Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“போராடி வென்றவள்"

விதை செடியாக வளர மண்ணுடன் ஒரு போராட்டம்

செடி நிலைத்து நிற்க வானிலையோடு ஒரு போராட்டம்.

பூ மலர இதழ்களோடு ஒரு போராட்டம்

நதி ஓட நிலத்தோடு ஒரு போராட்டம்

கோழிக்குஞ்சு வெளியேவர முட்டைஓட்டோடு ஒரு போராட்டம்.

மீன்கள் உயிர்வாழ அலைகளோடு ஒரு போராட்டம்.

அருளம்மா மட்டும் இதற்கு விதிவிலக்காக ?

ஆமாம், அருளம்மாவின் வாழ்க்கை, போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பின்னணியில், ஒரு போர்க்களமாகவே இருந்தது.

முல்லைத்தீவின் ஒரு அமைதியான கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவள், அது பின்னாளில் ஒரு கலவரப் பூமியாக மாறும் என்று, என்றும் நினைக்கவில்லை. அர்ப்பணிப்புள்ள ஒரு மனைவியாகவும் மூன்று சிறு பிள்ளைகளின் அன்பான தாயாகவும் அன்று இருந்தாள். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கைச் சூழ்ந்த வன்னிப் போரின் இறுதிக் கட்டம் அவளது வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியமைத்தது. அவளது இளம் விவசாயிக் கணவர், போரின் பயங்கரங்களுக்கு மத்தியில் காணாமல் போனார். அவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்று அறியும் சூழ்நிலை அன்று இருக்கவில்லை. எங்கும் குண்டு சத்தங்களும், எறிகணை வெடிச்சத்தங்களும் கேட்டுக்கொண்டு இருந்தன. அதிரடிப் படையினரின் மோசமான கைதுகள், அடக்குமுறைகள், காரணமின்றி சுட்டுக்கொல்லுதல் போன்றவை நிகழ்ந்த காலப்பகுதி அது. அங்கு முறையிடுவதற்குக்கூட ஒரு நீதியான முறையான சூழ்நிலை இருக்கவில்லை.

என்றாலும் தான் 'போராடி வெல்வேன்' என்று, அருளம்மா தனக்குள் ஒரு மனவலிமையை, உறுதியை ஏற்படுத்தினாள். மூன்று இளம் குழந்தைகளை முறையாக வளர்க்கவும், தனது வாழ்க்கையை மீண்டும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியாக கட்டியெழுப்புவதற்கான கடினமான சவாலை சமாளிக்கவும் அதை எதிர்த்துப் போராடவும் துணிந்தாள்.

முதல் கட்டமாக, நெல் வயல்களில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து, கொளுத்தும் வெயிலையும், உடல் களைக்கும் கடின உழைப்பையும் தாங்கிக் கொண்டு, தன் பிள்ளைகளுக்கு உணவும், கல்வியும் கிடைப்பதை உறுதி செய்தாள். அதேவேளை, இரண்டாவது நடவடிக்கையாக, அவள் அகதிகள் முகாம்கள், கோவில்கள் மற்றும் எஞ்சியிருக்கும் சில அரசாங்க அலுவலகங்களைத் தன் கணவனின் அடையாளத்திற்காகத் தேடுவதுடன், இராணுவம் மற்றும் காவல் நிலையங்களிலும் விசாரித்தாள்.

காமரம் முரலும் பாடல், கள், எனக்

கனிந்த இன் சொல்;

தே மலர் நிறைந்த கூந்தல்; "தேவர்க்கும்

அணங்கு ஆம்" என்னத்

தாமரை இருந்த தையல், சேடி

ஆம் தரமும் அல்லள்;

யாம் உரை வழங்கும் என்பது

ஏழைமைப்பாலது அன்றோ?

காமரம் என்ற இசை தொனிக்கும், கள்ளைப் போல இனிமையான சொற்கள், தேன் நிறைந்து இருக்கும் மலர்களைச் சூடிய கூந்தல், தேவ லோக பெண்களும் போற்றும் தாமரை மலரில் இருக்கும் அந்தத் திருமகளும், அவளுக்குப் பணிப் பெண்ணாகக் கூட ஆகும் தரம் இல்லை என்று சொல்லும் படி, அருளம்மாவின் அழகு இருந்தது. அதிலும் அவள், இனிமையாக பேசுவது ஒரு அழகு. ஒரு வசீகரம். அவளின் உடல் அழகை விட, அவளின் அந்த பேச்சு அழகு எல்லோரையும், குறிப்பாக ஆண்களை, கட்டிப் போடும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவளும் அதற்குத் விதிவிலக்கல்ல. அதைவிட, அவளின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்கண் அகன்று, மாவடு போலவும் மற்றும் பாலில் விழுந்த வண்டுபோல கண்கள் அடிக்கடி துள்ளுவதும், கரிய விழிகளில் புருவம் வில்லைப்போல் வளைந்திருப்பதும் எவரையும் அவளை திரும்பி பார்க்க வைக்கும்.

