Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புத்த வழிபாடு, பௌத்த வழிபாடு, தாய்லாந்து செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஜிரொபோர்ன் ஶ்ரீசாம் & கோ ஈவ்

  • பிபிசி

  • 51 நிமிடங்களுக்கு முன்னர்

தாய்லாந்து நாட்டில் துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் பல துறவிகளுடன் பாலுறவு வைத்து, பிறகு அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி துறவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காவல்துறையினர் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கினர்.

அப்போது அவர்கள், அந்த பெண்ணை " கோல்ஃப்" என்ற பெயரில் அழைத்தனர். மேலும் குறைந்தது 9 துறவிகளுடன் அப்பெண் உறவில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேற்கொண்டு பேசிய காவல்துறையினர், கடந்த மூன்று ஆண்டுகளில் அப்பெண் இந்த முறையில் 385 மில்லியன் பாட் (கிட்டத்தட்ட ரூ. 100 கோடி மதிப்பில்) பணம் பறித்துள்ளார் என்று தெரிவித்தனர்.

விசாரணை நடத்திய அதிகாரிகள், அப்பெண்ணின் வீட்டை சோதனையிடும் போது, அங்கே 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கைப்பற்றினர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டியே துறவிகளிடம் அவர் பணம் பறித்தது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற தாய்லாந்தின் புத்த அமைப்பு மீது சமீபத்தில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இது. கடந்த சில ஆண்டுகளாகவே புத்த துறவிகள் பாலியல் குற்றங்களிலும் போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் நிலவுவது குறிப்பிடத்தக்கது.

புத்த வழிபாடு, பௌத்த வழிபாடு, தாய்லாந்து செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம்,THAI NEWS PIX

படக்குறிப்பு, செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறையினர்

ஜூன் மாதத்தின் போது தான் முதல் வழக்கானது காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. பாங்காங்கில் இருந்த புத்தமதத்துறவிகளின் தலைவர் ஒருவர், பெண் ஒருவரால் மோசடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து துறவறத்தைவிட்டு வெளியேறினார் என்று அவர்கள் கண்டறிந்தனர்.

கோல்ஃப் அந்த புத்தத்துறவியுடன் 2024-ஆம் ஆண்டு மே மாதம் காதல் உறவில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிறகு அந்த பெண் அவரின் குழந்தைக்கு தாயானதாகவும், குழந்தை பராமரிப்பிற்காக 7 மில்லியன் பாட் பணம் கேட்டதாகவும் காவல்துறையினர் விளக்குகின்றனர்.

அதிகாரிகள், மேலும் பல துறவிகள் இதே ரீதியில் அப்பெண்ணுக்கு பணம் அனுப்பியதை கண்டறிந்தனர்.

அப்படி அனுப்பப்பட்ட பணம் முழுமையும் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிடத்தக்க அளவு பணம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

விசாரணை அதிகாரிகள் கோல்ஃபின் வீட்டை இந்த மாதத்தின் துவக்கத்தில் சோதனையிட்டனர். அப்போது அவருடைய போனைக் கைப்பற்றிய காவல்துறையினர், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருப்பதைக் கண்டனர்.

மிரட்டிப் பணம் பறித்தல், பண மோசடி மற்றும் திருட்டுப் பொருட்களை பெற்றது என்று பல்வேறு வழக்குகளை தற்போது அப்பெண் எதிர்கொண்டு வருகிறார்.

"மோசமாக நடந்து கொள்ளும் துறவிகள்" குறித்து புகார் அளிக்க சிறப்பு உதவி எண்களை அறிமுகம் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தைத் தொடர்ந்து துறவற விதிமுறைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக கூறியுள்ளது தாய்லாந்து பௌத்த விவகாரங்களை நிர்வகிக்கும் சங்கா சுப்ரீம் கவுன்சில்.

துறவற விதிமுறைகளை மீறும் துறவிகளுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க அரசு தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 81 துறவிகளுக்கு தாய்லாந்து நாட்டு மன்னர் உயர் பட்டங்களை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த விவகாரத்திற்கு பிறகு மன்னர் வஜிரலோங்கோர்ன் அந்த உத்தரவை ரத்து செய்தார்.

