Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 45 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் புதிதாக அகழப்படும் புதைகுழியிலும் மண்டையோ ஒன்று அவதானிக்கப்பட்டதுடன் இன்று 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இவை மனித எலும்புக்கூடுகள் என்பதை அடையாளம் கண்டுள்ளார்களா அல்லது இவை எவருடைய எலும்புக்கூடுகள் என அவற்றுக்குரிய தனிநபர்களை அடையாளம் கண்டுள்ளார்களா?

  • Replies 106
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    தயவு செய்து இவரின் தளத்திற்கு சென்று ஆதரவு தெரிவிக்கவும்.

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • இணையவன்
    இணையவன்

    புதைகுழி அகழ்வுகள் இந்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதே பெரிய விடயம். மக்களின் சக்தி இங்குதான் வெளிப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் முழுமையான விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என யாழ் பொதுமக்க

  • கருத்துக்கள உறவுகள்

9d77d2f1-c3b9-4266-9d4c-fc908ba478b6.jpe

செம்மணியில் இதுவரை 45 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்பு!

செம்மணியில் நேற்றைய தினம் (05) மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் பத்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது மேலும் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 45 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் இதுவரையில் நேற்றைய தினம் 05 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 42 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை செய்மதி படங்களின் அடிப்படையில் மேலும் மனித புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரிதொரு இடத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வு அகழ்வு பணியில் மனித என்பு சிதிலங்கள் என சந்தேகிக்கப்படும் சில சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மண்டையோடு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1438205

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நியாயம் said:

இவை மனித எலும்புக்கூடுகள் என்பதை அடையாளம் கண்டுள்ளார்களா அல்லது இவை எவருடைய எலும்புக்கூடுகள் என அவற்றுக்குரிய தனிநபர்களை அடையாளம் கண்டுள்ளார்களா?

மனிதர்களுடையது என்பது பெரும்பாலும் உறுதி தான், ஆனால் யாருடையது என்பது மிகச் சிக்கலான கேள்வி? டிஎன்ஏ பரிசோதனைகள் மூலமே அடையாளம் காணலாம் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் அடையாளம் காணப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

06 JUL, 2025 | 03:45 PM

image

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (06) முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் இன்றுவரை 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டன.

குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு அருகாமையில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்ததன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை (04) தொடக்கம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அந்த இடத்திலும் சான்றும் பொருட்கள் அடையாளம் காணப்பட்டன.

மேலும், அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இடத்திற்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை (06) ஜேசிபி இயந்திரம் மூலம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது அதிலும் எலும்புகள் காண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

IMG-20250706-WA0029.jpg

IMG-20250706-WA0027.jpg

IMG-20250706-WA0033.jpg

IMG-20250706-WA0038__1_.jpg

https://www.virakesari.lk/article/219308

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 2 எலும்புக் கூட்டு தொகுதிகள் கண்டுபிடிப்பு

Published By: VISHNU

06 JUL, 2025 | 08:07 PM

image

செம்மணியில் ஞாயிற்றுக்கிழமை (06) மேலும் 2 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (6) மதியம் வரையில் முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது மேலும் 02 எலும்பு கூட்டு தொகுதிகள் ஞாயிற்றுக்கிழமை (06) அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 47 எலும்பு கூட்டு தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூட்டு தொகுதியில் 02 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரையில் 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/219339

  • கருத்துக்கள உறவுகள்

download-1.jpg?fit=1379%2C919&ssl=1

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி: 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்.

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்- செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 11வது நாளாக நேற்றைய தினம் நடைபெற்றது.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் இதுவரை  47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 44 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1438254

  • கருத்துக்கள உறவுகள்

516399148_1153026290195675_6562191178672

  • கருத்துக்கள உறவுகள்

517750255_1148371503992889_3572619973617

516783507_1148371780659528_1186966830044

516436530_1148371620659544_8020569643727

516765814_1148371787326194_3132072695760

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 47 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம்.com

  • கருத்துக்கள உறவுகள்

516688717_707538675510290_38943190055583

ஜந்து வயதை
கடக்கவுமில்லை,
ஆடையுமில்லை..
அப்படியொரு ஆனந்தம் புத்தரின் பிள்ளைகளுக்கு.

