Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Anaivilakku.jpg?resize=750%2C375&ssl=1

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

செம்மணியில் ஏற்பாடு செய்யப்பட்ட அணையா விளக்கு போராட்டமானது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றியைப் பெற்றிருக்கிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சித்துப்பாத்தி மயானத்துக்குத்தான் வருகைதர இருந்தார். அவரை அணையா விளக்கை நோக்கி வர வைத்தது கட்சி சாராத மக்கள் திரட்சிதான். சிவில் சமூகங்கள் தான்.

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அணையா விளக்கை வணங்கியதும், அங்கே மக்கள் தங்களுடைய கோரிக்கைகளை முன் வைத்ததும் அடிப்படை வெற்றிகள்தான். அதேசமயம் கட்சி கடந்த அந்தப் போராட்டத்தில் எல்லாக் கட்சிகளையும் ஒரு மையத்தில் குவித்ததும் வெற்றிதான்.அதைவிட முக்கியமாக,அந்தப் போராட்டத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வந்ததும் வெற்றிதான்.

ஆனால் அங்கே வந்த சிவஞானம்,சாணக்கியன்,சந்திரசேகரன் போன்றவர்களை ஒரு தரப்பினர் அவமதித்தமை தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று.அங்கிருந்து வெளியேறிய பின் சந்திரசேகரன் ஊடகச் சந்திப்பின்போது தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்க வேண்டும். அந்த போராட்டத்தின் நியாயத்தை சந்திரசேகரன் உட்பட அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தமை என்பது அடிப்படை வெற்றி.அவர்களுடைய வாயாலயே அந்த போராட்டத்தின் நியாயத்தையும் அந்தப் போராட்டக் கோரிக்கைகளின் நியாயத்தையும் ஒப்புக்கொள்ள வைத்திருந்தால் அது மேலும் வெற்றியாக அமைந்திருக்கும்.

அரசியல்வாதிகளை அந்த இடத்திலிருந்து அவமதித்து வெளியேற்றியமை தங்களுடைய கைகளை மீறி நிகழ்ந்த ஒன்று என்ற பொருள்பட ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.மக்கள் செயல் என்று பெயரிடப்பட்ட அந்த ஏற்பாட்டுக் குழு சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது மக்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பு ஆகும்.அந்த அமைப்பு செம்மணியில் அரசியல் அடர்த்தி மிக்க ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.

அது ஒரு இறுக்கமான அரசியல் இயக்கம் அல்ல. தளர்வானது. அந்த தளர்வான கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் அங்கே அரசியல்வாதிகளை அவமதிக்கும் செயல்கள் இடம்பெற்றிருக்கின்றன.அதுபோலவே அந்தத் தளர்வான கட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் யுரியூப்பர்களும் இலத்திரனியல் ஊடகங்களும் அந்தப் போராட்டத்தின் நோக்கத்துக்கு வெளியே போய் காணொளி உள்ளடக்கங்களை உருவாக்க முயற்சித்திருக்கிறார்கள்.

செம்மணிப் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் அது. காணொளி ஊடகங்களும் குறிப்பாக யுரியூப்பர்களும் ஒரு போராட்டத்தைத் தமது காணொளி உள்ளடக்கத் தேவைகளுக்காகத் திசை திருப்ப அனுமதிக்கக்கூடாது என்பது.இந்த விடயம் கடந்த 15 ஆண்டுகளிலும் யாழ்ப்பாணத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாக்கள்,மக்கள் சந்திப்புகள்,கருத்தரங்குகள் போன்றவற்றிலும் தொகுத்துக் கவனிக்கப்பட்ட ஒரு விடயமாகும். சில யுரியூப்பர்களும் காணொளி ஊடகக்காரர்களும் சர்ச்சைகளைத் தேடுகிறார்கள். சர்ச்சைகள் இல்லாத இடத்தில் சர்ச்சைகளை வலிந்து உருவாக்குகின்றார்கள். அல்லது ஏற்கனவே உள்ள சர்ச்சை ஒன்றை எப்படிச் சூடான காணொளி உள்ளடக்கமாக மாற்றலாம் என்று சிந்திக்கிறார்கள்.அவர்களுடைய இலக்கு டொலர்கள்தான்.எந்த உள்ளடக்கத்தை விவகாரம் ஆக்கிப்போட்டால் அது அதிகம் பார்வையாளர்களைக் கவருமோ அந்த உள்ளடக்கத்தை அவர்கள் தேடித் திரிகிறார்கள். அல்லது அதனை உருவாக்குகிறார்கள்.

