Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள்

Published By: VISHNU

16 JUN, 2025 | 02:49 AM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது.

இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.

angelo_mathews.png

சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அத்துடன் கசுன் ராஜித்த, அறிமுக வீரர் இசித்த விஜேசுந்தர ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

sl_vs_bang..png

இலங்கை குழாத்தில் இடம்பெறும் பசிந்து சூரியபண்டார, பவன் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க, இசித்த விஜேசுந்தர ஆகிய நால்வரும் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை.

ஆரம்ப வீரர் லஹிரு குமார ஓரே ஒரு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார்.

ஆறு வருடங்களுக்கு பின்னர் சுழல்பந்துவீச்சாளர் அகில தனஞ்சய டெஸ்ட் குழாத்தில் இடம்பெறுவதுடன் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஏ அணிக்கான போட்டிகளிலும் பிரகாசித்த ஐந்து வீரர்கள் அறிமுக வீரர்களாக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

நியூஸிலாந்துக்கு எதிராக காலியில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடிய அகில தனஞ்சய இம்முறை 7 உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் 34 விக்கெட்களை வீழ்த்தி சுழல்பந்துவீச்சாளர்களில் சிறந்து விளங்கினார்.

அத்துடன் 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர் 33 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

உள்ளூர் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த ஆரம்ப வீரர் லஹிரு உதார (9 போட்டிகளில் ஒரு இரட்டைச் சதத்துடன் 787 ஓட்டங்கள்), மத்திய வரிசை வீரர் பசித்து சூரியபண்டார (8 போட்டிகளில் 2 சதங்களுடன் 620 ஓட்டங்கள்), மற்றொரு மத்திய வரிசை வீரரான பவன் ரத்நாயக்க (8 போட்டிகளில் 542 ஓட்டங்கள்), சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் சோனால் தினூஷ (4 போட்டிகளில் 255 ஓட்டங்கள், 8 விக்கெட்கள்), சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க (8 போட்டிகளில் 52 விக்கெட்கள்), இசித்த விஜேசுந்தர (44 முதல்தர போட்டிகளில் 112 விக்கெட்கள்) ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட வீரர்கள் எதிர்பார்த்தது போல குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

இலங்கை டெஸ்ட் குழாம்

பெத்தும் நிஸ்ஸன்க, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால தினூஷ, பவன் ரத்நாயக்க, ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அக்கில தனஞ்சய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, இசித்த பெர்னாண்டோ.

https://www.virakesari.lk/article/217564

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகியவற்றைப் போன்று நாங்களும்  அதிக டெஸ்ட்களில் விளையாட தகுதி உடையவர்களே! - ஏஞ்சலோ மெத்யூஸ்

Published By: VISHNU

17 JUN, 2025 | 01:25 AM

image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு போன்று இலங்கைக்கும் அதிகளவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக அறைகூவல் விடுக்கப்படவேண்டும் என ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்தார்.

ange-pres-2.png

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச அரங்கில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாவதற்கு முன்னதாக திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஏஞ்சலோ மெத்யூஸ் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் பிரகாசமாக இருக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு 'எமக்கு மிகக் குறைவான டெஸ்ட்கள் கிடைப்பது கவலைக்குரியதாகும். நேர்மையாகக் கூறுவதென்றால் 2008க்குப் பின்னர் நான் முதல் தடவையாக ஒரு வருடத்தில் நான்கு டெஸ்ட்களில் விளையாடுகிறேன். இது கவலை தருகிறது. இளம் கிரிக்கெட் தலைமுறையினர் இன்னும் அதிகமான டெஸ்ட்கள் வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஏனெனில் கிரிக்கெட் வடிவங்களில் டெஸ்ட் கிரிக்கெட்தான் உயரியதாகும். எனவே பல டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இளம் கிரிக்கெட் வீரர்கள் டெஸட் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கின்றனர். எனவே ஒரு வருடத்தில் 10 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படவேண்டும்.

'இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வருடத்தில் 15க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. அப்படியானால் எங்களால் ஏன் முடியாது. எங்களாலும் விளையாட முடியும். அதற்காக தொடர்ச்சியாக அறைகூவல் விடுத்தால் அது சாத்தியமாகும். நாங்கள் உலகக் கிண்ணங்களை வென்றுள்ளோம். ஒரு நாடு என்ற வகையில் நாங்கள் கிரிக்கெட்டுக்காக எவ்வளவோ செய்திருக்கிறோம். எனவே அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்றே நாங்களும் அதிகளவான டெஸ்ட் போட்டிகளில் விளையாட தகுதி உடையவர்களே' என பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

16 வருடங்கள் இலங்கைக்காக மூவகை கிரிக்கெட்டில் எவ்வளவோ சாதித்த நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெறுவதற்கான காரணம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

'கிரிக்கெட் வாழ்க்கை என்பது ஒரு சுழற்சியாகும். நாங்கள் வருவதும் போவதுமாக இருக்கிறோம். கடந்த கால வீரர்கள் மிகச் சிறந்தவர்கள். நாங்கள் எல்லோரும் இளம் வீரர்களாக அணியில இணைந்து சிரேஷ்ட வீரர்களாக வெளியேறுகிறோம். என்னைப்பொறுத்த மட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வுபெறுவதற்கு சில காரணங்கள் இருக்கிறது.

angelo_mathews_in_london.png

'கடந்த ஏழு, எட்டு போட்டிகளில் எனது திறமை நான் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கவில்லை. எனவே அணிக்கு நான் சுமையாக இருக்க விரும்பவில்லை. நான் எமது அணியின் எதிர்கால அட்டவணையைப் பார்த்தபோது நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு போட்டிகள் இல்லை. (பங்களாதேஷுடனான தொடருக்குப் பின்னர் இன்னும் ஒரு வருடத்திற்கு பின்னரே அடுத்த டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது) இது துரதிர்ஷ்டவசமாகும். எனவே இதுதான் இளையவர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க சரியான தருணம் என எண்ணினேன். ஏனேனில் பல திறமையான இளம் வீரர்கள் சாதிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது' என்றார்.

தொடர்ந்து பதிலளித்த அவர்,

'சனத் பயிற்றுநராக பொறுப்பேற்ற பின்னர், தரங்கவும் அவரது அணியினரும் தேர்வாளர்களாக வந்த பின்னர் தொடர்பாடல்கள் மிகவும் நன்றாக இருந்தது. அவர்கள் எங்களோடு அடிக்கடி உரையாடுகிறார்கள்.. சிரேஷ்ட வீரர்களோ அல்லது கனிஷ்ட வீரர்களோ அவர்கள் சரியானவற்றை கலந்துரையாடுகிறார்கள்.. அதுதான் முக்கியமானது. அணியில் சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு தொடர்பாடல்கள் பிரதானமானது. அதன் பின்னரே ஆற்றல் வெளிவரும். அதனை நான் நேரடியாக பார்த்துள்ளேன். நாங்கள் டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயற்பட்டோம். எங்களுக்கு டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாட கிட்டத்தட்ட வாய்ப்பிருந்தது. அத்துடன் ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் சிறப்பாக விளையாடி இருந்தோம். ஆகவே தொடர்பாடல் மிகத் தெளிவாக இருந்ததுடன் சூழ்நிலையும் சிறப்பாக இருந்தது. அதனால் தான் ஆற்றல்களும் மேலும் மேலும் சிறப்பாக இருந்தது. அவர்கள் தங்களது பணியை சிறப்பாக ஆற்றுகின்றனர். அத்துடன் திறமையான வீரர்கள் உருவாகி வருகிறார்கள். அவர்களது தரமும் உயர்கிறது. எதிர்காலம் பிரகாசமாகத் தெரிகிறது' என்றார்.

