Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcTQBJCWtwjc50_vG9oz_Rr

அரசியல் கட்சிகள் இரண்டு வகை.

ஒன்று ஆட்சியை பிடிப்பது மட்டுமே குறிக்கோள் என்ற நோக்கத்தோடு எப்போதுமே அசுரத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவை.

இரண்டாவது வகை, கொஞ்சம் செல்வாக்கோடு செயல்பட்டுக் கொண்டு கூட்டணி மூலம் ஏதாவது கிடைத்தாலே போதும் என்று காலம் தள்ளுபவை.

இந்த இரண்டாவது வகை கட்சிகளிலேயே (A), (B) என உட்பிரிவு கொண்டவையும் உண்டு..

(2A)

எப்படியாவது,ஏதாவது சில வகைகளில் சொந்தமாக நிதியைத் திரட்டி அதில் செயல்படும் கட்சி

(2B)

பெரிய கட்சிகளால் முதலீடு செய்யப்பட்டு நேரத்திற்கு ஏற்ப பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஸ்லீப்பர் கட்சி.

சொந்தமாக நிதி திரட்டி செயல்படும் 2A கட்சிகளில் 2A(1) என ஒன்று உண்டு.

2A(1

"கூட்டணியில் கடைசி வரை உங்களோடு இருப்போம். நீங்களாக பார்த்து ஏதாவது செய்யுங்கள்" என்று சாசனமே எழுதி கொடுத்துவிட்டு எப்போதுமே சரண்டர் மோடில் இருப்பவை.

2A(2)

தேர்தலில் மட்டும் கூட்டணியில் இருந்து விட்டு முடிந்ததும் வெளியே வந்து கம்பு சுற்றி விட்டு மீண்டும் தேர்தல் நேரத்தில் அதிக இடங்களை கேட்டு பேரம் பேசும் சாமர்த்திய கட்சி.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இது போன்ற கட்சிகளைத் தாண்டி லெட்டர்பேடு கட்சி என்பது தனி வகை.

நமக்கு தெரிஞ்சி இவ்ளோதான்..

அசெம்ப்ளி எலக்சன் வரைக்கும் இவங்க கிட்ட தான் மாட்டிக்கிட்டு பலரும் படாதபாடு படப் போறீங்க.

Ezhumalai Venkatesan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Saravanan Selvaraj
2B)1 - கூட்டணி கட்சியிடம் நிதியை பெற்று கொண்டு கட்சியை நடத்துவது, கூட்டணி கட்சி கொடுக்கும் இடத்தை மறுக்காமல் ஏற்பது - அதைவிட கொடுமை கூட்டணி தலைமை செல்லும் இடத்தில் எல்லாம் சகட்டுமேனிக்கு பாய்வது, ஏன், எதற்க்கு, என்ற கேள்வியே கேட்க தெரியாத கட்சிகள்.
என்னை பொறுத்தவரை அவர்கள் அந்த கூட்டணி தலைமையின் தொழிற்சங்க அல்லது ஒடுக்கப்பட்ட அல்லது பெரும்பான்மை அல்லது சிறுபான்மை பிரிவாக இருந்து விட்டு போகலாம்.
எந்த மக்கள் பிரச்சனைக்கும் கூட்டணி தலைமை கோவித்து கொள்ளும் என்று குரல் கொடுக்காமல் இருக்கும் அந்த அடிமை தனத்திற்கு எதற்க்கு மக்களை ஏமாற்றி ஒரு கட்சி நடத்த வேண்டும்.
கட்சி தலைவன் என்ற முறையில் தனக்கான அதிகார போதை ஒன்றை தவிர வேறெதுவும் எனக்கு தெரியவில்லை.