சமீபத்திய சம்பவங்களைமேற்கோள்காட்டிய அவர், பௌத்தர்கள் மனதில் பெரும் துன்பத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

தாய்லாந்தில் 90%க்கும் மேற்பட்ட மக்கள் தொகையினர் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள். புத்த துறவிகள் மரியாதைக்குரியவர்களாக கருதப்படுகின்றனர். நற் கர்மத்தைப் பெறுவதற்காக தாய்லாந்து ஆண்கள் பலரும் குறிப்பிட்ட காலத்திற்கு துறவறம் மேற்கொள்வதுண்டு. ஆனால் சமீபத்தில் பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ளது அங்குள்ள புத்த அமைப்பு.

ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் பெயர் பெற்றவரான விராபோல் சுக்போல் என்ற துறவி மீது 2017-ஆம் ஆண்டு பாலியல் குற்றங்கள், மோசடி, பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போது, அவர் பெயர் தலைப்புச் செய்திகளானது.

2022-ஆம் ஆண்டு, தாய்லாந்தின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்திருக்கும் பெட்சாபூனில் உள்ள புத்த கோவில் ஒன்றில் இருந்த நான்கு துறவிகளும் போதைப் பொருட்கள் பரிசோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.

தாய்லாந்து சங்கா அமைப்பில் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக பல ஆண்டுகளாக விமர்சனம் வைக்கப்பட்டாலும் கூட, நூறாண்டுகால பழமை வாய்ந்த அந்த அமைப்பில் சிறிய அளவிலேயே மாற்றங்கள் வந்துள்ளன என்று பலரும் தெரிவிக்கின்றனர். பிரச்னையின் பெரும்பகுதி அதன் அதிகாரப் படிநிலையில் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இது தாய்லாந்து அதிகார அமைப்பைப் போன்றே செயல்படும் ஒரு சர்வாதிகார அமைப்பாகும். அங்கு மூத்த துறவிகள் உயர் அதிகாரிகளைப் போலவும், இளைய துறவிகள் அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர்" என்று மத அறிஞர் சுரபோத் தவீசக் பிபிசி தாய்லாந்து சேவையிடம் பேசும் போது தெரிவித்தார்.

"அவர்கள் நெருடலை ஏற்படுத்தும் ஏதேனும் ஒன்றைக் கண்டால் அதனை எதிர்த்து அவர்கள் பேசத் துணிவதில்லை. ஏனெனில் புத்தக் கோவிலில் இருந்து அவர்கள் மிக எளிதில் வெளியேற்றப்பட்டுவிடுவார்கள்."

தற்போது காவல்துறை மற்றும் சங்கா அமைப்பால் நடைபெற்று வரும் விசாரணைகளானது, தேவைப்படும் சீர்திருத்தத்தைக் கொண்டு வரும் முக்கிய நடவடிக்கையாகும்.

"உண்மையை வெளிக்கொண்டுவருவது மிகவும் முக்கியமானது." என்று ப்ரகிராதி சடாசுட் கூறுகிறார். அவர் பாங்காங் தம்மசாட் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் ஆராய்ச்சியாளராக உள்ளார்.

"தன் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள சுப்ரீம் சங்கா கவுன்சில் பலரின் தொடர்பை துண்டித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்தே அது அமையும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cd975w0vzeko

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

தாய்லாந்து நாட்டில் துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் பல துறவிகளுடன் பாலுறவு வைத்து, பிறகு அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி துறவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

பணம் பறிக்கிறது ஒரு பக்கம் இருக்க...

புத்த துறவிகள் என்றால்.... காமலீலை விளையாட்டு காட்டுவதில்

ஸ்ரீலங்காவும், தாய்லாந்தும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். animiertes-banane-smilies-bild-0090.gif animiertes-banane-smilies-bild-0007.gif 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

பணம் பறிக்கிறது ஒரு பக்கம் இருக்க...

புத்த துறவிகள் என்றால்.... காமலீலை விளையாட்டு காட்டுவதில்

ஸ்ரீலங்காவும், தாய்லாந்தும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.

animiertes-banane-smilies-bild-0090.gif animiertes-banane-smilies-bild-0007.gif 😂

சும்மா தானே கிடக்குது என்று???

