்த் தரப்பைச் சேர்ந்த சம்மந்தரும் பொறுப்பு ; சுமந்திரனும் பொறுப்பு.

2015இல் நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய ரணில் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட அல்ஜசீராவின் நேர்காணலில் என்ன கூறுகிறார்? பொறுப்புக் கூறல் தொடர்பில் பொறுப்பற்ற விதமாகப் பதிலளிக்கின்றார்.தன்னை நேர்கண்ட மஹ்தி ஹசனை மடக்குவதாக நினைத்துக் கொண்டு அவர் சொன்ன பதில்கள் அவர் பொறுப்புக் கூறலுக்கு உண்மையாக இல்லை என்பதை வெளியே கொண்டு வந்திருக்கின்றன.

அல்ஜசீராவின் “ஹெட் டு ஹிட் “என்ற அந்த நிகழ்ச்சியை ஒரு பேட்டி என்று அழைப்பதை விடவும் குறுக்கு விசாரணை என்றுதான் அழைக்க வேண்டும். அரசியல்வாதிகளை பேட்டி காணச் செல்லும் ஊடகவியலாளர்கள் எப்படி எல்லாம் வீட்டு வேலை செய்திருக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு தரமான உதாரணம். வீட்டு வேலை செய்யாமல் கேள்வி கேட்கப் போகும் ஊடகவியலாளர்கள் மஹ்தி ஹசனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

ரணிலைக் அவர் பல இடங்களில் திணறடிக்கிறார். ரணிலின் அரசியல் வாழ்வில் அவர் இந்த அளவுக்கு அவமதிக்கப்பட்ட அல்லது அம்பலப்படுத்தப்பட்ட ஒரு நேர்காணல் இருக்க முடியாது. அந்த நேர்காணலைக் குறித்து முகநூலில், ரணிலுக்கு எதிராக முஸ்லிம் நண்பர்கள் அதிகம் விமர்சனங்களைப்  பதிவெற்றி வருகிறார்கள்.

ரணில் அந்த நேர்காணல் முழுவதிலும் தன்னை ஒரு சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் பாதுகாவலனாகவே காட்டிக்கொள்கிறார். அவருடைய லிப்ரல் முகமூடியை மஹ்தி ஹசன் அவமானகரமான விதங்களில் கிழித்தெறிந்து விடுகிறார்.

அந்த நேர்காணல் முழுவதிலும் ரணில் ராஜபக்சக்களை பாதுகாக்க முயல்கிறார். ஆனால் அதை அதைவிடச்  சரியான வார்த்தைகளை சொன்னால் அவர் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலை நியாயப்படுத்துகிறார் என்பதே பொருத்தமானது. அவ்வாறு நியாயப்படுத்த முற்படுகையில் அவர் போர்க் குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்குத்  தயாரற்றவராகத் தன்னைக் காட்டிக் கொள்கிறார். முஸ்லிம்களுக்கு பொறுப்பு கூறத் தயாரற்றவராகத் தன்னை காட்டிக் கொள்கிறார்.சிங்கள கத்தோலிக்கர்களையும் அவர் அங்கே அவமதிக்கிறார். முழுக்க முழுக்க ஒரு சிங்கள பௌத்த பெருந்தேசியவாதியாக அந்த இடத்தில் தோற்றம் தருகிறார்.ஆனால் அவர்தான் 2015 ஆம் ஆண்டு நிலைமாற கால நீதிக்கான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசாங்கத்தின் பிரதமராக இருந்திருக்கிறார்.

எனவே அந்த நேர்காணல் ரணிலை அம்பலப்படுத்தியது என்பதை விடவும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்தியிருக்கிறது. லிபரல் முகமூடி அணிந்த தலைவரும் சரி அவ்வாறு முகமூடி அணிந்திராத தலைவர்களும் சரி, இடதுசாரி முகமூடி அணிந்த தலைவர்களும் சரி எல்லாருமே இறுதியிலும் இறுதியாக சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பை பாதுகாப்பவர்கள்தான்.இதில் இப்பொழுது கடைசியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் தேசிய மக்கள் சக்தியும் அடங்கும்.

