Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Untitled Artwork

மூன்று அல்லது நான்கு நாட்களாக சவரம் செய்யாத முகம், கலைந்த தலை மயிர், அழுக்கான ஜக்கெற், நிறைந்த சோகம்... என பஸ் தரிப்பிடத்தில் அவன் நின்றிருந்தான். விரும்பத்தகாத ஒருவித நெடியும் அவனிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. அவனது முகத்தைப் பார்த்ததும் தமிழன்தான் என்று புரிந்து கொண்டேன். 

சனிக்கிழமை காலை நேரம், பஸ் தரிப்பிடத்தில் நானும் அவனும்தான் நின்றிருந்தோம். பஸ் வர இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அவன் என்னைப் பார்ப்பதைத் தவிர்ப்பது எனக்குத் தெரிந்தது. அவனது பிரச்சினைதான் என்ன என்பதை அறிய விரும்பினேன். கொஞ்சம் நெருங்கிப் போனேன். நான் வருவதை உணர்ந்து ஒரு கணம் என்னைப் பார்த்தான் அந்தக் கணம் எனக்குப் போதுமானதாக இருந்தது. “தமிழோ?” 

குளிரில் வெடித்த அவனது வறண்ட இதழில் தோன்றிய ஒரு சிறிய புன்னகை தமிழன் என்பதை ஒத்துக் கொண்டது.

“நீங்களும் பஸ்ஸுக்குத்தான் நிக்கிறீங்களோ?”

தலையை ஆட்டி ஒப்புக் கொண்டான். சைகையால் மட்டும்தான் பேசுவான் என்று நினைத்தேன். ஆனால் பேசவும் செய்தான்.

“உங்களை எனக்குத் தெரியும். அடிக்கடி கண்டிருக்கிறன்”

நான் இருக்கும் நகரில் இப்பொழுது பல தமிழர்கள் வசிக்கிறார்கள். எனக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் மிக மிகக் குறைவு. ஒவ்வொரு வார இறுதியிலும், பிறந்தநாள், பூப்புனித நீராட்டு விழா... என்று ஏதாவது நம் மத்தியில் நடந்து கொண்டேயிருக்கும். எல்லாவற்றுக்கும் போய்க் கொண்டிருக்க முடியாது. ஒரு விழாவுக்குப் போய் இன்னொன்றுக்குப் போகாவிட்டால் பிரச்சினை ஆகிவிடுகிறது.

எங்களது கொண்டாட்டங்கள்  வரம்பு வரையற்றவை. அதனால் இப்பொழுதெல்லாம் தமிழர்களுக்கு நான் வசிக்கும் நகரத்தில் யாரும் மண்டபங்களைத் தருவதில்லை.  நாங்களும் விடுவதாயில்லை. எங்கள் நகரத்தில் இருந்து நாற்பது கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இன்னொரு நகரத்தில் கொண்டாட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். இப்படியான அசௌகரியங்களால் நான் முற்று முழுதாக விழாக்களைத் தவிர்த்துக் கொண்டு வருகிறேன். அதனால் பலரது தொடர்புகள் எனக்கு இல்லாமற் போய் விட்டன.. புதிதாக வருபவர்களும் என்னுடன் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. அதனால் பலரை எனக்குத் தெரியவில்லை.  

“வேலையாலை வாறீங்களோ?”

 “இல்லை அண்ணா. நேற்று ஒரு விசயமா வந்தனான். இப்ப திரும்பப் போறன்”

“ அப்ப நீங்கள் இந்த Stadt (நகரம்) இல்லையோ?”

“முந்தி இங்கை தான் இருந்தனான். இப்ப  கிறைல்ஸ்ஹைம் எண்ட இடத்திலை இருக்கிறன்”

“அங்கையோ வேலை செய்யிறீங்கள்?”

“இல்லை, வேலை இல்லை”

“ஏன்?”

ஏதோ சொல்ல நினைத்தான். அதற்குள் பஸ் வந்துவிட்டது.

Untitled Artwork

சனிக்கிழமை அதுவும் காலை நேரம் என்பதால் ஆட்கள் இன்றி பஸ் வெறுமையாக இருந்தது. பஸ்ஸுக்குள் எனது இருக்கையைத் தாண்டிப் போக எத்தனித்தவன் என்னை ஒரு தரம் உற்று நோக்கினான்.