(நான் பணத்தை சொன்னேன் animiertes-banane-smilies-bild-0090.gif)

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

சும்மா தானே கிடக்குது என்று???

(நான் பணத்தை சொன்னேன் animiertes-banane-smilies-bild-0090.gif)

சும்மா கிடக்குது என்றால்... காவி உடுப்பை கடாசி எறிந்து விட்டு, கலியாணம் கட்ட வேண்டியதுதானே. காவியும் வேணும், காமமும் வேணும் என்று... இரு தோணியில் கால் வைக்கப் படாது கண்டியளோ.... animiertes-gefuehl-smilies-bild-0415.gif 😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சும்மா கிடக்குது என்றால்... காவி உடுப்பை கடாசி எறிந்து விட்டு, கலியாணம் கட்ட வேண்டியதுதானே. காவியும் வேணும், காமமும் வேணும் என்று... இரு தோணியில் கால் வைக்கப் படாது கண்டியளோ.... animiertes-gefuehl-smilies-bild-0415.gif 😂

மடியில கைவைக்ககூடாது ராசா..

அப்படியானால் காசி உடுப்பிடம் காசு எப்படி....???

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

மடியில கைவைக்ககூடாது ராசா..

அப்படியானால் காசி உடுப்பிடம் காசு எப்படி....???

புத்த பிக்குகள்… புரியாத புதிர். 😜

  • கருத்துக்கள உறவுகள்

istockphoto-911284754-612x612-1.jpg?resi

அந்தரங்க வீடியோ விவகாரம்! பிக்குகளை மிரட்டிய பெண் கைது!

தாய்லாந்தில் 11 பௌத்த பிக்குகளுடன் முறையற்ற உறவுகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பிக்குகள் பெளத்த ஆலயங்களுக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய கிட்டத்தட்ட 12 மில்லியன் டொலர் பணத்தைப் அப் பெண்ணிடம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, குறித்த பெண் பௌத்த பிக்குகளின் இரகசியப் புகைப்படங்களை எடுத்து அதனை காட்டி மிரட்டி அவர்களிடம் பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.

தாய்லாந்து மாமன்னர் மகா வஜிரலோங்கோர்ன் தமது 73வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்படி 80க்கும் அதிகமான பௌத்த பிக்குகளுக்கு விடுத்த அழைப்பை இச் சம்பவத்தையடுத்து
இரத்துச் செய்துள்ளார்.

“தாய்லாந்து மக்களிடையே அவர்களின் தகாத செயல் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.

துறவறம் பூண்ட பௌத்த பிக்குகளின் அத்தகைய செயல் பெளத்த சமயம் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளன.

இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய 11 பௌத்த பிக்குகளின் அங்கீகாரமும் நீக்கப்பட்டதுடன்
குறித்த பிக்குகளை மிரட்டி பணம் பெற்ற பெண், அவர்கள் நாள் ஒன்றுக்கு 90,000 டொலர் மதிப்பிலான பொருட்களை வாங்கித் தருவதால், அதனை தாராளமாகச் செலவு செய்யும் மனநிலை தமக்கு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1439709

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தமதகுருமார் மோசமான விதத்தில் நடந்துகொள்கின்றார்கள் - தாய்லாந்தை உலுக்கியுள்ள பாலியல் மோசடி

Published By: RAJEEBAN

18 JUL, 2025 | 11:16 AM

image

guardian

தாய்லாந்தின் தலைநகரின் மத்தியில் உள்ள பௌத்த ஆலயத்தின் மிகவும் மதிக்கத்தக்க பௌத்தமதகுரு காணாமல்போயுள்ளதை தொடர்ந்து பெரும் பாலியல் மோசடி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியாகியுள்ள அதிர்ச்சி தரும் விடயங்கள் தாய்லாந்தை உலுக்கியுள்ளன.

தாய்லாந்தின் பௌத்த குருமார்கள் மத்தியில் காணப்படும் மிரட்டல் விடுக்கும் அச்சுறுத்தும்  கலாச்சாரம் அவர்களிற்கு கிடைக்கும் ஆடம்பர பொருட்கள் போன்ற விபரங்களும் வெளியாகியுள்ளன.

வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்களை தொடர்ந்து தாய்லாந்தின் பௌத்த மதகுருமார் அனுபவிக்கும் பணம் மற்றும் அதிகாரம் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

காணாமல்போன மூத்தமதகுரு தொடர்பான விசாரணைகளின் போது பல பௌத்தமதகுருமாருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பின்னர் அவர்களை மிரட்டி அச்சுறுத்தி அது குறித்த விபரங்களை மௌனமாக வைத்திருந்த பெண் ஒருவர் குறித்த விபரங்கள்  பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.

தாய்லாந்து பொலிஸார் குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்டபோது காணாமல்போன பௌத்தமதகுரு உட்பட பல பௌத்தமதகுருமாரின் படங்கள் வீடியோக்கள் அடங்கிய கையடக்க தொலைபேசிகளை அந்த வீட்டில் கண்டுபிடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் வங்கி கணக்குகளை நிதிபரிமாற்றங்களை பொலிஸார் ஆராய்ந்த போது பௌத்த ஆலயங்களுடன் இருந்த தொடர்புகள் தெரியவந்துள்ளன.

GwCxdDJXMAAr25w.jpg

நாங்கள் அந்த பெண்ணின் நிதிபரிமாற்றங்களை ஆராய்ந்தவேளை அவற்றிற்கும் பௌத்த ஆலயங்களிற்கும் தொடர்பிருப்பதை கண்டுபிடித்தோம் என தெரிவித்துள்ள தாய்லாந்தின் காவல்துறை அதிகாரி அந்த பெண் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி நாங்கள் ஆராய்ந்த வேளை  பல பௌத்தமதகுருமார் தொடர்புபட்ட பல வீடியோக்கள் படங்களை உரையாடல்களை பார்த்தோம் என தெரிவித்துள்ளார்.

காணாமல்போன மதகுரு தொடர்பில் இதுவரை எந்த விபரங்களும் தெரியவரலில்லை. அவர் காணாமல்போனமை குறித்த குற்றச்சாட்டுகளும் இதுவரை சுமத்தப்படவில்லை. ஆனால் குறிப்பிட்ட பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக மிரட்டி பணம் பறித்தல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உட்பட பல குற்றச்சாட்டுகளை பொலிஸார் சுமத்தியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விலாவன் எம்சாவட் என்ற அந்த பெண்  முழுமையாகக் கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால் புதன்கிழமை ஒளிபரப்பான தாய் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இரண்டு துறவிகள் மற்றும் ஒரு மதப் பேராசிரியருடன் உறவு வைத்திருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். மெர்சிடிஸ் பென்ஸ் ளுடுமு200 மற்றும் "மில்லியன் கணக்கான" பாட் உள்ளிட்ட ஆடம்பரமான பரிசுகளை வங்கிப் பரிமாற்றங்கள் மற்றும் தனிப்பட்ட வங்கி அட்டை வடிவில் பெற்றதாகவும் விலாவன் கூறினார். தான் காதலில் விழுந்ததாகக் கூறி உறவுகள் குறித்து குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.

thailand_monks_11.jpg

கடந்த மூன்று ஆண்டுகளில் விலாவனின் வங்கிக் கணக்குகளில் சுமார் 385 மில்லியன் பாட் (கூ11.9 மில்லியன்)  வைப்பு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு தனி நேர்காணலில் தான் டேட்டிங் செய்து கொண்டிருந்த மற்றொரு துறவிக்கு பணம் கொடுத்ததாக விலாவன்  கூறினார்.

தாய்லாந்தில் துறவிகள் தவறாக நடந்துகொள்வது பற்றிய கதைகள் அசாதாரணமானது அல்ல ஆனால் இந்த வழக்கின் அளவு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேரவாத பௌத்தத்தின் பிரம்மச்சாரி மரபுகளைப் பேணி பூமிக்குரிய ஆசைகளைத் தவிர்ப்பதாக எதிர்பார்க்கப்படும் துறவிகள் எவ்வாறு தங்கள் நம்பிக்கைகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள் என்பது குறித்த கேள்விகளைத் தூண்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/220288

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.