Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025-27: பங்களாதேஷை வீழ்த்தி முதலாவது வெற்றிப் புள்ளிகளை இலங்கை சம்பாதித்தது

28 JUN, 2025 | 12:10 PM

image

(நெவில் அன்தனி)

பங்களாதேஷுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

இதன் மூலம் நான்காவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2025-27 சுழற்சிக்கான அத்தியாயத்தில் இலங்கை தனது முதலாவது வெற்றியையும் முதலாவது வெற்றி புள்ளிகளையும் ஈட்டிக்கொண்டது.

காலியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்த இரண்டு போட்டிகளில் இலங்கை மொத்தமாக 16 ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்று 66.67 சதவீத புள்ளிகளுடன் அணிகள் நிலையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதம், தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் பெற்ற அரைச் சதங்கள், ப்ரபாத் ஜயசூரிய இரண்டாவது இன்னிங்ஸில் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இலங்கையை இலகுவாக வெற்றி அடையச் செய்தது.

போட்டியின் நான்காம் நாளான இன்று சனிக்கிழமை (28) காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்களாதேஷ், கடைசி 4 விக்கெட்களை 16 மேலதிக  ஓட்டங்களுக்கு இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பங்களாதேஷின் கடைசி 4 விக்கெட்களை வீழ்த்துவதற்கு இன்றைய தினம் இலங்கைக்கு 5.4 ஓவர்களும் 29 நிமிடங்களுமே தேவைப்பட்டது.

இதற்கு அமைய எஸ்.எஸ்.சி. மைதானத்தில் தான் விளையாடிய 4 டெஸ்ட் போட்டிகளிலும் பங்களாதேஷ் தோல்விகளையே தழுவியுள்ளது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுததாடிய பங்களாதேஷ் அதன் முதல் இன்னிங்ஸில் 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஷத்மான் இஸ்லாம், முஷ்பிக்குர் ரஹிம், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகிய நால்வரே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இரண்டு தினங்கள் துடுப்பெடுத்தாடி 458 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸன்க அபார சதம் குவித்ததுடன் தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்து இலங்கை அணியை பலமான நிலையில் இட்டனர்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் தய்ஜுல் இஸ்லாம் கணிசமான ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

மிகவும் நெருக்கடியான நிலையில் 211 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் மோசமாகத் துடுப்பெடுத்தாடி 133 ஓட்டங்களுக்கு சுருண்டது.

முஷ்பிக்குர் ரஹிம் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்ததுடன் தனஞ்சய டி சில்வா, தரிந்து ரத்நாயக்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் பின்னர் தனது துடுப்பாட்டம் குறித்து விளக்கிய பெத்தும் நிஸ்ஸன்க, மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசிக்க கிடைப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் தனது துடுப்பாட்ட ஆற்றலை தொடர்ச்சியாக பேணும் வகையில் துடுப்பாட்ட பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் கூறினார்.

'இன்னும் ஒரு வருட காலத்திற்கு டெஸ்ட் போட்டிகள் எங்களுக்கு இல்லை. எனவே உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் திறமையாக விளையாடி எமது துடுப்பாட்ட ஆற்றலை தொடர்ந்து சிறப்பாக பேண வேண்டியது டெஸ்ட் விளையாடும் வீரர்களின் கடமை' எனவும் பெத்தும் நிஸ்ஸன்க தெரிவித்தார்.  

எண்ணிக்கை சுருக்கம்

பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 247 (ஷத்மான் இஸ்லாம் 46, முஷ்பிக்குர் ரஹிம் 35, லிட்டன் தாஸ் 34, தய்ஜுல் இஸ்லாம் 33, மெஹிதி ஹசன் மிராஸ் 31, நயீம் ஹசன் 25, சொனால் தினூஷ 22 - 3 விக்., அசித்த பெர்னாண்டோ 51 - 3 விக். விஷ்வா பெர்னாண்டோ 45 - 2 விக்.)