“இதிலை இருங்கோவன்” எனது இருக்கைக்கு நேரெதிரே இருந்த இருக்கையை அவனுக்குச் சுட்டிக் காட்டினேன். இந்த வார்த்தைகளை எதிர்பார்த்தவன் போல் சட்டென்று அதில் அமர்ந்து கொண்டான்.

“உங்களுக்கு என்னதான் பிரச்சினை? என்னத்துக்கு இந்தக் கோலம்?”

“நான் நாட்டுக்குத் திரும்பிப் போறன்” அவன் இதைச் சொன்னதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவோ சிரமங்களைச் சமாளித்து, பல இலட்சங்களைச் செலவழித்து வெளிநாடு போக வேண்டும் என்று  நாட்டில் பலர் இருக்கும் போது, இவன் எதிர்மறையாக இருக்கிறானே என எண்ணிக் கொண்டேன். அவனேயே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் தலை குனிந்திருந்தது. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு அவனே தொடர்ந்தான். “என்னை அவள் டிவோர்ஸ் எடுத்திட்டாள். இப்ப எனக்கு விசாவும் இல்லை”

அவனுடைய நிலைக்கான காரணத்தைப் புரிந்துகொண்டேன்.  ஆனால் எதற்காக விசா இல்லாமல் போனது? என்ற கேள்வி என்னிடம் இருந்தது. ஆனால் அதைப் பற்றி அவனிடம் கேட்கவில்லை. அவன் சொல்ல விரும்பினால் சொல்லட்டும் என்று விட்டு விட்டேன்.

“அவள்தான் கல்யாணம் கட்டுறதுக்கு ஸ்பொன்சர் பண்ணி என்னை இஞ்சை கூப்பிட்டவள். கலியாணம் கட்டி வேலையும் செய்து கொண்டிருந்தனான். பிறகு இப்பிடி ஆகிப் போச்சு… டிவோர்ஸ்க்குப் போட்டுது…” பெருமூச்சு ஒன்று அவனிடம் இருந்து வந்தது. அவனே தொடர்ந்தான், எனக்கு விசா முடிஞ்சு போட்டுது. விசாவைப் புதுப்பிக்கப் போனால், அங்கை வைச்சே பிடிச்சு அனுப்பிப் போடுவாங்கள் எண்டு வேலையிடத்திலை சொன்னாங்கள்”

“யார் சொன்னது? பைத்தியக்காரத்தனமா இருக்கு. நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறீங்கள். உங்களை ஏன் பிடிச்சு அனுப்பப் போறாங்கள்?”

கோபத் தொனியில் வந்த என் பேச்சைக் கேட்டு நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

“என்னோடை வேலை செய்யிற தமிழாக்கள்தான் சொன்னவையள்” 

யாரை நோவது என்று எனக்குத் தெரியவில்லை. “சரி.. டிவோர்ஸ் கேஸ் என்னாயிற்று?”

“அது முடிஞ்சு ஒரு வருசமாச்சு. இப்ப அவள் இந்தியாவுக்குப் போய் கலியாணமும் கட்டிக் கொண்டு வந்திட்டாள். எங்கடை ஊர்க்காரன்தான். பேஸ்புக்கிலை படங்கள் போட்டிருக்கிறாள்”  பேச்சை முடித்துக் கொண்டு அமைதியாகிப் போனான்.

அவனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். பஸ் நகரத்தை அடைந்திருந்தது. என்னை முதலில் இறங்கவிட்டு பின்னால் இறங்கினான்.

“தம்பி.  ஒரு லோயரை வைச்சு உங்களின்ரை விசாப் பிரச்சினையைச் சரி செய்யலாம். டைவோர்ஸ் பிரச்சினையாலை நீங்கள் மன அழுத்தத்திலை  இருந்ததாகச் சொல்லலாம். அதாலைதான்  விசாவைப் புதுப்பிக்கப் போகேல்லை எண்டு… இன்னும் வழி இருக்கு"

