Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பொறுப்பற்ற ஒரு ஊதாரி கணவன்"

இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்ட , பசுமையான மற்றும் சுறுசுறுப்பான மக்கள் நடமாட்டம் கொண்ட வவுனியா நகரின் மத்தியில், கவிதன் என்ற இளம் குடும்பத்தர் ஒருவர் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு ஊதாரித்தனமான கணவன் மட்டும் அல்ல, சுயநலமி, பொறுப்பற்றவன், அளவு கடந்து பொய் சொல்பவனாகவும் கவலையற்ற இயல்பு உடையவனாகவும் இருந்தான். அவனது மனைவி ஆதிரா, பொறுமை மற்றும் கருணையின் உருவகமாக இருந்ததுடன் எல்லா சூழ்நிலைகளிலும், எவ்வளவு கடினமாக இருந்தாலும் கணவனின் குறையை, குடும்பத்தின் பலவீனத்தை வெளியே காட்டாமல் சமாளித்து வாழ்வை கொண்டு இழுத்தாள்.

தான் சம்பாதித்த அல்லது சம்பாதிக்காத பணத்தை எவன் ஒருவன் எளிதில் கவலையே படாமல் ஊதி காற்றில் பறக்க விடுவது போல செலவு செய்வானோ அவன் தான் ஊதுற+தாரி = ஊதாரி அது இவனுக்கு நன்றாக பொருந்தும். ஒவ்வொரு முறையும் அவன் பொறுப்பற்று செலவழித்துவிட்டு திரும்பி வரும் பொழுது, கடிந்து கணவனை பேசினாலும், அவனைக் கண்டதும், கட்டித்தழுவி முத்தமிட்டு, அந்த அன்பின் நெருக்கத்தினால், குடும்பத்தை பலப்படுத்தி, அவனை திருத்தலாமா என்று பார்ப்பாளே தவிர, ஒரேயடியாக விலத்தி, குடும்பத்தில், மகளின் வாழ்வில் ஒரு விரிசலும் ஏற்பட விடமாட்டாள்.

அவர்களின் மகள் சிறுமி நிலா அவர்கள் வாழ்க்கையில் சூரிய ஒளியின் ஒளிக்கற்றையாக இருந்தாள். அவளுடைய சிரிப்பு அவர்களின் சஞ்சலமான வீட்டிலும் எதிரொலித்து, அவர்களின் மந்தமான நாட்களையும் பிரகாசமாக்கியது. ஆனால், கவிதன் தன் மகளை எவ்வளவு நேசித்தாலும், பொறுப்பு என்று வரும் பொழுது என்றும் தடுமாறினான்.

தந்தை மகள் உறவு மிகவும் அபூர்வமானது, பலகீனமானதும் கூட தந்தை மகள் உறவு பலமாக இருக்குமானால் குடும்பம் சிறந்து விளங்கும் .தந்தை மகள் உறவு மேலோங்க மகள் மனதில் தந்தை ஒரு உதாரண புருஷராக, ஹீரோவாக பதிந்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் இங்கு ஒரு பெரும் குறையாக இருந்தது. கவதன் வேலைக்கு போய், ஒழுங்காக உழைத்து குடும்பத்தை காப்பாற்றி மகிழ்வாக வைத்திருப்பதை விட, தன் நண்பர்களுடன் ஊர் ஊற்றாக சுற்றி , இருப்பதையும் செலவழித்து பொழுது போக்குவதிலேயே கூடுதலான காலத்தை செலவளித்தான். பெரும்பாலும் ஆதிராவின் தோள்களில் எல்லா பொறுப்பின் பாரத்தையும் விட்டு விட்டுச் சென்றுவிடுவான். தான் விரைவில் திரும்பி வருவேன் என்று உறுதிமட்டும் தாராளமாக சத்தியம் கூட செய்து கொடுப்பான். ஆனால் எல்லாம் காற்றில் பறந்துவிடும்.

என்ன இருந்தாலும் தந்தையை ஹீரோவாகவோ வில்லனாகவோ சித்தரிக்கும் பொறுப்பு தாயிடம் நிறைய உள்ளது என்பதை ஆதிரா நன்கு உணர்வாள். ஒரு நாள் அவன் திருந்துவான் என்ற நம்பிக்கையில், "உனது தந்தை உழைப்பாளி எப்படியும் சாதித்து காட்டுவார், பாவம் அவரின் போதாத காலம் இப்படி அவரை அலைக்கழிக்கிறது . உன்னை இதுவரை ஆளாக்கியது, உன் அப்பாவின் உழைப்புதான், கெட்டக்காலம், கெட்ட நண்பர்களின் கூட்டு இப்படி ஆக்கிவிட்டது. என்ன இருந்தாலும் உன் அப்பா சிறந்த மனிதர்தான் – மகளே” என கூறி மகளின் மனதில் தந்தை பற்றிய உணர்வை உயர்வான இடத்தில் வைத்துக்கொள்வாள். ஆனால் அவளின் உள்மனதில் அவனின் செயல்கள் நெருப்பாக எரிந்துகொண்டு தான் இருக்கும்.