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 458 (பெத்தும் நிஸ்ஸன்க 158, தினேஷ் சந்திமால் 93, குசல் மெண்டிஸ் 84, லஹிரு உதார 40, கமிந்து மெண்டிஸ் 33, தய்ஜுல் இஸ்லாம் 131 - 5 விக்., நயீம் இஸ்லாம் 87 - 3 விக்.)

பங்களாதேஷ் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 133 (முஷ்பிக்குர் ரஹிம் 26, அனாமுல் ஹக் 19, நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 19, ப்ரபாத் ஜயசூரிய 56 - 5 விக்., தனஞ்சய டி சில்வா 13 - 2 விக்., தரிந்து ரத்நாயக்க 19 - 2 விக்.)

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க.

Copy_of__VK80914.jpg

Copy_of__VK80903.jpg

2806_prabath_jayasuriya_5_wiket_haul.png

https://www.virakesari.lk/article/218685

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை பெரிய‌ வெற்றி........................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் தொட‌ரையும் இல‌ங்கை வென்று விடும் ,

வ‌ங்கிளாதேஸ் தொட‌ர்ந்து அன்மைக் கால‌மாக‌ ம‌ற்ற‌ அணிக‌ளிட‌ம் ப‌டு தோல்வி அடையின‌ம்..................

இலங்கை சொந்த‌ ம‌ண்ணில் ப‌ல‌மான‌ அணி...............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அசலன்க அபார சதம், பந்துவீச்சில் ஹசரங்க, கமிந்து அற்புதம்; பங்களாதேஷை இலகுவாக வீழ்த்தியது இலங்கை

Published By: VISHNU

02 JUL, 2025 | 10:37 PM

image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 77 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்  தொடரில் 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.

Copy_of_Charith_Asalanka_Celebrate_Centu

Copy_of_Charith_Asalanka_Batting__01_.jp

அணித் தலைவர் சரித் அசலன்க குவித்த அபார சதம், வனிந்து ஹசரங்க, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தது.

இந்த மூவரும் காலி றிச்மண்ட் கல்லூரி கிரிக்கெட் அணிக்காக 2016இல் ஒன்றாக விளையாடியதுடன் அதே வருடம் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்துக்கான இலங்கை  அணியிலும் இடம்பெற்றமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

இலங்கை அணியின் களத்தடுப்பும் அபரிமிதமாக இருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

மிலான் ரத்நாயக்க இப் போட்டியில் அறிமுகமானதுடன் அவருக்கான இலங்கை தொப்பியை தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரியா அணிவித்தார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது.

எவ்வாறாயினும் இலங்கையின் ஆரம்பம் எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை.

பெத்தும் நிஸ்ஸன்க (0), நிஷான் மதுஷ்க (5), கமிந்து மெண்டிஸ் (0) ஆகிய மூவரும் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.

எனினும் அணித் தலைவர் சரித் அசலன்க மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி இலங்கை அணியை பலமான நிலையில் இட்டார்.

Copy_of_Kusal_Mendis_Batting__3_.jpg

குசல் மெண்டிஸுடன் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களையும் ஜனித் லியனகேவுடன் 5ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களையும் மிலான் ரத்நாயக்கவுடன் 6அவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்கவுடன் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களையும் சரித் அசலன்க பகிர்ந்தமை விசேட அம்சமாகும்.

குசல் மெண்டிஸ் 45 ஓட்டங்களையும் ஜனித் லியனகே 29 ஓட்டங்களையும் மிலான் ரத்நாயக்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனிடையே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சரித் அசலன்க 123 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 106 ஓட்டங்களைப் பெற்று கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

74ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய சரித் அசலன்க தனது 5ஆவது சதத்தைக் குவித்தார்.