ரணில் அல்ஜசிராவில் அம்பலப்படுத்தப்படுவதற்கு முன்னரே கடந்த 25 ஆம் திகதி ஜெனிவாவில் புதிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தனது உரையில் என்ன சொல்லியிருக்கிறார்?. அதன் பின் கடந்த மூன்றாம் திகதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்ட பின் அதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய பதிலில் என்ன கூறப்பட்டுள்ளது? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்புக்கு கூறத் தயாராக இல்லை என்பதே ஐநாவில் அவர்கள் வெளிப்படுத்திய செய்தியின் சாரம்.அதாவது சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்றைக்குமே பொறுப்புக்கூறாது.அது ராஜபக்சக்களாக இருந்தாலும் சரி,ரணிலாக இருந்தாலும் சரி,சந்திரிகாவாக இருந்தாலும் சரி, மைத்திரியாக இருந்தாலும் சரி, அனுராவாக இருந்தாலும் சரி,யாருமே பொறுப்புக் கூற மாட்டார்கள்.

இதில் இங்கே தமிழ் மக்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் உண்டு. ஐநா கூட்டத் தொடர்களின் போதுதான் சனல் நாலு வீடியோக்கள் வெளிவந்தன.ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்கு மூலங்களை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வெளிவந்தன. இப்பொழுதும் ஐநா கூட்டத் தொடரின் போதுதான் ரணிலை அம்பலப்படுத்தும் அல்ஜஸீராவின் வீடியோவும் வெளிவந்திருக்கிறது. அது ரணிலை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. இலங்கைத் தீவின் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு பொறுப்புக்கூறும் பண்பு இல்லாதது என்பதையும் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றது.ஐநா கூட்டத் தொடர் நடக்கும் காலங்களில் இலங்கை அரசாங்கங்களின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் உத்திகளா இவை? ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் அந்த அழுத்தங்கள் தமிழ் மக்களுக்கு எதைப் பெற்றுத் தந்தன? அதேசமயம் மேற்கு நாடுகளுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தன?

https://athavannews.com/2025/1424473

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலைத் தூற்றுவது சரிதானா?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல்-ஜசீராவின் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் கேட்ட கேள்விகளும் அவர் கொடுத்த பதில்களும் உலகளவில் பல விமர்சனங்களை தோற்றுவித்திருக்கிறது. அதற்கெதிரான விமர்சனங்களாக ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று காஸா, மியன்மார், காஷ்மீர் பிரச்சினைகள் பற்றி டிரம்ப், புட்டின், மோடி, நெத்தன்யாகு போன்றவர்களிடம் கேள்விகளைக் கேட்க முடியுமா என்ற வகையிலான கருத்துக்களும் வந்த வண்ணமிருக்கின்றன. இது போலவே டி.டப்ளியு. தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்திருந்த நேர்காணலும் விமர்சனங்களைக் கொண்டுவந்திருந்தது.

உலகில் அரசியல்வாதிகள் தங்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களை மிகச் சரியாகப் பயன்படுத்துகின்றார்களா 

என்றால், அது கேள்விக்குறிகளையே தோற்றுவிக்கும். அது இலங்கைக்கு மாத்திரமல்ல அனைத்து நாடுகளுக்கும்இது பொதுவானதாகவே இருக்கும்.ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகள் யாரும் அவர்களுடைய ஆட்சிக் காலங்களில் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்து முடித்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். அதனை நிரூபிப்பதாகவே ஒவ்வொருவருடைய ஆட்சிக்காலங்களின் பின் ஏற்பட்ட மாற்றங்களே சாட்சியாக இருக்கிறது. 

அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மன் என பல நாடுகளை உதாரணமும் காட்டலாம்.

