Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மக்களின் உரிமைகள் இருப்பு சார்ந்த விடயங்கள் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்படுவதாகயிருந்தால், அதனை ஏற்றுக்கொள்ளகூடாது" - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'எங்களுடைய மக்களின் உரிமைகள் இருப்பு சார்ந்த விடயங்கள் வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்படுவதாகயிருந்தால், அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளகூடாது"- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Published By: RAJEEBAN 20 APR, 2025 | 10:38 AM

image

எங்களுடைய மக்களின் உரிமைகள் இருப்பு சார்ந்த விடயங்கள்  வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்படுவதாகயிருந்தால், அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளகூடாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சமூக அரசியல் செயற்பாட்டாளர் நியுட்டன் மரியநாயகம்  எழுதிய காட்டிக்கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இலங்கை தீவில் பூகோள அரசியல் ஆதிக்கம் அதன் அழுத்தங்கள் நிச்சயமாக இருக்கும் இதனை மறுக்க முடியாது.

அதனை விட தமிழ்தேசத்திலே வரக்கூடிய அழுத்தங்கள் என்பது, பொதுவாக இலங்கை தீவை அதிகமாகயிருக்கும்.

அப்படிப்பட்ட பூகோள அரசியல் போட்டித்தன்மை மிகவும் உச்சமடைந்திருக்கின்ற நிலையிலே, அதனுடைய உள்விளைவாக நாங்கள் இனப்படுகொலைக்கு முகம்கொடுத்த அதனை அனுபவித்த ஒரு நிலையிலே, அந்த இன அழிப்பிற்கு பிற்பாடு அந்த பூகோள அரசியலை கையாளுவது, எப்படி என்பது பற்றி நாங்கள் ஆழமாக சிந்தித்துவருகின்றோம்.

486056661_9587582671321183_6517377233996

அதனுடைய ஒரு முக்கியமான விடயமாகத்தான் தமிழீழ நிலப்பரப்பிலே இருக்ககூடிய கடற்தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் இருக்கின்றன.

அந்த வகையிலே இந்திய மீனவர்கள், தமிழ்நாட்டிலே இருந்து வந்து வடமாகாணத்திலே இருக்ககூடிய கடற்தொழிலாளர்கள் உடைய தொழிலை அழித்து நாளாந்தம் வந்து ஆயிரக்கணக்கிலே, அந்த படகுகள் வந்து எங்கள் மீனவர்களின் தொழிலை அழிப்பது என்பது எங்கள் கண்ணிற்கு முன்னாலே தெரிகின்ற விடயம்.

அதனை எதிர்ப்பது என்பது மிகவும் கடினமான விடயம் இல்லை ஏனென்றால் எங்கள் மக்களின் நேரடி பாதிப்பு, கண்ணிற்கு தெரிகின்றது.

ஆனால், இந்த பாதிப்பு ஒருபக்கத்தில் உச்சமடைந்துகொண்டிருக்க இன்னொரு பக்கத்தில வந்து இந்தியாவிற்கு போட்டியாக இருக்ககூடிய சீன வல்லரசு எங்கள் கடல் எல்லைக்குள் தனது ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய விதத்திலே தங்களது கடலட்டை பண்ணைகள், முதல் வேறு பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது, சீன வல்லரசின் அந்த விடயங்கள் கண்ணிற்கு சுலமபமாக தென்படுகின்ற விடயங்களாகயிருக்கவில்லை.

எங்களை பொறுத்தவரையில் இந்த பூகோள ஆதிக்க போட்டியில், நாங்கள் வெளிப்படையாக கூறுகின்றோம், இலங்கை தீவை பொறுத்தவரை விசேடமாக தமிழ்தேசத்தை பொறுத்தவரையிலே நாங்கள் இந்தியாவிற்கு ஒரு முன்னுரிமை வழங்கியே ஆகவேண்டும் ஏனென்றால் அவர்களிற்கு இலங்கை தீவில் பாதுகாப்பு நலன்சார்ந்த அக்கறை உள்ளது. இலங்கை தீவு இந்தியாவிற்கு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரதேசம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

அதனை நாங்கள் வெளிப்படையாக சொல்கின்றோம்.

489959745_9587584381321012_6312243065611

ஆனால் அதேநேரம், சீனா போன்ற ஒரு வல்லரசு இலங்கையிலேயோ அல்லது தமிழ்தேசத்திலேயே ஏதோ ஒரு நட்புறவை பேணுவதற்கு விரும்பி, உதவி செய்வதற்கு வருகின்ற நேரத்தில் அவர்களை எதிர்க்ககூடாது என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.

எங்களை பொறுத்தவரை எவரும் எங்களின் எதிரியாக இருக்ககூடாது எவரையும் எதிரியாக கணிக்கவும் கூடாது.

ஆனால் எங்களுடைய மக்களின் உரிமைகள் இருப்பு சார்ந்த விடயங்கள் அந்த வல்லரசுகளின் நிகழ்ச்சிநிரலால் பாதிக்கப்படுவதாகயிருந்தால், அதனை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளகூடாது.

https://www.virakesari.lk/article/212423

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.