Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

canada.jpg?resize=750%2C375&ssl=1

அமெரிக்காவுக்கு எதிராக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் கனடா பிரதமர்!

“அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்” என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அமுலுக்குக்  கொண்டுவந்தார்.

கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு புதிய வர்த்தக வரியை அமெரிக்கா விதிக்கவில்லை என்றாலும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எக்கு, அலுமினியம் மற்றும் வாகனங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது ‘எமது வாகனங்களுக்கு ஜனாதிபதி  ட்ரம்ப் விதித்துள்ள வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, எமது வர்த்தக ஒப்பந்தத்துக்கு இணங்காத அனைத்து அமெரிக்க வாகன உதிரி பாகங்களுக்கும் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

அதன்மூலம் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் கனடா வாகன உற்பத்தி தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறைக்காக பயன்படுத்தப்படும்.

ட்ரம்ப் விதித்த வரியைப் போன்று எங்களின் வரி வாகன உதிரி பாகங்களை பாதிக்காது. எங்களின் விநியோகச் சங்கிலியின் நன்மைகள் எங்களுக்குத் தெரியும். கனடாவில் உற்பத்தி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் உதிரி பாக உற்பத்தியாளர்களுக்கு ஆதரவான கட்டமைப்பை கனடா உருவாக்கும்’ இவ்வாறு மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1427376

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

489222753_1078735644291407_5540379022874

489217790_1078717884293183_3559185455468

488532523_1078715824293389_3506690590472

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.