Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திர மோதி உரை: ராணுவ நடவடிக்கை பற்றி என்ன சொன்னார்?

பட மூலாதாரம்,NARENDRA MODI/YOUTUBE

12 மே 2025, 03:23 GMT

புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர்

பஹல்காம் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

''ஏப்ரல் 22ம் தேதியன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், அப்பாவி பொதுமக்களை அவர்களது குடும்பத்தின் முன், அவர்களுடைய குழந்தைகளின் கண் முன்னால் கொல்லப்பட்டனர். இது மிகவும் குரூரமான செயல். இது நமது நாட்டின் நம்பிக்கையை உடைப்பதற்கான செயல், இது என் மனதில் மிகப்பெரிய துக்கத்தை ஏற்படுத்தியது.'' என்றார் நரேந்திர மோதி.

மேலும், ''இந்த சூழலில் ராணுவத்திற்கு அனைத்து அதிகாரத்தையும் கொடுத்தோம். நமது நாட்டு பெண்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தோம். மே 6 மற்றும் 7ம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் நம்முடைய மன உறுதியை நாட்டு மக்கள் பார்த்தனர். பயங்கரவாத முகாம்கள் மீதும் பயங்கரவாதிகள் மீதும் மிகப்பெரிய நடவடிக்கை எடுத்தோம்.'' என்றார் நரேந்திர மோதி.

ஆபரேஷன் சிந்தூர் - ஒரு வாய்ப்பு

மேலும் தொடர்ந்த நரேந்திர மோதி, ''இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டவர்களை இந்தியா ஒரே அடியில் ஒழித்துவிட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால், பாகிஸ்தான் பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஒடிந்துவிட்டது.

இதற்குப்பிறகு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்தியாவுக்கு ஆதரவளிக்காமல், இந்தியாவின் கோவில், பள்ளிகள், பொதுமக்களின் குடியிருப்புகள், ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தானின் டிரோன், ஏவுகணைகள் எப்படி இந்தியாவின் முன் தவிடுபொடியாகின என்பதை உலகமே பார்த்தது. பாகிஸ்தானின் தாக்குதல்களை வானத்திலேயே இந்தியா சுக்குநூறாக்கியது. இந்தியாவின் டிரோன், ஏவுகணைகள் துரிதமாக செயல்பட்டு, பாகிஸ்தானின் வான்படை தளங்கள் மீது நடத்திய தாக்குதல்களில் ஏற்பட்ட சேதத்தை அந்நாடு முடங்கிப்போனது.'' என்றார்

அணு ஆயுத மோதலை நிறுத்தியிருக்கிறோம் - டிரம்ப்

சண்டையை நிறுத்தவில்லை என்றால் உங்களுடன் அமெரிக்கா வர்த்தக உறவுகள் வைத்துக்கொள்ளது என இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் இன்று கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

''இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோசமான சண்டையை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து நிறுத்தியுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும் சக்தி வாய்ந்தவர்கள், அதே நேரத்தில் இந்த சூழ்நிலையையும் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்'' என்றார் டிரம்ப்,

''நாங்கள் அவர்களுக்கு உதவியுள்ளோம். நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்வோம். இதை நிறுத்துங்கள். நீங்கள் நிறுத்தினால் வர்த்தகம் செய்வோம், இல்லையென்றால் வர்த்தகம் செய்ய மாட்டோம் என கூறினோம். இந்தநிலையில் சண்டையை நிறுத்துகிறோம் என அவர்கள் கூறினார்கள். '' என்றார் டிரம்ப்

''நிறையக் காரணங்களுக்காகச் சண்டையை நிறுத்தினார்கள். ஆனால் வர்த்தகம் முக்கிய காரணம்''

மேலும், ''நாங்கள் இந்தியா பாகிஸ்தானுடன் நிறைய வர்த்தகத்தில் ஈடுபடப்போகிறோம். நாங்கள் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். விரைவில் பாகிஸ்தானுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளோம்.'' என்றார் டிரம்ப்

''இதுவொரு மோசமான அணு ஆயுத போராக மாறியிருக்கக்கூடும். நாங்கள் அந்த அணு ஆயுத மோதலை நிறுத்தியிருக்கிறோம்.''

இந்தியா பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது எப்படி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய ராணுவம் கூறியது என்ன?

பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட டிரோன்களைத் தடுப்பதில் இந்தியாவின் வான்பாதுகாப்பு அமைப்பு சுவர் போன்று செயல்பட்டதாக இந்திய ராணுவத்தின் சார்பாக இன்று (மே 12) பிற்பகல் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.

ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

இதில் பேசிய ஏர்மார்ஷல் ஏ. கே பார்தி, ''இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு எதிரானது மட்டுமே, பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரானது அல்ல. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இந்த நடவடிக்கையில் தலையிட்டது. எனவே அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பு'' என்றார்.