Alex Aravinth 

புதைகுழி அகழ்வுகள் இந்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வருவதே பெரிய விடயம்.

மக்களின் சக்தி இங்குதான் வெளிப்பட வேண்டும். சர்வதேச மேற்பார்வையுடன் முழுமையான விரைவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என யாழ் பொதுமக்கள் அரசியல் மயப்படுத்தப் படாத மாபெரும் பேரணி ஒன்றைச் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2025-07-08-190943.png?resize=

செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வில் 04 எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில் 50 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

இன்று 13வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 4 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 13வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இன்றைய தினமும் 4 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்தோடு இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்ததோடு இதுவரை முழூமையாக 50 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2025/1438530

  • கருத்துக்கள உறவுகள்

517811369_1181919440617579_8243541287556

518141670_1181920267284163_6399785617601

516895240_1181920227284167_9535581575387

518287101_1181919503950906_7065726460161

518078745_1181919447284245_5327844046296

517602875_1181920233950833_8782710851255

516458531_1181919607284229_3456357178811

516387794_1181919477284242_9010713801783

517123310_1181920073950849_1629294676785

516511378_1181919487284241_5533389894297

516791037_1181919743950882_4696365610318

518380764_1181919723950884_3167398824678

ஈழத்தின் வடு: செம்மணி மனிதப் புதைகுழி, 56 மனித எச்சங்கள் இதுவரை கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சிப் பணிகள், ஒவ்வொரு நாளும் புதிய சோகங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன. இன்று (😎" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t83/1/16/1f60e.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> 13வது நாளாக தொடரும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளில், இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 50 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள் முன்னிலையில் இன்றும் அகழ்வு பணிகள் நடைபெற்றன. அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படும் இரண்டாவது இடத்தில் மூன்று புதிய மனித எலும்புக்கூடுகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மூன்று எலும்புக்கூடுகளும் நாளை மீட்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

முதலாம் இலக்கமிடப்பட்டுள்ள அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தில், மனித உடைகள் மற்றும் சப்பாத்துகள் போன்ற தடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை இதுவரை அகழ்ந்தெடுக்கப்படவில்லை. இந்த தடயங்கள், புதைகுழியில் உள்ளவர்களின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிக்கொண்டுவர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் முறைப்பாடு செய்த கிருபாகரன், சம்பவ இடத்திற்கு வருகைதந்து ஊடகங்களிடம் பேசினார். தனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். ஒருபுறம் அன்புக்குரியவர்களை இழந்தோரின் துயரம், மறுபுறம் உண்மையை வெளிக்கொணர முயற்சிப்பவர்களுக்கு அச்சுறுத்தல் என செம்மணி விவகாரம் இலங்கையின் நீதித்துறைக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கடந்த கால இருண்ட அத்தியாயங்களின் ஒரு சாட்சியாக எழுந்து நிற்கிறது. ஒவ்வொரு எலும்புக்கூடும் ஒரு கதையைச் சொல்லும் என நம்பப்படும் நிலையில், இந்தக் குழிக்குள் புதைந்துள்ள மர்மங்கள், நீதிக்கான தேடலை தீவிரப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள் - பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியில்!

Published By: VISHNU

08 JUL, 2025 | 06:34 PM

image

யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் இரண்டாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் செவ்வாய்க்கிழமை (8) முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் 56 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 50 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா அவர்களின் குழுவின் பங்கேற்போடு இந்த அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியிலும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த எலும்புக்கூடுகளானது சிக்கலான நிலையில் காணப்படுகிறது.

மேலும் முறைப்பாட்டாளரான குறித்த மயானத்தின் நிர்வாகத்தில் உள்ள திரு.கிருபாகரன், சட்டத்தரணி க.சுகாஷ், சட்டத்தரணி ரணித்தா ஆகியோர் இன்றையதினம் புதைகுழியை பார்வையிட்டனர்.