இலங்கையில் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டே வந்திருக்கிறார்கள். நாட்டுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அக்காலங்களில் உருவான தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தங்களுடைய ஆதரவுகளை வழங்கினார்கள். ஆனால், ஆட்சியிலிருந்து சிங்களத் தலைவர்கள் யாரும் அந்த அரசியல்வாதிகளின் முயற்சிகளுக்குத் தீர்வை முன்வைக்கவேயில்லை. முன்வைத்தாலும் அவை சிங்கள அடிப்படைவாதிகளால் இல்லாமலாக்கப்பட்டன.

அதற்கு டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம், சந்திரிகா அம்மையாரின் இடைக்கால நிருவாக சபை, சுனாமி நிவாரணத் திட்டம், மைத்திரிபால சிறிசேன கால புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்றவற்றை அதற்கு உதாரணமும் காட்டலாம். ஏன்? இந்தியாவின் முழுமையான பங்குபற்றலுடன் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனால், உருவான 13ஆவது திருத்தத்தையும் கூறலாம். 13ஆவது திருத்தம் இதுவரையில் முழுமையாக அமுல்படுத்தப்படாமலிருப்பதும் மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை ஆளுநர்கள் வசம் வைத்திருக்கின்றமை வேறுகதை.

அகிம்சை வழிப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒருமித்து இருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பிரிவுகளாக மாறத் தொடங்கினார்கள். அதற்கு ஒவ்வொருவரும் கைக்கொண்ட கொள்கைகள் காரணமாக இருந்தன. ஒருவர் ஒருவழியை முன்வைக்க மற்றையவர்கள் வேறு ஒரு முறையையே கையாண்டிருக்கின்றனர். எவ்வாறிருந்தபோதிலும், தமிழ் மக்களின் சுதந்திரமான அரசியல் உரிமைக்கான சுய நிர்ணயக் கோரிக்கைக்கு ஏற்ற தீர்வு வழங்கப்படவில்லை. அது தமிழ் அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனங்களையே ஏற்படுத்தியிருந்தது. இப்போதும் அவ்வாறான விமர்சனங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பக்கம் சாய்வதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.

அரசியல் ரீதியான முயற்சிகளின் இயலாமை காரணமாகவே ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. அந்த ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி ஆட்சியிலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரையும் அச்சம் 

கொள்ள வைத்திருந்தது என்பதற்கப்பால் பிரமிக்கவும் செய்திருந்தது. பிற்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு இறுதியில் ஆயுத ரீதியாகவே அடக்கப்பட்டது.

இலங்கையை பொறுத்தவரையில், தமிழ் மக்களது போராட்டமானது ஒட்டு மொத்த சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு திசை திருப்பப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் ஏதோ தமிழர்களுடைய போராட்டத்தை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரே என்றும் சொல்லப்பட்டது. அதனால்தான் இலங்கையின் ஏகபோக ராஜாவாக மகிந்த புகழாரம் சூடப்பட்டிருந்தார். ஆனால், சிறிது காலத்திலேயே அவர்கள் ஒன்றுமே இல்லாதவர்களாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். இறுதியில் தேசியப் பட்டியல் ஊடாக மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டிய நிலையையும் கொண்டுவந்தது, இது சிங்கள மக்கள் தங்களுக்கிருந்த நீண்டகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த தரப்பினரையே மக்கள் ஒதுக்கியதையே காட்டுகிறது.

ஒருவகையில் பார்த்தால், உலகமே பிரமிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்காக மிகவும் கவனமாகக் காய் நகர்த்தி நோர்வேயின் உதவியுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைப்பாடுகள் காரணமாகப் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க ஆவார்.

அவரது அந்த தந்திரமான கனகச்சிதமான வேலைப்பாடு ஆயுத ரீதியாக புலிகள் பலமிழக்கும் நிலையை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துவந்த கிழக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் பங்களிப்பு குறைவதற்கு அல்லது இல்லாமல் போவதற்கு புலிகளின் பிளவு காரணமாக இருந்தது. அதனைச் செய்து முடித்தவர் ரணில் விக்ரமசிங்க ஆகும்.