கடந்த 15 ஆண்டுகளிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடந்த சில புத்தக வெளியீட்டு விழாக்கள்,சில மக்கள் சந்திப்புகள்,கருத்தரங்குகள் போன்றவற்றிலும் இந்த விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தன்னியல்பாக அங்கே தோன்றும் முரண்பாடுகளை நோக்கிக் கமராக்கள் குவியத் தொடங்கும். எனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் ஏற்பாட்டாளர்களின் அனுமதியின்றி சம்பவங்களை படம்பிடிக்க வேண்டாம் என்று ஊடகவியலாளர்களும் யுரியூப்பர்களும் தடுக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஒரு அமைப்பு காசைச் செலவழித்து ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்வில் உள்ளே வரும் ஊடகவியலாளர்கள் அந்த அமைப்பின் அனுமதியின்றி மோதல்களைப் படம் பிடிக்கிறார்கள். அந்த மோதல்கள் லைஃபில் விடப்படுகின்றன. அல்லது அவை காணொளி உள்ளடக்கங்களாக,விவகாரமாக மாற்றப்பட்டுப் பிரசுரிக்கப்படுகின்றன. எனவே அவை போன்ற நிகழ்வுகளில் காணொளி ஊடகங்களை அனுமதியின்றி படம்பிடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதும் தவிர்க்கமுடியாத ஒன்று.அவ்வாறு கேட்பதற்கு ஏற்பாட்டாளர்களுக்கு உரிமை உண்டு.

அல்லது ஏற்பாட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை வைத்து அதில் அவர்கள் தெரிவிப்பதுதான் அந்தப் போராட்டத்தின் அல்லது அந்த நிகழ்வின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்பதால்,அந்த ஊடகச் சந்திப்புக்கு மட்டும் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது என்று முடிவெடுக்கலாம்.

அது ஜனநாயக மீறல் அல்ல. அது ஏற்பாட்டாளருக்கு உள்ள உரிமை. எனவே இது போன்ற சம்பவங்களில் ஊடகவியலாளர்களை அந்த இடத்துக்குள் அனுமதிக்கும் பொழுது அது தொடர்பாக முறையான அறிவுறுத்தல்கள் தேவை என்பதைத்தான் செம்மணியில் நடந்தவை நமக்கு உணர்த்துகின்றன.

மேலும் ஊடகவியலாளர்களை மட்டுமல்ல கட்சிக்காரர்களையும் உணர்ச்சிக் கொதிப்படையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் உள்ளே விடும் பொழுதும்கூட அது தொடர்பாக விழிப்பு இருக்க வேண்டும். ஒரு கட்சி நிகழ்வில் கட்சிக்காரர்கள் எதையும் செய்யட்டும்.அதற்கு கட்சி பொறுப்பு. ஆனால் கட்சிசாரா நிகழ்வுகளில் இவ்வாறு கட்சிக்காரர்களும் அந்த நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவோடு சம்பந்தப்படாதவர்களும் அந்த நிகழ்வின் நோக்கத்தை திசை திருப்புவதற்கு அனுமதிக்க முடியாது.

செம்மணியில் இரண்டு குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரு குழப்பம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி மோதல்களைப் பிரதிபலித்தது. அதன் பின்னணியில் சிறீதரன் இருப்பதாக சுமந்திரன் அணி குற்றம் சாட்டுகிறது. அண்மையில் புதிய பிரதேச சபை தெரிவு செய்யப்பட்ட பின் கிளிநொச்சிக்குரிய பிரதேச சபைத் தவிசாளர் வட மாகாண ஆளுநரைச் சந்தித்த பொழுது செம்மணியில் குழப்பம் விளைவித்த நபரும் அவருடன் காணப்பட்டார். அதனால் அந்தக் குழப்பம் இயல்பானது அல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற சந்தேகம் ஏற்பாட்டாளர்கள் மத்தியிலும் இருப்பதாகத் தெரிகிறது.