டெஸ்ட் ஓய்வுக்குப் பின்னர் இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிவரை விளையாட எண்ணியுள்ளதாக ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

'ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதற்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றது. அப் போட்டி இந்தியாவிலும் இலங்கையிலும் நடைபெறுவதால் சொந்த மண்ணில் இலங்கை சம்பியனாகவேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன். ஆனால், அதற்கு எனது உடற்தகுதி அனுமதிக்கவேண்டும். அதற்காக நான் கடுமையாக உழைக்கவுள்ளேன். கடும் பயிற்சிகளில் ஈடுபட்டு எனது திறமையை அதிகரித்துக்கொள்ளும் அதேவேளை உடற்தகுதியையும் பேணவுள்ளேன். அதன் பின்னர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெறுவேன்' என பதிலளித்தார்.

இலங்கை அணி வீரராக நினைவிலிருந்து நீங்காத தருணங்கள் பற்றி கேட்டபோது,

'எனது கிரிக்கெட் வாழ்க்கையை மீட்டுப் பார்க்கும்போது ஒவ்வொரு விரரரையும் போன்று எனக்கும் நினைவிலிருந்து நீங்காத எத்தனையோ தருணங்கள் இருக்கின்றது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பர்னில் 2010இல் நாங்கள் ஈட்டிய வெற்றி - (ஒருநாள் போட்டியில் மெத்யூஸ் - மாலிங்க 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 132 ஓட்டங்களின் உதவியுடன் ஈட்டிய ஒரு விக்கெட் வெற்றி), இங்கிலாந்துக்கு எதிராக முதல் தடவையாக அந் நாட்டில் நாங்கள் ஈட்டிய (ஏஞ்சலோ மெத்யூஸின் தலைமையில்) முதலாவது டெஸ்ட் வெற்றி, 2016இல் அவஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கு ஈட்டிய 3 - 0 தொடர் வெற்றி ஆகிய அனைத்தும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டப்பட்ட மகத்தான வெற்றிகளாகும். அத்துடன் உலகக் கிண்ணத்தை மறக்க முடியாது. 2014 ரி20 உலகக் கிண்ணம், 2014 ஆசிய கிண்ணம் ஆகிய வெற்றிகளையும் ஈட்டினோம். வெற்றியீட்டிய இந்த அணிகளில் எல்லாம் நான் பங்காற்றியதையிட்டு மிகுந்த சந்தோஷம் அடைகிறேன்' என்றார்.

மகிழ்ச்சி தரக்கூடிய விடயங்களைப் போன்ற கசப்பான நிகழ்வுகள் ஏதேனும் இருக்கின்றதா? குறிப்பாக பங்களாதேஷுக்கு எதிரான 2021 உலகக் கிண்ணப் போட்டியில் டைம் அவுட் ஆன விதம் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்?

bangladesh_thye_are_my_friends_angelo_ma

'அது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. ஆனால், அவர்கள் அனைவரும் எனது நண்பர்கள். அவர்களுக்கு எதிராக எனது மனதில் எதுவும் இல்லை. அவர்கள் எங்களுடன் நலமாகவே இருக்கின்றனர். வெளிப்படையாக கூறுவதென்றால் நாங்கள் சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டோம். ஆனால், அவர்களுக்கு எதிராக எனது மனதில் இதுவும் இல்லை. அவர்கள் மீது எனக்கு எவ்வித வெறுப்பும் இல்லை. வெறுப்பு என்பது கிரிக்கெட்டில் மோசமான வார்த்தை. நாங்கள் அனைவரும் கடினமாகவும் நேர்மையாகவும் விளையாடுகிறோம். அவர்கள் அனைவரும் எனது நல்ல நண்பர்கள்' என ஒரு சிறந்த வீரருக்கே உரிய விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் பதிலளித்தார் மெத்யூஸ்.

இலங்கை கிரிக்கெட் அணி வீழ்ச்சியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அணித் தலைவர் பதவியை நீங்கள் துறந்ததற்கான காரணம் என்ன?

'ஸிம்பாப்வேக்கு எதிராக 2018இல் சந்தித்த தோல்வியை இலங்கை அணியினாலும் முழு இலங்கையினாலும் ஜீரணிக்க முடியவில்லை. இதனை அடுத்து நான் அணித் தலைவர் பதவியலிருந்து விலகிக்கொண்டேன். நாங்கள் வீழ்ச்சி அடைந்த நேரத்திலேயே அணித் தலைவர் பதவியிலிருந்து நான் விலக நேரிட்டது. அந்தத் தோல்வியினால் நான் பெரும் சோகம் அடைந்தேன். அந்தத் தோல்விக்கு பொறுப்பேற்க வெண்டும் என நான் எண்ணினேன். அதனால் தான் அணித் தலைவர் பதியிலிருந்து விலக நேரிட்டது. ஒரு வருடம் கழித்து தலைமைப் பதவியைப் பொறுப்பெற்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் என்னை சமாதானப்படுத்திக்கொண்டேன்.

'2008இலிருந்து இன்றுவரை நான் எல்லாவற்றையும் பார்த்துள்ளேன், எதிர்கொண்டுள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. அவற்றை நான் சமாளித்துக்கொண்டேன். ஆடுகளத்தின் உள்ளேயும் வெளியேயும் சவால்கள் வந்தன. உபாதைகளுக்குள்ளானேன். அவை அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டு வந்தேன். நான் எப்போதும் சரியானதை செய்ய முயற்சித்தேன் என கருதுகிறேன். வீரர்கள் என்ற வகையில் தலைவர் என்ற வகையில் நாங்கள் எடுக்கும் தீர்மானங்கள் சில வேளைகளில் தவறாகி விடுவதுண்டு. விளையாட்டில் இவ்வாறு இடம்பெறுவது சகஜம். ஆனால், பின்னோக்கிப் பார்க்கும் போது நான் எனது மனசாட்சிக்கு கட்டுப்பட்டு சரியான தீர்மானங்களையே எடுத்தேன் என்பதையிட்டு சந்தோஷமடைகிறேன். அத்துடன் அணிக்கான எனது நூற்றுக்கு 100 வீத பங்களிப்பை வழங்கினேன் என நம்புகிறேன்' என பதிலளித்தார் மெத்யூஸ்.

