Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீதரன் உள்ளிட்ட 35 பேருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பிய தமிழரசுக் கட்சி!

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஞா.ஸ்ரீநேசன் உள்ளிட்ட 35 பேருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கான திரைமறைவுத் திட்டமிடல்களும் மேற்கொள்ளபடுவதாக உட்கட்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரனை கட்சியிலிருந்து அகற்றி தமிழரசுக் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளை நீதிமன்ற வழக்குகளின் மூலம் ஆரம்பித்த சுமந்திரன், அதன் உள்ளக நடவடிக்கையாக ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரித்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் ஸ்ரீநேசன் ஆகியோருக்கு இரண்டு விளக்கம் கோரல் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஞானமுத்து ஸ்ரீநேசன், பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், தம்பிப்பிள்ளை கோபாலபிள்ளை, மாமாங்கம் ஜீவரெத்தினம், பிள்ளையானகுட்டி நீதிதேவன், மார்க்கண்டு நடராசா,

மனோகரன் மதன், தம்பிப்பிள்ளை தியாகராசா, லக்ஸ்மணரஜனி ஜெயப்பிரகாஷ், பழனித்தம்பி குணசேகரம், குமாரசிங்கம் இளங்கீரன், கண்ணப்பன் கோகுலறஞ்சன், சுப்பிரமணியம் தேவராசா, மாணிக்கம் உதயகுமார், செல்லையா நகுலேஸ்வரன் ஆகிய 16 பேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் துரைராசா தனராஜ், வேலாயுதம் மோகன், சங்கரதாஸ் தயானந்தராசா, காளிராசா கோகுலராஜ், வேலாயுதம் வேல்மாறன், கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம், நாகேஸ்வரன் ஜெயகாந்தன்,

தம்பு முருகதாஸ் ஆகிய 8 பேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் சிவஞானம் சிறீதரன், கிருஸ்ணன் வீரவாகுதேவர், சண்முகராஜா ஜீவராஜா, அருணாசலம் வேழமாலிகிதன்,

ஜோன் தனராஜ், கிருஸ்ணவேணி விக்ரர்மான் ஆகிய ஆறுபேரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், ஜீவராசா மற்றும் வீரவாகுதேவர் ஆகியோர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மாணிக்கவாசகர் இளம்பிறையன், மதினி நெல்சன் உள்ளிட்ட பலருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சுமந்திரனால் விளக்கம் கோரப்பட்டுள்ள அனைவருமே சிறீதரனின் ஆதரவாளர்கள் என்பதுடன், அந்த அடிப்படையை வைத்தே அவர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.samakalam.com/சிறீதரன்-உள்ளிட்ட-35-பேருக/

  • கருத்துக்கள உறவுகள்

493521198_695468653005669_51308978053881

493530282_695470579672143_15163726749113

சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும்... பொன்னாடை போர்த்தும் நிகழ்வில்,

10 பேரைக் கூட சேர்க்க வக்கு இல்லை.

அதற்குள்... இருக்கிறவனுக்கு விளக்கம் கோரி கலைக்கிற யோசனை வேறை கிடக்குது. வெட்கம் கெட்டதுகளுக்கு திருந்துகின்ற புத்தியே இல்லை. உங்களால் தான்... அர்ச்சுனாவுக்கும், அனுராவுக்கும் பின்னால் மக்கள் போகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், ஞா.ஸ்ரீநேசன் உள்ளிட்ட 35 பேருக்கு விளக்கம் கோரல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கான திரைமறைவுத் திட்டமிடல்களும் மேற்கொள்ளபடுவதாக உட்கட்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்போ, கட்சியில் சுமந்திரன், சிவஞானம், சாணக்கியன், சத்தியலிங்கம் தான் கட்சியில் மிஞ்சியுள்ளார்களா? எல்லா வழிகளிலும் முயற்சித்து முடியாமல், இப்போ இந்த வேலையில் இறங்கிவிட்டார்களா? நல்லது. அதோடு கட்சியுமில்லை, அரசியலுமில்லை. இதுதான் சட்டத்தரணியின் சாணக்கியம். சாணக்கியன் எந்த கட்சியிலும் குடியேறுவார்,அவருக்கு இது பழகிப்போன ஒன்று. சுமந்திரனும் அனுராவின் காலில் விழுந்தாவது பதவி பிடிப்பார். மற்றவர்கள்......?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.