“நன்றியண்ணா. இந்தப் பிரச்சினைக்குப் பிறகு, எனக்கு ஒரு இந்தியன்தான் தன்ரை ரெஸ்ரோரண்டிலை வேலை தந்தவன். வேலை களவுதான். அவனின்ரை ரெஸ்ரோரண்டிலைதான் தங்கியிருந்தனான். போதும். ஒரு இடமும் போக வரேலாது. நான் முடிவெடுத்திட்டன். போன கிழமை பொலிஸிட்டைப்   போய் நாட்டுக்குப் போகப் போறன் எண்டு சொன்னன். அவையள் வெளிநாட்டு அலுவலகத்துக்குப் போகச் சொல்லிச்சினம். அங்கை போய் அவையளோடை கதைச்சன். தங்கிறதுக்கு  கிறைல்ஸ்ஹைமிலை ஒரு இடம் ஒழுங்கு செய்து தந்து வெள்ளிக்கிழமை வரச் சொல்லிச்சினம். நேற்றுத்தான், வெள்ளிக்கிழமை போனனான். சிறிலங்காவுக்குப் போறதுக்கு ரிக்கெற் செய்து தந்திருக்கினம். 18ந்திகதி பிளைற்”

“இப்பவும் நீங்கள் இங்கை இருக்கிறதுக்கு வழி செய்ய முடியும். அவசரப்படாதையுங்கோ”

“இல்லையண்ணா. போறதெண்டு முடிவெடுத்திட்டன். தாங்ஸ் அண்ணா”

இதற்குமேல் நான் அவனை வற்புறுத்த விரும்பவில்லை. “ உங்களுக்குத்தானே  கிறைல்ஸ்ஹைமிலை தங்கிறதுக்கு இடமிருக்கு. இஞ்சை, சனிக்கிழமை அதுவும் காலைமை வெள்ளென, என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்?”

“நான்.. நேற்றே ரிக்கெற்றெல்லாம் அவையிட்ட வேண்டிட்டன். இனி இஞ்சாலை வரமாட்டன். கலியாணம் கட்டின புதுசிலை நானும் அவளும் சுப்பர்மார்க்கெற்றிலை சாமான்கள் வாங்கிட்டு அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்துதான் வீட்டுக்குப் போறதுக்கு பஸ் எடுக்கிறனாங்கள். அதுதான் சும்மா நடந்து வந்து அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்தனான். அப்பிடியே இரவு முழுக்க அங்கையே வாங்கிலிலை   படுத்திட்டன். சரி அண்ணை..”

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  கிறைல்ஸ்ஹைம் போகும் பஸ்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான். பஸ்ஸில் ஏறப் போகும் நேரத்திலேயாவது திரும்பிப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு நின்றேன். அவன் பார்க்கவேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வலி சுமந்த மனிதர்கள் பலர் இவரைப்போல் ..........என்ன செய்வது . ........ ! 😔

  • கருத்துக்கள உறவுகள்

5 hours ago, Kavi arunasalam said:

“நான்.. நேற்றே ரிக்கெற்றெல்லாம் அவையிட்ட வேண்டிட்டன். இனி இஞ்சாலை வரமாட்டன். கலியாணம் கட்டின புதுசிலை நானும் அவளும் சுப்பர்மார்க்கெற்றிலை சாமான்கள் வாங்கிட்டு அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்துதான் வீட்டுக்குப் போறதுக்கு பஸ் எடுக்கிறனாங்கள். அதுதான் சும்மா நடந்து வந்து அந்த பஸ்ஸ்ராண்டிலை இருந்தனான். அப்பிடியே இரவு முழுக்க அங்கையே வாங்கிலிலை   படுத்திட்டன்.

இந்த இடத்தில் கண் கலங்கிவிட்டது...............

எவ்வளவு தான் நேசமாக, உயிருக்கு உயிராக இருந்து வாழ்ந்தாலும், சில வேளைகளில், சில சந்தர்ப்பங்களில், மனிதர்கள் கையில் இருப்பதையே போட்டு உடைத்து விடுகின்றார்கள்........ சிலது மீண்டும் ஒட்டவே முடியாமல் போகின்றன, அப்படியே கிடைத்த இந்த ஒரேயொரு வாழ்க்கையும் அல்ங்கோலமாகிவிடுகின்றது...............😌.

  • கருத்துக்கள உறவுகள்

விவாகரத்து முடிந்தும்

அவளை மறக்க முடியாதவன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kavi arunasalam said:

பஸ்ஸில் ஏறப் போகும் நேரத்திலேயாவது திரும்பிப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு நின்றேன். அவன் பார்க்கவேயில்லை

முடிந்த முடிவைச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறிங்கள் @Kavi arunasalam அண்ணை, விரக்தி அந்தச் செயலின்மையில் வெளிப்படுகிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.