அப்படித்தான் சந்திரசேகரனை அவமதித்த விடயத்திலும் அந்தக் காணொளியில் சில கட்சிக்காரர்கள் காணப்படுகிறார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய பேரவையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த இடத்தில் மூன்று நாட்களாகக் காணப்பட்டவர்கள். குறிப்பாக சிவஞானம் அவமதிக்கப்பட்டதை சுமந்திரனின் எதிரணி நியாயப்படுத்துகின்றது. அதற்கு அவர்கள் பின்வரும் விளக்கத்தைக் கூறுகிறார்கள்.அணையா விளக்கு போராட்டத்தில் மூன்று நாட்களும் தொடர்ச்சியாக காணப்பட்ட, காவி உடுப்போடு காணப்பட்ட ஒரு சாமியார் தமிழரசுக் கட்சியை மறைமுகமாகச் சுட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார்.அந்த நேர்காணலில் பெருமளவுக்கு மறைமுகமாகக் குற்றஞ் சாட்டப்படுவது தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிதான். அந்தக் காணொளிக்கு சிவஞானம் பின்னர் பதில் கூறியிருந்தார்.இந்தப் பதில்தான் சிவஞானம் அங்கே அவமதிக்கப்படுவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இத்தனைக்கும் அந்தச சாமியார் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரியக்கத்தின் அமைப்பாளர் ஆகும். 2015க்குப் பின் தமிழ்த் தேசிய அரசியலில் காவியோடு துருத்திக் கொண்டு தெரியும் ஒரு சாமியார் அவர். மூன்று நாட்களாக ,தொடர்ச்சியாக அவர் செம்மணியில் இருந்தார். அங்கே தொடர்ச்சியாக மூன்று நாட்களும் காணப்பட்ட நபர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவர் ஏற்பாட்டுக் குழுவில் ஒருவர் அல்ல.

சுமந்திரன் அணிக்கு எதிரான அவருடைய கருத்துக்கள் வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் சூழ்ச்சிகளின் மூலம் சுமந்திரன் கட்சிக்குள் தன் முதன்மையை தொடர்ந்தும் பேண முயற்சித்து வருகிறார். இதனால் தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் அவர் மீதான அதிருப்தி மேலும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அந்த அதிருப்தியைச் சரி செய்வதற்கு அவர் பல வழிகளிலும் முயற்சிக்கின்றார். அண்மையில்கூட சர்ச்சைக்குரிய காணி வர்த்தமானிக்கு எதிராக அவர் வழக்கு போட்டு அதில் அவர் பெற்ற முதற் கட்ட வெற்றியை அவருடைய விசுவாசிகள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டு உளவியலின் ஒரு பகுதி சுமந்திரனுக்கு எதிராகவே காணப்படுகிறது.அந்த உளவியலின் பிரதிபலிப்பாகத்தான் செம்மணி போன்ற உணர்ச்சிகரமான போராட்டக் களங்களில் அது வெடித்துக் கிளம்புகிறது.

ஆனால் சுமந்திரனுக்கு எதிரானவர்கள் தாங்கள் ஒழுங்குபடுத்தாத ஒரு போராட்டக் களத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியாது. அவர்கள் ஒரு விளக்கம் கூறுவார்கள், “சுமந்திரன் தமிழ் தேசியத்துக்கு எதிராகச் செல்கிறார், எனவே தமிழ்த் தேசியத்திற்கு நீதியைக் கேட்கும் போராட்டக் களங்களில் அவருடைய அணிக்கு இடமில்லை, அவர்களை அந்தக் களத்திற்குள் விட முடியாது” என்று. ஆனால் அணையா விளக்கை அவர்கள் ஒழுங்குபடுத்தவில்லை. அதை ஒழுங்குபடுத்திய அமைப்பின் அனுமதியின்றி அவர்கள் அதற்குள் புதிய நிகழ்ச்சி நிரலை நுழைக்க முடியாது. அணையா விளக்கு பொது எதிரிக்கு எதிரானது. அது அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்கும் ஒரு போராட்டம். அங்கே உள்ளூர் மோதல்களை வைத்துக் கொள்ளத் தேவையில்லை.