குடும்ப பலத்தின் தூணான ஆதிரா, இரு பெற்றோரின் பாத்திரத்தை ஏற்று, உண்மையில் தாயும் தந்தையாய், நிலாவுக்கு ஒன்றும் குறையாமல் இருப்பதை உறுதி செய்தாள். அவள் தனது அரவணைப்பு, அன்பு மற்றும் போதனைகளால் வீட்டை மகிழ்வாக ஒரு குறையும் இல்லாமல் நிரப்பினாள், அதற்கு அவளின் நல்ல சம்பளத்துடன் கூடிய மதிப்பான உத்தியோகமும் துணையாக இருந்தது. அது நிலாவை கனிவான இதயம் மற்றும் நெகிழ்ச்சியான இளம் பெண்ணாக இதுவரை வடிவமைத்தது. என்றாலும் ஊதாரியான ஆனால் தந்தையின் நல்ல வியாபார நிலையத்தின் உயர் பதவியில் இருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட அழகும், அன்பும், அறிவும் நிறைந்த பெண்ணான ஆதிராவின் வாழ்க்கை, பணப்பிரச்சனையால் பாதிக்கப்படாவிட்டாலும், மகளின் வருங்கால வாழ்வை தந்தையின் போக்கு கெடுத்துவிடுமோ அல்லது இடைஞ்சலாக மாறுமோ என்பது தான் ஆதிராவின் முழுக்கவலை.

வருடங்கள் கடந்தன, தந்தையின் பழக்கத்தில் எந்த மாற்றத்தையும் நிலா காணவில்லை. என்றாலும் உதாரித்தனத்தை விட வேறு எந்த கெட்ட பழக்கமும் தந்தையிடம் இல்லை என்பது ஒரு ஆறுதலாக மட்டுமே அவளுக்கு இருந்தது, மற்றும் படி அவளின் தந்தை மேல் உள்ள பாசம் குறைய குறைய தொடங்கியது மட்டும் அல்ல, அவளுக்கு தாயின் நிலையை பார்த்து பார்த்து கல்யாணத்தில் கூட ஒரு வெறுப்பு அடிமனதில் பதியத் தொடங்கியது. எது என்னவென்றாலும் அவள் தந்தையுடன் பகிர்ந்து கொண்ட சின்ன சின்ன தருணங்களை அவள் மிகவும் நேசித்தாள், ஆனாலும் தந்தையின் ஒரு நிலையான இருப்பை அல்லது பிடிப்பை நம்பாமல் இருக்க கற்றுக்கொண்டாள். இது ஆதிராவுக்கு மேலும் மேலும் கவலையை கொடுத்துக் கொண்டே இருந்தது.

கவிதானின் கெட்ட சகவாசம் அவனை வெகுதூரம் அழைத்துச் சென்றன, ஆனால் ஒவ்வொரு முறையும் எதோ சாட்டு சொல்லிவிடுவான். இறுதியில் தந்தையும் அவனை தன் வியாபார நிலையத்தில் இருந்து பதவி நீக்கினார். என்றாலும் தான் மருமகளுக்கும் பேத்திக்கும் எந்த பண உதவியும் செய்வேன் என்று ஆதிராவுக்கு உறுதியளித்தார். ஆனால் ஆதிரா அதை நிராகரித்து, ஒரு சிறிய வீடு ஒன்றை தன் பணிமனைக்கு அருகில் எடுத்து அங்கு போய்விட்டாள். கவிதன் அப்பொழுது தூர நகரம் ஒன்றில் நின்றதால், அவள் அவனுடன் இதைப்பற்றி கலந்து ஆலோசிக்கவில்லை. அது மட்டும் அல்ல, அவளுக்குள்ளும் ஒரு வெறுப்பு வளர்ந்துவிட்டது. அவளின் உழைப்பு தாராளமாக ஒரு சாதாரண வாழ்வுக்கு காணும். அவளின் கவலை இப்ப மகள் நிலா மட்டுமே! குறிப்பாக அவளின் மாற்றம் வேதனை கொடுத்துக்கொண்டே இருந்தது.