புனித சூயைப்பர் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவராக சகலதுறைகளிலும் பிரகாசித்த ஏஞ்சலோ மெத்யூஸ் 2006ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக விளையாடி இருந்தார்.

பாடசாலையை விட்டு விலகிய பின்னர் கலம்போ கோல்ட்ஸ் கழகத்தில் இணைந்த ஏஞ்சலோ மெத்யூஸ் கிட்டத்தட்ட 20 வருடங்கள் அக் கழகத்திற்காக தொடர்ந்து விளையாடி வருகிறார்.

தனது கிரிக்கெட் வளர்ச்சியில் இக் கழகமும் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்த அவர், '2007ஆம் ஆண்டு மாகாண கிரிக்கெட் போட்டியில் நான் சிறப்பாக விளையாடியதால் 2008இல் இலங்கை ஏ அணிக்கு நான் தெரிவுசெய்யப்பட்டேன். தென் ஆபிரிக்காவுக்கான அந்த கிரிக்கெட் விஜயத்தில் இரண்டு சதங்களை அடித்தேன். அதன் பின்னர் இலங்கை அணியில் நான் இணைக்கப்பட்டேன். அப்போது தொலைக்காட்சி திரைகளில் பார்த்து இரசித்த சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், முரளிதரன், மஹேல, சங்கக்கார ஆகிய உலகத் தரம் வாய்ந்த வீரர்களை உடைமாற்று அறையில் (dressing room) பார்த்தபோது எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

'ஆனால், அந்த சூழ்நிலையை எனது சொந்த வீடு போல் ஆக்கி எனது மன அழுத்தத்தை குறைத்ததுடன் உணர்ச்சிகளையும் இலகுவாக்கிய டி.எம். டில்ஷான், திலான் சமரவீர உட்பட அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். எனது கன்னி முயற்சியில் நான் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தேன். ஆனால் அவர்கள் எனது வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினர். அத்துடன் தன்னம்பிக்கையும் ஊட்டினர். அவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அதன் பின்னர் நான் பின்னோக்கி நகரவில்லை. மேடு பள்ளங்களை சந்தித்தேன். தொல்லைகளும் கஷ்டங்களும் வந்தன. அவை அனைத்தையும் கடந்து வந்ததைப் பார்க்கும்போது இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்றார் அவர்.

ஊடக சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன்னர் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவியவர்களை நினைவுகூர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸ், தன்னை வளர்த்து ஆளாக்கி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கிய தனது பெற்றோரே தனது ஹீரோக்கள் என கூறினார்.

color_angelo_mathews.jpg

'நான் எத்தனையோ பேருக்கு நன்றிகூற கடமைபட்டுள்ளேன். எல்லாவற்றுக்கும் மேலாக இவ்வளவு நீண்டகால கிரிக்கெட் வாழ்க்கையை எனக்கு அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் பல தடவைகள் உபாதைக்குள்ளானேன். ஆனால், இறைவனின் ஆசியால் என்னால் 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்ய முடிந்தது.

angelo_mathews_in_dambulla.png

இது எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க விசேட பயணமாகும். இன்றுவரை நான் வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் தங்களை எனக்காக அர்ப்பணித்த எனது பெற்றோர், எனது உடன்பிறப்புகள், எனது மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கு நான் நன்றிகூறவேண்டும். நான் அழுத்தங்களை எதிர்கொண்டபோதெல்லாம் அவற்றிலிருந்து மீண்டு வர எனது மனைவி எனக்கு உறுதுணையாக இருந்தார். அது இலகுவானதல்ல. அவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். என்னை வளர்த்து இந்த நிலைக்கு ஆளாக்கிய எனது பெற்றோரிடம் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டேன். அவர்கள் தான் எனது ஹீரோக்கள்.

'எனது நெருங்கிய நண்பர்கள், பிரச்சினைகள், சிரமங்களின்போது எனக்காக என்னோடு இருந்தவர்கள், எனது முன்னாள், சமகால பயிற்றுநர்கள், எனக்கு கல்வி தந்து என்னை விளையாட்டுத்துறையில் பிரகாசிக்கச் செய்த புனித சூசையப்பர் கல்லூரி, கல்லூரியின் முன்னாள், சமகால முதல்வர்கள் (அதிபர்கள்), முன்னாள் மற்றும் சமகால ஆசிரியர்கள், முன்னாள் மற்றும் சமகால பயிற்றுநர்கள் உட்பட எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்னேன். அத்துடன் எனது கழகம் கலம்போ கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கும் நன்றி கூறவேண்டும்' என மெத்யூஸ் தெரிவித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான, 100 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்த காலி சர்வதேச மைதானத்தில் ஏஞ்சலோ மெத்யூஸ் தனது பிரியாவிடை டெஸ்ட் போட்டியில் விளையாடவிருப்பது விசேட அம்சமாகும்.

https://www.virakesari.lk/article/217668

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு SLC கௌரவிப்பு

17 JUN, 2025 | 12:13 PM

image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் மூத்த வீரர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாகும்.

தனது 118ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் இந்த டெஸ்ட போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறவுள்ளார்.

இதனை முன்னிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி கௌரவித்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, இந்த நினைவுச் சின்னத்தை ஏஞ்சலோ மெத்யூஸிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் உதவித் தலைவர் ஜயன்த தர்மதாசவும் கலந்துகொண்டார்.

இந்தப் போட்டியில் இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட அழைக்கப்பட்டதை அடுத்து ஏஞ்சலோ மெத்யூஸ் முதலில் களத்தினுள் சென்றார். அப்போது பாடசாலை வீரர்கள் இருபுறமும் நின்றவாறு துடுப்பை உயர்த்தி அவருக்கு கௌரவம் செலுத்தினர். மெத்யூஸ் கையை உயர்த்தி அசைத்தவாறு களத்தினுள் புகுந்தார்.

அப்போது இலங்கை வீரர்களும் அரங்கில் குழுமியிருந்தவர்களும் பலத்த கரகோஷம் செய்து ஏஞ்சலோ மெத்யூஸை பாராட்டி கௌரவித்தனர்.

3_Angelo_mathews_waving_his_hand_to_the_

2_school_cricketers__honour_AM.jpg

https://www.virakesari.lk/article/217694

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் அறிமுகம் பெற்றனர் லஹிரு உதார, தரிந்து ரத்நாயக்க; பங்களாதேஷ் 90 - 3 விக்

17 JUN, 2025 | 12:22 PM

image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை ஆரம்பமான இலங்கைக்கும் பங்காளாதேஷுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்டத்தின் பகல்போசன இடைவேளையின்போது 3 விக்கெட்களை இழந்து 90 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இப் போட்டியில் இலங்கை சார்பாக 31 வயதான வலதுகை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார, இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடிய 29 வயதான சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் டெஸ்ட் அறிமுகம் பெற்றனர்.