''ஆனால், பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்காக தலையிட முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது. அதுவே எங்களை பதிலடி கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளியது.'' என்றார் ஏ. கே பார்தி.

இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பற்றி குறிப்பிட்ட ஏ. கே பார்தி, ''பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வாகனங்களையும் வீழ்த்துவதில் வான் பாதுகாப்பு அமைப்புகள் முக்கிய பங்கு வகித்தன'' என்றார்.

''பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட டிரோன்களைத் தடுப்பதில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு சுவர் போன்று செயல்பட்டது. பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட டிரோன்கள் ஏவுகணை மற்றும் பிற ஆயுதங்கள் வீழ்த்தப்பட்டன ''

ஷார்ட் வீடியோ

Play video, "ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி,", கால அளவு 0,23

00:23

p0l9q9dg.jpg.webp

காணொளிக் குறிப்பு,

அணு ஆயுத அமைப்புகள் மீது தாக்குதலா?

"இந்தியாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வான்பாதுகாப்பு அமைப்பான ஆகாஷின் திறன் சோதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அரசின் பட்ஜெட் மற்றும் கொள்கை ஆதரவுகள் மூலமாகவே இது சாத்தியமானது" எனவும் பார்தி கூறினார்.

மேலும் இந்தியா மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவத்தால் சீனத் தயாரிப்பான பிஎல்-15 ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக கூறிய ஏ.கே பார்தி, அந்த ஏவுகணையின் உடைந்த பாகங்கள் என கூறி புகைப்படங்களை காண்பித்தார்.

இந்தியா கிரானா ஹில்ஸ் பகுதியை தாக்கியதா என கேட்கப்பட்டபோது,'' கிரானா ஹில்ஸ் பகுதியில் சில அணு ஆயுத அமைப்புகள் இருப்பதாக கூறியதற்கு நன்றி. அது பற்றி எங்களுக்கு தெரியாது. அங்கு என்ன இருந்தாலும் சரி, நாங்கள் அந்த பகுதியை தாக்கவில்லை'' என்றார் ஏ. கே பார்தி.

இந்திய பாதுகாப்புப் படைகளின் விளக்கம்

'விமானத் தளங்களை குறிவைப்பது கடினம்'

இந்த சந்திப்பின் போது பேசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், "இந்தியாவின் விமானப்படைத் தளங்களை குறிவைப்பது மிகக் கடினம். 1970களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை அடித்து நொறுக்கினார்கள். அப்போது ஆஸ்திரேலியா "சாம்பலோடு சாம்பல், தூசியோடு தூசி" என்று கூறியது.

அதே போன்று இந்தியாவின் வான் பாதுகாப்பு அடுக்குகளை நீங்கள் பார்த்தால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு புரியும். இந்திய பாதுகாப்பு தளங்களை நெருங்க முயன்றால், இந்த அடுக்குகளில் ஒன்று கண்டிப்பாக தாக்கும்" என்றார்.

'பாகிஸ்தான் வான் படை தடுப்பு'

வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் பேசும்போது, இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து, அச்சுறுத்தல்களை தடுத்தது என்றார்.

''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய கடற்படையின் கை ஓங்கியிருந்தது. கடற்படை போர் கப்பல்களின் நிலை நிறுத்தம் எதிரி அருகில் வருவதை தடுத்தது. இந்தியவின் கப்பல்கள், பாகிஸ்தான் வான் படை சுதந்திரமாக செயல்படுவதை தடுத்தது. அத்துடன் கடல் வழி அச்சுறுத்தல்களையும் குறைத்தது'' என்றார் ஏ.என்.பிரமோத்

பாகிஸ்தான் கூறியது என்ன?

பாகிஸ்தான் தனது போர் விமானங்களில் ஒன்று சேதமடைந்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீப நாட்களாக நிலவும் பதற்றமான சூழலில், பாகிஸ்தான் இவ்வாறு தெரிவிப்பது இதுவே முதன் முறையாகும்.

பாகிஸ்தான் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியது. அதில் பங்கேற்ற பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது தங்களது போர் விமானங்களில் ஒன்று சிறிய சேதத்தை சந்தித்ததாக தெரிவித்தார்.

இருப்பினும், அந்த போர் விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கூடுதல் தகவல்கள் எதையும் வழங்கவில்லை.

சனிக்கிழமை இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தரை, வான் மற்றும் கடல் வழியிலான துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த முடிவு செய்தன.

ஒரே ஒரு பாகிஸ்தான் விமானம் மட்டுமே சிறிதளவு சேதமடைந்ததாக கூறிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர், அதைத் தவிர வேறு எந்த தகவலையும் வழங்கவில்லை.

ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி யாரும் இல்லை என்றும், இதுபோன்ற செய்திகள் அனைத்தும் 'போலி சமூக ஊடக தகவல்களை' அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் கூறினார்.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,PTV

படக்குறிப்பு,பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை குறித்த விவரங்களை அளித்தார்.

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் வீழ்த்தியதா?

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய ராணுவத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) மாலை செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் ராஜீவ் கய், விமானப்படை சார்பாக ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை சார்பாக வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் மற்றும் எஸ்.எஸ்.ஷார்தா ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினர்.

அப்போது, இந்தியாவின் ரஃபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,ANI

இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,"நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது. இந்த சூழலில் நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் 'ஆம்' பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் 'ஆம்'.'' என்றார்

மேலும் அவர், ''இதன் முடிவுகளை உலகமே பார்க்கிறது. ஆனால் தற்போதைய நிலையில் மேலும் விரிவாக என்ன நடந்தது? எத்தனை எண்ணிக்கை? எந்த தளத்தில்? நாம் இழந்தோமா? போன்றவை குறித்து இந்த நேரத்தில் பதிலளிக்க நான் விரும்பவில்லை. நாம் இன்னமும் போர்ச்சூழலில் தான் இருக்கிறோம். இப்போது நான் கருத்து தெரிவித்தால், அது நன்மை பயப்பதாக இருக்காது. எனவே எதிரிகளுக்கு இந்த நிலையில் எந்த சாதகமான நிலையையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை'' என்றார்

''என்னால் சொல்ல முடிவது இதுதான்,'நாம் நமது நோக்கங்களை அடைந்து விட்டோம்'. மேலும் 'நம்முடைய அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக திரும்பினர்'' என்று கூறினார் ஏ.கே.பார்தி.

இந்தியா - பாகிஸ்தான்

பட மூலாதாரம்,ANI

'கராச்சியை எந்நேரமும் தாக்க தயாராக இருந்தோம்' - இந்திய கடற்படை

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கடற்படை வைஸ் அட்மிரல் பிரமோத்," இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையுடன் இணைந்து கடலில், இந்திய கடற்படையின் அபாரமான செயல்பாட்டுத்திறன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கு காரணமாக அமைந்தது" என்றார்.

ஏப்ரல் 22ம் தேதி நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, இந்திய கடற்படை விரைவான மற்றும் அளவுக்குட்பட்ட கடல்சார் பதில் நடவடிக்கைகளை எடுத்ததாக கூறிய பிரமோத்," அரபிக் கடல் பகுதியில் ஆயுதங்கள் ஏவி, தயார் நிலை உறுதிப்படுத்தப்பட்டது'' என கூறினார்.

"தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளில் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டு துல்லியமாக தாக்க தளவாடங்கள் மற்றும் கள தயார்நிலையை மறு மதிப்பீடு செய்வதே இதன் நோக்கமாகும்," என்று பிரமோத் தெரிவித்தார்.

கராச்சி உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளை, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் தாக்கும் விதமாக கடற்படை முழுமையான தயார் நிலையில் இருந்தது எனக் கூறும் பிரமோத், "இந்திய கடற்படையின் முன்னிலைச் செயல்பாடு, பாகிஸ்தானின் கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியது. இதனை தாங்கள் தொடர்ச்சியாகக் கண்காணித்தோம்'' என்றார்

தற்போதும் இந்திய கடற்படையின் செயல்பாடுகள் அதே நிலையில் இருப்பதாக அட்மிரல் பிரமோத் கூறினார்.

- இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg747mpp4do

  • கருத்துக்கள உறவுகள்

Operation Sindoor- தீவிரவாதத்தை ஆதரித்தால் பாகிஸ்தான் நிச்சயம் ஒருநாள் அழிந்துவிடும்- மோடி எச்சரிக்கை

12 May 2025, 8:03 PM

VflyhgFn-Modi-5.jpg

பாகிஸ்தானுக்கு எதிரான Operation Sindoor ராணுவ நடவடிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் பிரதமர் மோடி முதல் முறையாக இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:

  • இந்தியாவின் ராணுவ பலத்தை கடந்த சில நாட்களாகவே நாம் வெளிப்படுத்தி வருகிறோம்.

  • நாட்டின் ராணுவ வீரர்களுக்கு தலைணங்குகிறேன்; தீரமிக்க ராணுவ வீரர்களின் தியாகத்துக்கு வீரவணக்கம்.

  • ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நாட்டின் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் அர்ப்பணிக்கிறேன்.

  • இந்திய ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கி உள்ளோம்.

  • ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் அனைவருக்கும் பாராட்டுகள்.

  • ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட மத அடிப்படையிலான தீவிரவாதத் தாக்குதல். இந்தத் தாக்குதல் தனிப்பட்ட முறையில் எனக்கு கடும் மனவலியைத் தந்தது.