நாளடைவில் அவளுடைய அந்த பேரழகும் இளமையும் ஒரு நல்வாக்காகவும் சாபமாகவும் மாறியது. முள்ளிவாய்க்கால் கடலில், அலை படகை அடித்து செல்வது போல் காற்றில் அசையும் அவளுடைய கருமையான, பளபளப்பான கூந்தல், அவளின் உள் வலிமையை, சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கும் பெரிய, வெளிப்படையான கண்கள், அதேவேளை எவரையும் சிக்கவைக்கும் வலையையும், கொன்று குவிக்கும் வாளையும் நினைவூட்டிக்கொண்டும் இருந்தது.

அவளுடைய ஒவ்வொரு நடத்தையும் அவளுடைய குடும்பத்தை பாதுகாக்க, உறுதியான ஒரு பெண்ணின் கண்ணியத்தை சுமந்து கொண்டு இருந்தது. போரினால் சீர்குலைந்த ஒரு சமூகத்தில், அவளது பாதிப்பை சுரண்ட முயன்ற ஆண்களிடமிருந்து அவளுடைய அழகு தேவையற்ற கவனத்தையும் ஈர்த்து அவளுக்கு பல தொல்லைகளையும் கொடுத்தது. ஆனால் அவள், தனது ஒவ்வொரு முன்னேற்றத்திலும், உழைப்பிலும், தேடலிலும், ஒரு வெற்றியை நோக்கி போராடிக் கொண்டே இருந்தாள்.

மின்னற்கொடி யென்றுஞ்சோதி விளக் கென்றும்

மெல்லியென்றும் வல்லியென்றும் மேனகை யென்றும்

கன்னற்கட்டி யென்றுஞ்சீனிக் கற்கண் டென்றும்

பூவையென்றும் பாவையென்றும் பொன்னே யென்றும்

பூந்திருவே என்றுமென்றன் பொக்கிஷ மென்றும்

கோவையென்றுங் கோதையென்றுங் கோகில மென்றும்

மங்கையர் ஒயில்கண்டே வலை வீசும் ஆண்களின்

பொல்லாத ஆசை சொல்லாத துன்பம் தூவும்

[முதல் ஆறு வரியும் பாம்பாட்டி சித்தருடையது]

மின்னலை போன்ற மேகமும், ஒளி பொருந்திய கண்களை உடையவளே, மெல்லிடை உடையாளே, மேனகயை போல் அழகு நிறைந்தவளே, சீனி சர்க்கரை கட்டியே என்றும் பூவை போன்றவளே, அழகு உருவம் உடைய பொம்மையை போன்றவளே, தங்கமே, பொக்கிஷமே என்றும், கோவைப்பழம் போன்றவளே, முத்தே என்றும் மங்கையின் அழகில் கவர்ந்திழுக்கப்பட்ட ஆண்களின் பொல்லாத ஆசை சொல்லாத துன்பம் கொடுக்கும் என்பதை அருளம்மா நன்றாகவே அறிவாள்.

அவளுக்கு முதல் சோதனை ஒரு பணக்கார நில உரிமையாளர் இடமிருந்து வந்தது. அவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியைக் தன்னகத்தே கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் மிகவும் வசதியான வேலையை அவளுக்கு வழங்கி, அவளுடைய குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை வழங்குவதாக உறுதியளித்தார். அவரது வார்த்தைகள் தேனாய் இருந்தன, ஆனால் அவரது உள்நோக்கங்கள் தெளிவாக இருந்தன. அருளம்மாவின் இதயம் கோபத்தாலும் வெறுப்பாலும் எரிந்தது. அவள் கவனமாக அவனது நடவடிக்கைகளை நிராகரித்தாள். அதனால், அவளுடைய வேலைக்கு ஆபத்து என்பதை நன்கு அறிந்திருந்தாள். ஆனால் அவளது மானம் அவளுக்கு முக்கியமாக இருந்தது. அது அவளின் முதல் போராட்டம்.