இன்றைய போட்டியில் பந்துவீச அழைக்கப்பட்ட தரிந்து ரத்நாயக்க தனது நான்காவது ஓவரில் மொமினுள் ஹக்கை ஆட்டம் இழக்கச் செய்ததன் மூலம் முதலாவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

மொத்த எண்ணிக்கை 5 ஓட்டங்களாக இருந்தபோது அனாமுல் ஹக் ஓட்டம் பெறாமல் அசித்த பெர்னாண்டோவினால் வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம் (14), மொமினுள் ஹக் (29) ஆகிய இருவரின் விக்கெட்களை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தரிந்து ரத்நாயக்க வீழ்த்தினார். (45 - 3 விக்)

எனினும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் சன்டோ (25 ஆ.இ.), முஷ்பிக்குர் ரஹிம் (20 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷ் அணியை நல்ல நிலையை நோக்கி நகர வைத்துள்ளனர்.

பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடரவுள்ளது.

https://www.virakesari.lk/article/217697

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணித் தலைவர் ஷன்டோ, முன்னாள் தலைவர் ரஹிம் குவித்த  அபார சதங்களுடன் பலமான நிலையில் பங்களாதேஷ்

Published By: VISHNU

17 JUN, 2025 | 07:32 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, முன்னாள் தலைவர் முஷ்பிக்குர் ரஹிம் ஆகியோர் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதங்களின் உதவியுடன் பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 292 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

1706_centurians_shanto_and_rahim_put_up_

நான்காவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சி அத்தியாயத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட்  கிரிக்கெட்  போட்டி இதுவாகும்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

மொத்த எண்ணிக்கை 5 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர்களில் ஒருவரான அனாமுல் ஹக் ஓட்டம் பெறாமல் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம் 14 ஓட்டங்களுடனும் மொமினுள் ஹக் 29 ஓட்டங்களுடனும் இலங்கையின் அறிமுக சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவின் பந்துவீச்சில் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெளியேறினர்.

17ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களாக இருந்தபோது ஜோடி சேர்ந்த ஷன்டோவும் ரஹிமும் மிகவும் பொறுப்புணர்வுடன் சுமார் 5 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடி இலங்கை பந்துவீச்சாளர்களை பெரும் சொதனைக்குள்ளாக்கினர்.

1706__shanto_celebrate_his_century.png

அவர்கள் இருவரும் அபார சதங்களைக் குவித்ததுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 247 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளனர்.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 260 பந்துகளில் 14 பவுண்டறிகள், ஒரு சிச்ஸ் அடங்கலாக 136 ஓட்டங்களுடனும் முஷ்பிக்குர் ரஹிம் 186 பந்துகளில் 5 பவுண்டறிகள் உட்பட 105 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

தனது 36ஆவது டெஸ்டில் விளையாடும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 6ஆவது சதத்தைக் குவித்ததுடன் தனது 97ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 38 வயதான மூத்த வீரர் முஷ்பிக்குர் ரஹிம் 12ஆவது சதத்தைப் பெற்றார்.

விளையாட்டிற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் முஷ்பிக்குர் ரஹிம் அபாரமாக துடுப்பெடுத்தாடினார்.

இலங்கை அணியில் ஆரம்ப வீரர் லஹிரு உதாரவும் சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவும் டெஸ்ட் அறிமுகம் பெற்றனர்.

1706__sri_lanka_debutants_tharindu_ratna

தரிந்து ரத்நாயக்க ஆரம்பத்தில் சிறப்பாக பந்துவீசி 5 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் வீசிய 27 ஓவர்களில் 105 ஓட்டங்களைக் கொடுத்த அவரால் மேலதிக விக்டெகட் எதனையும் கைப்பற்ற முடியாமல் போனது. (124 - 2 விக்)

தனது முதல் 15.5 ஓவர்களை வலதுகையால் பந்துவீசிய தரிந்து ரத்நாயக்க 16ஆவது ஓவரில் இடது கையால் பந்துவீச ஆரம்பித்தார். ஆனால் அவரால் பந்துவீச்சில் சாதிக்க முடியாமல் போனது.

அசித்த பெர்னர்ணடோ 51 ஓட்டங்களுடக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன் மிலன் ரட்நாயக்க கட்டுப்பாட்டுடன் 12 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை மட்டும் கொடுத்தார். இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவிச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய 28 ஒவர்களில் 85 ஓட்டங்களைக் கொடுத்து விக்கெட் எதனையும் கைப்பற்றவில்லை.

பகுதிநேர பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா பயன்படுத்தாதது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

இரண்டாம் நாள் ஆட்டம் நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தொடங்கும்.

https://www.virakesari.lk/article/217756

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி ச‌ம‌ நிலையில் முடிய‌க் கூடும்...................காலி மைதான‌த்தில் டெஸ்ட் போட்டி ப‌ல‌ வ‌ருட‌மாய் ச‌ம‌ நிலையில் முடிந்த‌து கிடையாது 5வ‌து நாள் பிச் மாறு ப‌ட்டால் விக்கேட் விழ‌க் கூடும் இல்லையேன் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலம் வாய்ந்த நிலையில் பங்களாதேஷ்

18 JUN, 2025 | 12:26 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் மிகவும் பலமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

1806_mushfiqur_rahim.png

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை 3 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் மதிய போசன இடைவேளையின்போது 4 விக்கெட்களை இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதலாம் நாள் ஆட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தி சதங்கள் குவித்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் முன்னாள் தலைவர் முஷ்பிக்குர் ரஹிமும் 4ஆவது விக்கெட்டில் 264 ஓட்டங்ங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஷன்டோ 148 ஓட்டங்களைப் பெற்று அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஏஞ்சலோ மெத்யூஸிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 383 ஓட்டங்களாக உயர்த்தினர்.

முஷ்பிக்குர் ரஹிம் 7 பவுண்டறிகள் அடங்கலாக 141 ஓட்டங்களுடனும் லிட்டன் தாஸ் 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 43 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்னர்.

1806_asitha_fernando.png

https://www.virakesari.lk/article/217801

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மழையினால் இரண்டரை மணி  நேர தாமதத்தின் பின் பங்களாதேஷின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது ; 26 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்களை இலங்கை வீழ்த்தியது

19 JUN, 2025 | 05:54 AM

image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பங்களாதேஷ், மழையினால் ஆட்டம்  இரண்டரை  மணி நேர ம்  இடைநிறுத்தப்பட்டு மீண்டும் பின்னர் மீண்டும் தொடர்ந்தபோது 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்களை இலங்கையிடம் தாரைவார்த்தது.

1806_mushfiqur_and_liton_das.png

தனது முதல் இன்னிங்ஸை   3 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களில் இருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ் ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 458 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் 9 விக்கெட்களை இழந்து 496 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்த மொத்த எண்ணிக்கையில் மத்திய வரிசை வீரர்களான நஜ்முஸ் ஹொசெய்ன், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய மூவரும் 411 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

1806_mushfiqur_rahim.png

இந்தப் போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்தளவு சோபிக்கத் தவறிய போதிலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா நால்வரையே மீண்டும் மீண்டும் பந்துவீச்சில் ஈடுபடுத்தியது பெரும் ஆச்சரியத்தையும் அதிருப்தியையும் தோற்றுவித்தது.