குறித்த புதைகுழி விவகாரமானது சர்வதேச ரீதியில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு நீதி வேண்டி பல்வேறு நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20250708-WA0152.jpg

IMG-20250708-WA0153.jpg

IMG-20250708-WA0149.jpg

IMG-20250708-WA0146.jpg

IMG-20250708-WA0148.jpg

IMG-20250708-WA0136.jpg

IMG-20250708-WA0143.jpg

IMG-20250708-WA0138.jpg

IMG-20250708-WA0139.jpg

IMG-20250708-WA0135.jpg

IMG-20250708-WA0140.jpg

IMG-20250708-WA0134.jpg

IMG-20250708-WA0133.jpg

IMG-20250708-WA0131.jpg

https://www.virakesari.lk/article/219509

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் ராஜ்சோமதேவாவினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியானது 2வது அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான பகுதியென பிரகடனம்!

Published By: VISHNU

09 JUL, 2025 | 01:50 AM

image

செம்மணி மனிதப் புதை குழி அகழ்வின் இரணடாவது கட்டத்தின் 13வது நாள் அகழ்வுப் பணிகள் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 50 முழுமையாக அகழ் எடுக்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

20250708_171713.jpg

செவ்வாய்க்கிழமை (8) செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே சந்தேகத்திற்கிடமான பகுதி என தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதுவாவினால் அடையாளமிடப்பட்ட பகுதி அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான இரண்டாவது பிரதேசமாக நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

20250708_172236.jpg

அத்துடன் ஏற்கனவே முதலில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அகழ்வாராய்ச்சி பகுதியானது அகழ்வு ஆராய்ச்சி பணிகளுக்கான முதலாவது பகுதியாகவும் அடையாளப்படுத்துப்பட்டுள்ளது.

20250708_171150.jpg

அடையாளப்படுத்தப்பட்ட இரண்டாவது பகுதியில் 3 மனித என்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டிருக்கிறது. 09ஆம் திகதி புதன்கிழமையிலிருந்து இலக்கமிடல் பணிகள் ஆரம்பமாகும். 

மனித எலும்புகளுடன் சேர்ந்த துணிகள் மற்றும் சப்பாத்து போன்ற பொருட்கள் அடையாளப்படுத்தப்பட்டு வைத்திருக்கப்பட்டுள்ளன. அவை இன்னமும் நிலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படவில்லை. அது பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் மேலதிக தகவல்கள் நாளையதினம் வழங்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/219527

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வு, மூன்றாவது பகுதிக்கும் நீட்டிக்கப்பட்டது!

09 JUL, 2025 | 09:54 AM

image

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின், மனித எச்சங்களின்  எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டில் நான்காவது இடத்தில் உள்ளது.

2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் அடங்கும்.

முன்னர் அடையாளம் காணப்பட்ட நான்காவது பெரிய புதைகுழி, 52 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ஆகும்.

நீதிமன்றத்தால் குற்றம் நிகழ்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கண்டறியப்பட்ட 56 மனித எலும்புக்கூடுகளில், மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 13ஆவது நாளான இன்றைய தினம் (ஜூலை 8) வரையில் 50 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது புதைகுழியில் மூன்று இடங்களில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மனித எலும்புக்கூடுகள் இன்னும் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் கண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்ததை அடுத்து, ஜூன் 2 புதன்கிழமை இரண்டாவது இடத்தில் அகழ்வு ஆரம்பமானது.

இதற்கு 'தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2' என பெயரிடப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை மூன்று என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.

"தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 2 இல் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் 3 எலும்பு எச்சங்கள் இன்னும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை. நாளை அது அகழ்வுக்கு இலக்கமிடப்படும். அதன் பின்னர் அகழ்வு இடம்பெறும்.”  

அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமான முதல் இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 1 எனவும், வரவிருக்கும் மழைக்காலத்தை சமாளிக்க வாய்க்கால் தோண்டும்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு தடயவியல் அகழாய்வுத்தளம் தளம் 3 எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக, தடயவியல், மானுடவியல் மற்றும் தடயவியல் தொல்பொருளியல் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற சட்டத்தரணி ரணிதா ஞானராஜா யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