எனவே இனிவரும் காலங்களில் கட்சிசாரா மக்கள் அமைப்புக்கள் போராட்டக் களங்களைத் திறக்கும்பொழுது செம்மணியில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் காணொளிக்காரர்களையும் கட்சிக்காரர்களையும் கட்டுப்படுவதற்கான புதிய பொறிமுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும்.

இது ஒரு ஆபத்தான வளர்ச்சி. தமிழ் மக்களை வாக்காளர்களாக, விசுவாசிகளாகப் பிரித்து வைத்திருப்பது கட்சிகள்தான்.மாறாக தமிழ் மக்களை கட்சி சாராது இனமாக,தேசமாக திரட்ட முற்படுவது மக்கள் அமைப்புகள் அல்லது செயற்பாட்டு அமைப்புகள் ஆகும். அவ்வாறான அமைப்புக்கள் கட்சிசாரா போராட்டங்களை ஒழுங்குபடுத்தும் பொழுது கட்சிகள் அல்லது கட்சிகளின் ஆதரவாளர்கள் அந்தப் போராட்டக் களங்களை “ஹைஜாக்” செய்வதற்கு முயற்சிக்கிறார்கள்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரணியிலும் இந்த சர்ச்சை எழுந்தது.தமிழ்ப் பொது வேட்பாளரின் விடையத்திலும் இப்படிச் சர்ச்சைகள் எழுந்தன.

தமிழ்த் தேசியக் கட்சிகள் தாங்களும் ஒன்றுபட மாட்டார்கள். அதேசமயம் தன்னார்வமாக மக்களை ஒன்று திரட்டும் மக்கள் அமைப்புகளின் போராட்டக் களங்களையும் விட்டு வைக்கிறார்கள் இல்லை. ஒரு கட்சி சாரா மக்கள் இயக்கம் பலமடையும் பொழுதுதான் இந்தக் குழப்பத்தைத் தடுக்கலாம்?

https://athavannews.com/2025/1437504

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

அல்லது ஏற்பாட்டாளர்கள் உத்தியோகபூர்வமாக ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை வைத்து அதில் அவர்கள் தெரிவிப்பதுதான் அந்தப் போராட்டத்தின் அல்லது அந்த நிகழ்வின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்பதால்,அந்த ஊடகச் சந்திப்புக்கு மட்டும் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது என்று முடிவெடுக்கலாம்.

அது ஜனநாயக மீறல் அல்ல. அது ஏற்பாட்டாளருக்கு உள்ள உரிமை. எனவே இது போன்ற சம்பவங்களில் ஊடகவியலாளர்களை அந்த இடத்துக்குள் அனுமதிக்கும் பொழுது அது தொடர்பாக முறையான அறிவுறுத்தல்கள் தேவை என்பதைத்தான் செம்மணியில் நடந்தவை நமக்கு உணர்த்துகின்றன.

https://athavannews.com/2025/1437504

ஜனநாயகம் என்ற பெயரில் குழப்பம் விளைவிக்கும் றௌடிகளையெல்லாம் அணைத்துச் செல்லாமல் ஏற்பாட்டாளர்கள் இனி வரும் காலங்களில் அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். இந்த நிகழ்வில் சர்ச்சை கிளப்பிய றௌடிகளுக்கு உண்மையில் மக்களிடம் ஆதரவு இருக்கிறதா என்று அறிய அவர்கள் சுயாதீனமாக இனி வரும் தேர்தல்களில் நின்று பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

செம்மணியில் இரண்டு குழப்பங்கள் ஏற்பட்டன. ஒரு குழப்பம் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் உட்கட்சி மோதல்களைப் பிரதிபலித்தது. அதன் பின்னணியில் சிறீதரன் இருப்பதாக சுமந்திரன் அணி குற்றம் சாட்டுகிறது. அண்மையில் புதிய பிரதேச சபை தெரிவு செய்யப்பட்ட பின் கிளிநொச்சிக்குரிய பிரதேச சபைத் தவிசாளர் வட மாகாண ஆளுநரைச் சந்தித்த பொழுது செம்மணியில் குழப்பம் விளைவித்த நபரும் அவருடன் காணப்பட்டார். அதனால் அந்தக் குழப்பம் இயல்பானது அல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற சந்தேகம் ஏற்பாட்டாளர்கள் மத்தியிலும் இருப்பதாகத் தெரிகிறது.