இதில் நான்கு சதங்கள் ஆர். பிரேமதாச அரங்கில் பெற்றவையாகும். இதன் மூலம் இந்த மைதானத்தில் இலங்கை சார்பாக 4 சதங்கள் குவித்த சனத் ஜயசூரியவின் சாதனையை சரித் அசலன்க சமப்படுத்தினார்.

பந்துவீச்சில் தஸ்கின் அஹமத் 47 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தன்ஸிம் ஹசன் சக்கிப் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 35.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 167 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.

இலங்கையை விட பங்களாதேஷின் ஆரம்பம் மிகச் சிறப்பாக இருந்தது.

ஆரம்ப வீரர்கள் வேகமாக ஓட்டங்ளைப் பெற்றனர். எனினும் 5அவது பர்விஸ் ஹொசெய்ன் ஏமொன் (13) ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து தன்ஸித் ஹசன், முன்னாள் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.

அவர்கள் இருவரும் 2ஆவது விக்கெட்டில் 71 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.

ஆனால், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோவை மிலான் ரத்நாயக்கவும் குசல் மெண்டிஸும் இணைந்து ரன் அவுட் ஆக்கியவுடன் போட்டியின் சாதகத் தன்மை முழுமையாக இலங்கை பக்கம் திரும்பியது.

அந்த சந்தர்ப்பத்தில் ஒரு விக்கெட்டை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்த பங்களாதேஷ், அதன் பின்னர்  7 விக்கெட்களை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

ஆனால் மத்திய வரிசையில் ஜேக்கர் அலி திறமையாகத் துடுப்பெடுத்தாடி பங்களாதேஷை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார்.

முன்வரசையில் தன்சித் ஹசன் 62 ஓட்டங்களையும் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 23 ஓட்டங்களையும் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஜேக்கர் அலி 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடைசி இரண்டு விக்கெட்களில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

கடைசி விக்கெட்டில் மாத்திரம் ஓட்டம் பெறாமலிருந்த முஸ்தாபிஸுர் ரஹ்மானுடன் 42 ஓட்டங்களை ஜேக்கர் அலி பகிர்ந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்

இதேவேளை, இந்தப் போட்டியில் 3 தடவைகள் குறிப்பிட்ட ஒரு நிமிடத்திற்குள் அடுத்த ஓவரை வீச இலங்கை தவறியதால் பங்களாதேஷுக்கு இனாமாக 5 அபாரத ஓட்டங்கள் வழங்கப்பட்டது.

0207_wanindhu_hasaranga.png

0207_kamindu_mendis.png

இப் போட்டியில் லிட்டன் தாஸின் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வனிந்து ஹசரங்க தனது 100ஆவது விக்கெட்டைப் பூர்த்தி செய்தார். இதுவரை 64 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள வனிந்து ஹசரங்க 103 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 2 ஓட்டமற்ற ஓவர்கள அடங்கலாக 7.5 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சரித் அசலன்க

https://www.virakesari.lk/article/219053

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்களாதேஷுக்கு பரபரப்பான வெற்றி; தொடரையும் சமப்படுத்தியது

05 JUL, 2025 | 10:55 PM

image

(ஆர்.பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (05) நடைபெற்ற இரண்டாவது பகல் இரவு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் 16 ஓட்டங்களால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் 1 - 1 என சமப்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரின் ஆரம்பப் போட்டியில் அறிமுகமான சுழல்பந்துவீச்சாளர் தன்விர் இஸ்லாம் தனது இரண்டாவது போட்டியில் மிகத் துல்லியமாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

0507_thanvir_islam.png

அவரது மிகச் சிறந்த பந்துவீச்சும், தன்விர் ஹொசெய்ன், தௌஹித் ஹிரிதோய் ஆகிய இருவர் குவித்த அரைச் சதங்களும் பங்களாதேஷின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

249 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 232 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கை இன்னிங்ஸின் கடைசிக் கட்டத்தில் ஜனித் லியனகே தனி ஒருவராக வெற்றியை ஈட்டிக்கொடுக்க முயற்சித்த போதிலும் அது கைகூடாமல் போனது.