எவ்வாறாயினும் இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் இலங்கை 6 விக்கெட்களை வீழ்த்தி பங்களாதேஷை ஓரளவு கட்டுப்படுத்தியது.

தனது இன்னிங்ஸை 136 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ தனது எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்களை சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

279 பந்துகளை எதிர்கொண்ட ஷன்டோ 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 148 ஓட்டங்களைப் பெற்றார்.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஷன்டோ 4ஆவது விக்கெட்டில் முன்னாள் அணித் தலைவர் முஷ்பிக்குருடன் 264 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

அவர் ஆட்டம் இழந்த பின்னர் முஷ்பிக்குர் ரஹிமும் லிட்டன் தாஸும்  இலங்கை பந்துவீச்சாளர்களை இலகுவாக எதிர்கொண்டு 114 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 423 ஓட்டங்களாக உயர்த்தியபோது கடும் மழை பெய்ததால் பிற்பகல் 1.40 மணி அளவில் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.

இரண்டரை மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னர் பிற்பகல் 4.15 மணிக்கு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.

மொத்த எண்ணிக்கை 458 ஓட்டங்களாக இருந்தபோது முஷ்பிக்குர் ரஹிமும் லிட்டன் தாஸும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுததாடிய முஷ்பிக்குர் ரஹிம் 350 பந்துகளில் 9 பவுண்டறிகளுடன் 163 ஓட்டங்களைப் பெற்றார்.

சற்று ஆக்ரோஷமாக துடுப்பெடுத்தாடிய லிட்டன் தாஸ் 123 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 90 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 149 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

1806_asitha_fdo__sl_vs_bang_day_2.png

1806_milan_rathnayake.png

இந்த இருவரின் விக்கெட்களுடன் மேலும் 4 விக்கெட்கள் 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

பந்துவீச்சில் மிலன் ரத்நாயக்க 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பங்களாதேஷ் அணியினர் பெரும்பாலும் இரண்டாம் நாள் ஆட்டத்துடன் தமது முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டு நாளைக் காலை இலங்கைக்கு துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுப்பர் என கருதப்படுகிறது.

https://www.virakesari.lk/article/217867

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் நாள் பகல் போசன இடைவேளையின்போது இலங்கை 100 - 1 விக்

19 JUN, 2025 | 12:25 PM

image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 495 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இலங்கை 3ஆம் நாள் பகல் போசன இடைவெளையின்போது ஒரு விக்கெட்டை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க 46 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 484 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் மொத்த எண்ணிக்கை 495 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

துடுப்பாட்டத்தில் முஷ்பிக்குர் ரஹிம் 163 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 148 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 90 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 31 வயதான அறிமுக வீரர் லஹிரு குமார ஆரம்ப ஜோடியாக களம் இறங்கினர்.

இருவரும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லஹிரு குமார 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவும் தினேஷ் சந்திமாலும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 100 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 34 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

https://www.virakesari.lk/article/217892

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதத்தின் உதவியுடன் பங்ளாதேஷுக்கு இலங்கை துணிச்சலான பதில்; ஏஞ்சலோ மெத்யூஸுக்கு பங்களாதேஷ் வீரர்கள், இரசிகர்கள் மரியாதை

Published By: VISHNU

19 JUN, 2025 | 08:53 PM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதத்தின் உதவியடன் இலங்கை துணிச்சலான பதில் அளித்துள்ளது.

1906_pathum_nissanka_celebrating_the_cen

இது இவ்வாறிருக்க தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஏஞ்சலோ மெத்யூஸ் களம் புகுந்தபோதும் களம் விட்டு வெளியேறியபோதும் அவருக்க பலத்த மரியாதை செலுத்தப்பட்டது.

பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் பெற்ற 495 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இலங்கை போட்டியின் மூன்றாம் நாளான இன்று வியாழக்கிழமை (19) ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 368 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முதல் இன்னிங்ஸில் மேலும் 6 விக்கெட்கள் மீதம் இருக்க பங்களாதேஷைவிட 127 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க தனது 17ஆவது டெஸ்ட் போட்டியில் 3ஆவது சதத்தைக் குவித்ததுடன், 64ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.

பெத்தும் நிஸ்ஸன்கவும் 31வயதான அறிமுக வீரர் லஹிரு உதாரவும் 47 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லஹிரு உதார 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

1906_dinesh_chandimal.png

அதன் பின்னர் பெத்தும் நிஸ்ஸன்கவுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் அரைச் சதம் பெற்றதுடன் 157 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டார்.

தினேஷ் சந்திமால் 119 பந்துகளில் 4 பவுண்டறிகளுடன் 54 ஓட்டங்களைப் பெற்றார்.

1906_angelo_mathews_waves_his_bat_while_

அவரைத் தொடர்ந்து ஏஞ்சலோ மெத்யூஸ் தனது கடைசி டெஸ்டில் விளையாட களம் புகுந்தபோது பங்களாதேஷ் வீரர்களும் மத்தியஸ்தர்களும் இருமருங்கில் வரிசையாக நின்று அவருக்கு மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஏஞ்சலோ மெத்யூஸ் 3 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழந்து மைதானத்தை விட்டு வெளியேறியபோது அரங்கில் இருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பி அவரை பாராட்டி கௌரவித்தனர்.

bang_players_honour_angelo_mathews..jpg

மறுபக்கத்தில் திறமையாகவும் ஆக்ரோஷமாகவும் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 256 பந்துகளை எதிர்கொண்டு  23 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 187 ஓட்டங்களைக் குவித்தார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.

கமிந்து மெண்டிஸ் 37 ஓட்டங்களுடனும் தனஞ்சய டி சில்வா 17 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 484 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ் மொத்த எண்ணிக்கை 495 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

துடுப்பாட்டத்தில் முஷ்பிக்குர் ரஹிம் 163 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 148 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 90 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 85 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அறிமுக வீரர் தரிந்து ரத்நாயக்க 196 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/217954

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்காம் பகல் போசன இடைவேளையின்போது இலங்கை 465 - 6 விக்; கமிந்து மெண்டிஸ் 83 ஆ.இ.

Published By: DIGITAL DESK 3

20 JUN, 2025 | 12:34 PM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாளான இன்றைய பகல் போசன இடைவேளையின்போது இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 465 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

கமிந்து மெண்டிஸ் 83 ஓட்டங்களுடனும் மிலன் ரத்நாயக்க 38 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

போட்டியின் நான்காம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்பு 368 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, தனஞ்சய டி சில்வா (19), குசல் மெண்டிஸ் (5) ஆகியோரின் விக்கெட்களை இழந்தது.

எனினும் கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளனர்.

பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 495 ஓட்டங்களைப் பெற்றது.

https://www.virakesari.lk/article/217986

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழை குறுக்கிட்ட‌ ப‌டியால் இல‌ங்கை அணி தோல்வியில் இருந்து த‌ப்பி விட்ட‌து..............இல்லையேன் வ‌ங்கிளாதேஸ் வென்று இருக்கும்..................விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிந்து விட்ட‌து..............................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கமிந்துவின் அரைச் சதத்தை ஷத்மான், ஷன்டோ அரைச் சதங்கள் விஞ்சின;  இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலை

Published By: VISHNU

20 JUN, 2025 | 07:55 PM

image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் மற்றும் இருதரப்பு  டெஸ்ட்  தொடரின் முதலாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கையின் கமிந்து மெண்டிஸ் குவித்த அரைச் சதத்தை ஷத்மான் இஸ்லாம், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகியோரின் அரைச் சதங்கள் விஞ்சியதுடன் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது.

போட்டியின் நான்காம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (20) இலங்கையை முதலாவது இன்னிங்ஸில் 485 ஒட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்த பங்களாதேஷ் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 7 விக்கெட்கள் மீதம் இருக்க இலங்கையை விட 187 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னிலையில் இருக்கிறது.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) பாடாலை மாணவர்கள் காலி கோட்டைக்கு மேலே உள்ள புல்வெளியில் இருந்து போட்டியைக் கண்டு களித்தமை விசேட அம்சமாகும்.

2006_school_children_watchind_the_sl_vs_

போட்டியின் ஐந்தாவதும் கடைசியுமான நாளைய தினம் சனிக்கிழமை (21) அதிசயம் நிகழ்ந்தாலன்றி இந்தப் போட்டி சுவாரஸ்யமற்ற முடிவை நோக்கி நகர்வதை தவிர்க்க முடியாது.

பங்களாதேஷின் இரண்டாவது இன்னிங்ஸில் அனாமுல் ஹக் (4), மொமினுள் ஹக் (14) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர்.

ஆனால், ஷத்மான் இஸ்லாம் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 76 ஓட்டங்களைப் பெற்றதால் பங்களாதேஷ் நல்ல நிலையை அடைந்தது.

2006_shadman_islam.png

ஷத்மான் இஸ்லாமும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் 3ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தொடர்ந்து ஷன்டோ திறமையாகத் துடுப்பெடுத்தாடி இப் போட்டியில் இரண்டாவது தடவையாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதுடன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் முஷ்பிக்குர் ரஹிமுடன் 49 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஷன்டோ 56 ஓட்டங்களுடனும் ரஹீம் 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்னனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, மிலன் ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

முன்னதாக, நான்காம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 368 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 485 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (19), குசல் மெண்டிஸ் (5) ஆகிய இருவரும் 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (386 - 6 விக்.)

2006_milan_ratnayake_and_kamindu_mendis.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், மிலன் ரத்நாயக்க ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதியான 84 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் இருவரும் மொத்த எண்ணிக்கை 470 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர்.

2006__Milan_Rathnayake_Batting__3_.jpg

கமிந்து மெண்டிஸ் தனது 13ஆவது டெஸ்டில் 5ஆவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 87 ஓட்டங்களுடன் வெளியேறினார். மிலன் ரத்நாயக்க 39 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்வரிசையில் பிரபாத் ஜயசூரிய 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் நயீம் ஹசன் 121 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஹசன் மஹ்முத் 74 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/218025

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உணர்ச்சிவசப்பட்டவராக விடைபெற்றார் மெத்யூஸ் : இலங்கை - பங்களாதேஷ் டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவு

22 JUN, 2025 | 04:44 AM

image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் இருதரப்பு டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியான ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தனது கடைசி இன்னிங்ஸில் ஏஞ்சலோ மெத்யூஸ் 8 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.

போட்டி முடிவில் பேசிய அவர்,

'நான் ஏற்கனவே எனது ஓய்வை அறிவித்ததிலிருந்து எனக்கு கிடைத்த பாசத்தை என்னால் நம்பமுடியவில்லை. நிச்சயமாக பாசத்தினால் நிரம்பியிருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது ஒரு எளிதான பயணம் அல்ல. நிறைய மேடு பள்ளங்களை சந்தித்தேன். ஆனால், எனக்கு கிடைத்த ஆதரவின் காரணமாக அவற்றை எல்லாம் கடந்து என்னால் எனது டெஸ்ட் வாழக்கைப் பயணத்தை நிறைவு செய்ய முடிந்தது. வெளிப்படையாக (நான் உணர்ச்சிவசப்படுறேன்) கூறுவதென்றால், கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வடிவத்திலிருந்தும் நான் விளையாட விரும்பிய வடிவத்திலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். இங்கிருந்து இளையவர்கள் கிரிக்கெட்டில் தொடர வேண்டிய தருணம் இது.

'ஓர் அற்புதமான டெஸ்ட் போட்டியில் விளையாடியதற்காக பங்களாதேஷை வாழ்த்தவேண்டும். முஷி (முஷ்பிக்குர்), ஷன்டோ ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக துடுப்பெடுத்தாடினர். அதேபோன்று பெத்துமும் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்' என்றார் மெத்யூஸ்.

தனது சொந்த கிரிக்கெட் வாழ்க்கையில் ஈட்டிய மகத்தான வெற்றிகளைப் பற்றி மெத்யூஸ் கூறுகையில்,

'இங்கிலாந்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஈட்டிய வெற்றி, அவுஸ்திரேலியாவிற்கு எதிராக எமது சொந்த மண்ணில் 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் ஈட்டிய முழுமையான வெற்றி என்பன முக்கியமானவையும் மகத்தானவையுமாகும். அது முழு அணிக்கும் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும். எனக்கு ஒத்துழைப்பு நல்கிய சகல வீரர்களுக்கும் பயிற்றுநர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் அறிமுகமானது முதல் என்னோடு இருந்த அனைத்து இரசிகர்களுக்கும் நன்றி. மிக்க நன்றி' என்றார்.

இது இவ்வாறிருக்க, இப் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பங்களாதேஷ் அணித் தலைவர் சதங்கள் குவித்தது விசேட அம்சமாகும்.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 296 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்டம் முடிவுக்குவந்த போது 4 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க 24 ஓட்டங்களைப் பெற்றதுடன் கமிந்து மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் தலா 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீ;ச்சில் தய்ஜுல் இஸ்லாம் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முன்னதாக போட்டியின் கடைசி நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை  நிறுத்திக்கொண்டது.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆட்டம் இழக்காமல் 125 ஓட்டங்களையும் ஷத்மான் இஸ்லாம் 76 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தரிந்து ரத்நாயக்க 102 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் 495 ஓட்டங்களையும் இலங்கை 485 ஓட்டங்களையும் பெற்றன.

https://www.virakesari.lk/article/218092

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்ச‌லோ ம‌த்தியூஸ் ஓய்வு

இவ‌ரின் இட‌த்தை பிடிக்க‌ இல‌ங்கை அணியில் வீர‌ர்க‌ள் இல்லை........................அர‌சிய‌ல் த‌லையிட்டால் அழிந்து போன‌ அணி என்றால் அது இல‌ங்கை அணி தான்...............................