முதல் தடயவியல் அகழாய்வுத்தளத்தில் 20 மீற்றர் தொலைவில் 11 மீற்றர் அகலமும் நீளமும் கொண்ட ஒரு புதிய கான் ஒன்று தோண்டப்பட்டுள்ளது, இது செம்மணி மனித புதைகுழியின் பரந்த தன்மையைப் பற்றிய ஒரு சிந்தனையை ஏற்படுத்திக்கொள்ள முடியுமென மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு மேலதிகமாக, துணிகள், இரண்டு காலணிகள், ஒரு சிறு குழந்தையினுடையது என நம்பப்படும் இரண்டு வளையல்கள் மற்றும் ஒரு பொம்மை உள்ளிட்ட கருவிகளும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனின் மேற்பார்வையின் கீழ் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சேமிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய மனித புதைகுழியின் அகழ்வாராய்ச்சி சர்வதேச தரத்திற்கு அமைய பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் அங்கீகரித்தது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஜூன் 25 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழிக்கு அருகில், மனித புதைகுழிகள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவர தடயவியல் நிபுணத்துவம் கொண்ட சுயாதீன நிபுணர்களால் விரிவான, வலுவான விசாரணை தேவை எனக் கூறியிருந்தார்.

மனித உரிமைகள் ஆணையாளரை மனித புதைகுழியை ஆய்வு செய்ய அனுமதிப்பதாக பகிரங்கமாக உறுதியளித்த அரசாங்கம், அதைத் தடுப்பதற்கான தோல்வியுற்ற, திட்டமிட்ட முயற்சி என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை இப்போது எதிர்கொள்கிறது.

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இலங்கையில் மூன்றாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், அங்கு அதே ஆண்டில் 82 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன. ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.

IMG_7952__1_.jpeg

IMG_7924.jpeg

IMG_7960.jpeg

IMG_8009.jpeg

IMG_7958.jpeg

https://www.virakesari.lk/article/219538

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி விவகாரத்தில் பொலிஸ் விசேட குழுவினரின் அறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

09 JUL, 2025 | 04:14 PM

image

யாழ் செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த பின்னர் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை (08)  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ். செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி அவசர நிர்மாணிப்பு வேலை இடம்பெற்ற போது ஏற்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்த சம்பவம் முன்னோக்கி கொண்டு செல்லப்படுகின்றது.

கடந்த 7ஆம் திகதி வரை மூன்று சந்தர்ப்பங்களிர் 21 நாட்கள் அகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது 44 மனித எழும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதனோடு மனித பாவனைப் பொருட்கள் 61 கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன.

இச்செயற்பாடுகள் யாழ். மாவட்ட நீதிபதி, அவரது கட்டளையின் படி பேராசிரியர் ராஜ். சேவதேவ உள்ளிட்ட குழுவினர், யாழ் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரதாபன் ஆகியோர் தொடர்புபட்டு மேற்கொள்ளப்படுகின்றது. அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறும்.

பொலிஸ் விசேட குழுவினர் தமது விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு முன்வைப்பார்கள். என்ன பெறுபேறு என்று நாம் பார்ப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். குற்றப்புலனாய்வு திணைக்களம் பொலிஸ் விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்திற்கு உரிய தேவைகளுக்கு ஏற்ப தேவையான விசாரணைகள் அரசினால் முன்னெடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/219587

  • கருத்துக்கள உறவுகள்

518334453_1149867463843293_4065975761741

517152935_1149867693843270_3186606445578

518276756_1149867717176601_4648124382630

516780858_1149867703843269_2558613085912

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 54 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்ட அகழ்வு

14ஆம் நாள்

09.07.2025

யாழ்ப்பாணம்.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள்  அடையாளம் : 54 எலும்புக்கூடுகள் மீட்பு!

09 JUL, 2025 | 09:01 PM

image

யாழ்ப்பாணம் (ஜூலை 09) : செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து  இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணியின் 14 ஆவது நாளான இன்று யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

அந்த வகையில், இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் (ஜூலை9)  14 வது நாளை எட்டியது. ஏற்கனவே முதலாம் கட்ட அகழ்வு  9 நாட்களில் நிறைவடைந்தது.

முதலாம் கட்டம் இரண்டாம் கட்டம் என அகழ்வாய்வு பணிகள் மொத்தமாக 23 நாட்கள் மனித புதைகுழி அகழ்வு நடைபெற்று வருகின்றது. 

இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ள நிலையில், அவற்றில் 54 மனித எலும்பு கூடுகள்  முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த அகழ்வின் போது, இன்று (ஜூலை 09)  ஒரு சிறுமியின், ஆடைகள், இறப்பர் செருப்பு மற்றும் பிற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இரண்டாம் கட்ட அகழ்வு நாளை தற்காலிகமாக நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது.

WhatsApp_Image_2025-07-09_at_20.44.49.jp

WhatsApp_Image_2025-07-09_at_20.44.50.jp

WhatsApp_Image_2025-07-09_at_20.44.50__1

WhatsApp_Image_2025-07-09_at_20.44.51.jp

WhatsApp_Image_2025-07-09_at_20.44.51__1

https://www.virakesari.lk/article/219625

  • கருத்துக்கள உறவுகள்

download-4.jpg?resize=750%2C375&ssl=1

செம்மணி மனிதப் புதைகுழி: 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்.

யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்று 14வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 7 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1438665

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

10 JUL, 2025 | 03:59 PM

image

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. 

அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. 

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01"  மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் ,  "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02"  புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. 

அதேவேளை  "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02"  புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 

மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. 

https://www.virakesari.lk/article/219668

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி மனித புதைகுழி; கார்பன் பரிசோதனைகள் தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும்; தமிழரசுகட்சியின் வேண்டுகோள்கள் பயனுள்ளவை - காணாமல்போனோர் அலுவலக அதிகாரி கருத்து

Published By: RAJEEBAN

13 JUL, 2025 | 02:26 PM

image

செம்மணி மனித புதைகுழி அகழ்வும் நடவடிக்கைகள் 21ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை தொடர்பில் கார்பன் பரிசோதனையை முன்னெடுப்பதா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும் என காணாமல்போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜே.தற்பரன் இதனை தெரிவித்துள்ளார்.

உடல்கள் எப்போது புதைக்கப்பட்டன என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு முறையாக கார்பன் பரிசோதனையை பயன்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது பயன்படுத்தப்படும் ஒரு முறை குறிப்பாக வேறு பொருட்கள் ஆதாரங்கள் இல்லாதபோது இந்த முறையை பயன்படுத்துவது வழமை என தெரிவித்துள்ள அவர் எனினும் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனையை பயன்படுத்த வேண்டுமா என்பதை நீதிமன்றங்களே தீர்மானிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கையிடம் இதற்கான தொழில்நுட்ப வசதிகள் இல்லாததால் மாதிரிகளை அமெரிக்கா அல்லது அவுஸ்திரேலியாவிற்கே அனுப்பவேண்டும்.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுகள் ஜூன் இறுதி வாரத்தில் ஆரம்பித்து 15 நாட்கள் இடம்பெற்றன. இந்த 15 நாட்களில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழியை அகழும் பணிகளிற்கு தலைமை தாங்கும் பேராசிரியர் ராஜ்சோமதேவ எதிர்வரும் 15ம் திகதிக்குள் முதல் 15 நாட்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

செம்மணி மனித புதைகுழி குறித்து கரிசனைஎழுப்பியுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் சில நடவடிக்கைகளை கோரியுள்ள இலங்கை தமிழரசுக்கட்சி இலங்கையின் தார்மீக மற்றும் சட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கும் உண்மை மற்றும் நீதியை நோக்கிய நம்பமான பாதையை உருவாக்குவதற்கும் இது அவசியம் என தெரிவித்துள்ளது.

இந்த கடிதம் குறித்து பதிலளித்துள்ள காணாமல்போனோர் அலுவலக அதிகாரி தற்பரன் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள விடயங்கள் பயனுள்ளவையாக அர்த்தபூர்வமானவையாக அமையும் என தெரிவித்துள்ளார்.