ஆயுதப் போராட்டத்தின் முடிவு, அதனால் ஏற்பட்ட நாட்டின் அமைதி நிலை, இயல்பு வாழ்க்கை போன்றவற்றின் பின்னரே சிங்கள மக்கள் தங்களது மற்றைய விடயங்களைப் பற்றி சிந்திப்பதற்கான காலத்தைக் கொடுத்திருந்தது. அதற்காக ரணிலுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த தலைவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு, விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பங்களிப்புச் செய்யவில்லை என்ற கருத்தாகாது என்பதும் இதில் கவனிக்கப்படவேண்டியது.

இந்த இடத்தில்தான், அல்-ஜசீராவின் சமீபத்திய நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில், பத்திரிகையாளர் புலனாய்வு அதிகாரி  போல் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருந்தார். ரணில் பதிலளிக்க நேரம் கொடுக்காமல் கதைத்து கொண்டிருந்தார். பதிலளிக்கும் நேரத்தில் இடைஞ்சல் செய்து கொண்டே இருந்தார் என்பதெல்லாம் ஒருவகையில் பார்த்தால், ரணில் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டார் என்பதாகக் கொள்ளலாம். உண்மையில் அவர் குற்றவாளியல்ல. இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பியதை ஏற்படுத்த அவருடைய ஆட்சி, அதிகார காலங்களில்  அவர் முயற்சியைச் செய்திருந்தார்.

ரணிலைப் பொறுத்தவரையில், இலங்கையை உலகமயமாக்கலின் சூழலுக்கேற்பவும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் நகர்த்தியே வந்திருக்கிறார். நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் எதிர்பார்த்த ஆட்சியொன்றை மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நிறைவேற்ற முன்னின்றார். அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலர் இணைந்தே இருந்தனர்.

ஆனால், அந்த முயற்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருகையாலும், கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகி, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததால் கைகூடாமல் போனது. அந்த ஆட்சி முடிவுக்கு வருவதற்கு மக்கள் எதிர்பார்க்காத விடயமான இயற்கை விவசாய முறை அறிமுகம் காரணமாக இருந்தது. மகிந்த குடும்பத்தாருக்கு அரசியலே வேண்டாமென்று ஒதுங்கவேண்டிய நிலையையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கலைத்து விட வேண்டும் என்று சிந்திக்கும் அளவிற்கு தற்போதைய நிலையையும் கொண்டுவந்திருக்கிறது.

இருந்தாலும், அந்நேரத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி மக்கள் எதிர்பார்க்கின்ற இலங்கையை ஏற்படுத்தவே ரணில் விக்கரமசிங்க முயற்சியை மேற்கொண்டார். அக்காலத்தில் அவர் மேற்கொண்டிருந்த பிரயத்தனங்கள் சாதாரணமானவையல்ல. பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையை சர்வதேச அளவில் தூக்கி நிறுத்திவிடவேண்டும் என்றே அவர் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். ஓரளவிற்கு அதில் வெற்றியும் கண்டார். அதனாலேயே அவர் இப்போதும் விமர்சிக்கப்படுகின்றார் என்றே சொல்லாம். ஒருவகையில் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த, இலங்கையின் தேசிய செல்வத்தை அழித்து கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரையே ஒன்றுமில்லை என்றாக்கிய மக்கள் ரணில் விக்ரமசிங்கவை மிகச் சாதாரணமாகவே பார்ப்பர் என்பதில் தவறொன்றும் இருக்கப் போவதில்லை என்றே சொல்லாம்.

ஒரு அரச தலைவர் தன்னுடைய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் விமர்சிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை. இருந்தாலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தேவையற்ற விடயங்கள் அரசியல் நாகரீகமற்றதாகவே பார்க்கப்படவேண்டும். அந்தவகையிலேயே, ரணில் விக்ரமசிங்க மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் அவரை ஒன்றும் செய்து விடப் போவதில்லi என்பதுடன், இலங்கை அரசியலில் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றே கொள்ளலாம்.