  • ஆபரேஷன் சிந்தூர் என்பது நீதியை நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை

  • பாகிஸ்தானின் பஹவல்பூர், முர்திகே பல்கலைக் கழகங்கள், சர்வதேச தீவிரவாதப் பல்கலைக் கழகங்களாகவே செயல்பட்டன; அவற்றை அழித்துள்ளோம்.

  • தீவிரவாதத்தை முற்றாக அழிக்க நமது ராணுவத்தினருக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

  • பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், டிரோன்கள் அனைத்தும் நமது வான் பாதுகாப்பு அமைப்புகளால் அழிக்கப்பட்டுவிட்டன.

  • ஆபரேஷன் சிந்தூர் என்பது ஒரு பெயர் மட்டுமல்ல.. நமது உணர்வுகளின் வெளிப்பாடு.

  • தேசத்தின் நலனுக்காகவே ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நாம் மேற்கொண்டோம்.

  • பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை மட்டுமல்ல.. தீவிரவாதிகளின் நம்பிக்கைகளையும் இந்திய ராணுவம் தகர்த்து தரைமட்டமாக்கிவிட்டது.

  • இந்தியாவின் அதிரடித் தாக்குதல்களால் பாகிஸ்தான் கதிகலங்கிப் போய்விட்டது.

  • இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பதிலடி நடவடிக்கை நியாயமானதே.

  • பாகிஸ்தானில் உள்ள அனைத்து பயங்கரவாத முகாம்களும் தாக்கி அழிக்கப்பட்டுவிட்டன.

  • இந்திய சகோதரிகளின் நெற்றித் திலகத்தை அழித்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்த முகாம்களை இந்திய ராணுவம் அழித்து தரைமட்டமாக்கிவிட்டது.

  • நமது பள்ளிக் கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது.

  • ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் நமது டிரோன்களும் ஏவுகணைகளும் துல்லியமாக தாக்குதல் நடத்தின.

  • நமது தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல்தான் நம்மை தொடர்பு கொண்டது பாகிஸ்தான்.

  • தீவிரவாதத்தை ஒழிக்கும் கொள்கையாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை இருக்கும்

  • ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலகம் அறிய உதவி இருக்கிறது. தீவிரவாதிகளை ஆதரித்த பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலப்பட்டுவிட்டது.

  • இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் முக்கிய பங்களிப்பு செய்தன.

  • இந்தியாவின் அதிரடியான கடுமையான நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ந்தது.

  • பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலுக்கு இந்தியாவின் ,முப்படைகள் எப்போதும் தயாராக இருக்கும்.

  • இந்தியாவின் மொத்த பலமும் தீவிரவாதத்துக்கு எதிரானதாகவே இருக்கும்

  • இந்தியாவால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி நிகழ்வில் பாகிஸ்தான் அதிகாரிகள் பங்கேற்றதை உலகம் பார்த்தது.

  • தீவிரவாதத்தை ஆதரித்தால் பாகிஸ்தான் நிச்சயம் ஒருநாள் அழிந்துவிடும்.

  • அணு ஆயுத மிரட்டல்களுக்கு எல்லாம் இந்தியா ஒருநாளும் அச்சப்படாது

  • வளர்ந்த இந்தியா என்ற கனவும் நிச்சயம் நிறைவேறும்.

  • பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையை இந்தியா தற்காலிகமாகவே நிறுத்தி வைத்துள்ளது.

  • இந்தியாவின் முப்படையினரும் பாகிஸ்தானின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகவே கவனித்து வருகின்றனர்.

  • பாகிஸ்தானையும் அதன் தீவிரவாதிகளையும் ஒருபோதும் பிரித்து பார்க்கவே மாட்டோம்

  • இதுவரை பாகிஸ்தானுக்கு எதிரான போர்களில் இந்தியாதான் வெற்றி பெற்றுள்ளது

  • தற்போதைய ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, இந்திய வரலாற்றில் புதிய மைல் கல்.

  • பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதை நிறுத்திவிட வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

https://minnambalam.com/operation-sindoor-armed-forces-always-ready-for-action-against-pakistan-warns-pm-modi/

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இவ‌** அர‌ச‌ ப‌ய‌ங்க‌ர‌வாதி

இவ‌* தீவிர‌வாத‌த்தை ப‌ற்றி வாய் திற‌க்க‌லாமா

2002க‌ளில் குஜ‌ராத்தில் எத்த‌னை ஆயிர‌ம் முஸ்லிம் ம‌க்க‌ளை எரித்து கொன்ற‌வ‌ர்.......................இத‌னால் தானே இவ‌ருக்கு 2013க‌ளில் அமெரிக்கா செல்ல‌ த‌டை போட்ட‌து அமெரிக்கா அர‌சாங்க‌ம்................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.