சுயாதீன மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஈடுபாடு குறித்து கருத்து தெரிவித்த அவர் இதுபோன்ற கூட்டுப் பணிகள் அதிக ஈடுபாட்டிற்கான வளங்களை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எவ்வாறு தலையிட முடியும் என்பதற்கான கூடுதல் சூழமைவை தமிழரசுக்கட்சியின் வேண்டுகோள்கள் நமக்கு வழங்குவதால் நாங்கள் நிச்சயமாக அதில் கவனம் செலுத்துவோம். மற்ற தரப்பினரிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவை நாங்கள் பெற வேண்டும்" .என அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களின் அலுவலகம் இன் பணியைத் தொடர நாட்டில் அனுபவம் வாய்ந்த நபர்களின் பற்றாக்குறை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கோரப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் காணாமல்போனவர்களின் அலுவலகத்தின் எதிர்கால நடவடிக்கை குறித்து தலைவர் மற்றும் மற்றும் அரசாங்கமே கூட்டாக முடிவு வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/219871

  • கருத்துக்கள உறவுகள்

514278790_1786536755628544_5477243848352

4-5 வயதுடைய சிறுமி

செம்மணிப் புதைகுழியில் நீல நிற புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4-5 வயதுடைய சிறுமியினுடைய என்புத் தொகுதி என சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினால் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

பிரபாகரன் டிலக்சன்

  • கருத்துக்கள உறவுகள்

518197662_1782674019348151_4536987432272

1999ஆம் ஆண்டு செம்மணி புதைகுழி வழக்கை தற்போதைய செம்மணி மனித புதைகுழி வழக்கோடு இணைத்து அழைப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என சட்டத்தரணி கருத்து தெரிவித்த அந்த வாரத்திலிருந்தே அரியாலை - செம்மணி பிரச்சினையை கிளப்பி அந்த முயற்சிகளை நிறுத்தும் நோக்கத்தோடு கருத்துருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது…..

செம்மணி இங்கு இடம்பெற்ற தமிழர்கள் மீதான இனப்படுகொ*லையின் முக்கிய சாட்சியமாக மாறக்கூடும். இங்கு நாளாந்தம் எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகள் அதற்கு ஒரு முக்கிய சாட்சிகள்.

குழந்தைகளின் என்புத் தொகுதி என சந்தேகிக்கப்படும் ஒன்றரை அடி என்புத் தொகுதிகள், சிறுவர்களின் என்புத் தொகுதிகள் என சந்தேகிக்கப்படும் 3 அடிக்கும் குறைவான என்புத் தொகுதிகள், மண்டையோடுகள் நொருங்கிய நிலையில் காணப்படும் என்புத் தொகுதிகள், முழங்கால்கள் மடக்கப்பட்டு கைகள் கால்கள் கட்டப்பட்டது போன்ற சந்தேகத்துக்கிடமான என்புத் தொகுதிகள், பாடசாலை புத்தகப்பை, குழந்தைகள் விளையாடும் பொம்மை, சிறுமியின் ஆடை, வளையல், பெண்களின் பாதனிகள் என இதுவரை வெளிவந்த சான்றுப் பொருட்கள் செம்மணியின் கொடூரத்தை இந்த உலகிற்கு பறைசாற்றுகின்றன.

செம்மணியில் நிகழ்ந்த படுகொ*லைகள், கிருசாந்தி படுகொ*லை, பழைய செம்மணி புதைகுழி அகழ்வு எல்லாம் தற்போது செம்மணி சித்துப்பாத்தி மயானத்தின் புள்ளியில் இணைவதை திசை திருப்பத சிலர் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தற்போதைய புதைகுழி வேறு 1999 செம்மணி புதைகுழி வேறு என்ற கருத்துவாக்கத்தை அவசர அவசரமாக ஏற்படுத்தி செம்மணி புதைகுழியில் ஏற்பட்டிருக்கும் கவனத்தை சிதைக்க முற்படுகின்றார்கள்.

இவ்வளவு காலமும் அமைதியாக இருந்தவர்கள் கடந்த வாரத்திலிருந்து தங்களுக்கு தரப்பட்ட பணியை சமூக வலைத்தளங்கள் ஊடாக அவசர அவசரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஏன்னில் கடந்த வாரமே” நீதிமன்றின் முறையான அனுமதியோடு பழைய செம்மணி புதைகுழி வழக்கை(1999) தற்போதைய செம்மணி மனித புதைகுழி வழக்கோடு இணைத்து அழைப்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி கருத்து தெரிவித்தார்.