0507_janith_liyanage.png

முதல் போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் பெத்தும் நிஸ்ஸன்க பிரகாசிக்கத் தவறி 5 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.

நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

நிஷான் மதுஷ்க (17) தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக குறைந்த எண்ணிக்கைக்கு ஆட்டம் இழந்ததுடன் அடுத்த போட்டியில் அவருக்கு விளையாட கிடைக்குமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது.

அதிரடி துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் 20 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து, ஆர். பிரேமதாச அரங்கில் அதிவேக அரைச் சதம் குவித்தவர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.

பதினொரு வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக திசர பெரேரா 23 பந்துகளில் பூர்த்திசெய்த அரைச் சதமே இந்த மைதானத்தில் பெறப்பட்ட முந்தைய அதிவேக அரைச் சதமாக இருந்தது.

அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த பின்னர் நிதானத்தைக் கடைப்பிடித்த குசல் மெண்டிஸ் அடுத்த 11 பந்துகளில் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார்.

மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபார சதம் குவித்த சரித் அசலன்க இந்தப் போட்டியில் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

மறுபக்கத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய கமிந்து மெண்டிஸ் 33 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அரைகுறை மனதுடன் பந்தை அடித்து பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். (126 - 5 விக்.)

ஐந்து மாத இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய துனித் வெல்லாலகே 10 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து வனிந்து ஹசரங்க 13 ஓட்டங்களுடனும் மஹீஷ் தீக்ஷன 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (170 - 8 விக்.)

எவ்வாறாயினும் துணிச்சலை வரவழைத்து புத்திசாதுரியத்துடன் துடுப்பெடுத்தாடிய ஜனித் லியனகே 9ஆவது விக்கெட்டில் துஷ்மன்த சமீரவுடன் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

0507_celebration.png

85 பந்துகளை எதிர்கொண்ட ஜனித் லியனகே 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 78 ஓட்டங்களைப் பெற்றார்.

துஷ்மன்த சமீர 13 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.

பந்துவீச்சில் தன்விர் இஸ்லாம் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். தன்ஸிம் ஹசன் சக்கிப் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 45.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.

மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் தன்ஸித் ஹசன் (7) களம் விட்டகன்றார்.

தொடர்ந்து பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களாக இருந்தபோது பர்வெஸ் ஹொசெய்ன்  ஏமொன்  67 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து அணித் தலைவர் மெஹிதி ஹசன் மிராஸ் (9), ஷமிம் ஹொசெய்ன் (22) ஆகிய இருவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் தௌஹித் ஹிரிதோய், ஜேக்கர் அலி ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஜேக்கர் அலி 24 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

மத்திய வரிசையில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தன்ஸிம் ஹசன் சக்கிப் 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

22ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அசித்த பெர்னாண்டோ தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியை இந்தப் போட்டியில் பதிவுசெய்தார்.

அவர் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெடக்ளை வீழ்த்தியதுடன் வனிந்து ஹசரங்க 60 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: தன்விர் இஸ்லாம்

https://www.virakesari.lk/article/219260

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குசல் அபார சதம், பந்துவீச்சில் அசித்த, துஷ்மன்த அசத்தல்; பங்களாதேஷை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை

Published By: VISHNU

08 JUL, 2025 | 10:21 PM

image

(பல்லேகலை அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 99 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

Charith_Asalanka__VK91384.jpg

துடுப்பாட்டத்தில் தொடர்ச்சியாக திறமையைப் பேணி வரும் குசல் மெண்டிஸ் குவித்த அபார சதம், அணித் தலைவர் சரித் அசலன்க பெற்ற அரைச் சதம் ஆகியவற்றுடன் அவர்கள் 4ஆவது விக்கெட்டில் 117 பந்துகளில் பகிர்ந்த 124 ஓட்டங்கள் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன.