இரண்டாவது போராட்டம் விசாரணையின் போது வந்தது. அந்த பிராந்தியத்தில் அதிகாரம் செலுத்திய சில நபர்களில் ஒருவரான அரசாங்க அதிகாரியிடமிருந்து அது வந்தது. போரின் போது காணாமல் போனவர்கள் பற்றிய இரகசிய தகவல்களை தேடி அறிந்து, அவன் அவளது கணவரைக் கண்டுபிடிக்க அல்லது என்ன நடந்தது என்பதை அறிய உதவ முன்வந்தான். பதிலுக்கு, அவன் அவளுடைய தோழமையைக் கோரினான். தன் கணவனின் தலைவிதியையும், தன் தார்மீக திசைகாட்டியையும் அறிந்து கொள்ள வேண்டிய அவலத்திற்கு இடையே, அருளம்மா திண்டாடினாள். அவள் மீண்டும் தன்மானத்தையே முதன்மைப் படுத்தி, அதிகாரியின் கோரிக்கையை நிராகரித்தாள்.

மூன்றாவது போராட்டம், மிகவும் நயவஞ்சகமான சவாலாக, ஒரு பயண வணிகரின் வடிவத்தில் வந்தது. மற்றவர்களைப் போலல்லாமல், அவன் அவளை அன்புடனும் மரியாதையுடனும் அணுகினான். அவளுடைய இதுவரையான போராட்டங்களைக் கேட்டு ஒரு அனுதாபத்தைக் காட்டினான். என்றாலும் காலப்போக்கில், அவன் அவளிடம் திருமணத்தை முன்மொழியத் தொடங்கினான். அவளுடைய குழந்தைகளுக்கு ஒரு தந்தை தேவை என்றும் அவள் தன்னுடனான தோழமைக்கு தகுதியானவள் என்றும் வாதிட்டான். முதல் முறையாக அருளம்மா தயங்கினாள். அவனது வார்த்தைகள் கவர்ச்சியாக அதேநேரம் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருந்தன, அவளது தனிமை பெரும் சுமையாக இருந்தது. ஆனால், காணாமல் போன கணவனுக்கு அவளது விசுவாசமும், பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான அவளது அர்ப்பணிப்பும் இறுதியில் அவளுடைய முடிவை வழிநடத்தியது. அவள் மீண்டும், தான் பிள்ளைகளுடன் எப்படியும் 'போராடி வெல்வேன்' என்ற மன உறுதியுடன் நிராகரித்தாள்.

வருடங்கள் கடந்தன, அருளம்மாவின் பிள்ளைகள் திறமையான இளைஞர்களாக வளர்ந்தார்கள். அவளது மூத்த மகன் ஆசிரியராகவும், மகள் செவிலியராகவும், இளையவர் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சமூக சேவகியாகவும் ஆனார்கள். அருளம்மாவின் தியாகங்கள் பலனளித்தன, அவர்களின் வெற்றியில் அவள் ஆறுதல் கண்டாள் ஒரு 'போராடி வென்றவள்' என்ற நம்பிக்கையில்.

இதற்க்கிடையில், இலங்கை அரசும் 2024 இறுதியில் மாறியது. அவளது மற்றும் காணாமல் போனவர்களின் கோரிக்கைகளை தாம் நீதியின் அடிப்படையில் ஆராய்வதாகவும் கூறியது. என்றாலும், அது நிறைவேறும் மட்டும், அவள் நம்ப மறுத்தாள். அது வரலாற்றின் அனுபவமாகும்.

அவளது போராட்டங்கள் வெற்றிகளுடன் நகர்ந்து கொண்டே இருந்தன. இந்த இறுதி போராட்டமும், குறைந்தது அரசின் பார்வைக்கு முறையாக வந்ததும் ஒரு வெற்றியே! கணவர் இனி வருவார் என்று அவள் எண்ணவில்லை.

ஆனால், அவருக்கு என்ன நடந்தது, இதற்க்கு யார் காரணம் ?, இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகளை அரசு எடுக்கும் மற்றும் இதற்கான நீதி என்ன? இதைத்தான் தான் அவள் எதிர்பார்க்கிறாள். "போராடி வென்றவள்" என்ற உணர்வுடன் தன் மண்ணின் வாழ்வை மகிழ்வாக முடிக்க!

ஆழமான போராலும் துயரத்தின் புயல்களாலும்

அவளுடைய உறுதியான உள்ளம் அழமறுத்தது

அருளம்மாவின் கதை வழிகாட்டும் விண்மீன்

ஆசையும் உறுதியுமிருந்தால் போராட்டம் வெற்றியே!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

491326445_10228766423888222_194689935425

491287498_10228766424088227_792890868280

487425433_10228766424328233_782598370269


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.