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ந‌ட‌க்கும் போட்டி கொழும்பில் ந‌ட‌ப்ப‌தால் ச‌ம‌ நிலையில் முடியாது , இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று வெல்லும்......................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான 2ஆவது டெஸ்ட் : பகல்போசன இடைவேளையின்போது பங்களாதேஷ் 72 - 2 விக்.

25 JUN, 2025 | 12:49 PM

image

(எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (25) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ், முதலாம் நாள் பகல்போசன இடைவேளையின்போது 2 விக்கெட்களை இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டியின் 5ஆவது ஓவரில் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் அனாமுல் ஹக் (0) ஆட்டம் இழந்தார். (5 - 1 விக்.)

தொடர்ந்து ஷத்மான் இஸ்லாம், மொமினுள் ஹக் ஆகிய இருவரும் நிதானத்தைக் கடைப்பிடித்து துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர்.

அந்த சந்தர்ப்பத்தில் பந்துவீச்சில் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்ட அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா முதலாவது பந்திலேயே மொமினுள் ஹக்கை (21) ஆட்டம் இழக்கச் செய்தார்.

பகல் போசன இடைவேளையின்போது ஷத்மான் இஸ்லாம் 43 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பந்துவீச்சில்  அசித்த பெர்னாண்டோ 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் தனஞ்சய டி சில்வா 13 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் சொனால் தினூஷ அறிமுகமானதுடன் உபாதைக்குள்ளான மிலன் ரத்நாயக்கவுக்குப் பதிலாக   விஷ்வா பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/218410

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் காலையில் ம‌ழை பெய்து இருக்கு போல்

அது தான் குறைந்த‌ ஓவ‌ரோட‌ விளையாட்டு முடிந்து இருக்கு...................இல‌ங்கை இந்த‌ மைச்சை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு...................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அறிமுக டெஸ்டில் பந்துவீச்சில் சொனால் தினூஷ அபாரம்; பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 220 - 8 விக்.

Published By: VISHNU

25 JUN, 2025 | 07:16 PM

image

(எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (25) ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

Copy_of_Sonal_Dinusha_celebrates_Litton_

லிட்டன் தாஸ், முஷ்பிக்குர் ரஹிம் ஆகிய இரண்டு பிரதான வீரர்களின் விக்கெட்களை அறிமுக வீரர் சொனால் தினூஷ கைப்பற்றியதால் பங்களாதேஷினால் பலமான நிலையை அடைய முடியாமல் போனது.

Copy_of_Sonal_Dinusha_VK92489.jpg

சொனால் தினூஷ மட்டுமல்லாமல் இலங்கையின் சகல பந்துவீச்சாளர்களும் பங்களாதேஷின் பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு பெரும் மிரட்டலாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.

Copy_of_Asitha_Fernando_bowls_VK99104.jp

எவ்வாறாயினும் இலங்கை வீரர்கள் களத்தடுப்பில் 3 பிடிகளை தவறவிட்டது பங்களாதேஷுக்கு ஓரளவு சாதகமாக அமைந்தது.

இந்தப் போட்டியில் பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் அமினுள் ஹக் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.

ஆனால், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக் (21) ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு சிறு தெம்பைக் கொடுத்தானர்.

மொமினுள் ஹக் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் நஜ்முல் ஹொசெயன் ஷன்டோ (8) ஆட்டம் இழந்தார்.

காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் குவித்து   அசத்திய ஷன்டோவிடம் இருந்து பங்களாதேஷ் நிறைய எதிர்பார்த்தபோதிலும் எஸ்.எஸ்.சி. மைதானத்தில் அவரால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.

ஷன்டோ ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (76 - 4 விக்.)

இந் நிலையில் அனுபவம்வாய்ந்த சிரேஷ்ட வீரர்களான முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொத்தனர்.

ஆனால் அவர்கள் இருவரையும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சொனால் தினூஷ ஆட்டம் இழக்கச் செய்தார். அறிமுக வீரர் தினூஷ முதல் 3 ஓவர்களில் ஓட்டம் கொடுக்காதது விசேட அம்சமாகும்.

லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

அதன் பின்னர் சகலதுறை வீரர்களான மெஹிதி ஹசன் மிராஸ் (31), நயீம் ஹசன் (25) ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடினர். 

ஆனால், அவர்கள் இருவரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையின் வேகபந்து வீச்சாளர்களால் ஆட்டம் இழக்கச் செய்யப்பட்டனர்.

ஆட்ட நேர முடிவில் தய்ஜுல் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் ஈபாடொத் ஹுசெய்ன் 5 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் சொனால் தினூஷ 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 43  ஓட்டங்களுக்கு   2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இன்றைய ஆட்ட நேரத்தில் ஒன்றரை மணி நேரம் மழையினால் தடைப்பட்டதால் இரண்டாம் நாள் ஆட்டம் நாளைக் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாவதுடன் நாளைய தினம் 98 ஓவர்கள் வீசப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/218467

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு மைதான‌ம் ப‌ந்து வீச்சுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்......................

  • கருத்துக்கள உறவுகள்

இர‌ண்டாவ‌து டெஸ்ட் மைச்சை இல‌ங்கை அணி வெல்ல‌ போகுது...............................

  • கருத்துக்கள உறவுகள்

நிசாங்கா தொட‌ர்ந்து ந‌ல்லா விளையாடுகிறார்................மூன்று வ‌கை கிரிக்கேட்டிலும் , ஜ‌பிஎல்ல‌ ஏதாவ‌து ஒரு அணி இவ‌ரை வேண்ட‌லாம்.............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெத்தும் நிஸ்ஸன்க 146 ஆ.இ., தினேஷ் சந்திமால் 93; பலமான நிலையில் இலங்கை

Published By: VISHNU

26 JUN, 2025 | 07:26 PM

image

(எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை, பெத்தும் நிஸ்ஸன் குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், தினேஷ் சந்திமால் குவித்த அரைச் சதம் ஆகியவற்றின் உதவியுடன் இலங்கை பலமான நிலையை அடைந்துள்ளது.

2606_lahiru_and_pathum.png

பங்களாதேஷை முதல் இன்னிங்ஸில் இன்று காலை 247 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, இரண்டாம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டபோது 2 விக்கெட்களை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்று 43 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கின்றது.

2606_pathum_nissanka.png

தனது 18ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெத்தும் நிஸ்ஸன்க, தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலிருந்து இரண்டாம் நாள் ஆட்டம் முடியும் வரை மிகுந்த தன்னம்பிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி தனது 4ஆவது சதத்தைக் குவித்தார்.

Copy_of_Dinesh_Chandimal_50_runs_VK97821

பங்களாதேஷுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவித்து அசத்தியிருந்தார்.