இப்போது வரும் பல கட்டுரைகளில் எங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், சுமந்திரனின் பெயரை இழுத்துவிட்டு அவரை ஒரு தடவையாவது விமர்சிக்காமல் கட்டுரையாளர்கள் போக மாட்டார்கள். யாருடைய கட்டுக்குள்ளும் மனுசன் அகப்பட மாட்டார் என்பது புரிகிறது.

ஜனாதிபதி தேர்தலில்சங்குபெற்ற துன்பம் நிலாந்தனுக்கும் இருக்கும். அதனால், சுமந்திரனை விமர்சிக்க வாய்ப்பு கிடைத்தால், அவர் அமைதியாக இருக்க மாட்டார். ஆனால், "தமிழ் கட்சிகள் ஒன்றாகவேண்டும்" என்று எழுதுவதை மட்டும் விட மாட்டார்.

அணையா விளக்குநிகழ்ச்சியின் கடைசி நாளில் நடந்த அவதூறு நிகழ்ச்சிக்கு சிறீதரன் தான் காரணம் என்று நேராகச் சொல்லவில்லை என்றாலும், அதைப் புரிந்து கொள்ளலாம். நிலாந்தனும் அந்த விஷயத்தை மெதுவாக தொட்டுச்  செல்கிறார். உண்மையில் குற்றம் சுமந்திரனிடம் அல்ல, சிறீதரனிடம் தான்.

"அனைவரும் வருங்கள்" என்று சொல்லி, சமூக நலவாதிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சுமந்திரனை நேரடியாக எதிர்க்கத் தைரியம் இல்லாத,தனது கட்சிக்குள்ளேயே ஆளுமையை நிலைநாட்ட முடியாத ஒருவர், தனக்கு வேண்டாதவர்களை அவமதிக்க முயன்றிருக்கிறார். அவ்வளவுதான்.

சிறீதரன் ஒரு விசச் செடி என்பது சிந்தித்தால் புரியும். அவருக்கு  அவரது அரசியல் நலன்தான் முக்கியம், பொதுநலமல்ல. ஒட்டுமொத்தமாகச் சொன்னால், அவருக்கு ஆசிரியர் வேலையும் சரியாக வந்திருக்காது. அவர் அரசியலில் இருப்பது தமிழருக்கும் நன்மை பயக்காது. அவர்  பேசாமல் ஒரு வியாபாரியாகவே இருந்து விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன் ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் நடந்து கொணடது பிழைதான். ஆனால் இதை லவத்து சுமத்திரனுக்கு வெள்ளையடிக்க பலர் அரும்பாடு படுகிறார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். சிறிரனும் சுமத்திரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

சிறிதரன் ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் நடந்து கொணடது பிழைதான். ஆனால் இதை லவத்து சுமத்திரனுக்கு வெள்ளையடிக்க பலர் அரும்பாடு படுகிறார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். சிறிரனும் சுமத்திரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

சிறிதரனுக்கு, பார் லைசென்ஸ் கறுப்புப் புள்ளி வருவதற்கு முதலே பல ஊழல், உள்ளடி வேலைகளில் "நல்ல பெயர்"😎 இருக்கிறது. இங்கே யாழிலேயே பாதிக்கப் பட்ட ஆட்கள் தேசியம் கருதி பம்மிக் கொண்டிருக்கிறார்கள். சிறியர் அரசியலுக்கு வந்தது சுமந்திரன் போல தன் தகுதியைப் பாவித்து தீர்வை நோக்கி நகர்வதற்காக அல்ல. தான் ஒரு புலிகளின் முக்கிய தளபதியின் உறவினர் என்ற அறிமுகத்தோடு கையில் காசு பார்க்க மட்டும் தான். இது போன்ற குற்றச்சாட்டுகள் சுமந்திரனிடம் இல்லை. வேறு குறைகள் அவரை எதிர்க்கும் மக்கள் மனங்களில் இருக்கலாம், ஆனால் சிறிதரன் போல ஊழல் பேர்வழி அல்ல சுமந்திரன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.