கவிதன் தன் பதவி நீக்களையும், மனைவியும் மகளும் தனிக் குடித்தனம் போனதையும் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டான். அப்பொழுதுதான் அவன் முதல் முதல் உண்மையில் கண்ணீர் வடித்ததுடன் ஒரு வருத்தம், துன்பம் அவனைப் பற்றிக் கொண்டது. தனக்கும் தன் குடும்பத்துக்கும் இடையில் ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத தூரத்தை உணர்ந்தான். அன்று மாலை, அவன் தங்கியிருந்த அந்த தொலைதூர நகரத்தில் பரபரப்பான சந்தைகளில் தன்னந்தனியாக அலைந்து திரிந்தபோது, ஒரு தந்தை தனது மகளை கூட்டத்தின் வழியாக அன்பாக வழிநடத்துவதைக் கண்டான். ஆதிரா மற்றும் நிலாவின் ஞாபகத்தை அந்த காட்சி எழுப்பியதுடன் உடனடியாக அவர்களிடம் போக வேண்டும் என்ற ஆழ்ந்த ஏக்கத்தையும் கவிதனுக்குள் அது ஏற்படுத்தியது. அதனால் அவன் உடனடியாக கிடைத்த அடுத்த சந்தர்ப்பத்தில் வவுனியா திரும்பினான்.

அவன் திரும்பி வந்ததும், நிலா வயது முதிர்ந்த நிலை போல இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். ஆதிரா தன் கண்களில் நீருடன் அவனை வரவேற்றாலும் மௌனமாக தன் மகளுடன், மகளின் அறைக்குள் போய் கதவை மூடிவிட்டாள். என்றாலும் அறைக்குள் இருந்த படியே சாப்பாடு குளிரூட்டிக்குள் எடுத்து சாப்பிட்டு மற்ற அறையில் உறங்கலாம் என்று மெதுவாக கூறிவிட்டு, தன் அறையின் மின் ஒளியை அணைத்தாள், என்றாலும், நிலா, ஏதாவது தந்தை செய்வாரோ என்ற ஒரு எச்சரிக்கையாக தாயுடன் உறங்கினாள். மகளின் தோற்றத்தில், மனைவியின் நடத்தையில் கவிதன் தன்னைப்பற்றி முதல் முதல் சிந்திக்கத் தொடங்கினான். அவனுக்கு நித்திரை வரவே இல்லை. விடியும் வரை அறைக்கு போகாமல் கதிரையில் இருந்தான். பின் நிலாவின் படத்தை அருகில் எடுத்து வைத்து பார்த்தபடி ஏதேதோ கதைக்கத் தொடங்கினான். தான் புறக்கணித்த பந்தத்தின் ஆழத்தையும், தான் ஏற்படுத்திய வலியையும் உணர்ந்தான்.

அவனின் முணுமுணுப்பைக் கேட்டு நிலா தன் அறையில் இருந்து வெளியே எட்டிப்பார்த்தாள். தந்தையின் கண்ணீரை இது தான் அவள் முதல் முதல் காணுகிறாள். அவள் ஓடோடி வந்து தந்தையின் மடியில் இருந்து , அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாள். இந்த ஆரவாரம் கேட்டு ஆதிராவும் வெளியே வந்தாள். கணவரும் மகளும் ஒன்றாய் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். நாளடைவில், மெதுவாக ஆனால் நிச்சயமாக, கவிதன் நிலாவின் ஆதிராவின் நம்பிக்கையை மீண்டும் சம்பாதிக்க ஆரம்பித்தான்.

அதன் பின் அவர்களுக்கிடையில் பகிரப்பட்ட தருணங்கள் மற்றும் இதயப்பூர்வமான உரையாடல்கள் மூலம், ஒரு புதிய அத்தியாயத்தை கண்டுபிடித்தனர். அது அவர்களின் உறவை குணமடைவதற்கான நல்ல பாதையில் இருந்து, மகள் மீதான அவனது அன்பு அவனை முன்னோக்கி செலுத்தியது. இதற்க்கு ஆதிரையின் விட்டுக் கொடுப்புகளும் ஒரு காரணமாக அமைந்தது.

சூரியன் வவுனியாவில் அஸ்தமிக்கும் போது, வானத்தை ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களால் வரைய, குடும்பம் ஒன்றாக - கவிதன், ஆதிரா மற்றும் நிலா - அவர்களின் வீட்டு முற்றத்தில் கலகலப்பாக அமர்ந்திருந்தனர். மென்மையான மாலை காற்றுக்கு மத்தியில், சிரிப்பு மீண்டும் ஒருமுறை அவர்களது வீட்டை நிரப்பியது, அன்பு மற்றும் புரிதலின் மீது கட்டப்பட்ட எதிர்காலத்தின் வாக்குறுதியை அது சுமந்தது.

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

428628354_10224713398085110_628906183995

427887005_10224713400645174_413472693473


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.