அதே நேரத்தில், தமிழ் மக்களின் விடயத்தில் அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டம் மக்கள் விடுதலை முன்னணியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும், வேறு ஒரு கோணத்தில் அணுகப்படாமலிருப்பதும் இதுபோன்றதொரு நிலையே என்பதும் மறைப்பதற்கில்லை.

ன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அல்-ஜசீராவின் ஊடகவியலாளர் மெஹ்தி ஹசன் கேட்ட கேள்விகளும் அவர் கொடுத்த பதில்களும் உலகளவில் பல விமர்சனங்களை தோற்றுவித்திருக்கிறது. அதற்கெதிரான விமர்சனங்களாக ரணிலிடம் கேள்வி கேட்பது போன்று காஸா, மியன்மார், காஷ்மீர் பிரச்சினைகள் பற்றி டிரம்ப், புட்டின், மோடி, நெத்தன்யாகு போன்றவர்களிடம் கேள்விகளைக் கேட்க முடியுமா என்ற வகையிலான கருத்துக்களும் வந்த வண்ணமிருக்கின்றன. இது போலவே டி.டப்ளியு. தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்திருந்த நேர்காணலும் விமர்சனங்களைக் கொண்டுவந்திருந்தது.உலகில் அரசியல்வாதிகள் தங்களுக்குக் கிடைக்கின்ற வாய்ப்புக்களை மிகச் சரியாகப் பயன்படுத்துகின்றார்களா என்றால், அது கேள்விக்குறிகளையே தோற்றுவிக்கும். அது இலங்கைக்கு மாத்திரமல்ல அனைத்து நாடுகளுக்கும் இது பொதுவானதாகவே இருக்கும்.

ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகள் யாரும் அவர்களுடைய ஆட்சிக் காலங்களில் மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்து முடித்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கும். அதனை நிரூபிப்பதாகவே ஒவ்வொருவருடைய ஆட்சிக்காலங்களின் பின் ஏற்பட்ட மாற்றங்களே சாட்சியாக இருக்கிறது. 

அதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மன் என பல நாடுகளை உதாரணமும் காட்டலாம்.

இலங்கையில் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றதிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை மேற்கொண்டே வந்திருக்கிறார்கள். நாட்டுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அக்காலங்களில் உருவான தமிழ் அரசியல்வாதிகளுக்குத் தங்களுடைய ஆதரவுகளை வழங்கினார்கள். ஆனால், ஆட்சியிலிருந்து சிங்களத் தலைவர்கள் யாரும் அந்த அரசியல்வாதிகளின் முயற்சிகளுக்குத் தீர்வை முன்வைக்கவேயில்லை. முன்வைத்தாலும் அவை சிங்கள அடிப்படைவாதிகளால் இல்லாமலாக்கப்பட்டன. அதற்கு டட்லி-செல்வா ஒப்பந்தம், பண்டா செல்வா ஒப்பந்தம், சந்திரிகா அம்மையாரின் இடைக்கால நிருவாக சபை, சுனாமி நிவாரணத் திட்டம், மைத்திரிபால சிறிசேன கால புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்றவற்றை அதற்கு உதாரணமும் காட்டலாம். ஏன்? இந்தியாவின் முழுமையான பங்குபற்றலுடன் ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனால், உருவான 13ஆவது திருத்தத்தையும் கூறலாம். 13ஆவது திருத்தம் இதுவரையில் முழுமையாக அமுல்படுத்தப்படாமலிருப்பதும் மாகாண சபைகளுக்கான அதிகாரத்தை ஆளுநர்கள் வசம் வைத்திருக்கின்றமை வேறுகதை.