Copy_of_Dunith_Wellalage_celebrates_Mehi

இலங்கையின் வெற்றியில் வேகபந்துவீச்சாளர்கள் அசித்த பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர, சுழல்பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

Kusal_Mendis_VK90542-2.jpg

குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரின் இணைப்பாட்டத்திற்கு இணைப்பாட்டத்திற்கு முன்னர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய பங்களாதேஷ், கடைசி 10 ஓவர்களில் 63 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் குசல் மெண்டிஸ் துடுப்பெடுத்தாடிய விதம் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. மோசமான பந்துகள் எதையும் விட்டு வைக்காமல் சிதறடித்தவாறு குசல் மெண்டிஸ் ஓட்டங்களைக் குவித்ததுடன் சரித் அசலன்கவுடன் இணைந்து அணியை பலமான நிலையில் இட்டார்.

கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 285 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தத் தொடரில் மூன்றாவது தடவையாக இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க (1) தொடர்ச்சியான 3ஆவது தடவையாக குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து பெத்தும் நிஸ்ஸன்க (33), குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சீர்செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த முன்னாள் தலைவர் குசல் மெண்டிஸ், தற்போதைய தலைவர் சரித் அசலன்க ஆகிய இருவரும் மிகத் திறமையான வியூகங்களுடன் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை இலகுவாக குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

சரித் அசலன்க 68 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகளுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார். இது அவர் பெற்ற 16ஆவது அரைச் சதமாகும்.

இதனிடையே மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 6அவது சதத்தைக் குவித்த குசல் மெண்டிஸ் 114 பந்துகளை எதிர்கொண்டு  18 பவுண்டறிகளுடன் 124 ஓட்டங்களைப் பெற்றார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜனித் லியனகே 12 ஓட்டங்களுடன்  துரதிர்ஷ்டவசமாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார்.

துனித் வெல்லாலகே ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்து 6 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார்.

வனிந்து ஹசரங்க 18 ஓட்டங்களுடனும் துஷ்மன்த சமீர 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

286 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

பங்களாதேஷின் முன்வரிசை வீரர்கள் திறமையை வெளிப்படுத்தத் தவறியதால் அதன் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

தன்ஸித் ஹசன் (17), நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (0), பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் (28), அணித் தலைவர் மெஹ்தி ஹசன் மிராஸ் (28), ஷமிம் ஹொசெய்ன் (12) ஆகிய ஐவரும் துடுப்பாட்டத்தில் பிரசாகிக்கத் தவறினர். (124 - 5 விக்)

மறுபக்கத்தில் தனி ஒருவராக திறமையுடன் போராடிய தௌஹித் ஹிரிதோய் 51 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் துஷ்மன்த சமீரவினால் போல்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து தன்ஸிம் ஹசன் சக்கிப் 5 ஓட்டங்களுடனும் தஸ்கின் அஹ்மத் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டம் இழந்தனர்.

பங்களாதேஷின் கடைசி துடுப்பாட்ட வீரரான ஜாக்கர் அலி 27 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்வரிசை துடுப்பாட்டத்தில் எருவரும் தாக்குப் பிடிக்கவில்லை.

பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷ்மன்த சமீர 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன், தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் குசல் மெண்டிஸ் வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/219524

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகியோரின் அதிரடிகளுடன் பங்களாதேஷை அதிரவைத்தது இலங்கை

Published By: VISHNU

10 JUL, 2025 | 10:30 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (10) நடைபெற்ற முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால்  இலங்கை  மிக இலகுவாக  வெற்றியீட்டியது.

1.png

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்ட வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.

பங்களாதேஷுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஒரு சதம், ஒரு அரைச் சதம் உட்பட மொத்தமாக 225 ஓட்டங்களைப் பெற்று தொடர்நாயகனான குசல் மெண்டிஸ், தனது தொடர்ச்சியான திறமையை ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியிலும் வெளிப்படுத்தினார்.

பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 155 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து மிக பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

பெத்தும் நிஸ்ஸன்க 16 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 42 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த பின்னர் இலங்கையின் ஓட்ட வேகம் சற்று குறைந்தது.

எனினும் குசல் மெண்டிஸ், குசல் பெரேரா ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலமான நிலையில் இட்டனர்.

குசல் பெரேரா 24 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் சர்வதேச அரங்கில் 3ஆவது தொடர்ச்சியான தடவையாக 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று அசத்தினார்.

எனினும் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது  குசல் மெண்டிஸ்   துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.

51 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 73 ஓட்டங்களைப் பெற்றார்.

குசல் மெண்டிஸ் கொடுத்த மிகவும் கடினமான பிடியை இடப்புறமாக ஓடிய ஷமிம் ஹொசெய்ன் உயரே தாவி இடதுகையால் பிடித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

அவிஷ்க பெர்னாண்டோ 11 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சரித் அசலன்க 8 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பங்களாதேஷ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் 8 ஓவர்களில் 65 ஓட்டங்களைப் பெற்ற பங்களாதேஷ் அடுத்த ஏழு ஓவர்களில் 43 ஓட்டங்களையே பெற்றது. எனினும் கடைசி 5 ஓவர்களில் 46 ஓட்டங்களை எடுத்து கௌரவமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது.

பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், தன்ஸித் ஹசன் ஆகிய இருவரும் 30 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தன்ஸித் ஹசன் 16 ஓட்டங்ளுடனுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து மேலும் இரண்டு விக்கெட்கள் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

அணித் தலைவர் லிட்டன் தாஸ் 6 ஓட்டங்களுடனும் ஆரம்ப வீரர் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் 38 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

மொத்த எண்ணிக்கை 89 ஓட்டங்களாக இருந்தபோது தௌஹித் ஹிரிதோய் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தார். (89 - 4 விக்.)

தொடர்ந்து மொஹம்மத் நய்ம், மெஹிதி ஹசன் மிராஸ் (29) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.

மொஹம்மத் நய்ம் 32 ஓட்டங்களுடனும் ஷமிம் ஹொசெய்ன் 14 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அணிக்கு ஒரு வருடத்திற்கு பின்னர் மீளழைக்கப்பட்ட தசுன் ஷானக்க 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஜெவ்றி வெண்டசே 25 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நுவன் துஷார 32 ஓட்டங்களுக்கு ஒரு ? விக்கெட்டையும் விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ரங்கிரி தம்புள்ளை சரவ்தேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/219695

  • கருத்துக்கள உறவுகள்

RESULT

2nd T20I (N), Dambulla, July 13, 2025, Bangladesh tour of Sri Lanka

BAN FlagBAN

177/7

SL FlagSL

(15.2/20 ov, T:178) 94

Bangladesh won by 83 runs

most-valued-player.svgPowered by Smart Stats

Fan Ratings

Summary

Scorecard

MVP

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் முதலாவது வெற்றியை சுவைத்தது

Published By: VISHNU

16 JUL, 2025 | 11:05 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (16) நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்திய பங்களாதேஷ் 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

4.png

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் கைப்பற்றியது.

5.png

இரண்டு அணிகளுக்கும் இடையில் 2013இலிருந்து நடைபெற்றுவந்த 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட ஐந்து சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர்களில் பங்களாதேஷ் வெற்றியை சுவைத்தது இதுவே முதல் தடவையாகும்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2003இல் நடைபெற்ற ஒற்றை ரி20 போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

அதன் பின்னர் விளையாடப்பட்ட 4 தொடர்களில் ஒரு தொடர் சமநிலையில் முடிவடைந்ததுடன் மற்றைய 3 தொடர்களில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

பங்களாதேஷின் இந்த வெற்றியில் மெஹிதி ஹசனின் 4 விக்கெட் குவியல், தன்ஸித் ஹசனின் ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன முக்கிய பங்காற்றி இருந்தன.

தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் இலங்கை அணி சகலதுறைகளிலும் பிரகாசிப்பது அவசியம் எனவும் குறிப்பாக துடுப்பாட்டத்தில் முழுத் திறமை வெளிப்படவேண்டும் எனவும் சனத் ஜயசூரிய கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இலங்கை அணி மீண்டு எழும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், அவர் கூறியவற்றுக்கு எதிர்மாறாகவே இலங்கை அணியின் விளையாட்டு அமைந்திருந்தது.

இதேவேளை, இந்தப் போட்டியில் அதிக தவறுகளை இழைத்ததாலேயே தோல்வி அடைய நேரிட்டதாகத் தெரிவித்த அணித் தலைவர் சரித் அசலன்க, தவறுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் எனவும் கூறினார்.

கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பவர் ப்ளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்ததால் இலங்கை பெரும் தடுமாற்றத்திற்குள்ளானது.

குசல் மெண்டிஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேறிய சொற்ப நேரத்தில் குசல் ஜனித் பெரேரா தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார்.

மூன்று வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட தினேஷ் சந்திமால் தவறான அடி தெரிவால் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து மெஹிதி ஹசனின் பந்துவீச்சை புரிந்துகொள்ள முடியாதவராக அணித் தலைவர் சரித் அசலன்க போல்ட் ஆகி 3 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந்நிலையில் பெத்தும் நிஸ்ஸன்கவும் கமிந்து மெண்டிஸும் அணியை மீட்டெடுக்க கடுமையாக முயற்சித்தனர்.

ஆனால், அதுவரை தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்திய பெத்தும் நிஸ்ஸன்க 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மெஹிதி ஹசன் வீசிய பந்தை அரைகுறை மனதுடன் அடித்து அவரிடமே பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் கமிந்து மெண்டிஸும் தசுன் ஷானக்கவும் 6ஆவது விக்கெடடில் 22 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கமிந்து மெண்டிஸ் 21 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

அவரைத் தொடர்ந்து ஜெவ்றி வெண்டசே 7 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டம் இழந்தார்.

தசுன் ஷானக்க கடைசி ஓவரில் 2 சிக்ஸ்களையும் 2 பவுண்டறிகளையும் விளாசி அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார். அவர் அடித்து ஒரு பந்து விளையாட்டரங்கில் உள்ள எண்ணிக்கை பலகைக்கு மேலாக கூரையைக் கடந்து சென்று மைதானத்திற்கு வெளியே வீழ்ந்தது.

அந்த பந்து கிடைக்காததால் வெறொரு பந்து அதன் பின்னர் பயன்படுத்தப்பட்டது.

25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

தசுன் ஷானக்கவும் மஹீஷ் தீக்ஷனவும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 29 ஓட்டங்களே இலங்கையின் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

பந்துவீச்சில் மெஹிதி ஹசன் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

133 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பினுர பெர்னாண்டோ வீசிய முதல் பந்திலேயே பங்களாதேஷின் ஆரம்ப வீரர் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் (0) ஆட்டம் இழந்ததும் இலங்கை பெரு மகிழ்ச்சியில் மிதந்தது.

ஆனால், 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தன்ஸித் ஹசன், அணித் தலைவர் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் 50 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷை பலப்படுத்தினர்.

லிட்டன் தாஸ் 32 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கமிந்து மெண்டிஸின் பந்துவீச்சில் குசல் பெரேரவின் சிறப்பான பிடி மூலம் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து தன்ஸித் ஹசன், தௌஹித் ஹிரிதோய் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர்.

தன்ஸித் ஹசன் 47 பந்துகளில் ஒரு பவுண்டறி, 6 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

தௌஹித் ஹிரிதோய் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ், நுவன் துஷார ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: மெஹிதி ஹசன்.

தொடர்நாயகன்: லிட்டன் தாஸ்.

https://www.virakesari.lk/article/220174

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.