நான் அவதானித்தவரை அன்றிலிருந்து அரியாலை - செம்மணி பிரச்சினையை கிளப்பி அந்த முயற்சிகளை நிறுத்தும் நோக்கத்தோடு கருத்துருவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியை செம்மணி என அழைக்கக்கூடாது என அந்த பிரதேசத்திலிருக்கும் தங்களின் விசுவாசிகளிடமிருந்து கருத்துவாக்கங்களை சிலர் முதலில் எழுப்புகின்றனர். அகழ்வு இடம்பெறும் இடத்தினை செம்மணி என கூறக்கூடாது என்று கூறுபவர்களின் முகநூல் பதிவுகளை பார்த்தாலே தெரியும் அவர்கள் யார்? அவர்களை இயக்குபவர்கள் யார் என?

செம்மணியில் வெளிவரும் என்புத் தொகுதிகளையும் அதன்பின்னால் இருக்கும் இருண்ட பக்கங்களையும் ஆராயாமல் செம்மணி என்ற சொல்லை பயண்படுத்த விடாமல் கருத்துவாக்கத்தைச் செய்து செம்மணி புதைகுழி வழக்கை வேறொரு கோணத்திற்கு கொண்டுசெல்ல பார்க்கிறார்கள்.

எங்களுக்கு இடையில் உருவாக்கப்படும் கருத்துவாக்கங்களின் பின்னனிகளை ஆராய வேண்டும் செம்மணி எங்களுக்கு நடந்த இனப்படுகொ*லையை பறைசாற்றும். அதனை தடுக்க இடமளியோம்….

செம்மணி புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதியை செம்மணி என அடையாளப்படுத்துவதற்கு எதிராக நிற்பவர்களின் சூழ்ச்சியையும் அவர்களின் பின்புலத்தையும் அறிந்துகொள்வோம்.. செம்மணி என்பதை தவிர்த்துவிட்டு போவதற்கு இடமளியோம்.

பிரபாகரன் டிலக்சன்

  • கருத்துக்கள உறவுகள்

3-1-2.jpg?resize=750%2C375&ssl=1

செம்மணியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூடு தொடர்பில் முக்கியத் தகவல்!

செம்மணி மனித புதைகுழியில் நீல நிற புத்தகப்பை மற்றும் பொம்மையுடன் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதி 4 – 5 வயது மதிக்க தக்க சிறுமியினுடையது என சட்ட வைத்திய அதிகாரி செ. பிரணவன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

செம்மணி புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

கடந்த வழக்கு தவணையில் போது, செம்மணி மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் தொடர்பிலான அறிக்கைகளை சட்ட வைத்திய அதிகாரி, மற்றும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டிருந்தது.

3-2-1.jpg?resize=600%2C450&ssl=1

அதன் அடிப்படையில் இருவரும் தமது அறிக்கைகளை மன்றில் சமர்ப்பித்து, தமது அவதானிப்புக்கள் தொடர்பிலும் மன்றில் கூறினார். அதன் போதே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார்.

நீல நிறப் புத்தகப்பை, பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் – 25 என அடையாளமிடப்பட்ட என்புத்தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக 4 – 5 வயதுடையதாக இருக்கும்.

அத்துடன் எஸ் – 48, எஸ் – 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் காணப்படுகிறது என சட்ட வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அதனை அடுத்து, புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்று கட்டளையிட்டது.

செம்மணியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன

அதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன.

மேலும் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை.

எனவே இது சம்பந்தமான மேலதிக மான ஆய்வுகள் தேவை என தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா மன்றில் தெரிவித்து தனது அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார்.

செம்மணிக்கு தன்னை அனுமதிக்குமாறு சிறிதரன் கோரிக்கை

இதேவேளை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு இடம்பெறும் பகுதிக்கு தன்னையும் அனுமதிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணி ஊடக நீதிமன்றில் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

சட்டத்தரணி ஒருவருடன் அகழ்வு பணிகள் இடம்பெறும் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் செல்ல அனுமதிப்பது தொடர்பில் மன்று பரிசீலிப்பதாக தெரிவித்தது.

21ஆம் திகதி முதல் மீண்டும் அகழ்வு பணிகள்

அதேவேளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இது வரை காலமும் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01’ மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439350

  • கருத்துக்கள உறவுகள்

518315250_1160406866124284_8830537236031

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.