அகிம்சை வழிப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது ஒருமித்து இருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் பிரிவுகளாக மாறத் தொடங்கினார்கள். அதற்கு ஒவ்வொருவரும் கைக்கொண்ட கொள்கைகள் காரணமாக இருந்தன. ஒருவர் ஒருவழியை முன்வைக்க மற்றையவர்கள் வேறு ஒரு முறையையே கையாண்டிருக்கின்றனர். எவ்வாறிருந்தபோதிலும், தமிழ் மக்களின் சுதந்திரமான அரசியல் உரிமைக்கான சுய நிர்ணயக் கோரிக்கைக்கு ஏற்ற தீர்வு வழங்கப்படவில்லை. அது தமிழ் அரசியல் தலைவர்கள் மீதான விமர்சனங்களையே ஏற்படுத்தியிருந்தது. இப்போதும் அவ்வாறான விமர்சனங்கள் இருந்துகொண்டே இருக்கிறது. கடந்த தேர்தல்களில் தமிழ் மக்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பக்கம் சாய்வதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.

அரசியல் ரீதியான முயற்சிகளின் இயலாமை காரணமாகவே ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. அந்த ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சி ஆட்சியிலிருந்த அரசியல் தலைவர்கள் அனைவரையும் அச்சம் 

கொள்ள வைத்திருந்தது என்பதற்கப்பால் பிரமிக்கவும் செய்திருந்தது. பிற்காலத்தில் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதப் போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு இறுதியில் ஆயுத ரீதியாகவே அடக்கப்பட்டது.

இலங்கையை பொறுத்தவரையில், தமிழ் மக்களது போராட்டமானது ஒட்டு மொத்த சிங்கள மக்களுக்கு எதிரான போராட்டமாகக் காண்பிக்கப்பட்டு திசை திருப்பப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதி யுத்தத்தின் பின்னர் ஏதோ தமிழர்களுடைய போராட்டத்தை ஒட்டுமொத்தமாக முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரே என்றும் சொல்லப்பட்டது. அதனால்தான் இலங்கையின் ஏகபோக ராஜாவாக மகிந்த புகழாரம் சூடப்பட்டிருந்தார். ஆனால், சிறிது காலத்திலேயே அவர்கள் ஒன்றுமே இல்லாதவர்களாக அரசியலிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கின்றனர். இறுதியில் தேசியப் பட்டியல் ஊடாக மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றத்துக்குள் நுழைய வேண்டிய நிலையையும் கொண்டுவந்தது, இது சிங்கள மக்கள் தங்களுக்கிருந்த நீண்டகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த மகிந்த தரப்பினரையே மக்கள் ஒதுக்கியதையே காட்டுகிறது.

ஒருவகையில் பார்த்தால், உலகமே பிரமிக்கும் அளவிற்கு வளர்ச்சியடைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்வதற்காக மிகவும் கவனமாகக் காய் நகர்த்தி நோர்வேயின் உதவியுடன் சமாதான ஒப்பந்தத்தினை மேற்கொண்டு அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல வேலைப்பாடுகள் காரணமாகப் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க ஆவார்.

அவரது அந்த தந்திரமான கனகச்சிதமான வேலைப்பாடு ஆயுத ரீதியாக புலிகள் பலமிழக்கும் நிலையை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்துவந்த கிழக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அங்கத்தவர்களின் பங்களிப்பு குறைவதற்கு அல்லது இல்லாமல் போவதற்கு புலிகளின் பிளவு காரணமாக இருந்தது. அதனைச் செய்து முடித்தவர் ரணில் விக்ரமசிங்க ஆகும்.

ஆயுதப் போராட்டத்தின் முடிவு, அதனால் ஏற்பட்ட நாட்டின் அமைதி நிலை, இயல்பு வாழ்க்கை போன்றவற்றின் பின்னரே சிங்கள மக்கள் தங்களது மற்றைய விடயங்களைப் பற்றி சிந்திப்பதற்கான காலத்தைக் கொடுத்திருந்தது. அதற்காக ரணிலுக்கு முன்னர் ஆட்சியிலிருந்த தலைவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு, விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பங்களிப்புச் செய்யவில்லை என்ற கருத்தாகாது என்பதும் இதில் கவனிக்கப்படவேண்டியது.