2706_Copy_of_Pathum_Nissanka_VK95630.jpg

இலங்கையின் முன்வரிசை வீரர்கள் மூவரும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக்கொண்டு மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடியது அணிக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தது.

குறிப்பாக மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க ஆரம்ப விக்கெட்டில் லஹிரு உதாரவுடன் 88 ஓட்டங்களையும் 2ஆவது விக்கெட்டில் தினேஷ் சந்திமாலுடன் மேலும் 194 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் தினேஷ் சந்திமால் அநாவசியமாக ரிவேர்ஸ் சுவீப் ஷொட் அடிக்க முயற்சித்து துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்து சதத்தை 7 ஓட்டங்களால் தவறவிட்டார்.

அவர் 153 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 93 ஓட்டங்களைப் பெற்றார்.

பெத்தும் நிஸ்ஸன்க, 238 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டறிகளுடன் 146 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.

அவருடன் இராக்காப்பாளன் ப்ரபாத் ஜயசூரிய 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஆரம்ப வீரர் லஹிரு உதார 40 ஓட்டங்களைப் பெற்றார்.

இன்றைய தினம் முழு நாளும் துடுப்பெடுத்தாடி 550க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து பங்களாதேஷுக்கு நெருக்கடிக்கைக் கொடுப்பதே இலங்கையின் திட்டமாகும்.

பந்துவீச்சில் நயீம் ஹசன், தய்ஜுல் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முன்னதாக தனது முதலாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 220 ஓட்டங்களிலிருந்து இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த பங்களாதேஷ், கடைசி 2 விக்கெட்களை 27 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது.

தய்ஜுல் இஸ்லாம் திறமையாக துடுப்பெடுத்தாடி 5 பவுண்டறிகளுடன் 33 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.

முதல் நாள் துடுப்பாட்டத்தில் ஷத்மான் இஸ்லாம் 46 ஓட்டங்களையும் முஷ்பிக்குர் ரஹிம் 35 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும் நயீம் ஹசன் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் அறிமுக வீரர் சொனால் தினூஷ 3 ஓட்டமற்ற ஓவர்கள் அடங்கலாக 9.3 ஓவர்கள் பந்துவீசி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அசித்த பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/218573

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணி முத‌ல‌வாது இனிங்சில் ந‌ல்ல‌ ஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம்👍.................

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்கிளாதேஸ்சின் முன்ன‌னி வீர‌ர்க‌ள் அவுட் ஆன‌தால் , விளையாட்டு நாளை காலையே முடிந்து விடும்👍......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷை இரண்டாவது டெஸ்டில் வெற்றிகொள்ளும் நிலையில் இலங்கை; நான்காம் நாள் காலையுடன் போட்டி முடிவடையும் அறிகுறி

27 JUN, 2025 | 07:07 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றிபெறும் தருவாயில் இருக்கிறது.

பெரும்பாலும் இந்தப் போட்டி சனிக்கிழமை (28) முதலாவது ஆட்டநேர பகுதியில் இலங்கைக்கு சாதகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் லிட்டன் தாஸ்,  நயீம் ஹசன் ஆகிய இருவரும் இலங்கையின் வெற்றியைத் தாமதிக்க முயற்சிக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

மூன்றாம் நாள் ஆட்டத்தில் முன்னாள் அணித் தலைவர் குசல் மெண்டிஸின் அதிரடி இலங்கைக்கு சாதகமாக அமைந்ததுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் இலங்கையை விட 211 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த பங்களாதேஷ், இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தோல்வியை எதிர்கொண்ட வண்ணம் இருக்கிறது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் மேலும் 4 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க இலங்கையை விட 96 ஓட்டங்களால் பங்களாதேஷ் தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கிறது.

இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 290 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 448 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த இலங்கை தனது கடைசி 8 விக்கெட்களை 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

பெத்தும் நிஸ்ஸன்க தனது எண்ணிக்கைக்கு மேலும் 12 ஓட்டங்களை சேர்த்த நிலையில் 158 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 

அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா (07), ப்ரபாத் ஜயசூரிய (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிய மற்றைய பக்கத்தில் குசல் மெண்டிஸ் அதிரடி ஆட்டம் மூலம் இலகுவாக ஓட்டங்களைப் பெற்ற வண்ணம் இருந்தார்.

இதனிடையே சொனால் தினூஷ (11), தரிந்து ரத்நாயக்க (10) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்தனர்.

குசல் மெண்டிஸ் உபாதைக்குள்ளானார்

குசல் மெண்டிஸ் இல்லாத இரண்டாவது ஓட்டத்துக்கு ஆசைப்பட்டு தனது விக்கெட்டைத் தாரைவார்த்ததுடன் உபாதைக்கும் உள்ளானார்.

87 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 84 ஓட்டங்களைப் பெற்றார்.

ரன் அவுட்டைத் தவிர்ப்பதற்காக குசல் மெண்டிஸ் டைவ் செய்த போது அவரது வலது தோற்பட்டை நிலத்தில் பட்டதால் கடும் உபாதைக்குள்ளானார். இதனை அடுத்து அவர் இரண்டாவது இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபபடவில்லை. அவருக்குப் பதிலாக லஹிரு உதார விக்கெட் காப்பாளராக விளையாடினார்.

தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதுடன் தேவைப்படின் MRI ஸ்கான் செய்ய நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் 131 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நயீம் ஹசன் 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தனது 55ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் தய்ஜுல் இஸ்லாம் 17ஆவது தடவையாக 5 விக்கெட் குவியலைப் பதவுசெய்தார்.

இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ், 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 4 விக்கெட்களை இழந்து மேலும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

அனாமுல் ஹக் (19), ஷத்மான் இஸ்லாம் (12) ஆகிய இருவரும் நிதானத்தைக் கடைப்பிடித்த போதிலும் மொத்த எண்ணிக்கை 31 ஓட்டங்களாக இருந்தபோது இருவரும் ஆட்டம் இழந்தனர்.

தொடர்ந்து மொமினுள் ஹக் 15 ஓட்டங்களுடனும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

அதன் பின்னர் முஷ்பிக்குர் ரஹிமும், லிட்டன் தாஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடினர்.

ஆனால், ப்ரபாத் ஜயசூரியவின் சுழற்சியில் சிக்கிய முஷ்பிக்குர் ரஹிம் 26 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். (100 - 5 விக்.)

மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் சேர்ந்தபோது மெஹிதி ஹசன் மிராஸ் 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. லிட்டன் தாஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் தனஞ்சய டி சில்வா 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 47 ஓட்டங்களுக்கு 2  விக்கெட்களையும் தரிந்து ரத்நாயக்க 10 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் அசித்த பெர்னாண்டோ 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றது.

Copy_of_Kusal_Mendis_VK90619.jpg

Kusal_Mendis_hit_his_right_shoulder_on_t

Copy_of_Taijul_Islam__VK91979-2.jpg

Copy_of_Dhananjaya_de_Silva_and_team_cel

https://www.virakesari.lk/article/218665

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.