Pushpabarathy Srinivasan
இதுல 2Cம் உண்டு. அதாவது தேர்தல் நேரத்துல ரெண்டு பக்கமும் துண்டு போட்டு வைக்கும். பெட்டி எந்தப் பக்கம் பலமோ, அந்த பக்கம் ஜம்ப்🤣🤣

Gokul Kannamani

தேர்தல் நேரத்தில் திமுக அதிமுக இரு கட்சிகளில் இருந்தும்
நேருக்கு நேர் வாடா
ஒத்தைக்கு ஒத்த வாடா
ஆம்பளையா இருந்தா வாடா
மோதிப் பார்க்கலாம் நாங்கள் யார் தெரியுமா? எங்கள் கட்சி எப்படிப்பட்ட கட்சி தெரியுமா என்று வீர வசனம் பேசி மக்களை ஏமாற்றுவது தான் நடக்கின்றது. ஆனால் கோடி கோடியாய் கொள்ளை அடித்த ஊழல் வழக்குகள் எதுவும் இல்லாமல் இரு கட்சிகளிலும் சமரசம் செய்து கொள்கின்றனர்.

மு.அருள்செல்வன்
ஆனால் பத்திரிக்கையாளர்களில் ஒரே வகைதான்... ஆண்ட, ஆளும் கட்சிகளை விட்டுவிட்டு மற்ற கட்சிகளையே எப்போதும் நொட்டம் சொல்லும் வகை.

Elumalai Krishnan
அப்படியே இந்த பிரஸ் மீட் முடிந்தவுடன் கவர் கொடுப்பாங்களாமே , அதையும் A, B என்று தரவரிசை பிரிக்கலாமே?

Gokul Kannamani
திமுகவும் அதிமுகவும் மறைமுக கூட்டணி வைத்துக்கொண்டு பிற கட்சிகளை ஆட்சிக்கு வராமல் பல ஆயிரம் கோடி பணத்தை ஒவ்வொரு இந்நாள் முன்னாள் அமைச்சர்களும் சேர்த்து வைத்துக் கொண்டுள்ளனர் குறைந்தபட்சம் கூட்டணி ஆட்சி என்பதற்குக் கூட இவர்களுக்கு கசக்கின்றது காலகாலத்திற்கும் இவர்களே மாறி மாறி கொள்ளை அடிக்க வேண்டும். ஆனால் இருவரும் எதிர்ப்பது போல் நடிப்பார்கள்.

Kalaiselvan Siddharth Abimanyu
ஆட்சியை பிடித்த கட்சி எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமே அடித்துக்கொண்டு அடுத்த தேர்தலில் நிறை பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆசை காட்டி ஓட்டு போட பணமும் கொடுத்து தங்கள் இருப்பை தக்க வைக்கும்.அதே நேரத்தில் தமிழக அரசின் கடன் சுமையை மள மளவென அதிகரித்து வைக்கும். இதையே தான் அந்த போட்டியில் முண்ணனி வகிக்கும் இரண்டு கட்சியின் நிலைப்பாடும் .

Gokul Kannamani
அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவின் மீது ஊழல் சம்பந்தமாக எந்த அமைச்சரும் சிறை செல்லவில்லை அதேபோல் திமுக ஆட்சியிலும் அதிமுக அமைச்சர்கள் ஊழல் வழக்குக்காக யாரும் சிறை செல்லவில்லை.

Saravanan Selvaraj
இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய திருத்தம் உடனடி தேவை...
எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடவே அனுமதிக்க கூடாது.
கட்சி என்று ஒன்றை பதிவு செய்துவிட்டால், அவர்கள் தனித்தே நிற்க வேண்டும் ---
வாக்கு வங்கியை நிருபிக்க தவறினால் கட்சி என்ற அங்கீகாரம் ரத்து, மாறாக அவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்பட முடியும்.
இது போன்ற மாற்றங்கள் எல்லாம் காலத்தின் கட்டாயம்!!!


Mohan Ramachandran
கட்சி ஆதரவாளர்கள் நிலைதான் பரிதாபத்திற்குறியது ! தேவையில்லாமல் கம்பு சுத்துவது. வாங்கி கட்டிக் கொள்வது. அதுவும் தூய சென்னைத் தமிழில்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.