இந்த இடத்தில்தான், அல்-ஜசீராவின் சமீபத்திய நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில், பத்திரிகையாளர் புலனாய்வு அதிகாரி  போல் கேள்விகளை அடுக்கிக் கொண்டேயிருந்தார். ரணில் பதிலளிக்க நேரம் கொடுக்காமல் கதைத்து கொண்டிருந்தார். பதிலளிக்கும் நேரத்தில் இடைஞ்சல் செய்து கொண்டே இருந்தார் என்பதெல்லாம் ஒருவகையில் பார்த்தால், ரணில் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டார் என்பதாகக் கொள்ளலாம். உண்மையில் அவர் குற்றவாளியல்ல. இலங்கையின் பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பியதை ஏற்படுத்த அவருடைய ஆட்சி, அதிகார காலங்களில்  அவர் முயற்சியைச் செய்திருந்தார்.

ரணிலைப் பொறுத்தவரையில், இலங்கையை உலகமயமாக்கலின் சூழலுக்கேற்பவும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் நகர்த்தியே வந்திருக்கிறார். நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் மக்கள் எதிர்பார்த்த ஆட்சியொன்றை மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி நிறைவேற்ற முன்னின்றார். அதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட பலர் இணைந்தே இருந்தனர்.

ஆனால், அந்த முயற்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருகையாலும், கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகி, சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததால் கைகூடாமல் போனது. அந்த ஆட்சி முடிவுக்கு வருவதற்கு மக்கள் எதிர்பார்க்காத விடயமான இயற்கை விவசாய முறை அறிமுகம் காரணமாக இருந்தது. மகிந்த குடும்பத்தாருக்கு அரசியலே வேண்டாமென்று ஒதுங்கவேண்டிய நிலையையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கலைத்து விட வேண்டும் என்று சிந்திக்கும் அளவிற்கு தற்போதைய நிலையையும் கொண்டுவந்திருக்கிறது.

இருந்தாலும், அந்நேரத்தில் கிடைத்த ஒரு வாய்ப்பினை பயன்படுத்தி மக்கள் எதிர்பார்க்கின்ற இலங்கையை ஏற்படுத்தவே ரணில் விக்கரமசிங்க முயற்சியை மேற்கொண்டார். அக்காலத்தில் அவர் மேற்கொண்டிருந்த பிரயத்தனங்கள் சாதாரணமானவையல்ல. பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையை சர்வதேச அளவில் தூக்கி நிறுத்திவிடவேண்டும் என்றே அவர் அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டார். ஓரளவிற்கு அதில் வெற்றியும் கண்டார். அதனாலேயே அவர் இப்போதும் விமர்சிக்கப்படுகின்றார் என்றே சொல்லாம். ஒருவகையில் நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த, இலங்கையின் தேசிய செல்வத்தை அழித்து கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்திய மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினரையே ஒன்றுமில்லை என்றாக்கிய மக்கள் ரணில் விக்ரமசிங்கவை மிகச் சாதாரணமாகவே பார்ப்பர் என்பதில் தவறொன்றும் இருக்கப் போவதில்லை என்றே சொல்லாம்.

ஒரு அரச தலைவர் தன்னுடைய அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் விமர்சிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை. இருந்தாலும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் தேவையற்ற விடயங்கள் அரசியல் நாகரீகமற்றதாகவே பார்க்கப்படவேண்டும். அந்தவகையிலேயே, ரணில் விக்ரமசிங்க மீது மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் அவரை ஒன்றும் செய்து விடப் போவதில்லi என்பதுடன், இலங்கை அரசியலில் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்றே கொள்ளலாம்.அதே நேரத்தில், தமிழ் மக்களின் விடயத்தில் அவர்களுடைய சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டம் மக்கள் விடுதலை முன்னணியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியிலும், வேறு ஒரு கோணத்தில் அணுகப்படாமலிருப்பதும் இதுபோன்றதொரு நிலையே என்பதும் மறைப்பதற்கில்லை.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலைத்-தூற்றுவது-சரிதானா/91-353428

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.